(Reading time: 7 - 13 minutes)

 

றுநாள் காலை....

இரவு எதையோ யோசித்தப்படி உறங்கி போன ஆதித்யா கண்களை திறந்தான்.

"ம்மா...."

"என்னப்பா?"

"ரகு எங்கே?"

"ரகு எங்கேயோ கிளம்பிட்டு இருக்கான் கண்ணா....ஏதோ மாதிரி இருக்கான்ப்பா!!"-அவன் மூளைக்கு ஏதோ தட்டியது.எழுந்து ரகுவின் அறைக்கு சென்றான்.

"ரகு!"

"........"

"எங்கே கிளம்புற?"

"............"

"சொல்லுடா!"

"காஷ்மீருக்கு!"

"என்ன?"

"காஷ்மீர் போறேன்!!!!"

"ஏன்?"

"முதல்லயே வேலை இருக்குன்னு சொன்னேனே!!"

"நீ போக வேண்டாம்!"

"ஏன்?"

"வேண்டாம்."

"அதான் ஏன்?"

"நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை..."

"ப்ளீஸ்...புரிஞ்சிக்கோ!!!என்னால இங்கே இருந்துட்டு கொஞ்சம் கொஞ்சமா சாக முடியாது!!!எனக்கு ஏதாவது டைவர்ஷன் வேணும்."

"ஆனா....ரகு!"

"ப்ளீஸ்....இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்..."-அந்நேரத்தில்,அவன் வெளியே எங்காவது செல்வதே சிறந்தது என்று எண்ணினான் சரண்.சம்மதித்தான்.

"சீக்கிரம் வந்துடு!!!"

"ம்....."

"ராகுல்கிட்ட சொன்னியா?"-ரகு,சரணை ஆழமாக ஒரு பார்த்தான்.பின்,

"இல்லை...."என்றான்.

"ஏன்?"

"........."

"அவன்கிட்ட போன் பண்ணி சொல்லிட்டு கிளம்பு!!!!

"வேணாம்....."

"சொல்லிட்டு போ!உன் பிடிவாதத்தை அந்தக் குழந்தைக்கிட்ட காட்டாதே!!!"

"ம்...."-ரகு தன் கைப்பேசியை எடுத்து,ராஜசிம்மபுரத்திற்கு தொடர்பு கொண்டான்.ஆனால்,அதை எடுத்தது ஸ்ரேயா.

"லோ....!"-அவளது குரலை கேட்டதும் அவனுக்கு மூச்சே விட்டுவிட்டது!!!

"ஹலோ...!"

"............"

"யாருங்க?"

"நான்...நான் ரகு பேசுறேன்!"

"ஆ....சொ...சொல்லுங்க!!!"

"ராகுல் இருக்கானா?"

"ஆ...இருக்கான்...தரேன்."-சிறிது நேரம் கழித்து....

"அப்பா!"-அழகாய்,கொஞ்சியது ராகுலின் குரல்.

"எ....எப்படிடா செல்லம் இருக்க?"

"நல்லா இருக்கேன்...நீ என் பேசாதே!"

"ஏன்?"

"ஊருக்கு தானே வரேன்னு சொன்ன..."

"அப்பாக்கு வேலை இருக்குப்பா!!!இன்னிக்கு  ஊருக்குப் போறேன்.வந்த உடனே!!!வரேன் செல்லம்..."

"நிஜமா?"

"நிஜமா!"

"சரி....பார்த்துட்டு போயிட்டு வா!"

"சரிடா!!!!"

"பாய்!"

"ராகுல்..."

"ம்..."

"உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டா?"

"ம்...."

"அப்பா உன்கிட்ட பொய் சொல்லி இருந்தா!உண்மையை மறைச்சிருந்தா ஸாரிடா!"

"என்னப்பா நீ?நீ பொய் சொன்னியா?நான் நம்ப மாட்டேன்...என் அப்பா தப்பு பண்ண மாட்டாரு!!!!நீ இன்னொரு தடவை இப்படி சொன்னா!!!நான் அம்மாகிட்ட சொல்லிடுவேன்."-ரகு கண்கள் கண்ணீரை சேகரித்தன.

"சரிடா!"

"ம்....நல்ல அப்பா!"

"வச்சிடுறேன்!"

-ரகு தன் கைப்பேசியை அழுத்தமாக பிடித்தான்.

"கிளம்புறேன் ஆதி....!"

"ம்...."-ரகு அனைவரிடமும் விடைப்பெற்று கிளம்பினான்.

இனி என்ன நடக்க போகிறது?ஏது நடக்க போகிறது?யாருக்கு தெரியும்...தனிமையில் நகரப்போகிறது ரகுவின் வாழ்க்கை!!!!!விதி புதியதாக ஒரு விளையாட்டை விளையாட உள்ளது....விதி ஆடும் விளையாட்டில் சதி வலையில் வீழ போவது யாரோ???பொறுத்திருந்தால் விடை தெரியும்!!!!!!!

தொடரும்...

Go to EUU # 13

Go to EUU # 15

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.