(Reading time: 18 - 35 minutes)

 

தௌலத்தும் வந்து சேர்ந்து விட, உள்ளே நுழைந்தவர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு “என்ன நடக்குது இங்கே” என்றார்.

தற்காலிக போர் நிறுத்தம் செய்த ஜமுனா தௌலத், ஸ்ரீ ராம் இருவரையும் பார்த்து “நீங்க எப்ப வந்தீங்க” என்றாள்.

“அது சரி. நான் இப்ப தான் வந்தேன். ராம் எப்பவோ வந்துட்டான் போல, அது கூட தெரியாம சண்டை போடறீங்களா” என்றார்.

ஸ்ரீ ராம் இடையில் புகுந்து “ஆமாக்கா. நான் வந்தது எல்லாம் மேடம்க்கு தெரியவே இல்லை. அவ்வளவு வேகத்துல கௌதம் கிட்ட சண்டைப் போட்டுட்டிருந்தா. பாவம் கௌதம்” என்றான்.

திரும்ப அவனிடம் பாய ஆயத்தமான ஜமுனாவை தௌலத் தான் கஷ்டப்பட்டு அமைதியாக்கினார்.

அதற்குள் ஒரு ஸ்டுடென்ட் கதவை தட்டி விட்டு உள்ளே வந்து ஜமுனாவிடம் ஏதோ டவுட் கேட்க, ஜமுனாவின் முகம் துடைத்தார் போல ரியாக்ஷன்களை இழந்து கடமையே கண்ணாக விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள்.

அந்த ஸ்டுடென்ட் வெளியில் சென்ற உடன் ஸ்ரீ ராம் “யப்பா உலக மகா நடிப்பு டா சாமி” என்றான்.

“அக்கா” என்று திரும்ப ஜமுனா அவரிடம் முறையிட,

“ஐயோ. வீட்டுல என் பொண்ணை கூட சமாளிச்சிடலாம் போல, உங்க கிட்ட மாட்டிக்கிட்டு நான் முழிக்கறேன் பாருங்க” என்று கதறவும், கௌதம் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

எல்லோர் முகத்திலும் புன்னகை வந்தது.

கௌஷிக்கும் வந்து விட திரும்ப ஜமுனா எல்லாவற்றையும் முதலிலிருந்து சொல்ல ஆரம்பித்தாள்.

அதற்குள் தனக்கு கிளாஸ் இருப்பதாக சொல்லி தேன்மொழி கிளம்பி சென்றாள்.

டுத்து வந்த சில நாட்களில் கௌதமும், தேன்மொழியும் ரொம்ப நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். ஜமுனாவே வெறுப்பாகி அவர்களை திட்டும் அளவிற்கு.

தேன்மொழிக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அதில் ஓரிருவரிடம் மட்டும் தான் எல்லாவற்றையும் ஷேர் செய்து கொள்வாள்.

இப்போது அவளை அறியாமலேயே கௌதம் இந்த சில நாட்களிலேயே அவளின் நெருங்கிய வட்டத்தில் வந்து விட்டான்.

தேன்மொழிக்கே அது ஆச்சரியமாக தான் இருந்தது. அவள் நெருங்கிய வட்டாரத்தில் கூட அவள் இப்படி கலகலப்பாக பேசியது கிடையாது. அவளுக்கு கௌதமின் உணர்வுகள் புரிய அவனை ஏனோ தன்னால் இயன்ற அளவு சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றி ஆழமாக பதிந்து விட, அவனிடம் எப்போதும் கலகலத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அந்த செயல் சில நெஞ்சங்களில் புகைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அறியாதவளாக இருந்தாள்.

இப்போதெல்லாம் எது நடந்தாலும் அதை கௌதமிடம் பகிர்ந்துக் கொள்வாள். கௌதமும் அப்படி தான்.

அன்று அப்படி தான். காலையில் வழக்கம் போல தேன்மொழி சீக்கிரம் வந்திருக்க, கௌதமும் பின் வந்து சேர்ந்தான்.

இருவரும் பேசிக் கொண்டிருக்க ஜமுனாவும் வந்து சேர்ந்தாள்.

தேன்மொழிக்கு வகுப்பிருக்க அவள் கௌதமிடம் ஏதோ சொல்லிக் கொண்டே பின்னால் பார்வையை வைத்துக் கொண்டு கதவை திறக்க செல்ல அந்த புறம் ஸ்ரீ ராம் கதவை திறக்க, தேன்மொழி எதிர் பாராமல் விழ போக ஸ்ரீ ராம் அவளை பிடித்து நிறுத்தினான். (நீங்க எல்லாம் எதிர் பார்க்கற மாதிரி இந்த படத்துல எல்லாம் காண்பிக்கற மாதிரி எந்த சீனும் அங்க நடக்கலை)

உடனே சுதாரித்துக் கொண்டாள் தேன்மொழி.

“சாரி” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

ஸ்ரீ ராம் மட்டும் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு மற்ற இருவர் இருக்கிறார்கள் என்பதையே அவன் மறந்து விட்டான் போலும்.

ஜமுனா தான் இருமுவது போல செய்து அவனை நினைவுக்கு கொண்டு வந்தாள்.

ஸ்ரீ ராம் தெளிந்தும் ஏதும் காட்டிக் கொள்ளாமல் சென்று விட்டான்.

ஆனால் அவன் மனது மட்டும் ஏனோ தேன்மொழி நினைவாகவே இருந்தது.

ஆனால் அவளோ அவனை திரும்பியும் பார்ப்பதில்லை.

அவள் எல்லோரிடமும் எல்லாம் சகஜமாக பேசுவதில்லை என்றாலும் தௌலத், ஜமுனாவிடம் நன்றாக பேசுவாள். இப்போது சில நாட்களாக கௌதமிடம் ரொம்ப க்ளோஸ் ஆக பேசுவது போல இருந்தது.

அது அவனை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை என்றாலும் தன்னிடம் பேசுவதில்லையே என்று அவனுக்கு ஏக்கமாக தான் இருந்தது.    

தொடரும்!

Episode # 02

Next episode will be published on 5th September. This series is updated once in two weeks on Fridays.

{kunena_discuss:727}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.