(Reading time: 14 - 27 minutes)

 

"போ" என்று மது செல்லமாக சிணுங்க, அவள் கையை பற்றி மென்மையாக வருடிய படியே கேட்டான்

"நீ என்கிட்டே சொன்ன பிரகாஷ் தான  அது?"

"ம்ம்ம்ம் "

"இவ்வளவு நாள் நான் உன்கிட்ட எதையுமே கேட்கல உன் மனச கஷ்ட படுத்தக் கூடாதுன்னு விட்டுட்டேன் ஆனா இப்போ அது தப்போன்னு தோணுது அம்மு"

கேள்வியாக பார்த்தவளை ஆழமாக பார்த்தவன்

"அப்பவே இந்த விஷயத்த நான் தீர்த்து வெச்சுருக்கணும் உன்ன இவ்வளவு நாள் பீல் பண்ண விட்டதே பெரிய தப்பு"

"ம்ம்ம்"

"ப்ளீஸ் அம்மு சொல்லு டா, உனக்காக எது வேணாலும் பண்ண நான் ரெடியா இருக்கேன் ஆனா நீ இப்படி அழரதையும்  எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கறதையும் பார்த்துட்டு என்னால எப்படி டா சும்மா இருக்க முடியும் ப்ளீஸ்"

"அது வந்து..."

" ஏதுவ இருந்தாலும் சொல்லிடு டி எதுக்கு சென்னைய விட்டு அந்த வேலைய விட்டு போன ? என்னால இதுக்கு மேல உன்கிட்ட கெஞ்ச முடியாது" அவன் குரலில் சிறு எரிச்சலை உணர்ந்தவுடன் சொல்லி விடுவது தான் நல்லது என்று முடிவுடன் தொடங்கினாள் மது,

"நான் அந்த வேலைய விட்டதுக்கு காரணம்......"

( அதுக்கு அப்புறம் படத்துல எல்லாம் வருமே,ஆடியோ இல்லாம வீடியோ மட்டும், அட அதாங்க டாப் சீக்ரெட் அந்த மாதிரி இமாஜின் பண்ணிகொங்க)

அவள் சொல்ல சொல்ல ரகுவிற்கு ஆத்திரமும் அதே சமயம் இவ்வளவு நாள் இந்த சோகத்தை தனக்குள்ளே போட்டு அழுதிருக்கிறாலே என்று மது மேல் பரிவும் உண்டாக ஒரு முடிவிற்கு வந்தான். ( என்ன முடிவுன்னு கடைசியில தெரிஞ்சுப்பீங்க)

முழுவதையும் சொல்லி விட்டு மது அழவும் அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளை தேற்றினான்.

மாலையில் சினிமா,  ஷாப்பிங் என நேரம் ஓடவே அதன் பின் மதுவும் பலதையும் நினைத்து மனதை குழப்பிக் கொள்ளவில்லை, அவள் சிரிப்பதை பார்த்த ரகுவிற்கும் ஏதும் தோன்றவில்லை.    

தே நேரம் அமெரிக்காவில் தன் ப்ராஜெக்ட் சம்மந்தமாக அனைத்து வேலைகளையும் முடித்து அதன் விவரங்களை எம்.டி க்கு அனுப்பி விட்டு.. தான் இந்திய செல்லும் செய்தியையும் தெரிவித்து விட்டு வெகு நாட்களுக்கு பின் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தான் ஆதி...

"ஆதி... எழுந்திருங்க" என்ற ஸ்வேதாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தான். (டின்னர் முடித்து விட்டு கிளம்ப இருந்தவனை வற்புறுத்தி அங்கேயே தங்க வைத்து விட்டார் வித்யா)

"நான் தான் ரிலாக்ஸ், அம்மா தான் உங்கள எழுப்பி காபி கொடுக்க சொன்னங்க"

"ஒ தேங்க்ஸ்"

"ம்ம்ம் இட்ஸ் ஓகே, குளிச்சுட்டு சாப்பிட வாங்க, அப்பா இன்னைக்கு இவனிங் வந்துடுவாங்க உங்க ரிசைனிங்க் பர்மாளிடீஸ் எல்லாம் இன்னைக்கு முடிஞ்சிடுமாம், சொல்ல சொன்னங்க"

"வாவ் தட்ஸ் கூல், அப்போ இன்னும் டூ டேஸ் தான், அப்புறம் இந்தியா போய்டுவேன்" என்று பெரிதாக புன்னகைத்தான்.

"ம்ம்ம்" என்று அவளும் கூட சேர்ந்து முறுவலித்து விட்டு சென்று விட்டாள்.

அவன் துவண்டு போய் இருந்த நேரத்தில் ஊக்கமளித்து மீண்டும் வேலையில் சேர சொல்லி அவனை உந்திய இருவரில் அவன் மாமா ஒருவர். ( இன்னொன்னு தாங்க நம்ம ஆதியோட அக்கா ஆராதனா ). அவன் மாமாவை அவனுக்கு எப்போதும் பிடிக்கும் வேறு வீட்டில் இருந்து வந்தவர் தான் என்றாலும் தன் அத்தையை விடவும் பாசமாக இருப்பவர். எப்போதுமே ஜாலியாக வளைய வரும் மனிதர் தான் சரண்ராஜ்.

அவனை பற்றி ஆராதனா பேசிய போது அவர் தான் "என்ன பிரச்சனை என்றாலும் பரவாயில்லை அவனுக்கு அங்க இருக்க பிடிக்கலனா இங்க அனுப்புமா நான் பாத்துக்கறேன்" என்று அவளுக்கும் சேர்த்து நம்பிக்கை அளித்தார். சொன்னது போலவே ஆதியை நன்றாக பார்த்துக் கொண்டார்.அந்த நன்றி கடன், அது மட்டும் இல்லாமல் இப்படி தன்னையே எண்ணி உருகும் அத்தை பெண்.

இவை தைரியம் கொடுக்க இந்தியாவிற்கு கிளம்ப ஆயுத்தமானான் ஆதி. இரண்டு நாட்களில் தன் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு கிளம்பி விட்டான். இதோ ஏர்போர்ட் வரை வந்து ஸ்வேதா கையசைத்து வழி அனுப்ப உல்லாசமாக கிளம்பி விட்டான்.

கோவை....

ந்த இரண்டு நாட்களில் மது கோவை வந்திருந்தாள். ரகு சென்னையிலே வேலை தேட எண்ணி அங்கேயே தங்கி விட மதுவிற்கு தான் என்னவோ போல் இருந்தது. இருந்தாலும் அவன் இவ்வளவு தூரம் அவளுக்காக வந்ததை எண்ணி மகிழ்ச்சியோடும் புது தெம்புடனும் அன்றாட வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.

"மிது...."

"என்னம்மா இதோ வரேன்"

"போன் டீ சீக்கிரம் வா"

"எனக்கா என் மொபைல் இருக்கே அப்புறம் யாரு வீட்டு போனிற்கு கூப்பிட்டது" என்று படிகளில் இறங்கிய படியே அவள் கேட்க,

ஒரு புன்னகையுடன் அவளிடம் போனை கொடுத்து விட்டு, தன் வேலையை கவனிக்க  சென்று விட்டார் லலிதா,

"ஹலோ"

"எரும எரும"

"டேய் நீயா? ஏன் டா என் போனுக்கு கூப்ட வேண்டியது தான?"

"அதுக்கு நீ போனை ஆன்ல வெச்சுருக்கணும்"

"ஆன்ல தாண்டா இருக்கு, இரு பாக்கறேன்" என்று கர்ட்லேசை எடுத்துக் கொண்டு அவள் அறைக்கு சென்று பார்த்தால் போன் சுவிட்சு ஆப் ஆகியிருந்தது.

"ஐயோ ஆமாடா சுவிட்சு ஆப் ஆகிடுச்சு, நானும் பாக்கலடா "

"ம்ம்ம் சரி ஒரு குட் நியூஸ் சொல்ல தான் ட்ரை பண்ணிட்டே இருந்தேன்"

"என்னடா வந்த நாலாவது நாளே எதாவது பொன்னா உஷார் பண்ணிட்டியா?"

"ஐயோ அதெல்லாம் இல்ல டீ பர்ஸ்டு நான் சொல்றத கேளு"

"அதானே பார்த்தேன் நீயாவுது பொன்னா உஷார் பண்றதாவது? சுத்த தத்திடா நீ"

"யாரு நானு?"

"ஆமா தயிர் சாதம்"

"ஹே உன்ன எத்தன தடவ அப்படி கூப்பிடதானு சொல்றது பிசாசு முட்ட கண்ணி"

"டேய் வேண்டாம் அப்படி சொல்லாத"

"அப்போ நீ முதல்ல அடங்கு"

"ம்ம்ம்ம் சரி பன்னி"

"அப்படி வா வழிக்கு, இப்போ சொல்றத கேளு ஐ கட் எ ஜாப் டீ"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.