(Reading time: 20 - 39 minutes)

 

வளோ “ஹலோ சார் மே ஐ ஹெல்ப் யூ” என்றாள்.

ஸ்ரீ ராமின் கண்களில் சுவாரசியம் தோன்றியது.

“யார் இவள்” என்று யோசித்தவன் அவன் இயல்பு அவனை தூண்ட “கிளாஸஸ் பத்தி இன்பர்மேஷன் சொல்றீங்களா” என்றான்.

“ஓ எஸ்” என்றவள் அவனுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தாள்.

ஸ்ரீ ராம் குழம்பியே போனான்.

“என்னடா இது. கிருஷ்ணாவை எடுத்துட்டு புதுசா அப்பாய்ன்ட் பண்ணி இருக்காங்களா” என்று

‘இப்போது என்ன செய்வது’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் அவன் மொபைல் அடிக்க “எக்ஸ்க்யூஸ்மீ” என்று சொல்லி விட்டு உள்ளே நுழைய சென்றவனை அவள் தடுத்து “சார் இங்கேயே உட்கார்ந்து பேசுங்க” என்று ஓரமாக போட்டிருந்த பர்னிச்சரை காண்பித்தாள்.

அவனும் ஏதும் சொல்ல இயலாமல் கால் அட்டென்ட் செய்து அங்கு சென்று அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

அவன் போன் பேசிக் கொண்டிருக்கையிலேயே உள்ளே நுழைந்த கௌஷிக் தேன்மொழியிடம் வந்து குட் மார்னிங் சொன்னவன் பின்பு தான் ஸ்ரீ ராமை கவனித்து “ஏய் எப்படா வந்த. இங்க ஏன் உட்கார்ந்திருக்க” என்றான்.

ஸ்ரீ ராம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க,

தேன்மொழியும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

“என்னடா” என்றவன் தேன்மொழியிடம் திரும்பி “மிஸ் தேன்மொழி நான் சொன்னேன் இல்ல இவர் தான் நம்ம பாஸ் ஸ்ரீ ராம்” என்றான்.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீ ராம்.

கௌஷிக் அப்படி சொன்னதும் அவள் முகத்தில் தீ ஜ்வாலையை போல இருந்தது. திரும்பி ஸ்ரீ ராமை பார்த்தாள்.

“கௌஷிக் இவங்க யாரு” என்றான் ஸ்ரீ ராம்.

“நான் சொன்னேனே டா. புதுசா ஹிஸ்டரிக்கு ஜாய்ன் செஞ்சிருக்காங்கன்னு.”

“ஓ ஓகே”

அவன் முகத்தை பார்த்து ஒன்றும் புரியாமல் “என்ன ராம்” என்றான் கௌஷிக்.

ஸ்ரீ ராம் அவள் புறம் திரும்பி “ஐ’ம் சாரி மிஸ் தேன்மொழி. நீங்க யாருன்னு எனக்கு தெரியலை. நான் இல்லாத டைம்ல கிருஷ்ணாவை தான் எடுத்துட்டு வேற யாரையோ அப்பாய்ன்ட் செஞ்சிட்டாங்களோன்னு நினைச்சிட்டேன். நீங்க டீடைல்ஸ் எல்லாம் எப்படி சொல்றீங்க பார்க்கலாம்ன்னு நினைச்சி அப்படி கேட்டுட்டேன்” என்றான்.

கௌஷிக்  ஒன்றும் புரியாமல் நிற்க, தேன்மொழி “இட்’ஸ் ஓகே சார்” என்றாள்.

பின்பு ஸ்ரீ ராம் கௌஷிக்கிற்கு நடந்ததை கூறினான்.

கௌஷிக் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தான்.

“தேன்மொழி. இவன் எப்பவுமே இப்படி தான். காலேஜ் டேஸ்ல இருந்து இப்படி தான். ஏதாச்சும் சேட்டை பண்ணிட்டே இருப்பான். இன்னைக்கு உங்க கிட்டயா. ஜமுனா தான் இவனுக்கு சரியான ஆளு” என்றான்.

தேன்மொழிக்கு இப்போது புரிய ஆரம்பித்தது. அன்று தௌலத் சொன்ன மூன்றாவது நபர் யார் என்று.

ஸ்ரீ ராம் சொன்ன ரீசனை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனோ இன்னும் அவன் மேல் கோபம் தான் வந்தது.

உடனே அவள் மூளை அவளை திட்டியது ‘ஏய் மக்கு. அவன் உன் பாஸ். ஏதோ நடந்தது நடந்துடுச்சி. அதை விடு. அவன் மேல கோபப்பட்டு உனக்கு என்ன ஆகப் போகுது’ என்று.

“கிருஷ்ணா வந்துட்டான், கீழ தான் இருக்கான். நீங்க உள்ளே போங்க தேன்மொழி.” என்றான்.

அவள் உள்ளே செல்ல ஸ்ரீ ராமும் உள்ளே வந்தான்.

அவன் அறைக்கு செல்ல எத்தனித்தவன் ஒரு நிமிடம் நின்று “ரியல்லி சாரி மிஸ் தேன்மொழி.” என்றான்.

அவள் “இட்’ஸ் ஓகே சார்” என்றாள்.

ஆனாலும் அவள் மனதில் சிறு கோபம் உள்ளது என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது.

உள்ளே அவனறைக்கு சென்று விட்டான்.

அவன் சொன்ன காரணத்தை அவள் நம்பவில்லை என்பது மட்டும் அவனுக்கு நன்றாக தெரிந்தது.

சிறிது நேரம் அப்படி ஏன் செய்தோம் என்றே எண்ணிக் கொண்டிருந்தான்.

பிறகு தான் இதைப் பற்றியே ஏன் எண்ணிக் கொண்டிருக்கிறோம். எப்படியும் அவள் இங்கு வேலை செய்பவள். என் காரணத்தை அவள் ஏற்றுக் கொண்டாளா இல்லையா என்பதெல்லாம் எனக்கு தேவை இல்லை என்று முடிவெடுத்து அவன் எண்ண ஓட்டத்தை திசை திருப்பினான். 

அடுத்த நாள் காலையில் தேன்மொழி துணிகளை மாடியில் காய வைத்துக் கொண்டிருந்தாள்.

நேற்று நடந்ததை அவள் அப்போதே மறந்து விட்டு வேலை பார்க்க தொடங்கி விட்டாள். ஆனால் இப்போது காலையில் எழுந்ததில் இருந்து நேற்று நடந்ததே அவளுக்கு நினைவு வந்துக் கொண்டிருந்தது.

அவளுக்கு ஏதோ தான் பெரிதாக முட்டாளாக்கப் பட்டோம் என்றெல்லாம் தோன்றிக் கொண்டிருந்தது.

ஸ்ரீ ராம் உள்ளே செல்ல எத்தனித்த போது, சோபாவைக் காட்டி அவனை உள்ளே செல்ல விடாமல் அங்கேயே அமர வைத்தது நியாபகம் வந்து அவளுக்கு அவமானமாக இருந்தது.

இப்படி யோசித்துக் கொண்டே திரும்பியவள் பக்கத்து மாடியில் கௌதம் இருப்பதைக் கண்டாள்.

ஓ இது தான் இவர் வீடா என்று எண்ணி அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

வழக்கம் போல ஹெட் செட் அவன் காதில் இருக்க தீவிரமாக ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான்.

‘இவர் எப்போதுமே இப்படி தான் போலும்’ என்று எண்ணிக் கொண்டு துணிகளை காயப் போட்டாள்.

இவள் துணிகளை காயப் போட்டு முடிக்கையில் அங்கு கௌதம் ஹெட் செட்டை கிழட்டி விட்டு எழுந்தான்.

‘தன்னை பார்த்ததால் தான் கிளம்புகிறானோ’ என்று தேன்மொழி எண்ணி கொண்டிருக்கையில் அவன் கிளம்பிக் கொண்டிருந்தான்.

அப்போது தான் தேன்மொழி நன்றாக பார்த்தாள். அதிர்ந்து நின்றாள். கடவுளே!.    

தொடரும்!

Episode # 01

Episode # 03

{kunena_discuss:727}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.