(Reading time: 13 - 25 minutes)

 

" ம்மா இது ஓவர் .... "

" ச்ச்சு போடா......சுபத்ரா ,  என்னதான் நானும் அர்ஜுனும் அவளை கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துகிட்டாலும் அவளுக்கு மனசு விட்டு பேச ஒரு தோழி தேவைன்னு நாங்க நெனைச்சு பார்க்கவே இல்ல மா  .... அவ வாழ்கையிலே நிறைய இன்னல்களை சந்திச்சுட்டா  சுபி .. உன் நட்பு அவளுக்கு ஒரு  ஆறுதலாக இருக்கும்னு நான் நம்புறேன் "

" கவலையை விடுங்க மா இனி ஜானகி என் பொறுப்பு " என்று புன்னகையோடு பெருமூச்சு விட்டவளுக்கு தானே தெரியும் அவளின் எண்ணங்கள் ( அப்பாடா ..... கடைசில அர்ஜுனன்னுக்கு இன்னும் கல்யாணம் ஆகல )

அவள் என்ன ஓட்டங்கள் புரிந்தது போல், அர்ஜுனன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ,

" ஹ்ம்ம் நான் சொன்ன மாதிரி எங்க ரெண்டு பேரை விட நீதான் இப்போ மனசு நிறைஞ்சு இருக்கே பார்த்தியா ? " என்று காதலுடன் பார்த்தான்...

வர்ணிக்க முடியாத மாய உணர்வில் அவள் தவிக்க , ஜானகி,

" சுபி வாயேன் ..நான் உனக்கும் நம்ம வீட்டை சுத்திக்காட்டுறேன் " என கைபிடித்து அழைத்துச்சென்றாள்....

" என்னம்மா உங்க மருமகளையே வெச்ச கண்ணு வாங்காம பார்க்குறிங்க ?

" ரொம்ப நாளைக்குப்பிறகு இவ இப்படி சந்தோஷமா இருக்குறதை  பார்த்தேண்டா ... ஆனா நான் இப்போ சுபத்ராவைதான் பார்த்துக்கிட்டு இருந்தேன்.. "

" நானும் சுபியைதான் சொன்னேன் அம்மா "

" அர்ஜுன்........................ "

" என்னம்மா ? "

" நிஜம்மாதான் சொல்றியா அர்ஜுன் ? "

" சத்தியமாதான் ..... சுபத்ராவை எனக்கு ரொம்பே பிடிச்சிருக்கும்மா ...... பிடிக்கிதுன்னு  சொல்றதைவிட அவ என்னவள்னு ஒரு உரிமை உணர்வுன்னு சொல்லலாம் "

" அவ கிட்ட சொல்லிட்டியா டா "

" இல்லம்மா "

" ஏண்டா காதலை அவகிட்டே சொல்லாம என்கிட்டே சொல்லுறே "

" எனக்கொரு நண்பன் இருந்தா அவன்கிட்ட சொல்லி இருப்பேன் ...அப்பா போனபிறகு எனக்கு நல்ல நண்பனா இருந்தது நீங்க தானே அம்மா " என்றபடி தனது தாயை கட்டிக்கொண்டான் அர்ஜுனன். வாஞ்சையுடன் அவன் முகத்தை வருடிய அத்தாயின் உள்ளம் மகிழ்வில் திளைத்தது.

ன்றிரவு,

செய்திகள் தொகுத்து வழங்குவது ................

இதழின் ஒரு ஓரம் .......

நறுக்கிய வெங்காயத்தை ..............

" அடடே...ஆரம்பிச்சுட்டாளா? குரங்கு கையில இருக்குற பூமாலையும் இவ கையில இருக்குற ரிமோட் கண்ட்ரோலும் ஒண்ணுதான்.... ஏண்டி எதாச்சும் ஒரு சேனல் வச்சு பாரேன் " என்று தன் மகளுக்கு வழக்கம் போல சுப்ரபாதம் பாடினார் சிவகாமி, சுபத்ராவின் தாயார்.

" அப்போ அவள் குரங்குன்னு சொல்றிங்களா சின்னம்மா ? " என்றவன் சாட்சாத் நம்ம ரகுவேதான்.

" ஏய் குரங்குன்னு சொன்னே, கொன்றுவேன் உன்னை ! "

" ஹேய் என்னடி அண்ணனை மரியாதை இல்லாமல் ..........."

" யாரு அண்ணன் ? இவனா ? சரியான பிசாசு ? கிருஷ்ணா அண்ணாவும் இங்கதான் இருக்காங்க ஆனா எவ்ளோ சைலெண்ட்டா  இருக்காங்க.... இதுவும்தான் இருக்கே ஆல் இந்தியா ரேடியோ"

" சின்னம்மா ? பிசாசோட தங்கச்சி பிசாசு தானே ? "

என்று கேட்டவனை தாவி குதித்து அவள் அடிக்க வருவதற்குள் அப்பணியை தானே செய்தார் அபிராமி, ரகுவரனின் தாயார் .

" டேய் எரும ... நம்ம வீட்டு  பெண்ணை  பிசாசுன்னு  சொல்லுற ... அறிவிருக்கா ? "

" ஏன் இருந்தா உங்க செல்ல பொண்ணுக்கு கொஞ்சம் தரணுமா? "

" விடுங்க அக்கா பாவம் என் பையன் ... இவளை சொல்லணும் ..இவ பண்ற அழிச்சாட்டியத்துக்கு , இவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கும்போது சீர்வரிசையோடு சேர்த்து ஒரு டி வி யையும் வாங்கித்தரனும் போல "

" இன்னொரு டி.வி  எதுக்கு சின்னம்மா? பேசாம ரெண்டு ரிமோட் கண்ட்ரோல் வாங்கி தந்துடுங்க ... புருஷனும் பொண்டாட்டியும் நல்ல அடிச்சுக்கட்டும் "

ரகுவின் வார்த்தைகளைக் கேட்டதும் சுபாவின் மனதிற்குள் அர்ஜுனின் முகம் தோன்ற, ஒரு மந்தகாச புன்னகையுடன்

" அதெல்லாம் நான் அர்ஜுன்க்கு விட்டு கொடுத்திடுவேன் " என்று உளறிக்கொட்டினாள்....

" அர்ஜுனா???? " என அனைவரும் கேள்வியுடன் பார்க்க, கிருஷ்ணன் மட்டும் அழுத்தமான ஒரு பார்வையுடன் தன் தங்கை முகத்தை ஆராய்ந்தான்.

" ஹேய் யாரோ கல்யாணமே  வேணாம்னு சொன்னாங்க ? இப்போ யாரு அந்த அர்ஜுன் ? " என்று அவளை வாருவதற்காக காத்திருந்தான் ரகுராம் .

அவளை ரட்சிக்க வந்தது விஜய் டிவி  விளம்பரம் ....( ஏற்கனவே நம்ம சுபா நல்ல கதை சொல்லுவா  இது இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா சும்மா விடுவாளா ? )

" ஆமா இதோ இந்த மகாபாரதம் அர்ஜுனன் தான் ? "

" இவனா ? " என கண்களை உருட்டினான் ரகு ...

" ஆமா இவரேதான் ... எவ்வளோ அழகான கண்கள், இதழோரம் புன்னகை, அசரவைக்கும் பெர்சனாலிட்டி " என்றவளின் உள்மனம் கேட்டது ( ஹேய் நீ இந்த அர்ஜுனனையா சொல்லுறே ? )

" நான் கெளம்பறேன் "

" எங்க ரகு ?"

" இந்த பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல..இப்போவே டெல்லிக்கு போயி அவன் கால்ல விழுந்து என் லூசு தங்கச்சியை கட்டிக்கோன்னு கேக்றேன் "

" ஹேய் ரகு ............................ ! " இப்படி அழைத்தது நம்ம சுபத்ரா இல்ல , கிருஷ்ணன் .....

" போதும்டா பேசினது... சுபா நாளைக்கு காலேஜ் போகணும்ல .. போ சீக்கிரம் தூங்கு ...பைனல் யேர் நு அஜாக்குறதையா இல்லாம கவனமா படிக்கணும் .... ரகு நீ என் ரூமுக்கு வா ..நாளைக்கு மீட்டிங் பத்தி பேசணும் " என்றபடி அவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனதறைக்கு சென்றான் கிருஷ்ணன் .

ருவரும் அவன் சொன்னபடி அவன் பின்னே செல்ல ,

" என்ன அக்கா சோகமா இருக்கீங்க ? "

" உனக்கு தெரியாததா சிவா (சிவகாமியின் செல்ல பெயராம் ) .... எல்லாம் கிருஷ்ணனை பத்திதான் ... இவன் இயல்பிலே அமைதியானவன் என்றாலும் கூட இப்படி சிரிக்க மறந்தவன் கிடையாது .... அவன் நம்மகூட இருந்துகிட்டே தனி உலகத்துல வாழுறான் சிவா "

" கவலைபடாதிங்க அக்கா... சரி ஆகிடும் " என்று வேறு பதில் சொல்வதறியாது அமர்ந்திருந்தார் சிவகாமி.

அதே நேரம் கிருஷ்ணனின் அறையில்,

" ரகு ............ உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் "

" எதபத்தி அண்ணா  ? "

" அர்ஜுனன் !!"

" ????????????????????? "

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.