(Reading time: 13 - 25 minutes)

ஹா .. நல்ல குடும்பம் ... சோறுப் போட்டு அடிக்கும் குடும்பம் ..... நல்லதொரு குடும்பம் ,பழ்கலைக்கழகம்....” பிரேமாவும் அபியும் அவன் முதுகில் மீண்டும் தபேலா வாசிக்க அங்கே மீண்டும் ஒரு சிரிப்பலை உருவானது ....

அப்போதுதான் கவனித்து அபியிடம் சுபா “என்ன அபி நீங்கள் சாப்பிடவில்லையா?...” கேட்டாள்...

“உங்களுக்கு தெரியாதா சுபாக்கா பெரியவர்கள் சாப்பிடும் போது விட்டுப் பெண்கள் அவர்களுக்கு சரிசமமாக உட்கார்ந்து சாப்பிடமாட்டார்கள்.... “

“ஏன்....?”

“சாமி கண்ணைக் குத்தி விடுமாம் ....” சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னான் விஷ்ணு.

‘நீ என்னை கேலி செய்கிறையா விஷ்ணு?....”

“அடடே கண்டுபிடித்து விட்டிர்களே!!! பலே பலே...”அவன் மேலும் வாரவும்.. அவனை முறைத்தாள்.... அவன் பலமாக சிரித்தான் .....

அதை அசட்டை செய்து ”சொல்லுங்கள் அபி ........”

“அது ஒன்றும் இல்லை சுபா ... அம்மாவிற்கு நான் கம்பெனி கொடுக்கிறேன் .. அவ்வளவே...”

“அப்படிஎன்றால் நானும் இனி உங்களோடு சாப்பிடுகிறேன் ...”

“ஹையோ .. நீங்கள் எங்கள் விருந்தாளி சுபா... “

“அதற்கென்ன....எங்கள் நாட்டில் சாப்பிடும் போது குடும்பத்தில் உள்ள எல்லோரும் விருந்தாளிகளும் சேர்ந்து தான் உண்ணுவோம்....ஆனால் இங்கே அப்படியில்லையா ...?”

“இங்கேயும் அப்படித்தான் .. ஆனால் , ஒரு சிறு மாற்றம்.. குடும்பத்தில் உள்ள ஆண்கள் சாப்பிட்டபின் பெண்கள் சாப்பிடுவோம்.... அவ்வளவே...”

“பிறகு நான் மட்டும் இவர்களோடு எப்படி சாப்பிடமுடியும் .. நாளையிலிருந்து நானும் உங்களோடு தான் சாப்பிடுவேன் ... “

“அதில்லை சுபா... நீ எங்கள் விருந்தாளி ... “

“பார்த்திர்களா.. விருந்தாளி என்று ஓரங்கட்டுகிறிர்கள்....”

‘எவ்வளவு எடுத்து சொல்லியும் சுபா கேட்கவில்லை ... இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஹரிக்கு தன் தாயின் நினைவு வந்தது ...தன் தாயும் இதே போல் தானே... நான் உண்ட பிறகு தானே உண்ணுவார்கள்.... அதற்கு இதுதான் காரணமா !!...ஏனோ தாயிடம் பேசவேண்டும் போல் தோன்றியது ஹரிக்கு.......

‘ஆனால் அபியின் மனநிலையோ வேறுவிதமாக இருந்தது ... எல்லோரும் இப்படி குடும்பமாக உண்ணும்பொழுது தன் அத்தையும் மாமாவும் இல்லாதது  வருத்தமாக இருந்தது அவளுக்கு.....

“என்ன மாமா சாப்பிடுகிறிர்களா?...” கேட்டபடி அங்கே வந்தான் சோழன்....

“இல்லை .. கபடி விளையாடுகிறார் .....”

“என்னப்பா விஷ்ணு... நான் மாமாவை தானே கேட்டேன் .....”

“ஆமாம்.... மாமா இன்னைக்கு மௌன விரதம் ... அவருக்கு பதில் நான் தான் பேசுவேன்....”

“ம் ... ஆனால் மாமா உனக்கு நல்லா இடம் கொடுக்கிறார்.....”

“ஏலே ! பால்பாண்டி அங்கே என்னப்பா தீயிற வாடை வருது ... சிக்கிரம் தண்ணி ஊத்துப்பா... இங்கே வரைக்கும் வருகிறது....”

சோழன் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு நகர்ந்தான் ...

’இருடா மாப்பு ... உனக்கு வைக்குறேன் ஆப்பு ...’ சோழன் பொறுமினான் மனதிற்குள் ...

எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.... அபி தன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டாள்..

“என்னம்மா....” பாசமாக அவள் தலையை வருடினார் பாலா.

“அப்பா..அது ..”

“என்கிட்ட என்னம்மா தயக்கம் ... “

“அப்பா மாமாவை மிஸ் பண்ற மாறி இருக்குப்பா.....”

“ஏனம்மா?..”

“நாம எல்லோரும் இப்படி சந்தோஷமா பேசிட்டு இருக்கும்போது மாமா நம்ம கூட இல்லைன்னு வருத்தமா இருந்ததுப்பா .... “ சிறு தேம்பலுடன் திக்கித் தெணறி சொன்னாள் ...

“மாமா ... நான் அப்பாவை கூட்டி வருகிறேன் “ கிளம்பினான் விஷ்ணு....

“இப்போது சந்தோசம்தானே ....”

முகம் மலர தன் தந்தையைப் பார்த்து தலை ஆட்டினாள் அபி....

பாலா திருவிழா விஷயமாக வெளியே சென்று விட, பிரேமா சமையற்கட்டில் பலகாரம் செய்ய சென்றாள். அபி தன் தாய்க்கு உதவ சென்றுவிட, ஹரியும் சுபாவும் ஹரியின் அறைக்கு சென்றார்கள்...

“ஹே ஹரி.. அபிய பத்தி நீ என்ன நினைக்குற?...”

“ஏன்?...”

“சும்மா தான் சொல்லேன்...”

“னைஸ் கேர்ள் ....”

“தட்ஸ் ஆல் !!!!?...”

“தட்ஸ் ஆல் ....”

“ஐ வில் சீ...”

“ம்....”

“ம்... ஹரி ஏன் உன் முகம் ஒரு மாறி இருக்கு?....”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சுபி....”

“எனக்கு தெரியும் ஹரி... விஷ்ணு இப்போ உன்னோட அப்பாவை அழைச்சுட்டு வரப்போயிருக்கான்... அவரை எப்படி எதிர்கொள்வதுன்னு தானே யோசிச்சுட்டு இருக்க....”

“ம்...”

“ஹரி அவர் உன் அப்பா... அதை நினைவில் வைத்துக்கொள்... இப்போது கோவத்தில் சண்டை போட்டு பின்பு, ஒன்றாய் சேர்ந்ததும் அதை நினைத்து வருந்துவது முட்டாள்தனம்....”

“எனக்கு புரியுது சுபி.. ஆனால், என்னையும் மீறி எதாவது பேசிடுவெனொன்னு பயமா இருக்கு ....”

“கண்ட்ரோல் யூர்செல்ப் ஹரி... யு ஆர் எ மெச்சுர்டு கய்... “

“ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டு கண்ட்ரோல் மைசெல்ப்....”

“குட் ஹரி ....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.