(Reading time: 13 - 25 minutes)

 

காரில் ......,

" சொல்லுங்க அர்ஜுன் "

" என்ன சுபி "

( எவ்வளோ உரிமையாக கூப்பிடுறான் )

" ஜானகிகாக தான் நான் உங்க வீட்டுக்கு வரணுமா ? "

"  இதுக்கு இப்போதைக்கு பதில் இல்ல சுபி...... ஆனா கண்டிப்பா நீ கிளம்பும்போது என்னைவிட , ஜானகி விட உன் மனசுதான் நிறைஞ்சு இருக்கும் "

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்

என்னை என்னிடம்

நீ அறிமுகம் செய்கிறாய்

உன்னோடு பேசினால் உள் நெஞ்சில்

மின்னல் தோன்றுதே

கண்ணாடி பார்கையில்

என் கண்கள் உன்னை காட்டுதே

பெண்ணே இது கனவா நினைவா

உன்னை கேட்கின்றேன்

அன்பே..

இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறது

அடடா ..

இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே

உன்னால் ..

இந்த உலகம் யாவுமே

புதியதாய் தெரிகிறதே

" ஹேய் எனக்கு இந்த சாங் ரொம்ப பிடிக்கும் ..சவுண்ட் வெச்சுக்கவா? " என்றவளிடம் புன்னகை வீசியவன் தானே அதை அதிகரித்தான்.

" எனக்கு ஒரு சந்தேகம் அர்ஜுன் "

" என்னம்மா ? "

" எப்படி என்னை நம்பி அன்னைக்கு பணம் கொடுத்திட்டு நீங்க கடைக்கு போய்ட்டிங்க? .... என் மேல என்ன நம்பிக்கை ? "

" ஹா ஹா நீ எந்த நம்பிக்கையில் இப்போ என்கூட வரே ? "

" ஏன்னா உங்க கண்ணுல கள்ளம் இல்ல சிரிப்புல கபடம் இல்ல "

" ஹ்ம்ம் நீ சின்ன பொண்ணு நெனச்சேன் ஆனா நல்ல சிந்திக்கிற ..... உன் கிட்ட பேசுன பிறகு எனக்கும் அதே அறிவு வந்துடுச்சு அதான் சந்தேகமும் வரல போல "

" ஹா ஹா இதை மட்டும் ரகு கேட்டு இருக்கணும்... உங்க கார்லே விழுந்து உயிர் தியாகம் பண்ணி இருப்பான் ...... "

(ரகுவா ? ஆஹா ........ நாம ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடியே நமக்கு வில்லன் ரெடி போல இருக்கே ) என்று நினைத்தவன் ,

" ர ...ர  ரகு யாரு ? "

" ஹா ஹா........ ரா ரா ரகு இல்ல ..வெறும் ரகு ..ரகுராம் ,...என்னோட அண்ணா "

" ஓ உனக்கு ஒரு அண்ணா கூட இருக்காங்களா? "

" ஒரு அண்ணா இல்ல ரெண்டு அண்ணா ...... நாங்க ஜாய்ன் பாமிலி.... என் பெரியப்பா சூர்யா பிரகாஷ் அப்பா சந்திர பிரகாஷ் .. ரெண்டு குடும்பமும் ஒன்னாதான் இருக்கோம் "

" வாவ் சூப்பர் டா... கூட்டுக்குடும்பமா  இருக்குற சந்தோஷமே தனி "

" ம் ஆமா அர்ஜுன் . கிருஷ்ணன் அண்ணாவும் ரகுராம் அண்ணாவும் என் பெரியப்பா பசங்க .... கிருஷ்ணா அண்ணா  ரொம்ப ஸ்மார்ட் ... அண்ணா ரொம்ப பேசமாட்டங்க ..பட் எந்த முடிவு எடுத்தாலும் தெளிவா இருக்கும் . பொதுவா அண்ணா ஒரு முடிவெடுத்தா யாருமே எதிர்த்து பேச மாட்டங்க பெரியப்பா உட்பட ...நானே எனக்கு ஏதும் காரியம் ஆகணும்னா கிருஷ்ணா அண்ணாகிட்டேதான் கேட்பேன்....... " என்று குழந்தைதனமாய் சிரித்தவளை ரசித்துக்கொண்டிருந்தவன் அவளின் குடும்ப விவரங்களையும் கவனமாய் கேட்டுகொண்டிருந்தான்.

" ம்ம்ம்ம் ரகுராம் எப்படி ? "

" ரகு , உறவுமுறைப்படி எனக்கு அண்ணாதான்..மத்தபடி நானும் அவனும் ஒரே வருஷம் தான் பிறந்தோம் ... அதனாலேயே நான் ரகு கூடத்தான் வம்புக்கு நிற்ப்பேன் .... ரகுவை நான் அண்ணான்னு கூப்பிடவே மாட்டேன்...வீட்டுலே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்த ஒரே கலாட்டா தான் ...என்னை வம்பிளுக்கிறது அவனுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி .... "

" அப்போ உனக்கு ? "

" எனக்கு குலப் ஜாமுன் சாப்பிடுற மாதிரிதான் "

" ஹா ஹா ..... சூப்பர் டா.... அப்போ உங்க வீடு எப்பவும் கலகலப்பா இருக்கும்னு சொல்லு "

" சில நேரம் கைகலப்பா கூட இருக்கும் அர்ஜுன் ஹா ஹா .... ஏன்னா எங்க வீட்டு லேடீஸ் அப்படி ..என் பெரியம்மா அபிராமி எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க ...நாந்தான் அவங்களுக்கு செல்ல பொண்ணு ... என் அம்மா சிவகாமிக்கு ரகுதான் உத்தம புத்திரன் .... கிருஷ்ணா அண்ணா எங்க எல்லாருக்குமே செல்லம் ..இதுதான் எங்கள் குடும்பக்கதை .... இப்போ நீங்க சொல்லுங்க ... வீட்டுல யாருல்லாம் இருக்காங்க ? "

" ம்ம்ம்ம் கார் விட்டு இறங்கி வலது கால் எடுத்து வெச்சு உள்ள போயி நீயே தெரிஞ்சுக்கோ இளவரசியே " என்று அவன் கண் சிமிட்ட அப்போதுதான் அவன் வீட்டை கவனித்தாள் சுபத்ரா......

தற்குள் புன்னகையுடன் வாசலில் நின்று அவர்களை  வரவேற்றாள் அந்த பெண் . நெற்றியில் குங்குமம், உதட்டில் புன்னகை, இடுப்புவரை வளர்ந்திருந்த கூந்தலை அழகாக பின்னலிட்டு, நளினமாக நின்றவளை பார்த்த உடனே

( இவள்தான் ஜானகியா ? ...... ) என்ற கேள்வியுடன் பார்த்தாள் சுபத்ரா .......

" ஹாய் சுபத்ரா நான் தான் ஜானகி ..வா வா ....அத்தை சீக்கிரம் வாங்க சுபி வந்தாச்சு " என வரவேற்றாள் ஜானகி .......

" அடடே வந்துட்டியா? வா சுபத்ரா ...... நான் பானு ... அர்ஜுனனின் அம்மா ..உள்ள வாம்மா "

" டேய் நீ என்னடா வாசலிலே நின்னுகிட்டு வேடிக்கை பார்க்கிறே ? "

" அதுவா அத்தை ......... மாமாவின் தேவதை வீட்டுக்குள்ள நுழையுறதை கண்ணால படம் பிடிக்கிறார் போல ....... " என்று வாய் விட்டு சிரித்த ஜானகியை கண் கலங்க பார்த்தார் பானு ...

( சுபத்ரவிற்குள் ஆயிரம் கேள்விகள் ..என்னை நல்லா தெரிஞ்ச மாதிரி கூப்பிட்டு வெச்சு பேசுறாங்க ? இவன் என்னன்னா ஜானு முன்னாடியே என்னை அப்படி பார்க்கிறான் .... ஜானகியும்  கோபபடாமல் சிரிக்கிறாங்களே ?? )

" உட்காரு சுபி ... அத்தை நீங்க சுபிகிட்டே பேசுங்க நான் காப்பி எடுத்துட்டு வரேன் "

" எனக்கும் எடுத்துட்டு வா ஜானு " என்றபடி சுபத்ரா அருகில் அமர்ந்தவன் . அவள் முகத்தைப்பார்த்தான் ...

" ரிலாக்ஸ் சுபி ... நீ நினைக்கிற மாதிரி ஜானு என் வைப் இல்ல ... ஆனா என் அம்மாவுக்கு அவ மருமகள்தான் "

" டேய் நீ வேற ஏன்டா குழந்தைய குழப்புற ?  ......... சுபி,  ஜானகி என் அண்ணா பொண்ணு .....சில மாதங்களுக்கு முன்னாடி  என் அண்ணா தவறிட்டாரு .... அண்ணியும் ஜானு பிறந்தபோதே காலமாகிட்டாங்க ... இப்போ ஜானு எங்க கூடத்தான் இருக்கா .... அன்னைக்கு சூப்பர் மார்க்கெட் லே நடந்தது எல்லாம் அர்ஜுன் என்கிட்டே சொன்னான்மா.... இங்க உன்னை கூப்பிட்டதுக்கு இன்னொரு காரணம் ஜானகி தாண்டா... உன்கிட்டே பேசின அந்த கொஞ்ச நேரத்துலேயே அவ கிட்டே அவ்வளோ சந்தோசம் ..... அர்ஜுன் விட ஜானகி தான் உன்னை பத்தி பேசி பேசி காதில் இரத்தம் வர வெச்சுட்டா ..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.