(Reading time: 11 - 22 minutes)

 

ன்ன சொல்வதென்று புரியாமல் இலக்கில்லாத சிந்தனையுடன் தன் ஸ்கூட்டியை கிளப்பி மேகாவை அவள் ரூமில் விட்டு விட்டு தன் வீட்டிற்கு வந்தாள் மது. கதவு திறந்தே இருந்தது எப்போதும் தோட்டத்தின் வழியாக சென்று வேலைக்காரியிடம்  பின் கதவை திறக்க சொல்லி அதன் வழியாக தான் மது வீட்டிற்குள் செல்வாள். அன்னையின் உறக்கம் களைந்து விட கூடாது என்று எண்ணி.

செல் போனை எடுத்து மணியைப் பார்த்தாள். "12.25.... இந்த நேரத்துல எப்படி கதவு திறந்திருக்கு" என்று எண்ணியவாறே  உள்ளே சென்றாள்.

ஹாலில் யாரையும் காணாததால் அன்னையின் அறையை சென்று எட்டிப் பார்த்தாள். அங்கு மூர்த்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் ஆனால் லலிதாவை காணவில்லை.

“அப்பா தூங்குறாரு ஆனா அம்மா எங்கே போனாங்க” என்று யோசனை செய்தவாறே கிச்சன், பூஜையறை என எல்லா இடமும்  தேடி விட்டு கடைசியில் தோட்டத்தை அடைந்தாள். மெல்லிய நிலவொளியில் லலிதா அமர்ந்திருப்பது தெரிந்தது மெல்ல அருகில் சென்று அம்மா என்று அழைக்க, அவரோ அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு " என்னம்மா வந்துட்டியா" என்று அவள் கையைப் பற்றி தன் அருகில் அவளை அமர வைத்தார்.

 என்ன தான் மகள் வறுத்த படகூடாது என்று மறைத்தாலும் தூங்காமலும் அழுததாலும் சிவந்திருந்த விழிகளும் சிறு வயதிலிருந்து பார்த்த ஜொலிப்பும் களையும் அம்மாவின் முகத்தில் இல்லாதது கண்டு மதுவிற்கு வேதனையாக இருந்தது. என்னால் தானே எல்லாம் என்று வருந்தினாள்.

"என்னடா மா என்ன யோசனை சாப்டியா" என்று அன்பாக மகளின் கூந்தலை வருடியவாறே கேட்டார் லலிதா.

என்ன நினைத்தாலோ சட்டென்று அவர் மடியில் படுத்துக் கொண்டால் மது. ஒரு சிறு அமைதிக்கு பின் "அம்மா சாரி மா என்னை மன்னிச்சுருங்க என்னால தான் நீங்க இப்படி ஆகிடிங்க இனிமேல் உங்கள கஷ்ட படுத்த மாட்டேன்மா ஐயம் ரியலி சாரி” என்று விசும்பினாள்.

"அதெல்லாம் இல்லடா கண்ணா நீ கஷ்ட படரத என்னால பாக்க முடியல மா துறு துறுன்னு சுத்திட்டு இருந்த பொண்ணு இப்படி எதுலயுமே ஈடுபாடு இல்லாம இருந்தா எப்படி மா நிம்மதியா இருக்க முடியும்"

"........"

" நீ சந்தோசமா இருந்தாலே என் கவலையெல்லாம் தீர்ந்துடும் டா"

"......"

"மிது"

"ம்ம்ம்ம்"

"அம்மா ஒன்னு சொன்ன கேட்பியா டா தங்கம் ப்ளீஸ்"

"என்னம்மா நீங்க ப்ளீஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு சொல்லுங்க மா என்ன பண்ணனும்"

"கல்யாணம் பண்ணிக்கோ டா, நீயா பாத்து யாரா சொன்னாலும் பரவால அனால் உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாத்துட்டா எனக்கு நிம்மதியா இருக்கும் டா"

இந்த வார்த்தைகள் அவளை எவ்வளவு தூரம் காயப் படுத்தும் என்று லலிதா அறியாமல் இல்லை அனால் எவ்வளவு காலம் தான் மகள் கஷ்ட படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியும் அந்த தாயால்.

நிமிர்ந்து அம்மாவின் கண்களை பார்த்தாள் மது. அதில் என்ன கண்டாலோ வழாக்கம் போல் கோபம் கொள்ளாமல் அமைதியாக பதில் அளித்தாள்.

"ப்ளீஸ் மா இத பத்தி இப்போ பேச வேண்டாமே இப்போவே நான்  நல்லா தான் மா இருக்கேன்"

"அதுக்கு இல்ல டா நான் சொல்றத கொஞ்சம் கேளு டா"

"ஐயோ அம்மா தயவு செஞ்சு இன்னும் ஒரு வருசத்துக்கு கல்யாணம் அது இதுனு பேசாதீங்க என் மனசையும் கொஞ்சம் புரிஞ்சுகோங்க நான் ஒன்னும் ஜடம் இல்லை" என்று அழுகையும் கோபமும் கலந்த குரலில் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். வேண்டாத நினைவுகள் எல்லாம் வந்து மனதை அலைக்கழிக்க படுக்கையில் வந்து விழுந்தாள் மது. இந்த நாள் ஏன் இப்படி அமைந்தது, காலையில் அப்பா, ஆபிஸ்ல மேகா, இப்போ அம்மா ச எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க, ஏன் முருக எனக்கு மட்டும் இப்படி நடக்குது???"

என்று தனக்கு தானே பேசி கொண்டாள். 

"எனக்கு கல்யாணமா நோ இந்த ஜென்மத்துல அது நடக்காது, எனக்கு கல்யாணமே வேண்டாம்"

"ப்பா நான் ட்ரைவிங்ள இருக்கேன், ரீச் ஆகிட்டு நானே கால் பண்றேன் பா"

10 நிமிட பயணத்தில் தன் இருப்பிடத்தை அடைந்திருந்தான். வீட்டினுள் வந்து பிரிட்ஜில் இருந்து ஜூஸ் ஒன்றை எடுத்துக் கொண்டு சிட் அவுட்டில் வந்து அமர்ந்தான்.

அலைபேசி அழைக்கவும் ஜூசை வைத்து விட்டு அதை எடுத்து பார்த்தான். அப்பா என்று திரை ஒளிர்ந்தது.

"சொல்லுங்கப்பா இப்போ தான் வந்தேன், இவ்வளவு தடவை போன் பண்றிங்க அதும் இந்த நேரத்துல தூங்காம என்னப்பா விஷயம்"

"உங்க அத்தை போன் பண்ணிருந்தாங்க டா நீ அவங்க வீட்டுக்கு போறதே இல்லையாமே"

" எனக்கு இருக்க வேலைக்கு அங்க போக எல்லாம் எனக்கு டைம் இல்லப்பா"

"சரி டா டெஇலியும் ஒரு போன் கூடவா பண்ண கூடாது, நம்ம ஸ்வேதா கிட்டயவுது பேசலாம்ல டா, அந்த பொண்ணு பவம் எப்போ பாத்தாலும் அத்தான் அத்தானு உன்ன பத்தியே கேட்டுட்டு இருக்கு"

"............"

"சரி சரி எப்போ இந்தியா வர போற"

"இன்னும் ஒரு மாசம் ஆகும்பா ப்ராஜெக்ட் வேலை முடிஞ்சதும் வரேன்"

"ஹ்ம்ம் அதுவும் சரி தாண்டா நீ வரும் போதே உன் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு உங்க அம்மா ஆசைப்படற, நீ என்ன சொல்ற"

கல்யாணம்!!!! ஒரு நொடியில் சரேலென பின்னோக்கி ஓடியது நினைவுகள், கைகள் நடுங்க கண்கள் சிவக்க அவனின் ஒட்டு மொத்த வெறுப்பையும் முகம் காட்டிக் கொண்டிருந்தது.

"டேய் என்ன பேச்சையே காணோம்"

"ஆங்.. என்னப்பா "

"அதாண்டா ஸ்வேதாக்கும் உனக்கும் கல்யணம் பண்ணிடலாம்னு உங்க அம்மாவும் அத்தையும் ஆசை படறாங்க"

“ஸ்வேதா கிட்ட எல்லாம் கேட்டாச்சு அந்த பொண்ணு உன்ன தான் மனசுல வேசுருகேனு பட்டுன்னு சொல்லிடுச்சு நானும் உங்கிட்ட பேசிட்டு நிச்சயத்திற்கு நாள் குறிச்சுடலாம்னு சொல்லிட்டேன், எல்லாருக்கும் இதுல சந்தோஷம் ஆனா உங்க அக்கா தான் முதல்ல உங்கிட்ட கேட்க சொன்ன அதான் உனக்கு கூப்டேன் " தன் போக்கில் பேசிக் கொண்டே போனார் வாசுதேவன்.

தெரியும் அவனுக்கு அக்கா ஏன் தன்னிடம் கேட்க சொன்னால் என்று. தான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் அறிந்து ஆறுதல் அளித்து அமெரிக்கா வரை கிளம்ப துணியை இருந்தது அவள் தானே. என் மனதை அவளைத் தவிர யாரால் அறிய முடியும். வேதனையும் பெருமிதமும் ஒன்றாக தோன்றின அவனுக்கு.

"என்னப்பா எதாவது பிரச்சனையா உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா டா"

நினைவில் இருந்து மீண்டவன் முகம் கல் போல இறுகி இருந்தது. பழைய நினைவில் மனதில் எழுந்த சீற்றத்தை குரலில் காட்டாமல் உறுதியாக சொன்னான்.

"எனக்கு இஷ்டம் தான்பா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியா வரேன், நீங்க நிச்சயத்திற்கு என்ன கல்யனதுக்கே நாள் குறிச்சுடுங்க, நாளைக்கே ஸ்வேதாவ பொய் பத்து நானே நேர்ல என் சம்மதத்த சொல்லிடறேன்'

" ரொம்ப சந்தோஷம்பா அப்போ போன வைச்சுடறேன் உடம்ப பத்திரமா பாத்துக்கோ சீக்கிரமா இங்க வந்துடு"

"சரிப்பா வந்துடறேன் அம்மாவை கேட்டேன்னு சொல்லுங்க பை பை"

போனை வைத்து விட்டு அமர்ந்தவனுக்கு கோபம் அடங்கவில்லை. காரை எடுத்து கொண்டு வெகு தூரம் இல்லக்கில்லாமல் சென்றான். எல்லாவற்றையும் மறந்து தொலைக்க மாட்டோமா என்றிருந்தது அவனுக்கு.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கடற்கரை ஒன்று கண்ணில் படவும் கரை நிறுத்தி விட்டு சென்று கடற்மணலில் அமர்ந்தான்.  

“கல்யாணம்!!! எனக்கா? ஆமா கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன ஒதுக்கி வெச்சவங்க முன்னாடி சந்தோசமா வாழ்ந்து காட்டணும், சீக்கிரமே இந்தியா வரேன் நிரந்தரமா" என்று தனக்கு தானே கூறிக் கொண்டு கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன். 

தொடரும்!

Episode # 02


{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.