(Reading time: 33 - 65 minutes)

நீண்ட நாட்களுக்கு பிறகு அவள் கண்களில் பளபளத்த நீரில் அப்பாவின் மனம் கரைந்து போனது. ச்சே! என் சுயநல எண்ணங்களுக்காக என் மகளை நான் எத்தனை அழவைத்திருக்கிறேன்.

அதற்கு மேல் தாமதிக்க விரும்பாதவராய் தனது இருக்கையிலிருந்து சட்டென எழுந்தார் அப்பா.  'இங்கே வா அர்ச்சனா என்று அவர் அழைக்க தயக்கத்துடன் எழுந்தவள் மெல்ல அவர் அருகில் வந்தாள்.

'இந்தாபா பிடி என் பொண்ணை' என்று அவள் கையை பிடித்து அவன் கையில் கொடுக்க எழுந்தே விட்டிருந்தான் வசந்த், 

'நான் நா..ன் பைத்தியக்காரன். பைத்திய....காரன்.' அவர் குரல் தடுமாறியது எல்லாரையும் அளவுக்கு மீறி கஷ்டப்படுத்தி இருக்கேன்.. போதும் இதோட எல்லாம் போதும். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்மா. ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.' அவர் குரல் இன்னும் உடைய சட்டென்று அவர் அருகில் வந்து அவர் தோளை அணைத்துக்கொண்டு இருக்கையில் அமரவைத்தார் மனோவின் அப்பா.

அந்த சில நிமிடங்களில் எல்லார் கண்களிலுமே லேசாக நீர் திரண்டிருந்தது. மனம் நிறைந்து போய் புன்னகைத்தாள் சாந்தினி.

வசந்தின் அருகில் அமர்ந்தாள் அர்ச்சனா. அவன் அவளை அவ்வப்போது திரும்பி பார்த்த போதும் கண்களை நிமிர்த்தாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

பேசவில்லை. சாப்பிட்டு முடிக்கும் வரை யாருமே எதுவுமே பேசவில்லை.

சாப்பிட்டு முடித்து கிளம்பும் நேரத்தில் எல்லாரும்  இரண்டு கார்களிலுமாக  பிரிந்து அமர, அர்ச்சனாவின் அப்பாவும் பெரியப்பாவும் வசந்தின் காரில் ஏறினர். மனோவின் காரில் ஏறிக்கொண்டாள் சாந்தினி.

சந்துடைய காரின் முன் சீட்டில் அமர்ந்தாள் அர்ச்சனா. வசந்த் தன் அப்பாவை மன்னித்து விட்ட அந்த பிரமிப்பிலிருந்து இன்னமும் வெளிவராதவளாய் சிலையாய் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அவள் பார்வை ஜன்னலுக்கு வெளியே இருக்க, காற்று அவள் கூந்தலுடன் விளையாடிக்கொண்டிருக்க  கார் நகர்ந்துக்கொண்டிருந்தது.

'கண்மணி.............யே  பே.........சு!   மௌ...........னனம்  என்ன........... கூறு.......... ' காரினுள்ளே தவழ்ந்து வந்த பாடலில் சட்டென தன்னிலை பெற்று  அவன் பக்கம் திரும்ப  இதழ்களில் புன்னகை ஓட ஓரக்கண்ணால் அவளை அவன் பார்த்த நொடியில், அழகாய் தலை குனிந்து சிரித்தே விட்டிருந்தாள் அர்ச்சனா. சில நிமிடங்கள் பாடலுக்குள்ளே கரைந்துக்கொண்டிருந்தனர் இருவரும்.

கார் அவன் வீட்டு முன்னால் நின்றது. எல்லாரும் குட் நைட்டுடன் விடை பெற்றுக்கொள்ள, காரிலிருந்து இறங்கிய அர்ச்சனா அவனையே பார்த்தபடி நின்றிருக்க காரின் மீது சாய்ந்துக்கொண்டு  சில நொடிகள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த்.

சொல்லியிருந்தான். அவள் புலம்பிக்கொண்டதையெல்லாம் வசந்திடம் சொல்லியிருந்தான் மனோ. யோசித்தபடியே வீட்டிற்குள் நுழைந்தான் வசந்த்.

 கதவில் சாய்ந்தபடி நின்றாள் அர்ச்சனா. தான் அவனை காயப்படுத்திவிட்டோம் என்ற உறுத்தல் அவனை நெருங்க விடாமல் அவளை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்தவன் அவள் எண்ண ஓட்டங்களை புரிந்துக்கொண்டவனாய், இதழ்களில் ஓடிய புன்னகையுடன் மெல்ல திரும்பி கைகளை முன்னால் நீட்டி கண்களால் வா வென அழைத்தான் வசந்த்.

என்ன நிகழ்ந்ததாம் அந்த நொடியில்?. அவளுக்கே தெரியவில்லை. அடுத்த இரண்டாம் நொடியில் அவன் தோளில் இருந்தாள் அர்ச்சனா.

மனதில் இருந்த உறுத்தல்களும், அழுத்தங்களும், ஒரே நொடியில் கரைந்து ஓடி விட, இத்தனை நாள் மனதிற்குள் தேக்கி வைத்திருந்த நேசமெல்லாம் வெள்ளமாய் பாய அவனை தன்னோடு இறுக்கிகொண்டாள் அர்ச்சனா.

உலகத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பது போன்ற ஒரு உணர்வில், எல்லாவற்றையும் மறந்த ஒரு நிலையில் சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தனர் இருவரும்.

சில நிமிடங்கள் கழித்து தன்னிலை பெற்றவனாய் அவள்  முகத்தை நிமிர்த்தி அவள் கண்ணீரை துடைத்தான் வசந்த்.

'நா...ன் உன்னை ரொம்......ப  தேம்பினாள் அர்ச்சனா.

உஷ்.... போதும் இனிமே பழசு எதையும் பேசக்கூடாது

இல்லை வசந்த்...நா...

அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு அவள் கண்களுக்குள் பார்த்து புன்னகையுடன் சொன்னான் ' அதுதான் எல்லா காயத்துக்கும் அன்னைக்கே மருந்து போட்டுட்டியே. எல்லாம் சரியா போச்சு.'

'நான் மருந்து போட்டேனா....'

ம்!......... அன்னைக்கு ஹாஸ்பிட்டல்லே நான்  மயக்கமா இருக்கும் போது.....'

அவன் எதை குறிப்பிடுகிறான் சட்டென புரிய முகத்தில் ஓடிய வெட்க ரேகைகளுடனும், சின்ன புன்னகையுடனும் கேட்டாள்  உனக்கு அது எப்படி தெரியும்? நீ அப்போ மயக்கமா இல்லையா?

இல்லை...........யே... நீ உள்ளே வந்ததுமே முழிச்சிட்..........டேனே' கண் சிமிட்டி சிரித்தான் வசந்த்.

'அடப்...........பாவி...உனக்காக நான் ரொம்ப feelலெல்லாம் பண்ணி.... போடா....அவனை தள்ளி விட்டாள் அர்ச்சனா.

அது எப்படி அது.?' ப்ளீ........ஸ் எனக்....காக எழுந்,,,,,திரு வசந்,,,,,த்'  'ஐ  ரியலி என்ஜாய்ட் இட்'  என்று மலர்ந்து சிரித்தான். வசந்த்.

ஏதோ நான் கண்ணை மூடிட்டிருந்தா இன்னும் ஒண்ணு ரெண்டு எக்ஸ்ட்ரா கிடைக்கும்னு நினைச்சேன் ஆனா நீ ஒண்ணோட ஸ்டாப் பண்ணிட்டே என்றவனை அடிப்பதற்கு அவள் கையோங்கிய போது அவள் கண்ணீரெல்லாம் காணாமல் போயிருந்தது..

அவன் புன்னகையுடன் அவள்  கையை தடுத்து பற்றிக்கொள்ள அழகாய் சிணுங்கி சிரித்தவளை தன்னோடு சேர்த்துக்கொண்டான் வசந்த்.

ஸ்வேதாவுக்கு புரியவில்லை. இன்று காலை திடீரென்று சொன்னான் மனோ. 'வசந்த் ஊருக்கு வந்திட்டான்' என்று. '.எங்கே போயிருந்தான் வசந்த்,? ஏன் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை?'  இதெல்லாம் கேட்டதற்கு 'அப்புறம் சொல்றேன்' என்றான் அவன்.

என்னதான் நடந்தது அவனுக்கு?. மறுபடியும் மனோவிடம் கேட்டாள் ஸ்வேதா. சிரித்தான் மனோ.

வசந்துக்கு நடந்தது இதுதான்.

அன்று அழுத்தமான மன நிலையில் விமான நிலையத்தில் அமர்ந்திருந்த வசந்தின் தோளை ஒரு கரம் ஆதரவாக அணைத்துக்கொண்டது.

சட்டென நிமிர்ந்தவனின் முகம் மலர்ந்து போனது. அது ஏனோ அந்த மனிதரிடம் பேசும் எல்லாரிடமும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

அது எப்படியோ எல்லா காயங்களுக்கும் அவரிடம் ஏதாவது ஒரு மருந்து இருக்கும். அவர் வேறு யாரும் இல்லை. நம் மனோவின் அப்பா!

அவரை பார்த்ததில் சற்று தெளிந்தவனாய் கேட்டான் 'நீங்க என்ன அங்கிள் இங்கே?'

சிரித்தார் அந்த மனிதர். 'நான் தான் மனோ கிட்டே சொன்னேனே வரவேண்டிய நேரத்திலே கரெக்டா வருவேன்னு. அதான் வந்திட்டேன். ஆமாம் நீ ஏன்டா இப்படி உட்கார்ந்திருக்கே? எனக்கு பேக் கிரௌண்ட்லே சோகமா ஷெனாய் மியூசிக் கேட்குது'

மலர்ந்து சிரித்தான் வசந்த் 'ஒண்ணுமில்லை அங்கிள்'

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.