(Reading time: 33 - 65 minutes)

விழுந்த வேகத்தில் அனன்யாவின் கையில் சிராய்ப்புகள் ஏற்பட்டது, அஸ்வத்தோ ஜெர்கிங் அணிந்து இருந்தமையால் அடிகள் இல்லாமல் தப்பித்தான். உடனே சுதாரித்து எழுந்தவன் அனன்யாவிற்கு கை தந்து எழுப்பினான். அவள் வலி தாங்காமல் இடது கையை மடக்கியவாரே இருக்க, தனது கைக்குட்டையை வைத்து மெதுவாக ஒற்றி எடுத்தான். அவன் ஒற்றியதில் எருச்சல் அதிகரிக்க அவனது கையை தட்டிவிட்டு ““எரியுதுடா”” என்றாள். அவளது கையில் அடிபட்டதில் அவளை விட அஸ்வத் பதறிப்போக, ““கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?”” என்று அவன் அதட்ட, நல்ல பிள்ளைபோல் அடங்கி போனாள் அனு. தன் கைக்குட்டையை புண்ணின் மீது கட்டிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

பக்கத்திலேயே அருவி ஒன்று இருக்க அவளை அங்கு அழைத்தான். எதற்கு என்று அனு கேள்வியாய் பார்க்க, ““புண் மேல ஒரே மண்ணாய் இருக்கு கழுவிட்டு kerchief வைத்து கட்டி விடுறேன் வீட்டுக்கு போய் மருந்து போட்டுக்கலாம்”” என்று கூறிவிட்டு அவளை அழைத்து சென்றான். அவளது இடது கையை தன் இடது கையில் பிடித்து, மெதுவாக தண்ணீரால் ஒற்றி எடுத்தான். தண்ணீர் புண்மேலே பட இன்னும் அதிகமாக எரிந்தது, வழியும் சேர்ந்து வர முடிந்தவரை சமாளித்தாள். இம்முறை அவன் கையை தட்டிவிடாமல் ஸ்ஸ்ஸ்... வலிக்கு.. என்று மெல்லிய குரலில் ஆரம்பிக்க, பார்வையை மட்டும் உயர்த்தி அவளை பார்த்துவிட்டு ““வலுச்சா என் கையை பிடுச்சுக்கோ”” என்று கூறிவிட்டு மீண்டும் தொடர்ந்தான். வலி பொறுக்காமல் அவனது இடது கையை அழுத்தி பிடித்துக்கொண்டாள். ஒருவாறு கைக்குட்டையை கையில் கட்டியதும் மெதுவாக நடக்க துவங்கினர்.

இந்நேரம் வந்திருக்க வேண்டுமே இன்னமும் காணவில்லையே என்று சிறிது பயம் தோழர் தோழிகளுக்குள் பற்றிக்கொண்டது. அஸ்வத்திடம் இருக்கும் கைபேசியை அழைத்து பேச அவன் விவரத்தை கூறி இன்னும் சில மணி நேரத்தில் வந்து விடுவதாக கூறினான். மெதுவாக இருவரும் சைக்கிள்களை தள்ளியவாறு நடந்துக்கொண்டிருந்தனர், அமைதியாக வரவும் போர் அடிக்க அஸ்வத்தே பேச்சை துவங்கினான், ““ரொம்ப வலிக்குதா?”” என்று கேட்க, ““இடிக்குரதை இடித்துட்டு என்ன அக்கறை”” என்று வம்பிழுத்தாள். எதுவும் பதில் கூற முடியாமல் மௌனமாய் அவன் தலை குனிந்துக்கொள்ள பாவமாய் போனது அனுவிற்கு எதிர்பார்க்காமல் நடந்தது தானே அதற்கு இவனை எப்படி குறை கூறுவது என்று தோன்ற லேசாக குனிந்து அவன் முகத்தை பார்த்து ““இப்போ பரவால்லை”” என்று புன்னகையுடன் கூரிய பின்புதான் அவன் முகம் லேசாக புன்முறுவலை காட்டியது.

லேசாக சூழ்நிலை மாற வந்துக்கொண்டிருந்தவள், அப்போது தான் அஸ்வத்தின் இடது கையை பார்த்தாள், அவள் வழியில் அவனது கையை அழுத்தியதில் அவளது நகங்கள்பட்டு அவனது இடது கை நகத்தின் அச்சு பட்டு அவ்விடமே சிவந்திருந்தது. பார்த்து பதறி போனவள் ““என்னது இது இப்படி அழுத்தி இருக்கேன் வலித்தால் சொல்ல வேண்டியது தானே”” என்று கூறி அவன் கையை திருப்பி பார்த்தாள். இது ஒரு காயமே இல்லை என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு, ““இது ஒன்னும் பெரிய காயமே இல்லை, அதோட இந்த அளவுக்கு அழுத்தம் இருக்குனா உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்”” என்று அப்போதும் அவளை பற்றியே கவலையாய் முடித்தான். அவன் பேசியதை விழியகள பார்த்தவள் என்ன மாதிரி அக்கறை இது என்று குழம்பி அமைதியாய் வந்தாள்.

ருவழியாக அவர்கள் வந்து சேர, விளையாட்டை அத்துடனே நிறுத்தி விட்டார் கேசவ். சிலர் கொஞ்சம் கடுபாகி தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர். வதந்தி பரப்ப சொல்லியா தர வேண்டும்! இவர்கள் இருவரும் என்னவோ சொல்லிவைத்து செய்தது போல பேசிக்கொண்டனர் சிலர், சிலரோ அந்த இடத்தில் இருந்து வர இவ்வளவு நேரமா ஆகும் எனக்கு என்னவோ சந்தேகமாய் இருக்கு என்று தங்களுக்கு இருக்கும் ஆசையை மற்றவர்க்கு ஆரம்பித்து வைத்தனர். இது அனைத்தும் கேசவன் மற்றும் அஸ்வத் அனன்யா தோழர் தோழிகள் காதிற்கு வந்தாலும் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் அதை ஒரு காதில் வாங்கி மற்ற காதில் காற்றில் விட்டனர். இந்த சொதப்பலை தவிர மற்றது எல்லாம் திவ்யமாக நடக்க அனைவரும் நிம்மதியுடன் வீட்டை அடைந்து, சுற்றிய அலுப்பில் உறங்கி போனனர்.

““மாப்ள background மியூசிக் போடுடா”” என்று அருண் தன் இன்னொரு தோழனை பார்த்து கூற, அவன் தன் வாய்க்கு வந்ததெல்லாம் ஒளறி கடைசியில் ““டடாஆஆஆஆ...”” என்று முடித்தான்.

அவன் முடிக்கும் வரை காத்திருந்த அருண், ““ஏன்டா இந்த கொலை வெறி உனக்கு நல்ல மியூசிக் போட சொன்னால் இப்படியா”” என்று தலையில் அடித்துக்கொள்ள பதிலுக்கு அவன் தோழன், ““பின்ன நம்ம பீர் அடிக்குறதுக்கு a.r.rahman மியூசிக்கா போட முடியும் வாயை மூடிட்டு குடிடா”” என்று நக்கலாக பதில் கூறினான்.

அவனை தொடர்ந்து மற்றவன், ““என் மூடையே இவன் கெடுத்துட்டான் மச்சா”” என்று வராத கண்ணீரை துடைத்து பிலிம் காட்ட, ““நீ கவலை படாத மச்சா நான் இருக்கேன் நான் போடுறேன் பாரு ஒரு மியூசிக்”” என்று கூறி, தன் கைபேசியில், ““மச்சி ஓபன் தி பாட்டில்.....”” என்ற பாடலை அலறவிட்டான் அருண்.              

அதை தொடர்ந்து பூஜை கலை கட்ட, இவர்கள் அடிக்கும் கூத்தையெல்லாம் செவிற்றில் சாய்ந்து அமர்ந்தவாறு பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தான் அஸ்வத். எல்லைகள் தாண்டுவதற்குள் அவர்களிடம் இருந்து பாட்டிலை வாங்கி, ““போதும் போதும் ஓவரா குடுச்சு இடத்தை கெடுத்திராதிங்க, வாங்க படுக்கலாம்”” என்று ஒருவாறு அனைவரையும் படுக்க வைத்தான்.     

அனைவரும் படுத்து உறங்கி போக விளக்குகளை அணைத்துவிட்டு படுத்தவன் தனது கேமராவை உயிர்பித்தான். முதலில் பசுமையான இடங்கள் எல்லாம் வர அதை தொடர்ந்து அவனை கவர்தவளின் புகைப்படங்கள் வந்தது. அழகாய் அவள் செய்த குறும்பையெல்லாம் யாருக்கும் தெரியாமல் பிடித்திருந்தான். அவள் சிரிப்பு, அவள் கண்கள் என அவளை சிறிது நேரம் ரசித்துவிட்டு தூங்கிபோனான் அஸ்வத். அவள் மனம் நிறைந்தவளோ அன்று காலை நடந்ததையெல்லாம் அசைபோட்டவாறு படுத்திருந்தாள் உடம்பில் உள்ள களைப்பு கண்ணை மறைத்தாலும் மனம் மட்டும் நினைவில் இருந்து அகலவில்லை. அதே நினைப்பிலேயே இருந்தவள் எப்போது தூங்கி போனாள் என்றே தெரியாமல் உறங்கினாள்.

விடியற் காலை இதமான குளிர் காற்று, லேசாக எட்டி பார்த்தும் பார்க்காத சூரிய வெளிச்சத்தில் மெதுவாய் யாரையும் எழுப்பாமல் எழுந்து சென்றாள் அனு. எழுந்து சென்று ஆண்கள் இருக்கும் அரைக்கும் பெண்கள் இருக்கும் அரைக்கும் மையமாக இருந்த திறந்த வரண்டாவில் நின்று ரசிக்க துவங்கினாள். மெது மெதுவாக சூரியன் வெளி வருவதும், பறவைகள் எல்லாம் கூட்டை விட்டு வெளிவந்து பேசிக்கொண்டே கூட்டமாய் செல்வதும், பனித்துளிகள் எல்லாம் மலர், மரம், செடி கொடிகளை எல்லாம் பிரிய மனமின்றி அதனோடு ஒன்றி இருப்பதையும் ரசித்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் அப்படியே ரசித்தவள், சுற்றி முற்றி திருட்டுத்தனமாக பார்த்துவிட்டு இழுத்து காற்றை உள்ளிழுத்து புகைபிடிப்பது போல் ஊதினாள், தன் செய்கையை நினைத்து தானே சிரித்துக்கொண்டு மீண்டும் அவள் அதை செய்ய இம்முறை புகையை வெளிவிடும் போது, கிளிக் சத்தம் கேட்டு பதறி திரும்பி பார்த்தாள்.

அங்கு சாட்சாத் அஸ்வத்தே நிற்க திருதிருவென முழித்தாள். அவளது முகத்தை பார்த்து சிரித்தவன் ““இப்படி தப்பு செய்து மாட்டிகொண்ட குழந்தை மாதிரி நிற்காத எனக்கு சிரிப்பா வருது”” என்று சிரித்தவாறே அருகில் வந்து நின்றான்.

““ஹ்ம்ம் ரொம்ப சிரிக்காத வாய் சுளிகிக்க போகுது””, அதற்கும் அவன் சேர்த்து சிரிக்க முகத்தை திருப்பிக்கொண்டாள் அனு. ““சரி சரி சிரிகளை புண் சரியாகிடுச்சா”” என்று அவள் கையை பார்த்தான்.

““ம்ம்ம் சரியாகிடுச்சு கொஞ்சம் வலி இருக்கு”” என்று கூறிவிட்டு, ““என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்திட்ட?”” என்று வினவ, ““இந்த மாதிரி காலைல வானம் அழகாய் இருக்கும் சரி போட்டோ எடுக்கலாம்னு வந்தாள் இங்க ஒரு திருட்டு பூனை மாட்டிகிச்சு”” என்று கூறி சிரித்தான்.

அவன் தன்னை கிண்டல் செய்து சிரிப்பது கோவமாக வந்தாலும் அவனது சிரிப்பு கொஞ்சம் கவரத்தான் செய்தது. அவள் கண்ணெடுக்காமல் அவனை பார்க்க, அந்த இளம் வெயில் அவளது முகத்தில் பட்டு பனிமேல் விழுந்த ஒளியாய் மிளிர அவனும் அவளையே ரசித்தான். சிறிது நேரம் அமைதியாக நேரம் கழிய முதலில் சுதாரித்து முகத்தை தடுமாற்றத்துடன் திருப்பிக்கொண்டாள் அனு. என்ன பேசுவது என்றே புரியாமல் போக அமைதியாகவே இருந்தனர். சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவள் தன் அன்னை கூறியது நினைவுவர மெல்லியதாய் சிரித்தாள். என்ன என்பது போல் அவன் புருவம் உயர்த்த அன்று ஊட்டி செல்வதற்கு தன் அன்னை கல்யாணம் செய்து கொள்ள சொன்னதை சொல்லி சிரித்தாள்.

““இதுக்கெல்லாம் போய் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? னு நான் கேட்டே...”” என்று அவள் போக்கில் பேசிக்கொண்டிருக்க, அந்த பேச்சு அஸ்வத்திற்கு சுவாரசியத்தை தந்தது.

““ஊட்டிக்கு மட்டுமா?Foreign கே கூட்டிட்டு போவேனே”” என்று அவன் முனுமுனுக்க அவளது காதில் பாதி விழுந்து ““என்ன என்ன சொன்ன?”” என்று கேட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.