(Reading time: 18 - 35 minutes)

 

ங்க பாரு தேன்மொழி. அவனும் நம்மளை மாதிரி நார்மலானவன் தான். மத்தவங்க அவனைப் பார்த்து பீல் பண்றது எல்லாம் அவனுக்கு பிடிக்காது. அவனைப் பத்தி தெரிஞ்சா கூட நார்மலா பிஹவ் பண்ணணும்ன்னு தான் அவன் எதிர் பார்ப்பான். உன் பேச்சுல புதுசா தெரிஞ்ச தடுமாற்றம் அவனுக்கு நல்லா புரிஞ்சிடுச்சி”

“இப்ப தெருவுல யாராச்சும் கை, கால் இழந்தவங்களை பார்க்கும் போது அதை பெருசா எடுத்துக்காத மாதிரி போயிடனும். அவங்க எல்லார் மாதிரியும் லைப் லீட் பண்ணணும்ன்னு தான் அவங்க எல்லாம் ஓடிக்கிட்டு இருக்காங்க. அப்படி இல்லாம திரும்ப திரும்ப அவங்களை திரும்பி பார்த்துட்டு போறது அவங்களை எவ்வளவு வருத்தப் பட வைக்கும் தெரியுமா. இதுவும் அப்படி தான்”

தேன்மொழியும் அப்படி எண்ணுபவள் தான். ஆனால் ஏனோ அவனைப் பற்றி தெரிந்த பிறகு அவள் மனதில் தாங்கிக் கொள்ள இயலாத வலி இருந்தது.

மற்ற இருவரும் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு, “எனக்கு புரியுது” என்றாள் தேன்மொழி.

அவர்களும் அதை அதோடு விட்டு விட்டனர்.

வீட்டிற்கு சென்றும் தேன்மொழிக்கு அதே நினைவாக தான் இருந்தது.

“என்னக்கா. ஒரு மாதிரி இருக்க” என்று மலர் கேட்டும் அவளால் ஏதும் சொல்லவில்லை.

அவள் என்னவென்று சொல்லுவாள். என்ன இருந்தாலும் அது அவன் பெர்சனல் அல்லவா.

“ஒன்னும் இல்லடா” என்று அவளை சமாளித்தாள்.

“சரிக்கா. உன் மூட் சேன்ஜ் பண்றதுக்கு நான் ஒரு நல்ல நியூஸ் சொல்லவா”

“ம்ம்ம். சொல்லு”

“எனக்கு ஜாப் கிடைச்சிடுச்சி” என்று கிட்டத் தட்ட குதித்தாள்.

அவளின் உற்சாகம் தேன்மொழிக்கும் சிறிது தொற்றிக் கொண்டது.

அதை அவர்கள் மூவரும் செலிப்ரேட் செய்யலாம் என்று மலர் வற்புறுத்த அவள் மறுத்தும் கேட்காமல் வெளியில் செல்ல தயாராக வைத்தாள்.

ஆனால் அதற்குள் அவள் தந்தையும் வந்து விட, அதை கேட்ட அவருக்கும் சந்தோசமாக இருந்தது.

ஆனால் அதை செலிப்ரேட் செய்யலாம் என்று மலர் கூறவும், முதலில் சரி என்றவர், பின்பு பெரிய மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“என்ன இருந்தாலும் உனக்கு அங்க கிடைச்ச ஜாப் மாதிரி வராது. எவ்வளவோ நடந்துடுச்சி. எவ்வளவோ இழப்பு வந்துடுச்சி. அதுல செலிப்ரேஷன் தான் ரொம்ப முக்கியம், அதுக்கும் எல்லாரும் கிளம்பிட்டீங்க” என்றவாறே தேன்மொழியை முறைத்து விட்டு சென்றார்.

இது எதுவும் பாதிக்காதவளாக பர்ஸை கீழே வைத்து விட்டு ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தாள்.

அவளை சோகமாக பார்த்து விட்டு கணவரின் பின் சென்றார் கௌசல்யா.

“சாரிக்கா” என்றாள் மலர் பாவமாக.

“பரவால்ல டா. நீ என்ன செஞ்ச. விடு”

டுத்த நாள் காலையில் வழக்கம் போல தேன்மொழி சீக்கிரம் வந்து விட, அதற்கு முன்னாலேயே கௌதம் அங்கு இருந்தான்.

இவள் உள்ளே நுழையும் போதே அவனை பார்த்து விட்டு ஒரு தயக்கம் வர தான் செய்தது.

இவள் நுழைந்த உடனே கௌதம் “குட் மார்னிங் தேன்மொழி” என்றான்.

“குட் மார்னிங் சார்” என்றவளுக்கு சிறு ஆச்சரியம் தான். அவள் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் அவள் குரலில் கௌதமிற்கு அது புரிந்து விட்டிருந்தது.

“என்னடா. எப்படி இவன் நம்மளை கரெக்ட்டா கண்டுப் பிடிச்சான்னு பாக்கறீங்களா. அது யூசுவலா இந்த டைம்க்கு யாரும் வர மாட்டாங்க. அதுவும் இல்லாம உங்களோட பெர்ப்யூம் ஸ்மெல் வச்சி தான்” என்று அவனே கேள்வி கேட்டு பதில் கூறினான்.

சிறு தயக்கத்துடன் “நேத்து நடந்ததற்கு சாரி சார்” என்றாள்.

கௌதமும் “சாரி தேன்மொழி. நான் தான் சாரி கேட்கணும். நேத்து உங்க கிட்ட கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன்னு  நினைக்கறேன்” என்றான்.

“இல்ல சார். அப்படி எல்லாம் இல்லை.”

“இல்ல. நீங்க அப்படி ஒன்னும் தப்பு பண்ணலை. என்னை எல்லாரும் நார்மலா பார்க்க மாற்றாங்கன்னு எனக்குள்ளே ஒரு ஆதங்கம் இருக்குன்னு நினைக்கறேன். அதான் அது அப்பப்ப வெளியே வந்துடுது” என்றான் வருத்தம் தோய்ந்தக் குரலில்.

“உங்களோட பீலிங்க்ஸ் எனக்கு புரியுது. நானும் எப்பவும் இப்படி ரியாக்ட் பண்ண மாட்டேன். நான் இங்க வந்ததுல இருந்து இது ஏதோ என்னோட பாமிலி மாதிரி தோணிடுச்சி. தௌலத் மேடமும், ஜமுனா மேடமும் தான் இதுக்கு ரீசன்னு நினைக்கறேன். பர்ஸ்ட்டே உங்களை பத்தி தெரிஞ்சிருந்தா கூட ஒன்னும் தோணி இருக்காதுன்னு நினைக்கறேன். திடீர்னு தெரியவும் என்னால ஏனோ அதை ஏத்துக்கவே முடியலை. ரியலி ஐ’ம் சாரி” என்றாள்.

புன்னகைத்த கௌதம் “தேங்க்ஸ் தேன்மொழி” என்றான்.

“எதுக்கு சார்”

“பாமிலி மாதிரின்னு சொன்னீங்க இல்ல. நானும் தானே அதுல ஒருத்தன்” என்று திரும்ப புன்னகைத்தான்.

அவன் புன்னகையை பார்க்கும் போது அவளுக்கு ஒரு சேர சந்தோசமாகவும், துக்கமாகவும் இருந்தது.

‘இவனுக்கா இப்படி’ என்று வருந்தினாள் அவள்.

அதற்குள் கௌதம் “ஓகே. நேத்து நடந்ததுக்கு திரும்ப சாரி கேட்டுக்கறேன். அதை நாம மறந்திடலாம். ப்ரண்ட்ஸ்” என்று கை நீட்டினான்.

தேன்மொழியும் வினாடியும் யோசிக்காமல் “ப்ரண்ட்ஸ்” என்றவாறே கை கொடுத்தாள்.

சரியாக அப்போது ஜமுனா உள்ளே வர “பாருடா. நேத்து இங்க ஏதோ ஒரு குட்டி வார் நடந்த மாதிரி இருந்தது. இப்ப என்னடான்னா, ஏதோ பீஸ்(peace) ட்ரீட்டி போட்டுடாப்ல இருக்கு” என்றாள்.

“நேத்து வார் நடந்துடுச்சா, அப்படின்னா அது உன்னால தானே நடந்திருக்கும்” என்றான் கௌதம்.

அதற்கு ஜமுனா பதில் தர, திரும்ப கௌதம் பேச என்று அங்கு களைகட்டியது.

தேன்மொழிக்கு அவர்கள் பேச பேச ஒரே உற்சாகமாக இருந்தது. அவள் வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

சரியாக அதே நேரம் ஸ்ரீ ராம் வந்தான்.

மற்ற இருவரும் வாய் சண்டையில் இருக்க, தேன்மொழியும் அதை ரசித்து சிரித்துக் கொண்டிருக்க என்று யாருமே ஸ்ரீ ராம் வந்ததை கவனிக்கவில்லை.

ஜமுனா இருந்தால் யாருடனாவது அவள் இப்படி தான் கதை வளர்த்திக் கொண்டிருப்பாள் என்று தெரிந்திருந்ததால் ஸ்ரீ ராமிற்கு அது பெரிதாக தெரியவில்லை. ஆனால் அவன் பார்த்த இந்த சில நாட்களில் தேன்மொழி இப்படி சிரித்து அவன் பார்த்ததில்லை. அவளின் புன்னகை ஏதோ பார்மலாக சிரிக்க வேண்டும் என்பதற்காக சிரிப்பதாக தான் இருக்கும். மற்றபடி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாலும், அவள் அவளின் வேளைகளில் ஈடுப்பட்டிருப்பாள். அவள் இப்படி சிரித்துக் கொண்டிருக்கவும், அவனுக்கு ஆச்சரியமாக தான் இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.