(Reading time: 8 - 16 minutes)

ந்த கை தானே என் கண்மணியை அடிக்க உயர்ந்தது’ ஆவேசமாய்  கையை கண்ணாடியில் அடிக்க போனவனை,

“முட்டாள்.....” சுபா தடுத்து நிறுத்தினாள்....

ஹரியின் கோப குரலை கேட்டு விஷ்ணு மட்டுமல்லாமல் சுபாவும் வந்திருந்தாள்..... விஷ்ணு அபியை கவனித்து கொள்ள, சுபா ஹரியின் பின்னால் சென்றாள்.... ஏதும் பேசாமல் அவனின் அறை வாசலில் நின்றிருந்தாள்... அவள் வந்ததை கவனிக்காமல், அவனின் எண்ணங்களில் இருந்தான்.. திடிரென்று அவன் கண்ணாடியை நோக்கி செல்லவும் வேகமாக வந்து அவனை தடுத்தாள்.....

“முட்டாள்........ உன்னை காயப்படுத்திக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடுமா?............”

“விடு சுபி........ இந்த கை தானே என் கண்மணியை அடிக்க சென்றது...”

“ஹரி.....” அதட்டினாள் சுபா... அவளின் அதட்டலுக்கு அடங்கிவிட்டான் ஹரி...

அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்துக்கொண்டிருந்தது.........

செய்வதறியாமல் நின்றால்சுபா... ‘என்ன பிரச்சனை என்று தெரிந்தாலாவது சமாதனப் படுத்தலாம் என்னவென்று தெரியாமல் எதாவது சொல்லி மேலும் அவனை காயப்படுத்தி விட்டால் என்ன செய்வது?...’

“ஹரி என்ன பிரச்சனை என்று தெரியவில்லை..... எதுவாக இருந்தாலும் சீக்கிரம் சரியாகிவிடும்..... “

“தேங்க்ஸ் சுபி.... எனக்காக அக்கறை காட்டியதற்கு.... நான் அம்மாவிடம் செல்ல வேண்டும்... எனக்கு அவர்களை பார்க்கவேண்டும்.... நான் காலை ப்ளைட்டில் புறப்படுகிறேன்......”

“ஹரி இந்த .....”

“வேண்டாம் சுபி.... எதுவும் சொல்லி என்னை தடுக்காதே....... நான் லண்டன் செல்கிறேன்.... உனக்கு இந்த ஊர் ரொம்ப பிடித்திருக்கிறது என்று சொன்னாயல்லவா... நீ இங்கிருந்து திருவிழாவை மற்றும் இந்த ஊரை பார்த்து விட்டு வா......... நான் செல்கிறேன்..... மேலும் வீட்டில் யாரவது கேட்டால் எனக்கு அவசர வேளை... அதனால் சென்று விட்டதாக சொல்...... நீ இப்போது உன் அறைக்கு செல்லலாம்... ஐ ம் ஆல்ரைட்... .” அவன் தீர்மானத்தை மாற்ற முடியாது என்று தெரிந்ததால் அமைதியாக அவள் அறைக்கு சென்று விட்டால் சுபா.....

காலையில் தான் தந்தையிடமும் பாலாவிடமும் சொல்லி விட்டு கிளம்பிவிட்டிருந்தான் ஹரி....

இரவு உறங்காததாலும் அழுததாலும் அபியின் முகம் சிவந்து வீங்கியிருந்தது... பிரேமாவை நன்றாக கவனிக்க வைத்தது.... சமையலறை வந்தது முதல் அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தார்.... காலை உணவு வேளையில் விஷ்ணு ‘அண்ணன் எங்கே’ என கேட்கவும் பாலா ‘ஹரிக்கு எதோ முக்கிய வேலையாம்... நான் சென்றால் தான் செய்யமுடியும்’ என்று சொல்லி சென்று விட்டதாக கூறினார்....

காலையிலிருந்து அவனுக்காக காத்திருந்து பாலா சொன்ன பதிலைக் கேட்டு அவள் முகம் வாடியதோடு மட்டுமல்லாமல் கண்கள் வேறு கலங்கிவிட்டன...

அனைத்தையும் கவனிக்க தவறவில்லை பிரேமா..... சிறிது நேரத்தில் தலைவலி என்று சொல்லி அவளின் அறைக்கு சென்று விட்டாள்....

சுபா அவளுக்கு காபியும் தட்டில் கொஞ்சம் உணவும் எடுத்து சென்றாள்.....

அறையின் ஜன்னல்கள் திறக்கபடாமல் இருளில் இருந்தாள்... ஜன்னல்களை திறந்து விட்டு, அவளருகே வந்து

“அபி... “ மெல்ல அழைத்தாள்...

“என்ன வேண்டும் ..?.... “ தலையணையிலிருந்து முகத்தை நிமிர்த்தாமல் கேட்டாள்....

“அபி... ஏன் அழுது உடம்பை கெடுத்துக்கொள்கிறாய்..... உன் முகத்தை கவனித்து விட்டு அத்தை என்னிடம் உனக்கும் ஹரிக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டார்கள்.......”

அப்பொழுதும் முகத்தை நிமிர்த்தாமலே இருக்க, சுபா வலுக்கட்டாயமாக அவளை எழுப்பினாள்... வாடிய முகத்துடன் காபியை அருந்திவிட்டு,

“எனக்கு இது போதும்... பசியெடுத்தால் நானே வந்து சாப்பிடுகிறேன்....”

“அபி உன் விஷயத்தில் தலையிடுகிறேன் என்று நினைக்காதே...... உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை... என்னிடம் பகிர்ந்து கொள்... உன் பாரமாவது குறையும்....”

அவள் அமைதி காக்கவே “நீ விருப்ப பட்டாள்.....” என்று சொல்லி விட்டு அறை வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்...

அபியின் கேவல் சத்தத்தில் நின்று விட்டாள்.... திரும்பி வந்து அவளுக்கு ஆறுதல் சொல்ல முனைகையில் அபி நடந்ததை சொன்னாள்..... குழப்பத்துடன்,

“அபி அழாதே!... நீ மட்டுமல்ல ஹரியும் காயப்பட்டிருக்கிறான்....” என்று நேற்று இரவு ஹரியின் அறையில் நடந்ததை கூரினாள்...

“எல்லா பிரச்சனைக்கும் முடிவு இருக்கும்........ விரைவில் சரியாகிவிடும் என்று நம்பு....... நீ இப்படியிருந்தால் அனைவரின் சந்தேகத்திற்கும் ஆளாவாய்... எப்பொழுதும் போல் இரு... கழகம் நன்மையில் முடிய வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்.......”

“போய் முகம் கழுவி விட்டு என்னுடம் கிழே வா... “

அவளை கிழே அழைத்து கொண்டு சென்றாள் சுபி.... எல்லோரிடமும் முன் போலவே இருந்தாலும் பிரேமவிற்கு மட்டும் ஏதோ உறுத்தியது....

லண்டனில்,

வீட்டிற்கு வந்தவன் தன் அன்னையைக் காணாது தவித்தான்.........

செக்யூரிட்டியிடம்,    [ஆங்கிலத்தில் ]

“அம்மா எங்கே?......”

“ஐயா!.. அம்மா மருத்துவமனையில் இருக்கிறார்கள்... உங்களுக்கு தெரியாதா?......”

“அம்மாவிற்கு என்ன?.......எந்த மருத்துவமனை.... “

“என்ன என்று தெரியவில்லை...”

மருத்துவமனையின் முகவரியை பெற்றுக்கொண்டு விரைந்து சென்றான்...

ருத்துவமனையின் வரவேற்பறையில் விசாரித்துகொண்டு வந்தான்....

அதிர்ந்தே விட்டான்..... அவன் தாய் இருந்தது .ICU ‘வில்.... 

Go to Episode # 07

Go to Episode # 09

தொடர்ந்து பாயும்...

{kunena_discuss:685}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.