(Reading time: 13 - 25 minutes)

மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தான் விஷ்ணு... இயற்கை அன்னையின் தாராளப் பாசம் நன்குத் தெரிந்தது.... எழில் மிகுந்த மரங்களையும், மலையையும் பார்க்கும் போது தெகட்டாத தேன் போல் இருந்தது... காலையிலும் மாலையிலும் புகை போல் படர்ந்திருக்கும் பனி , அதில் நடந்து போக எவ்வளவு இன்பமாக இருக்கும்.... குளிராக இருந்தாலும் அதில் நடந்து போகும் சுகமே தனி ... எண்ணஓட்டத்தை கலைத்தது அவர்கள் வீட்டின் வாயிற்கதவு சத்தம்... கார் அவர்களின் விட்டை அடைந்திருந்தது...

“அப்பா எங்கே பொன்னு..”

“அவரோட அறையில் இருக்கிறார் சின்னஐயா...”

“அப்பா .... “

“வா விஷ்ணு”

“அப்பா ... என்னோடு கிளம்புங்கள் ... ம் சிக்கிரம்.....”

“எங்கேப்பா...?”

“சொல்லுகிறேன் , நீங்கள் முதலில் கிளம்புங்கள்... ஒரு வாரத்திற்கு தேவையான உடைகள் மட்டும் போதும்... மற்றதெல்லாம் அங்கேயே இருக்கிறது... ”

“எங்கே....?”

“அங்கே.... அப்புறம் உங்களோட மருந்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்..“

“அதுசரி... எங்கே என்று சொன்னால் தேவலை ...”

“அதுதான் அப்பா அங்கே....”

“டேய் மகனே ... விளையாட்டு போதும் எங்கே என்று சொல்...”

“ஏன்பா என்மேல் நம்பிக்கை இல்லையா?”

“அதெல்லாம் இல்லை... சரி ஒரு பத்துநிமிடங்கள் கொடு... நான் வந்துவிடுகிறேன்...”

“ஆல்ரைட் ... நான் ஹாலில் இருக்கேன் .....”

சொன்னது போல் பத்துநிமிடங்களில் வந்து சேர்ந்தார்....

“இந்த பன்சுவாலிட்டி தான்பா எனக்கு உங்ககிட்ட பிடிச்சது....”

“சரி ..சரி... நீ இப்போ லேட் பண்ணாதே.....”

“ம் ...   எல்லாம் நேரம் ... வாங்க போகலாம் ...”

பொன்னுசாமியிடம் விட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு மகனுடன் சென்றார் கைலாசநாதர்.

அவர்கள் பயணிக்கும் கார் திருச்சியை நோக்கிப் பயணிக்கவும் எங்கே போகிறோம் என்று புரிந்துக்கொண்டார்.

‘மாமாவின் வீட்டில் அண்ணன் இருக்கிறார்.. இப்போது அப்பாவை அங்கே கூட்டி செல்கிறோமே என்ற எண்ணம் தலைத்தூக்கியது. அவனது போராட்டத்தை உணர்ந்தது போல் “பயமா இருக்க விஷ்ணு....?”

“ஆமாம் அப்பா...”

“நீ ஒன்னும் கவலைப்படாதே விஷ்ணு.... நான் உங்கள் நிம்மதிக்கு உத்திரவாதம் தருகிறேன்...என்னால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது...”

“அப்பா......! நீங்கள் ஒதுங்கி இருக்கிறது எங்களுக்கு ஒரு நாளும் பிடிக்காது ... உங்களை ஒதுக்கிவைத்துட்டு நாங்கள் சந்தோஷமாக இருக்கணும்னு அவசியமே இல்லை...”

“நான் ஒதுங்கி இருக்கிறேன்னு சொல்லவில்லைப்பா... உன் அண்ணன்கூட சண்டை போடமாட்டேன் என்பதை தான் அப்படி சொன்னேன்....”

“தெரியும் அப்பா... அண்ணனும் உங்கள் மனதை புண்படுத்தும் மாறி நடந்து கொள்ளமாட்டார்....”

‘அவர்கள் சோலைபுரம் வந்து சேர்ந்தார்கள்... ‘

‘அவர்கள் வருவதைப் பார்த்து அபி தோட்டத்திலிருந்து ஓடி வந்தாள்..’

“வாங்க மாமா.... “

“என்னம்மா அபி ... நலமா?”

“ம்... நீங்க ஏன் மாமா எளைச்சுட்டிங்க?.... நேரத்துக்கு சாப்பிடுவதில்லையா?..”

“பொன்னுசாமியின் தயவால் என் வண்டி ஓடுகிரதம்மா... ஆமா, உன்னோட அத்தானை பார்த்தாயா?” தாழ்ந்த குரலில் வினவினார்....

“அதுதானே பார்த்தேன் ... வந்ததும் வராததுமா என்னிடம் வம்புக்கு வருகிறீர்களா?... நான் உங்கள் முதல் மகனை தான் பார்த்தேன் .... ஒன்னும் அத்தானை பார்க்கவில்லை...” அவரை போலவே தாழ்ந்த குரலில் பதிலளித்தாள்...

“என்ன ... வந்ததும் வராததுமா , மாமனாரும் மருமகளும் ரகசியம் பேசுறிங்க?....” கைலாசநாதரை வரவேற்க வந்தார் பிரேமா ..

“அது ஒண்ணுமில்லைம்மா, அபி ஏக்கத்தினால் ஒரு சுத்து இளைச்சுட்டாள்னு சொல்லிட்டிருந்தேன்...”

“மாமா....வேண்டாம்... போதும் மாமா... வாங்க உள்ளே போகலாம்...”

“ம்... என் மருமகளுக்கு கோபம் வந்துவிட்டது... சீக்கிரம் எல்லோரும் இடத்தை காலிசெய்துவிடுவோம்... வாருங்கள் வாருங்கள்.....”

“ஆமாம்... நன்றாக என்னை வாறுங்கள் மாமா....”

அவள் சொன்னதை கேட்டு சிரித்தபடியே  எல்லோரும் உள்ளே வந்தனர்...

ன் தாயிடம் பேசிவிட்டு அப்போது தான் கிழே வந்துக்கொண்டிருந்த ஹரி சிரிப்பு சத்தம் கேட்டு வரவேற்பை நோக்கினான்...

தன் தம்பி அத்தை மற்றும் அபியுடன் அவன் தந்தை வந்துக்கொண்டிருந்தார்...

அவரும் தன் முதல் மகனை பார்த்துவிட்டார்...

‘அப்பா’ ச்சே எப்படியிருந்த தன் அப்பா எப்படி ஆகிவிட்டார்...

சிறுவயதிலேயே தன் தந்தையின் கம்பீரத்தைக் கண்டு வியந்தவன் ஹரி... இன்றோ, மொத்தமும் வடிந்தார் போல் காட்சி அளித்தார்... இதிகாசத்தில் படித்த நினைவு வந்தது ஹரிக்கு ...ஷக்தி சிவபெருமானை விட்டு பிரிந்த நாள் முதல் சிவன் சக்தியற்று வாடியிருந்தார்..அதுபோல் அவனின் தந்தையும் வாடிப்போயிருந்தார் ...

இருவரும் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர பேசவில்லை... திருவிழா விஷயமாக வெளியில் சென்றிந்த பாலாவும் வீடு வந்து சேர்ந்தாயிற்று... இரவு உணவும் முடிந்தாயிற்று...

கைலாசநாதர் அவரின் அறைக்குச் செல்லும் வரை ஹரி அமைதிக் காத்தான்...

தந்தை அவரின் அறையை அடைந்ததும் ஹரி அத்தையிடம் “அத்தை நான் அப்பாவிடம் பேசிவிட்டு வருகிறேன் .. நீங்கள் யாரும் பயப்படவேண்டாம்.. நான் அவரிடம் மனம் விட்டு பேசப்போகிறேன்...”

“சரிப்பா.... அவர் ஹார்ட் பேஷான்ட்... அதை மறந்துவிடாதே....”

அத்தையிடம் உத்திரவாதம் கொடுத்து விட்டு அவன் தந்தையை காணச் சென்றான்...

இரவு வெகுநேரம் பேசிவிட்டு நிம்மதியுடன் தன் அறையை நோக்கி சென்றான் ஹரி...

பாலா-பிரேமா , அபி , சுபா மற்றும் விஷ்ணுவிற்கு அன்றிரவு குழப்பமான இரவாக அமைந்தது...

ஹரிக்கு அடுத்தநாள் விடியல் மிக அருமையான பொழுதாக அமைந்தது ......

கிழ்தளத்திலிருந்த பிரார்த்தனை அறையிலிருந்து

“ கண்ணனை கண்டாயோ மல்லிகொடியே..

  கண்மணிவன்னனின் குழல் ஓசையை கேட்டாயோ ...

  கண்ணனை கண்டாயோ மல்லிகொடியே..

  கண்மணிவன்னனின் குழல் ஓசையை கேட்டாயோ ...

  கண்ணனை கண்டாயோ மல்லிகொடியே..

  வெண்ணிலா ..... வெண்ணிலாவிலவன் என்னுடன் இருக்க

  கண்ணே!! கண்ணே!! என்றாவளுடன் அழைக்க(2)...

                                           (கண்ணனை கண்டாயோ...)

  என்னவெல்லாம் நான் பண்ணுகிறேன் என்றான் (3)

  கண்ணிமை மூடினேன்(3) ...

    கண்ணிமை மூடினேன்   லலிதாசோதன்(2)..

  கண்ணிமை மூடினேன் லலிதாசோதரன்(2)..

    கண்முன்னிருந்து எங்கேயோ மறைந்தான் (2)

(கண்ணனை கண்டாயோ...)  “                                                     

கண்மூடி அவள் இஷ்ட தெய்வமான கிருஷ்ணனைப் போற்றி  அவனின் திருவிளையாடலை மனமுருகிப் பாடிக்கொண்டிருந்தாள் அபி.. பாடிமுடித்ததும் கண்விழித்தவள் , அறையின் வாயிலில் நிழலாடவும் திரும்பிப் பார்த்தாள்...

அங்கே ஆளை மயக்கும் வசீகர சிரிப்புடன் ஹரி நின்றுக்கொண்டிருந்தான்... 

 

Go to Episode # 02

Go to Episode # 04

தொடர்ந்து பாயும்.......

{kunena_discuss:685}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.