(Reading time: 6 - 12 minutes)

 

"நான் பேசிப் பார்க்கிறேன் அத்தை..."

"உன்னை நம்பி தான்ம்மா இருக்கேன்.பேசும்மா..."

"கவலைப்படாதீங்க அத்தை....நான் அவர் மனசை மாற்றுறேன்."

"நன்றிம்மா..."

"ஐயோ....என்ன அத்தை நீங்க?பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு????"

"இல்லம்மா...இன்னிக்கு சரண் என் கூட சந்தோஷமா இருக்கான்னா.அதுக்கு நீ தான்ம்மா காரணம்..."

"இல்லை அத்தை...அவரும் எத்தனை நாள் தான் பாசத்தை மறைத்து வச்சிருப்பாரு சொல்லுங்க?"

"பெருந்தன்மையா பேசுற! சரிம்மா நான் கிளம்புறேன்."

"இருங்க அத்தை...எதாவது சாப்பிட்டு போங்க!"

"அதுக்கென்னம்மா...எப்படியும் நம்ம வீட்டுக்கு தானே வர போற?அப்போ...உன் அத்தைக்கு வகை வகையா செய்து தா!சரியா?"-மதுபாலா ஒரு வெட்க சிரிப்போடு,

"சரிங்க அத்தை."-என்றாள்.

காலையில்....அந்தி மாலையில்......விடிவெள்ளியில்....விண்ணில்....மண்ணில்....ஆண்டாண்டாய் ஆட்சி புரிவது காதலே!!!!

"சொல்லு...அம்மூ!"

"நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன்.நீ மாட்டன்னு சொல்லக் கூடாது!"

"நீ எது கேட்டாலும் தர நான் ரெடி!"-என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் ஆதித்யா.

"சும்மா இரு...ஆதி."

"அதான் எனக்கு கடுப்பா இருக்கு!"

"ஆதி...."

"சரி...."-என்று அவன் சிறு குழந்தையைப் போல் தன் சுட்டு விரலை தன் இதழ் மீது வைத்தான்.அதைப் பார்த்தவுடன் மது சிரித்தே விட்டாள்.நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் காதலின் சிரிப்பொலியின் இனிமை அடடா!!!!தேனின் இனிமை!!!!

"அழகா சிரிக்கிற அம்மூ...!"

"ம்....ரொம்ப தான்.இதுக்கு முன்னாடி நான் சிரிச்சு நீ பார்த்ததே இல்லைப்பாரு!"

"பார்த்திருக்கேன்...ஆனா,இவ்வளவு அழகா சிரிச்சு பார்த்ததில்லை."

"............"-அவள் அமைதியானாள்.

"மேடம்...எதையோ சொல்லணும்னு சொன்னீங்க?"

"அதான்...எங்கே சொன்னா கோபப்படுவியோன்னு பயமா இருக்கு."

"ஏன்டி...என்னைப் பார்த்தா ஹிட்லர் மாதிரியா இருக்கு?"

"இல்லை...அது...வந்து..."

"நான் வரேன்."

"எங்கேப் போற?"

"பின்ன என்ன?நீ சொல்றதுக்கே 2 எப்பிஸோட் எடுத்துப்ப போல??"

"ரா....ராஜசிம்மபுரம் போலாமா ஆதி?"-அவன் முகம் மாறியது.

"நான் அப்பவே உன்னைப் போக சொன்னேன்."

"நீ...நீயும் வாயேன்."-அவன் முகம் இறுகிய பாவனையில் சென்றது.மதுபாலா அவன் முக மாற்றத்தை கவனித்தாள்.அவன் திடீரென்று வாய்விட்டு சிரித்தான்.

"இதை சொல்றதுக்கா...ஒரு மணி நேரமா??பயந்துட்டு இருந்த???"-அவள் விழித்தாள்.

"அம்மா தானே சொல்ல சொன்னாங்க????"

"..........."

"போலாம் அம்மூ....கண்டிப்பா போகலாம்."

"நிஜமாகவா???"

"சத்தியமா...ஆனா,நான் உன் மேல செம கடுப்புல இருக்கேன்."

"ஏன்?"

"பக்கத்து வீட்டுல தானே இருக்கேன்.போன் பண்ணா அன்னிக்கு மாதிரி சுவர் ஏறி குதிச்சி வந்திருக்க மாட்டேனா??இவ்வளவு தூரம் பீச்சுக்கு வர வச்ச! ஒரு தனிமையும் கிடைக்கலை."-அவள்,அவனை முறைத்தாள்.

"சரி....முறைக்காதே!!!நான் வரணும்னா ஒரு கண்டிஷன்!"

"என்ன?"-அவன்,அவள் காதில் ஏதோ கூறினான்.

"உன்னை.........என்ன பண்றேன் பாரு!"

"தர முடியாதுன்னா....வர முடியாது தான்."

"போடா!"-அங்கே காதலில் விழுந்த இருதயங்களில் காவியம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது!!!!!

இனி நமக்கென்ன அங்கே வேலை???கிளம்புவோமா??

தொடரும்...

Go to EUU # 09

Go to EUU # 11

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.