(Reading time: 20 - 39 minutes)

 

தேன்மொழி இன்னும் புரியாதவளாக தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நாங்க எல்லாம் உங்க கிளாஸ் வந்தோம். நீங்க ரொம்ப சூப்பரா கிளாஸ் ஹான்டில் செய்யறீங்க. அதுவும் உங்க ஸ்டுடென்ட்ஸ் கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பரா சொல்லிருக்காங்க” என்றாள்.

“ஓ” என்றவளுக்கு அதுக்குள்ளவா ஸ்டுடென்ட்ஸ் கமெண்ட்ஸ் சொல்லிட்டாங்க என்று எண்ணினாள்.

“நாங்க எல்லாம் எல்லா பேட்ச்லையும் ஸ்பை வச்சிருப்போம், எல்லா டீடைல்ஸும் எங்களுக்கு இமீடியட்டா வந்துடும்” என்று சொல்லி கண் சிமிட்டினாள்.

அங்கு இன்னும் சிலர் இருக்க, ஜமுனா “இவர் மிஸ்டர் பிரதாப். இவர் ஆப்டிடுயுட் ஹான்டில் செய்யறார். இவர் மிஸ்டர் சுந்தர். இவர் அக்ரிகல்ச்சர் ஆப்சனல் சப்ஜெக்ட் ஹான்டில் செய்யறார்” என்று அறிமுகப் படுத்தி வைத்தாள்.

தேன்மொழியும் அவர்களுக்கு வணக்கம் கூறி அவளை அறிமுகம் செய்து கொண்டாள்.

லஞ்ச் டைம் என்பதால் எல்லோரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். இடையில் கௌஷிக்கும் வந்து சேர்ந்துக் கொள்ள ஜமுனா “என்ன சார். பாஸ் இருந்தா எங்களை கண்டுக்க கூட மாட்டீங்க. இப்ப என்ன எங்க கூட எல்லாம் வந்து சாப்படறீங்க” என்றாள்.

“அவனை ஏன் மா வம்புக்கு இழுக்கற” என்று தௌலத் அவனுக்கு சப்போர்ட் செய்ய,

“அப்படி சொல்லுங்கக்கா, இவளுக்கு எப்பவும் வாய் தான். இவ வாய்க்கு பயந்து தான் சுதர்சன் எப்பவுமே இப்படி பாரீன்லயே இருக்கறாரு” என்றான்.

“ஹேய். அவரு எப்பவுமே பாரீன்லயே இருக்காறா. நீ பார்த்தியா.” என்று சண்டையிட்டாள் ஜமுனா.

“தாயே பசிக்குது. சாப்பிட விடும்மா” என்றவனாக சாப்பிட்டான் கௌஷிக்.

“சாப்பாட்டு ராமா”

“அது சரி. என்னவோ சொன்னியே, பாஸா, இரு அவன் வரட்டும், நீ சொன்னதை சொல்றேன்.” என்று இருவரும் சிறு பிள்ளைகள் போல சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்த தேன்மொழியின் முகத்தில் சிறு புன்னகை.

அவளைப் பார்த்த தௌலத் “அவங்க ரெண்டு பேரும் அப்படி தான்” என்றார். அவங்க மூணு பேரும் ஒன்னா படிச்சவங்க. இன்னும் அவன் வந்துட்டா அவ்வளவு தான். ஆனா வெளியில மூணு பேருமே எதுவும் காமிச்சிக்க மாட்டாங்க. யாருக்கும் இவங்க காலேஜ்மெட்ஸ்ன்னு கூட தெரிஞ்சிக்காது. இந்த ரூம் தான் இவங்க எல்லை. இதுக்கு வெளியில நீ யாரோ, நான் யாரோன்ற மாதிரி தான். அதுலையும் அவங்க ரெண்டு பேர் கூட பரவால்லை. இந்த ஜமுனா வெளியில சுத்தமா காமிச்சிக்க மாட்டா. அங்க எப்படி இருக்காளோ அதுக்கு ஆப்போசிட் இந்த ரூம்க்கு உள்ள. சுத்தமா ரெண்டு பேருக்கும் மரியாதை கிடைக்காது” என்றார்.

அவர் கூறியதில் யார் அந்த மூன்றாவது நபர் என்று அவளுக்கு புரியாமல் போக, அதற்குள் கௌஷிக்கும், ஜமுனாவும் இவர்கள் புறம் திரும்பி தௌலத்தை முறைத்துக் கொண்டிருந்தனர்.

“என்னக்கா எங்களை பத்தியே கம்ப்ளைன்ட்டா” என ஜமுனா கேட்க,

கௌஷிக்கோ “இவளை பத்தி கூட தப்பா சொல்லலாம். என்னையுமாக்கா” என்றான்.

இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் கௌஷிக் பேசியதை பிடித்துக் கொண்டு அதற்கு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் ஜமுனா.

இவள் புறம் திரும்பிய தௌலத் “இந்த பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது” என்று சொல்லி விட்டு கை கழுவ எழுந்து சென்றார்.

தியமும் வேறு ஒரு பேட்ச்சிறகு தேன்மொழிக்கு கிளாஸ் இருந்தது.

அங்கு சென்று கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கையில் இடையில் தான் தேன்மொழி சுரேசை கவனித்தாள். அப்போது தான் அவளுக்கு அது அன்றைக்கு அவள் கிளாஸ் எடுத்த பேட்ச் என்பதே தெரிந்தது.

எல்லோரும் கருத்தாக நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்கையில் சுரேஷ் மட்டும் ஒரு விதமாக அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

இரண்டு வருட கல்லூரி வாழ்க்கையில் இது போன்று எத்தனையோ பார்த்து விட்ட தேன்மொழிக்கு இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. ஒழுங்காக கவனிக்காமல் அவன் வாழ்க்கையை அவனே வீணடித்துக் கொள்கிறானே என்று தான் இருந்தது அவளுக்கு.

வகுப்பு போர் அடிக்காமல் செல்ல இடை இடையில் வேற சப்ஜெக்ட்டையோ இல்லை ஏதேனும் பொதுவான விஷயங்களையோ பேசுவாள் தேன்மொழி. அப்படி பேசுகையில் “உங்களுக்கு பர்சனல் விஷயம், பர்சனல் ப்ராப்ளம்ஸ் எவ்வளவோ இருக்கும். அதை எல்லாம் இந்த கிளாஸ்க்கு வெளியிலேயே விட்டுடுங்க. அதை எல்லாம் நினைச்சிட்டு இருந்தா, நீங்க எவ்வளவோ கஷ்டத்துக்கு இடைல இங்க வந்து படிக்கறது வேஸ்ட் ஆகிடும். சோ நாம இங்க படிக்க வந்திருக்கோம், அதை மட்டும் செய்யணும் அப்படின்றதை நியாபகம் வச்சிட்டு படிக்கறதுல கான்சென்ட்ரேட் செய்ங்க” என்றாள்.

எல்லோருக்கும் பொதுவாக கூறுவதை போல அவனுக்கு சொல்ல வேண்டிய அறிவுரையை சொல்லி விட்டாள்.

அவனும் அதன் பின்பு நோட்ஸ் எடுக்க ஆரம்பித்து விட்டான்.

‘புரிஞ்சா சரி தான்’ என்று எண்ணிக் கொண்டு அவளும் வகுப்பை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.

ர்ஸ்ட் டே எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சிக்கா” என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள் மலர்விழி.

தேன்மொழியும் நடந்தவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

“ஐயோ எனக்கு உங்க தௌலத் மேடமை ரொம்ப பிடிச்சிருக்குக்கா” என்றாள்.

மலர்விழி இப்படி தான் அவளுக்கு அவர்களை பார்க்க வேண்டும் என்பது கூட கிடையாது. மற்றவர் சொல்வதை வைத்தே அவளுக்கு அவர்களை பிடித்து விடும். தேன்மொழியின் தோழி வித்யாவும் அப்படி தான். தேன்மொழி ஹாஸ்டலில் தங்கி படித்த போது கிடைத்த தோழி தான் வித்யா. தேன்மொழி வித்யாவை பற்றி சொன்னதை வைத்தே அவளுக்கு வித்யாவை பிடித்து விட, இருவரும் ஏதோ காதலர்களை போல பார்க்காமலே போனில் பாச மழை பொழிந்துக் கொண்டிருந்தார்கள்.

இன்னும் இருவரும் நேரில் பார்த்த பிறகு கட்டிப் பிடித்து “அக்கா, மலர், அக்கா மலர்” என்று பார்ப்பவர்களை ஏதோ பல வருடம் பிரிந்திருந்த அக்கா தங்கை தான் சந்தித்திருக்கிறார்கள் என்று எண்ண வைத்து விட்டார்கள்.

இப்போது தௌலத் மேடம் போல என்று எண்ணிக் கொண்டாள் தேன்மொழி.

“வேறென்ன நடந்தது” என்று கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஒன்று விடாமல் எல்லாம் கூறி முடிக்க கௌதமை பற்றி சொன்னதுக்கு “இன்ட்ரெஸ்டிங்” என்றாள்.

அதற்குள் கௌசல்யா வரவும் “வா செல்லம், முதல்ல எனக்கு தா பார்ப்போம்” என்றாள்.

“ஆமா நீ தான் இப்ப வேலைக்கு போயிட்டு களைச்சிப் போய் வந்திருக்க பாரு. அதுக்கு உனக்கு தறாங்க. போடி” என்று சொல்லி விட்டு தன் மூத்த மகளுக்கு செய்து வந்த கேசரியை கொடுத்தார்.

தேன்மொழி உடனே மலர்விழியைப் பார்க்க அவள் முகமோ சுருங்கி விட்டது.

உடனே தேன்மொழி “அம்மா” என்று தாயை ஒரு முறை முறைத்து விட்டு தங்கையை சமாதானப் படுத்தினாள்.

“என்ன மலர் இதுக்கு போய் பீல் பண்ற. அம்மா கிடக்கறாங்க.”

“இல்லக்கா. நான் என்ன வேனும்னேவா வேலைக்கு போகலை.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.