(Reading time: 12 - 23 minutes)

வ்வபொழுது என்றாலும் உயிர்ச்சேதம் ஏற்படுகிறதல்லவா?.. அந்த உயிர் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உதவும் தானே... உயிர்ச்சேதம் ஏற்படுவது மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சியும் பாதிக்க படுகிறதே..... அதனால் எந்த ஒரு இயந்திரத்தையும் இயக்கும் பொழுது கவனம் மிக முக்கியம்.... அது மட்டுமில்லாமல் அந்த இயந்திரத்தை எப்படி இயக்குகிறோம் என்பதும் மிக முக்கியம்.....”

Neerum neruppum“எப்படி?...”

“அதாவது அக்கா, நம் நாட்டில் அதிகம் உற்பத்தி ஆகும் இயந்திரங்கள் என்னனென்ன?....”

“அதிகம் உற்பத்தி ஆகும் இயந்திரங்கள் வீட்டு உபயோக இயந்திரங்களும், நாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்காக பயன்படுத்தும் வாகனங்களும் தான்.....”

“ம்ம்... வீட்டு உபயோக இயந்திரங்களுக்கு வருவோம்.. இயற்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த வாரம் அக்கா... நாம் என்ன வேண்டினாலும் நமக்கு கிடைக்கும்.... இந்த ஐம்பூதங்களை வைத்து நாம் அனைத்து இயந்திரங்களையும் இயக்கலாம்.. நாம் உருவாக்கும் இயந்திரங்கள் இந்த ஐந்துக் கோட்பாட்டுக்குள் தான் வரும்.... உதாரனத்திற்கு நாம் வாகனங்களை சூரியனின் சக்தியால் இயக்கலாம், நம் பூமியை குடைந்து, அறுத்து, தோண்டி எடுக்கபடும் தாதுகளை தடுக்கலாம்..இதன் மூலம் பூமியை அழிவில் இருந்து காப்பாற்றலாம்.. மற்றும் வீட்டு உபயோக இயந்திரங்களையும் சூரிய சக்தியால் இயக்கலாம்.. அப்படி இயக்கம் போது மின்சாரத்தை கட்டுப்படுத்தலாம், அதன் பற்றாக்குறையையும் போக்கலாம்..காற்றாலைகள் மூலம் நிறைய மின்சாரத்தை தயாரிக்கலாம், தண்ணீரிலும் நிறைய மின்சாரம் தயாரிக்கலாம்..  நம் நாட்டில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைத்தால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்.... நம் நாட்டின் முதுகெலும்பாக திகழும் கிராமங்கள் செழிப்பாக இருக்கும், பல அப்பாவி விவசாயிகளின் விலைமதிப்பில்ல உயிர்களை காப்பாற்றலாம்.. அவர்களை மட்டுமல்ல எண்ணிலடங்கா உயிரிங்கள் அழிவதையும் கட்டுப்படுத்தலாம்.. மற்றும் தண்ணிர் பற்றாக்குறை என்று தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகளையும் தடுக்கலாம்.... எப்படி எத்தனையோ விதத்தில் இல்லை இல்லை எல்லா விதத்திலும் நாம் சரி என்று நினைத்துக்கொண்டு தவறைத் தான் செய்துக்கொண்டிருக்கிறோம்... ஒவ்வொரு தவறையும் திருத்தினால் ஒளிமயமான எதிர்காலம் நமக்கு மட்டுமல்ல நம் சந்ததியினர்களுகும் அமையும்... நாம் நம்மை பாதுகாத்தால் மட்டும் போதாது நாம் தாய் போல் கருதும் பூமியையும் பாதுகாக்க வேண்டும்.... அது நம்முடைய கடமை.. “

“சுமதி இங்கே வா...” அவளை அருகில் அழைத்து உச்சியில் முத்தமிட்டாள்...

இதையெல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தனர் இளம்வயதினர்....

“இந்த குழந்தைகள் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறார்கள் ..” ஆச்சர்யத்தில் சுபா கூறினாள்......

“ஆமாம் சுபாக்கா... குழந்தைகளுக்கு தான் கள்ளம் கபடம் இருக்காது என்று கூறுவார்கள்... அது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்று தெரிந்துக்கொண்டேன்.... கள்ளம், கபடம் இல்லாத பொழுது தான் தெளிவாக சிந்திக்க முடியும், தெளிவாக சிந்தித்தால் நம் வளர்ச்சிக்காக வருங்காலத்திற்காக நிறைய நல்ல யோசனைகள் உதிக்கும்.... ஆனால், அதையெல்லாம் செயலாக்க முடியாது.... சிறுவர்கள் என்று ஓரம் கட்டி விடுவார்கள்.... ஆனால், தற்பொழுதுள்ள நிலைமையை பார்த்தால், பெரியவர்கள் புத்தியை இழந்து நடக்கிறார்கள்.... இந்த சிறியவர்களுக்கு தெரியும் சாத்தியமான உண்மைகள் கூட நம் போன்ற பெரியவர்களால் செயலாக்க முடியவில்லை...” ஆதங்கத்துடன் கூறினான் விஷ்ணு...

“இவர்கள் வயதால் சிறியவர்கள் என்பது தான் இவர்களது குறை...  அதை பொருட்படுத்தாமல் நிறைய சிறு வயது குழந்தைகள் அறிவியலில் சாதிக்கிறார்கள்... அதற்கு விருது மற்றும் அன்பளிப்பு மட்டும் கொடுத்து அடக்கி வைக்குறாங்க... அந்த கண்டுபிடிப்புகளை செயலாக்கம் செய்தால் தவறை சரி செய்யலாம்  என்று தெரிந்தும் மீண்டும் தவறையே செய்கிறார்கள்....” அபி..

“அதுமட்டுமில்லாமல் இங்கே பொறியியல் வல்லுனர்கள், இசை மேதாவிகள், இப்படி பல பேர் இருக்கிறார்கள்.. மற்றும் குழுவாக பணியாற்றும் திறமையும் அதனை தலைமை வகிக்கும் பொறுப்பும் எப்பொழுதே இவர்களிடம் இருக்கிறதே.... இவர்கள் எதிர்காலம் நல்ல வலமாக இருக்கும்....” ஹரி

“ஆம். ஆதரவில்லாதவர்கள் என்பது மட்டுமே இவர்களின் குறை’...” சுபா...

“அது தெரியாமல் அண்ணி வளர்த்து வருகிறார்கள்.... எப்படி ஆதரவில்லாத குழந்தைகளை அழைத்து வந்து மற்ற குழந்தைகள் போல் வளர்த்துவருகிறார்கள்.. அவர்கள் விரும்பும் பள்ளியில் படிப்பு, படிப்பு முடிந்ததும் அவர்களுக்கான வேலை, மற்றும் அவர்களின் திருமணத்தையும் முடித்து வைக்கிறார்கள்... வாழ்கையில் அவர்களுக்கு என்னென உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் செய்கிறார்கள்....” விஷ்ணு..

“இது என் அத்தை மனநிறைவுடன் செய்து வந்த சேவை... தவிர்க்க முடியாதா காரணத்தால், நான் அவர்கள் மேலிருந்த மரியாதையின் காரணமாக செய்கிறேன்.... அவ்வளவே.... இதில் பாராட்ட ஒன்றுமில்லை....” அபி....

அவள் சொல்லிய காரணம், ஹரியை வெகுவாக பாதித்திருந்தது... அந்த பாதிப்பு சுபத்தில்முடியவேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக்கொண்டான்...

”சோர்வு தெரியாமலிருக்க அனைவரும் ஒரு விளையாட்டை விளையாடலாம்” என்றது ஒரு குழந்தை...

சரியென்று என்ன விளையாடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்....

“ஆங்.... ஐடியா!... இந்த விளையாட்டை விளையாடினால் என்ன?...” விஷ்ணு..

“எந்த விளையாட்டு....?....” அபி

“ஒரு டப்பாவில் நிறைய துண்டு காகிதம் இருக்கும், அதில் ஒன்றை எடுக்க வேண்டும்... அதில் எழுதப்பட்டிருப்பதை செய்ய வேண்டும்... எப்படி?.....” இல்லாத மீசையை முறுக்கிக்கொண்டான்....

அனைவரும் ஒத்துக்கொண்டனர்.. முதலில் பாலா எடுத்தார்..

“என்ன மாமா என்ன வந்திருக்கு?.... “

“இருடா பறக்காதே.... இந்த காகிதம் வேண்டாம்... வேற எடுத்துக்கிறேன்....”

“அதெல்லாம் முடியாது மாமா.... வந்தது வந்தது தான்... மாற்றம் தடை செய்யப்படும்.... அதுசரி அப்படியென்ன வந்திருக்கு...?” ஆவலுடன் கேட்டான் விஷ்ணு

“நீயே பாரு...” கையிலிருந்ததை அவனிடம் கொடுத்தார்...

வாங்கி பார்த்தவன், விழுந்து விழுந்து சிரித்தான்... அடிப்படாத குறை தான்..

“டேய் என்னடா வந்திருக்கு” போருக்க முடியாமல் கேட்டான் ஹரி...

பேசாமல் காகித்ததை ஹரியிடம் கொடுத்தான்..

“மாமா ரெடியா?..... அத்தை நீங்களும் தான்....”

“எதுக்கு?....”

“இதில் உங்கள் ஜோடியுடன் நடனம்னு வந்திருக்கு....”

“ஐயோ... என்னால முடியாது.....”

“இப்படி சொன்னால் எப்படி?.... போட்டியைப் பற்றி தெரிந்துக்கொண்டுதானே ஒத்துக்கொண்டீர்கள்.... “ சுபா....

எல்லோரும் சேர்ந்து பாலாவையும் பிரேமாவையும் களத்தில் இறக்கினர்..

பாக்ரௌண்டில் ‘ நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு‘

என்ற பாடல் ஒலிக்க, பாலா பிரேமாவை ‘இது உன் வேலைதானா?’ என்று ஜாடையில் கேட்க ரகசியமாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டு நடனமாட தொடங்கினார்கள்.... அவர்களை மறந்து அடிக்கொண்டிருந்தவர்களை அனைவரின் கேலிக் குறல்களும் பூமிக்கு கொண்டு வந்தது... ஒருவாறு கேலிகள் அடங்கியதும் கைலாஷ் ஒரு சீட்டை எடுத்தார்.... அதில் பாடல் என்றிருந்தது... ஹேமாவுடன் கடந்த கால நினைவின் தாக்கத்திலிருந்தவர் “காலங்களில் அவள் வசந்தம், “ என்று பாடத் தொடங்கினார்.... அனைவரையும் உலுக்கியது அவரது பாடல்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.