(Reading time: 15 - 29 minutes)

 

டுத்த நாள் காலை தேன்மொழி வழக்கம் போல வந்து விட, அங்கு கௌதம் மட்டும் அல்லாமல் பிரதாப்பும் உடன் இருந்தான்.

கௌதம் மட்டும் இருந்தா எப்படியாவது சமாதானம் பண்ணலாம்ன்னு பார்த்தா இவரும் இருக்காரே என்று எண்ணிக் கொண்டே உள்ளே சென்றாள்.

இவள் உள்ளே செல்லும் போது பிரதாப்பும் கௌதமும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

இவளை பார்த்த பிரதாப் “குட் மார்னிங் மேடம்” என்றான்.

அவள் பதிலுக்கு குட் மார்னிங் கூறினாள்.

கௌதமிற்கும் “குட் மார்னிங் கௌதம்” என்றாள்.

ஆனால் அவனோ அப்போது தான் ஹெட் செட்டை சரி செய்து கொண்டு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

பிரதாப் வேறு அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு அவமானமாக போனது.

நேற்று கௌதம் கோபமாக சென்ற போதும் இந்த பிரதாப் இருந்தான். இப்போது அவமானப் படும் போதுமா இவன் இருக்க வேண்டும் என்று தன் நிலையை எண்ணி தானே நொந்துப் போனாள் தேன்மொழி.

ன்றும் ஏதோ கடமையே என்று போனது.

அன்று முதல் வகுப்பு முடித்து விட்டு தேன்மொழி வந்த போது ஸ்ரீ ராம் கிருஷ்ணாவை திட்டிக் கொண்டிருந்தான்.

“நீ இப்ப எல்லாம் சரியா வேலை செய்யறதில்லை கிருஷ்ணா”

“இல்ல சார்”

“நீ எதுவும் சொல்ல தேவை இல்லை. இன்னைக்கு ஆல்ரெடி கௌஷிக், தௌலத் அக்கா எல்லாரும் லீவ்ன்னு உனக்கு தெரியும் இல்லை. சுந்தர் வர முடியாதுன்னு நேத்தே சொல்லி இருக்கார். நீ அதை நோட் பண்ணி வேற அல்டெர்நேட் செஞ்சி இருக்கணும் இல்ல, அப்படி உன்னால முடியலைன்னா நீ என் கிட்ட அந்த விஷயத்தை சொல்லி இருக்கணும். எல்லாரும் முதல் நாளே லீவ் சொல்லியிருந்தும் நீ ஒழுங்கா உன் வேலையை செய்யலைன்னா உன்னை என்ன சொல்றது.”

தொங்கிய முகத்துடன் கிருஷ்ணா பார்க்கவே பரிதாபமாக இருந்தான்.

விஷயம் என்னவென்று புரிந்தாலும் கிருஷ்ணாவை பார்க்க தேன்மொழிக்கு வருத்தமாக இருந்தது.

அவள் இடையில் ஏதோ கூற போக ஜமுனா அவள் கையை பிடித்து தடுத்து வேண்டாம் என்பதைப் போல தலை ஆட்டினாள்.

வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றுக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

“இப்ப திடீர்ன்னு வந்து சொன்னா என்ன பண்றது. இதுல வந்த கௌதம் கிளம்பிட்டான்னு சொல்ற, பிரதாப்பும் யாருக்கோ உடம்பு சரியில்லைன்னு கிளம்பிட்டான். இங்க ரெண்டே ரெண்டு ஸ்டாப் இருக்காங்க. இது ஒரு இன்ஸ்டிடியூட்டா சொல்லு. மூணு பேட்ச் பசங்க இருக்காங்க. இப்ப என்ன செய்யறதுன்னு சொல்லு”

அவன் கேள்விக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் தலை குனிந்தவாறே இருந்தான் கிருஷ்ணா.

திரும்ப ஏதோ கோபமாக பேச போனவன் தேன்மொழியின் முகம் வாடி இருப்பதைக் கண்டான்.

அவள் அவனுக்காக வருந்துவது புரிந்தது அவனுக்கு. சட்டென்று அமைதியாகி விட்டான்.

மொபைலை எடுத்து யாருக்கோ போன் செய்து பேசியவன், “ரவி சாரும் ஊர்ல இல்லையாம் ஜமுனா. இந்த ஜகன் வேற ஏதோ கிளாஸ்ல கமிட் ஆகிட்டானாம். இப்ப என்ன பண்றது” என்றான்.

“சார் எனக்கு இன்னைக்கு ரெண்டு கிளாஸ் தான் போட்டிருக்கு. நான் மிச்ச ரெண்டு கிளாஸ் ப்ரீ தான். சோ நான் இன்னும் ரெண்டு கிளாஸ் எடுக்கறேன்” என்றாள் தேன்மொழி.

“நீங்க இன்னொரு பேட்ச் வேணும்னா எடுக்கலாம். பட் நாங்க இங்க ஒரு நாளைக்கு ஒரு சப்ஜெக்ட் ஒரு கிளாஸ் தான்னு வச்சிருக்கோம். சோ அதை மாத்த முடியாது”

“ஓ”

“ராம் நீ கிளாஸ் எடுத்துட்டு தானே இருந்த. நீ இன்னைக்கு கிளாஸ் எடு. உன் கிளாஸ்ன்னா பசங்களும் இன்ஸ்பையர் ஆவாங்க”

“நானா. இல்ல. ரொம்ப நாள் ஆகிடுச்சி இல்ல. எந்த ப்ரிபரேஷனும் இல்லாம எப்படி. ஏதோ கடமைக்குன்னு எல்லாம் எடுக்க கூடாது தெரியும் இல்ல” என்றான்.

“சார். நீங்க எப்படியும் முன்னாடி கிளாஸ் எடுத்துட்டு தானே இருந்திருக்கீங்க. சோ உங்களுக்கு அதுல எல்லாம் எந்த ப்ராப்ளமும் வராது. என்னை கேட்டீங்கன்னா நீங்க இப்படி இடையில அடிக்கடி இப்படி கிளாஸ் எடுக்கணும்ன்னு தான் சொல்வேன். இன்னைக்கு அதுக்கு சான்ஸ் கிடைச்சிருக்குன்னு வச்சுக்கோங்களேன். நீங்க கிளாஸ் எடுத்த மாதிரியும் இருக்கும். மோட்டிவேட்டிங் ஸ்பீச் கொடுத்த மாதிரியும் இருக்கும்”

சிறிது யோசித்தவன் “அப்பவும் ரெண்டு கிளாஸ் ப்ரீயா இருக்கே” என்றான். (மேலிடமே சொன்னதுக்கு அப்புறம் சார் வேண்டாம்ன்னா சொல்லுவார்)

“விடு ராம். அந்த ரெண்டு ஹவர் லாஸ்ட் கிளாஸ் தானே. அதுக்குள்ளே ஏதாச்சும் அல்டர்நெட் பண்ணிக்கலாம்.

“ம்ம்ம். சரி. பசங்க எல்லாரையும் ஏதோ எக்ஸ்ப்ரிமென்ட்ல மாட்டின எலி மாதிரி ஆக்கிட்டீங்க. இன்னைக்கு நான் கிளாஸ் எடுத்து அவங்க எல்லாம் என்ன ஆக போறாங்களோ” என்று தேன்மொழியை பார்த்து சிரித்து விட்டு சென்றான் அவன்.

அவளும் அதைக் கேட்டு சிரித்தாள்.

அப்படியும் போகும் போது கிருஷ்ணாவை பார்த்து முறைத்து விட்டு “நாளைல இருந்து நீ ஜஸ்ட் கிளாஸ் அலாட்மென்ட் அப்புறம் ரிசப்சன் வொர்க் பார்த்தா போதும். நான் மெட்டீரியல்ஸ் ப்ரிபேர் பண்றதுக்கு, கொஸ்டீன்ஸ் ப்ரிபேர் பண்றதுக்கு எல்லாம் வேற ஆளை அப்பாய்ன்ட் பண்ண போறேன்” என்று சொல்லி விட்டு போனான்.

கிருஷ்ணாவின் முகத்திலிருந்தே அவன் உணர்வை புரிந்துக் கொள்ள முடிந்தது.

ன்று இரண்டாவது வகுப்பிற்கு அந்த மூவரும் கிளாஸ் எடுக்க சென்றார்கள்.

அன்று சீக்கிரமே வகுப்பை முடித்து விட்டு ஸ்ரீ ராம் கிளாஸ் எடுப்பதை போய் பார்க்க வேண்டும் என்று எண்ணி கிளாஸ்ஸை முடித்தாலும், அன்று தான் எல்லோரும் டவுட் என்று வந்து கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

எல்லாருக்கும் டவுட் கிளியர் செய்து விட்டு வந்தால் ஸ்ரீ ராம் கிளாஸ்ஸை முடித்து விட்டிருந்தான். ஆனால் அவனை சுற்றி அத்தனை பேர் நின்றுக் கொண்டிருந்தனர்.

தேன்மொழியை போலவே ஜமுனாவும் எண்ணி முன்னே வந்து விட்டாள்.

தேன்மொழியை பார்த்து சிரித்த ஜமுனா “கிளாஸ் எடுத்து நாளாகிடுச்சி. எடுக்க மாட்டேன்னு எல்லாம் சொல்லிட்டு சார் எப்படி பின்னினார் தெரியுமா. எல்லாரும் சுத்தி நின்னுட்டு சார் நீங்க இனி எப்பவும் கிளாஸ் எடுங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க” என்றாள்.

“ஓ. நானும் சார் கிளாஸ் எடுக்கறதை பார்க்க வந்தேன். மிஸ் பண்ணிட்டேன்”

பின்பு மூவரும் ஒன்றாக உணவு உண்டனர்.

கிருஷ்ணாவை ஜமுனா அழைத்ததற்கு வேலை இருப்பதாக சொல்லி அவன் வரவில்லை.

சாப்பிடும் போதும் ஸ்ரீ ராம் கிளாஸ் எடுத்ததை சொல்லி “எப்படி எல்லாம் சொன்ன, ரொம்ப நாள் ஆகிடுச்சின்னு எல்லாம், அப்பறம் எப்படி ஏதோ இப்ப தான் ப்ரிபேர் பண்ண மாதிரி அவ்வளவு சூப்பரா எடுத்த”

“ஹேய் அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு டாபிக் ஆரம்பிச்ச உடனே தானா அடுத்தது நியாபகம் வருது. நானே என்னடா இதுன்னு நினச்சேன்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.