(Reading time: 7 - 13 minutes)

14. என்னுயிரே உனக்காக - சகி

வானமும் கலங்கி நின்றது ரகுவின் இந்நிலையைக் கண்டு!!!!!! ஆதரவாக அவன் தோளில் கை வைத்தான் ஆதித்யா.

"ரகு..."

"............."

Ennuyire unakkaga

"எதாவது பேசுடா!!!"

".............."

"நான் உன்னை கஷ்டப்படுத்தணும்னு இந்த உண்மையை சொல்லலை.புரிஞ்சிக்கோ!!!"

-ரகுவால்,அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.அவன்,கண்கள் முதன் முறையாக கண்ணீர் சிந்தியது.அவன் சிந்திய கண்ணீருக்கு ஆதித்யா தோள் கொடுத்தான்.ஆண்மகன் அழ கூடாது தான்.ஆனால்,உண்மைக்கு முன் ஆண் என்ன,பெண் என்ன?இருபாலரும் ஒன்றல்லவோ????ஆனால்,ஒரு நொடி சிந்தித்துப் பார்த்தால்..............சிந்தும் கண்ணீரை துடைக்க நட்பு ஒன்று 'நான் இருக்கிறேன் உனக்காக' என்று தலைமை தாங்குகிறது.இதைப் பற்றி பேசும் போது முதல் அத்தியாயத்தில் கூறியதை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.அன்னை,தந்தை,குரு,தெய்வம் நான்கையும் ஒரே பிரதிபலிப்பாய் காட்டுபவன் நண்பன் ஒருவனே!!!!!வேறு எந்த உறவும் அதுப்போல செய்ய முடியாது தானே?????அங்கு நிகழ்ந்த அந்த அரங்கேற்றமானது,அங்கிருந்தோர் அனைவரும் கண்களிலும் கண்ணீரை நதி என கரை புரள வைத்தது!!!!

"ரகு!!!!"

"நான் இப்படி ஒரு கேவலமான விஷயத்தை பண்ணுவேன்னு நினைக்கலைடா!!!!"-ஆதித்யா,அங்கிருந்தோரை பார்த்து,

"எல்லாரும் உள்ளே போங்க!!!"-என்றான்.அவன் பேச்சுக்கு கட்டுப்பட்டதை போல அனைவரும் நகர்ந்தனர்.நிரஞ்சன் மட்டும் அவர்களோடு நின்றான்.

"ரகு....நடந்து முடிஞ்சதை யோசிச்சு ஒரு பயனும் இல்லை..."

"இல்லை....என்னால விட முடியலை....நான் என் கீதாக்கு போய் துரோகம் பண்ணேனே!!!!அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையே கேள்விக்குறி ஆக்கிட்டேன்!!!!"

"அது எதுவுமே நீ சுய நினைவுல பண்ணலை..."

"எப்படி பண்ணாலும் தப்பு தப்பு தான்....வாழ்நாள் முழுக்க இந்த குற்ற உணர்ச்சியே என்னை சாகடிட்டு இருக்கும்!!!!"

"அப்படி பேசாத ரகு!!!!நீ தானே சொல்லி இருக்க...எல்லா பிரச்சனைக்கும் முடிவு இருக்கு....எல்லா பாவத்துக்கும் பிராயச்சித்தம் இருக்குன்னு...."

"..............."

"அமைதியாக இரு ரகு!!!!"

"..............."

"முதல்ல உள்ளே வா!!!!கொஞ்ச நேரம் தூங்கு....காலையில பேசிக்கலாம்.வா!!!!!!"-ஆதித்யா அவனை உள்ளே அழைத்து சென்றான்.

"ஆதி....நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ப்ளீஸ்..."

-சரண் சற்று தயங்கிப்படியே,

"சரி..."என்று வெளியே சென்றான்.தனிமையில்,ஜன்னலின் வழியே நின்ற வெள்ளி நிலவானது,ரகுவிற்கு ஆறுதல் கூற முயன்று கொண்டிருந்தது.அவன் ராமனாக வாழ விரும்பினான்.அவனுடைய சீதா தேவியாக கீதா இருக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டான்.ஆஆனால்,விதி இப்படி விளையாடி விட்டதே!!!!

இதோ அவனுடைய காயத்ரி தேவி நிலா வடிவில் அவனை சமாதானம் செய்து கொண்டிருக்கிறாள்.....

அவள் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்த உண்மை வெளி உலகிற்கு வந்திருக்காது....

கீதா எப்படி இறந்தாள் என்று பலர் மனதில் தோன்றி இருக்கும்....கூறுகிறேன்...

ன்று....

கீதா ராகுலுடன் செல்லமாக விளையாடி கொண்டிருந்தாள்....ராகுலுக்கு மூன்று மாத கைக் குழந்தை....

"என்னங்க....நம்ம பையன் அப்படியே உங்களை மாதிரி இருக்கான்."-உள்ளே எவ்வளவு துயரம் இருந்தாலும்,வெளியே மற்றவர்களுக்காக ஆனந்தமாய் இருப்பது பெண்களின் தனித்தன்மை....

"ம்....அப்படியா???சொல்லவே இல்லை?"

"ம்..ரொம்ப தான்!"

"கீதா....நாளைக்கு ஆதி வந்து ஒரு பென்டிரவ் கேட்பான்.லாக்கர்ல இருக்கு எடுத்துக் கொடு!"

"சரிங்க..."

"இந்த ஏன்?எதுக்கு?அதுல என்ன இருக்கு?அந்தக் கேள்விலாம் கேட்க மாட்டியா?"

"எனக்கு எதுக்குங்க அந்த வேலை?எனக்கு உங்க டிபார்ட்மண்ட் விஷயமே வேணாம்...."

"செல்லம்....ம்...எத்தனை பேருக்கு கொடுத்து வைக்கும் இப்படி ஒரு மனைவி அமைய?ரகு...நீ ரொம்ப லக்கிடா!"-கீதா ஒரு புன்னகையை பரிசளித்தாள்.

ன்று நடு இரவு....

ஏதோ சப்தம் கேட்டு கண்விழித்தான் ரகு.

அருகில் மனைவியும்,மகனும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்.பின்,யார் சப்தம் போடுவது?தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு,சப்தம் வந்த திசையை நோக்கி நடந்தான்.முன்பு அவன் குறிப்பிட்ட அதே லாக்கரை திறக்கும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது,அந்த பென்டிரவ்விற்கு சம்பந்தப்பட்ட சிலரால்....

அதைக் கண்டவன்,தன் துப்பாக்கியால் அங்கிருந்த ஒருவனது கையில் சுட்டான்.

"அல்லாஹ்...."-என்று உச்சரித்தது அந்த உருவம்.அதற்குள்,அவனோடு இருந்த நால்வர் படை ரகுவை சுற்றி வளைக்க கண் இமைக்கும் நேரத்துள்,அங்கே ஒரு போராட்டமே நிகழ்ந்தேறியது.அனைவரையும் எதிர்க் கொண்டு சமாளித்தவனின் கண்களுக்கு புலப்படவில்லை.பின்னால் இருந்து,அவன் உயிரை குடிக்க பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு!!!!

சோகம் என்னவென்றால்,அந்தக் குண்டு குடித்தது கீதாவின் உயிரை....!!!

ஏதோ சப்தம் கேட்கிறது என்று எழுந்து வந்தவளின் கண்களில்,இக்காட்சி  தென்பட ரகுவிற்காக தன் உயிரையும் குடிக்க துணிந்தாள் அவள்.

"கீதா!!!"-என்று அலறியபடியே அவளை தாங்கினான் ரகு.அங்கு வந்திருந்தவர்,தங்கள் காரியம் ஈடேறாதை எண்ணி,அங்கிருந்து விரைவாக ஓடிவிட்டனர்.

"கீதா!என்னம்மா நீ?ஏன்ம்மா இங்கே வந்தே?"

"உங்களுக்கு எதுவும் ஆகலையேங்க??"

"ஐயோ....வா...ஹாஸ்பிட்டல் போகலாம்...."-ராகுலை சுந்தரேசனிடம் விட்டுவிட்டு,கீதாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.ஆதித்யாவும்,நிரஞ்சனும் வந்து சேர்ந்தனர்.நீண்ட நேரம் போராட்டம் நடந்தது...விளைவு......அவள் போய்விட்டாள்.மருத்துவர்கள் கை விரித்து விட்டனர்.கண்களின் உள்ளே அவளது நினைவுகள் கண்களின் வெளியே கண்ணீராய் வெளி வந்தன ரகுவிற்கு.....!!!!

காதலுக்காக என்னென்ன தியாகங்களை செய்து இருக்கிறாள்??அவனுக்காக தன் வாழ்க்கையை மட்டுமல்ல,தன் உயிரையே தியாகம் செய்துவிட்டாளே!!!!

காதலுக்கு இலக்கணம் வகுக்க முடியாது என்று யார் கூறியது???இதோ இங்கே ஒரு கன்னிகை வகுத்துவிட்டாளே!!!!!!

காதல் பவித்தரமல்ல....அது பவித்திரத்தின் உச்சக்கட்டம்!!!!நெருப்பை விட சீரியது!!!!நீரினும் ஆழமானது!!!!நிலத்தினும் பொறுமையானது!!!!ஆகாயத்தை விட பரந்து விரிந்தது!!!!காற்றை விட மென்மையானது!!!!பேரண்டத்தையே தன்னுள் ஒடுக்க வல்லது!!!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.