(Reading time: 20 - 39 minutes)

 

ன்ம்மா இப்படி பேசறீங்க. அங்க எவ்வளவு சந்தோஷமா வேலைக்கு போக ஆரம்பிச்சவ ஏதேதோ பிரச்சனையாகி இப்ப இந்த நிலைமைல இருக்கோம். அதுக்கு அவளை போய் இப்படி சொல்றீங்க” என்று கேட்டுக் கொண்டே வந்தவளின் குரல் நின்று விட்டது.

கௌசல்யா கண் கலங்கி இருக்க, கண்ணீர் வரவா வரவா என்று கேட்டுக் கொண்டிருந்தது.

தேன்மொழிக்கு ஆயாசமாக இருந்தது.

இப்போது யாரை முதலில் சமாதானம் செய்வது என்று தான் அவளுக்கு தெரியவில்லை.

இருவரையும் மாறி மாறி பார்த்தவள் “சரி போங்க. ரெண்டு பேருக்கும் நான் ஊட்டி விடலாம்ன்னு பார்த்தேன். நீங்க ரெண்டு பேரும் சரியில்லை. சோ நான் சாப்பிட போறேன்ப்பா. உங்களுக்கு எல்லாம் கிடையாது. போங்க” என்றவாறு ஓரக் கண்ணில் பார்த்துக் கொண்டே ஸ்பூனில் எடுத்து வாயில் வைக்க போனாள்.

அதற்குள் “அக்கா” என்று அலறியவாறே, “நான் தான் ஊட்டி விடுவேன்” என்றவாறே அவள் கையில் இருந்து வாங்கி தேன்மொழிக்கு ஊட்டி விட்டாள் மலர்விழி. அடுத்த ஸ்பூன் எடுத்து தாய்க்கு ஊட்ட சென்றவள் அவர் இன்னும் கண்ணில் கண்ணீரோடு இருப்பதைப் பார்த்து “இப்படி அழுகாச்சியா இருந்தா எல்லாம் நான் ஊட்டி விட மாட்டேன்ப்பா. சின்ன புள்ள மாதிரி செய்யாதம்மா. இந்த வீட்டுல நான் சின்ன புள்ளையா, நீ சின்ன புள்ளைய்யான்னே தெரியலை. என் கூட போட்டி போடறதை முதல்ல நிறுத்து” என்றவாறு தாய்க்கும் ஊட்டி விட்டாள்.

“சரி சரி. ரெண்டு பேரும் திரும்ப என்னையே பார்க்காதீங்க. நீங்க போய் தனியா எடுத்து சாப்பிடுங்க. இன்னைக்கு வேற கொஞ்சம் டேஸ்ட்டா செஞ்சிருக்கே கௌசி செல்லம். சோ இது புல்லா எனக்கு தான். போ போ அக்காக்கு வேற எடுத்துட்டு வா போ” என்று தாயை விரட்டினாள்.

அவளை முறைத்தவாறே “எனக்கு தெரியும்டீ. நீ அதை கைல வாங்கும் போதே எங்களுக்கு அது கிடைக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றவாறே வேறு எடுத்து வர உள்ளே சென்றார் கௌசல்யா.

தேன்மொழி புன்னகைக்க மலர் விழியும் சிரித்தவாறே “என்னக்கா உன் செல்லம் சிரிச்சாச்சா. ம்ம் இந்த கொடுமை எங்க நடக்கும். மேடம் என்னை பீல் பண்ற மாதிரி பேசனதுக்கு கடைசில நானே அவங்களை சிரிக்க வைக்க வேண்டியிருக்கு. இதுல நீ வேற வீரமா திட்ட ஆரம்பிச்சிட்டு அப்படியே அவங்க முகத்தை பார்த்துட்டு நிறுத்திட்ட” என்றாள்.

“போடி வாலு” என்றவாறு அவள் தலையை கலைத்து விட்டு சென்றாள் தேன்மொழி.

தங்கையை நினைத்து தேன்மொழிக்கு பெருமையாக இருந்தது. எல்லாவற்றையும் புரிந்து நடந்து கொள்பவள். ஸ்வீட் கார்ல் என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் இதே தங்கை தான் வேண்டாம் என்று சொல்வதை எதிர்த்து தன்னிடமே வாதிடுவாள் என்று அவள் சிறிதும் எண்ணவில்லை.

தேன்மொழி அங்கு வேலைக்கு சேர்ந்து நான்கு நாட்கள் ஆகி விட்டது. அங்கு எல்லோரும் அவளை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். ஆம் பார்த்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சுரேஷ் கிளாஸ்ஸில் அமைதியாக இருந்தாலும் மற்ற நேரங்களில் அவன் அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு தேன்மொழி செல்லும் போது அவன் நண்பர்களை ஏதாவது சொல்வது போல அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.

தேன்மொழியும் ஓரளவு பொறுத்து போனாலும், ஓரளவுக்கு மேல் பொறுக்க இயலாமல் அவனை பார்த்து முறைத்தாள்.

அவனோ திரும்ப அவன் நண்பனிடம் “என்ன மச்சான் இப்படி முறைக்கிற பயமா இருக்கு மச்சான்” என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

இதில் ஜமுனா தான் இடையில் புகுந்து அவனை போலவே தேன்மொழியிடம் வந்து அவளை திட்டுவது போல அவனை திட்டிக் கொண்டிருந்தாள்.

அதனால் கிளாஸ் எடுப்பதை தவிர தேன்மொழியை எங்கும் தனியாக விடுவதே இல்லை. எங்கு சென்றாலும் மூவர் கூட்டணி தான். தேன்மொழி, ஜமுனா, தௌலத் என்று.

தேன்மொழிக்கு இதை எல்லாம் நினைத்து சிரிப்பு தான் வந்தது. “ஒரு ஸ்டுடென்ட் அவனுக்கு பயந்துக்கிட்டா என்னை தனியாவே அனுப்ப மாட்டறீங்க” என்பாள்.

ஜமுனா தான் “நீ இன்னும் சின்ன பொண்ணா இருக்க. ரெண்டு வருஷம் காலேஜ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. பட் நீ காலேஜ் ஹான்டில் செஞ்ச பசங்க வேற. இங்க இருக்கற பசங்க வேற. காலேஜ்லனா அவங்களுக்கு உங்க மேல ஒரு பயம் இருக்கும். ஏதாச்சும் பிரச்சனைன்னா நம்மளோட ப்யூசரே வேஸ்ட் ஆகிடும்ன்னு ஒரு பயம் இருக்கும். பட் இங்க அப்படி இல்லை. இந்த இன்ஸ்டிடியூட் இல்லன்னா வேற இன்ஸ்டிடியூட். அப்படின்னு போயிட்டே இருப்பாங்க. அதுவும் இல்லாம பெரிய பிரச்சனை ஆகிடும்ன்னு எல்லாம் நாங்களும் சொல்லலை. யூ ஆர் ஜஸ்ட் ட்வென்டி போர். உங்க அம்மா உன்னை தைரியமா அனுப்பறாங்கன்னா நாங்க அந்த நம்பிக்கையை அவங்களுக்கு காப்பாத்தி கொடுக்கணும். அவனுங்க ஜஸ்ட் உன்னை டீஸ் பண்ணி அதனால நீ பீல் பண்றதை கூட நாங்க விரும்பலை” என்று பெரிய லெக்சராக தந்தாள்.

அதற்கு மேல் தேன்மொழி ஒன்றும் பேசவில்லை.

தேன்மொழி வீட்டில் பெரிய பெண்ணாக இருப்பதாலோ என்னவோ எப்போதுமே அவளுக்கு தான் பெரியவள் என்ற எண்ணம் இருக்கும். அதுவுமில்லாமல் எந்த விசயத்தையும் எப்போதுமே அவள் யோசித்து அணுகுவாள், எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவள் செய்ய மாட்டாள். எனவே அவள் தோழிகளே அவளை “ஐயோ நீ பெரிய பாட்டி டீ. ஏண்டீ இப்படி இருக்க என்பார்கள்”. இதெல்லாம் சேர்ந்து அவளுக்கு அவள் வயதை விடம் மனம் முதிர்ந்திருந்தது. அதுவும் மலர் செய்யும் சேட்டைகளை எல்லாம் பார்த்து அவளை ஒரு குழந்தையாக எண்ணி தான் மிக பெரியவள் என்று இவ்வளவு நாள் எண்ணி இருந்தவளுக்கு அவளையே ஏதோ குழந்தை போல் நடத்துவதை எண்ணி சிரிப்பு தான் வந்தது.

ஏதேதோ எண்ணியபடியே இன்ஸ்டிடியூட்டிற்கு வந்து விட்டாள் தேன்மொழி.

கிருஷ்ணா தான் அவளை புன்னகையோடு வரவேற்றான்.

கிருஷ்ணா அங்கு வேலை செய்பவன். கிளாஸ் அலாட்மென்ட், மெட்டீரியல் டிஸ்ட்ரிபுயூட் செய்வது, ரிசப்சனில் இருப்பது என மொத்தத்தில் அவன் அங்கு ஆல் இன் ஆல்.

“வாங்க மேடம். உங்களுக்காக தான் வெயிட் செய்யறேன்”

“எனக்காகவா. என்ன சார். சொல்லுங்க”

“இன்னும் யாரும் வரலை. நீங்க தான் சீக்கிரமா வருவீங்கன்னு தெரியும். கொஞ்ச நேரம் ரிசப்சன்ல இருக்கீங்களா. நான் போய் கௌதமை கூட்டிட்டு வரணும்”

“ஓ. ஓகே. நீங்க போயிட்டு வாங்க. நான் இருக்கேன்”

“தான்க் யூ” என்று சொல்லி விட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு  கிளம்பினான்.

கௌதமும் கிருஷ்ணாவும் ரொம்ப க்ளோஸ் போலும்.

அன்றும் அப்படி தான் தேன்மொழி நுழையும் போது இருவரும் ஏதோ ரொம்ப சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணா தான் அவளை பார்ப்பது போல நின்றுக் கொண்டிருந்தான். ஆனால் இவள் நுழைந்தவுடன் கௌதம் ஏதோ சுவிட்ச் போட்டார் போல அமைதியாகி விட்டான்.

எல்லோரிடமும் கௌதம் நன்றாக தான் பேசுகிறான் என்றாலும் கிருஷ்ணாவிடம் கொஞ்சம் அதிக நெருக்கம் போல தான் தெரிகிறது. அதிலும் கிருஷ்ணா ஏன் போய் கௌதமை அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

பின்பு அந்த யோசனையை விட்டு விட்டு காலெண்டரில் டேட் மாற்றி விட்டு அங்கிருந்த சாமி படத்தில் காய்ந்த பூவை எடுத்து விட்டு, அங்கு வாங்கி வைத்திருந்த பூவை எடுத்து வைத்தாள்.

அங்கு டேபிளில் வைக்கப் பட்டிருந்த பொருள்களை இடம் விட்டு இடம் மாற்றி வைத்துக் கொண்டிருந்தாள்.

தேன்மொழி இப்படி செய்து கொண்டிருக்கும் போது அங்கு ஒருவன் வந்து நின்றான்.

அரவம் தெரிந்து தேன்மொழி நிமிர்ந்தாள்.

ரிசப்சனில் தேன்மொழியை பார்த்தவன் ஒரு நிமிடம் தயங்கி நிற்க,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.