(Reading time: 15 - 29 minutes)

 

சாப்பிட்டு முடித்த பின்பு “சிலது சர்ச் செய்யணும்” என்று சொல்லி விட்டு ஸ்ரீ ராம் அவனறைக்கு சென்று விட, சிறிது யோசித்து விட்டு தேன்மொழி அவனறைக்கு சென்றாள்.

“வாங்க தேன்மொழி. என்ன சொல்லுங்க” என்று தடுமாறினான் ஸ்ரீ ராம். (உள்ளே தாங்க முடியாத சந்தோசத்தில் வெளியே அவனுக்கு வார்த்தைகள் தடுமாற்றமாக வந்தது. உள்ளே அவன் மனது தேவதை அவள் ஒரு தேவதை என்று பாடிக் கொண்டிருந்தது.)

“சார். உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்ன்னு வந்தேன். பட் ப்ளீஸ் நீங்க தப்பா நினைக்க கூடாது.” (ஒரு வேளை அப்படி இருக்குமோ, ஒரு வேளை இப்படி இருக்குமோன்னு அதுக்குள்ளே அவ சொல்றதுக்குள்ளே நம்ம ஸ்ரீ மனசு எப்படி எப்படியோ யோசிக்கிது. தம்பி, இதெல்லாம் ஓவர். சொல்லிட்டேன்)

“சொல்லுங்க. என்ன”

“இல்ல சார். நான் வந்த கொஞ்ச நாள்லயே கிருஷ்ணா சார் எவ்வளவு சின்சியர் வொர்க்லன்னு தெரிஞ்சிக்கிட்டேன். உங்களுக்கும் கண்டிப்பா இது தெரிஞ்சிருக்கும். இன்னைக்கு நடந்தது எவ்வளவு பெரிய மிஸ்டேக்ன்னு எனக்கு தெரியுது. பட் அதெல்லாத்தையும் தாண்டி யோசிக்கணும் இல்லையா. இங்க நீங்க எல்லாரையும் ஜஸ்ட் வொர்க் பண்றவங்களா மட்டும் பார்த்திருந்தீங்கன்னா நான் இதெல்லாம் வந்து பேசி இருக்க மாட்டேன். நீங்க எல்லார் கிட்டயுமே ப்ரெண்ட்லியா தான் இருக்கீங்க. நீங்க எல்லாரும் ஒரே பாமிலி மாதிரி இருக்கீங்க. நானே கூட இங்க வந்து ஆச்சரியப் பட்ட விஷயம் இது.

எனக்கு இப்ப என்ன சொல்லணும்ன்னு கூட தெரியலை. என்னை விட அவரை உங்களுக்கு நல்லாவே தெரியும். நீங்க அந்த டைம்ல கோபத்துல பேசினது கரெக்ட் தான். பட் அவருக்கு பதில் வேற ஆளை போடறேன்னு எல்லாம் சொல்லிட்டீங்களே, ஒரு வேளை அந்த நேரத்து கோபத்துல சொல்லி இருப்பீங்க. கரெக்ட்டா” என்று கேள்வியோடு நிறுத்தினாள்.

ஸ்ரீ ராம் மனதினுள் ‘நீ இவ்வளவு எல்லாம் பேசுவியா’ என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு நிமிடம் அமைதி காத்தவன் “தேன்மொழி நீங்க சொன்னது எல்லாமே சரியா தான் சொன்னீங்க. பட் இன்னொரு ஆளை அப்பாய்ன்ட் பண்றதுல மட்டும் நான் ரொம்ப கன்பார்மா இருக்கேன்” என்றான்.

தேன்மொழிக்கு எதிலோ தோற்றுப் போன உணர்வு. ‘இவ்வளவு சொல்லியும் இவர் இப்படி சொல்கிறாரே’ என்று.

ஆனால் எதையும் முகத்தில் காட்டாமல் இருக்க முயற்சி செய்தாள்.

அவள் முகத்தை பார்த்தவன், “இன்னும் சொல்லப் போனா நான் கிருஷ்ணாவை இங்க வேலைக்கே வச்சிருக்க கூடாது” என்றான்.

இப்போது அவள் வாய் விட்டே கேட்டு விட்டாள்.

“என்ன சார் இப்படி சொல்றீங்க. அவர் ஏதோ தெரியாம தப்பு செய்திட்டார். அதுக்காகவா இப்படி”

“ரிலாக்ஸ். நீங்களே இங்க எல்லாரும் பாமிலி மாதிரின்னு சொன்னீங்க இல்ல. அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க வேண்டாமா?”

ஏதும் புரியாமல் விழித்தாள் அவள்.

“கிருஷ்ணா கௌதம் கூட தான் இருக்கான் தெரியுமா”

“தெரியுமே. என் வீட்டு பக்கத்து வீட்டுல தான் இருக்காங்க. எனக்கு தெரியுமே”

“என்னது?” (இப்போது ஷாக் ஆவது ஸ்ரீ ராமின் முறையானது)

“ஆமா சார். அவரோட பக்கத்து வீட்டுல தான் நாங்க குடி வந்திருக்கோம்.”

“ஓ ஓகே ஓகே. அவங்க வீட்டுல வேற யாரும் இருக்காங்களா”

“இல்லையே சார்”

“ஏன்னு யோசிச்சீங்களா”

“கேட்கணும்ன்னு நினைச்சேன். பட் கேட்கலை”

“ம்ம்ம். ரெண்டு ப்ரண்ட்ஸ் வீடு எடுத்து இருக்கறது இப்ப சாதாரண விஷயம் தான். பட் கிருஷ்ணா கௌதம் கூட எவ்வளவு வருஷமா இருக்கான்னு தெரியுமா”

“வருசமா வா”

“ஆமா. கிட்டத்தட்ட இருபது வருஷமா”

“என்ன”

“ம்ம்ம். கிருஷ்ணாக்கு யாரும் இல்லை. எப்படியோ இவங்க வீட்டுக்கு வந்திருக்கான். அப்போத்துல இருந்து கௌதமோட பெஸ்ட் ப்ரண்ட் அவன் தான். அவனுக்கு எல்லாமே இவன் தான் செய்வான். ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல், ஒரே டிகிரி. பட் கௌதம் என்ன வொர்க் பண்றான். இவன் என்ன பண்றான்னு பார்த்தீங்களா. ரெண்டு பேரும் பொலிடிகல் சயின்ஸ்ல மாஸ்டர் டிகிரி பண்ணிருக்காங்க. கிருஷ்ணா ரெண்டு அரியர். எங்களை பொறுத்த வரைக்கும் அவன் வேணும்ன்னே இந்த அரியர்ஸ் கிளியர் பண்ணாம இருக்கான்”

“ஏன்”

“இதுக்கு எக்ஸாக்ட்டா எனக்கு ஆன்சர் தெரியலை. மே பீ அவன் அதை கிளியர் பண்ணிட்டா அவனோட கரியர் இம்ப்ரூவ் பண்ண சொல்லி கௌதம் சொல்லுவான். கிருஷ்ணாவால கௌதமை விட்டுட்டு எங்கயும் போக முடியாது. அவன் அதை விரும்பவும் இல்லை.”

“கௌதம் இங்க வேலைக்கு சேர்ந்ததுல இருந்து கிருஷ்ணா என்ன பண்ணிட்டு இருந்தான் தெரியுமா. பர்ஸ்ட் அவன் இங்க வேலைல எல்லாம் இல்லை. கௌதமை கூட்டிட்டு வரர்து தான் அவனோட வேலை. அவன் கூடவே இருப்பான். அவன் கிளாஸ் எடுத்தா இவனும் ஒரு வரிசைல உட்கார்ந்துட்டு கேட்டுட்டு இருப்பான். எத்தனை கிளாஸ்ல அதே லெக்சர் கொடுத்தாலும் சலிக்காம கேட்பான். கிளாஸ் முடிச்ச உடனே அவனை அப்படியே கை பிடிச்சி கூட்டிட்டு போவான். இது தான் அவன் வேலை. கொஞ்ச நாள் இதை எல்லாம் பார்த்து அவனை பத்தி முழுசா தெரிஞ்சிக்கிட்டு அவனுக்கு இங்கேயே வேலை கொடுத்து, ஆனா அப்பாவும் ஸ்ட்ரிக்ட்டா அவனோட அரியர் பேப்பர்ஸ் கிளியர் பண்ணணும்ன்னு சொல்ல தான் செஞ்சோம். ஆனா எங்கே, இன்னும் அதுக்கு ஒண்ணுமே செய்யலை. இங்கயும் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வான். வீட்டுலையும் ஆள் கூட வைக்காம கௌதம்க்கு எல்லாமே இவனே பார்த்து பார்த்து செய்வான்.”

“இப்ப எல்லாம் அவனுக்கு ரொம்ப வேலை கூடி போச்சி. இப்படியே போயிட்டிருந்தா அவன் டிகிரி கம்ப்ளீட் பண்ணவே மாட்டான். அதுக்கு தான் கொஞ்ச நாளாவே இப்படி அவனை திட்றதுக்கு சான்ஸ் தேடிட்டு இருந்தேன். நான் முதல்லவே நானே வேற ஆள் அப்பாய்ன்ட் பண்ணா என் கிட்ட வந்து சண்டை போடுவான். இப்ப பாருங்க ஒன்னும் சொல்ல முடியாது இல்ல, அதான்” என்று சொல்லி விட்டு கண் சிமிட்டியவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

“நீங்க சொன்ன மாதிரி இங்க எல்லாருமே பாமிலி மாதிரி தான். தானே எல்லா வேலையும் பார்த்துக்கற குழந்தையை அம்மா கண்டுக்க மாட்டாங்க. ஆனா எதையும் செஞ்சிக்காத குழந்தைக்கு தானே அவங்களே எல்லாம் செய்வாங்க. அதே மாதிரி தான். கிருஷ்ணா அவனுக்காக ஏதும் செஞ்சிக்க மாட்டான். சோ நாம தான் ஏதாச்சும் செய்யணும்”

அவளுக்கு பேசுவதற்கு வார்த்தைகளே இல்லாமல் போய் விட்டது போல் தோன்றியது.

“சாரி சார். நான் ஏதோ தப்பா நினைச்சிட்டு வந்து உங்க கிட்ட சொல்ல வந்துட்டேன். கிளாஸ்க்கு டைம் ஆச்சி. நான் வரேன்” என்றவாறு எழுந்தாள்.

கதவருகில் சென்றவளை ஒரு நிமிடம் என்றழைத்து,

“நீங்களும் இந்த பாமிலில ஒரு மெம்பர் தான். ஓகே. அதை நியாபகம் வச்சிக்கோங்க. அப்புறம் இந்த சார் அவாய்ட் பண்ணிடுங்க. என் பேர் சொல்லியே கூப்பிடலாம். நோ ப்ராப்ளம்” என்றான்.

“ஓகே சார்” என்று சொல்லப் போனவள் அவன் முகம் பார்த்து “சாரி சாரி” என்றாள்.

“ம்ம்ம். இப்ப ப்ராபரா ஓகே சொல்லுங்க” என்றான்.

சிரித்துக் கொண்டே “ப்ராக்டிஸ் பண்ணிட்டு சொல்றேன் சா. நோ நோ சார் எல்லாம் இல்லை” என்று சொல்லி விட்டு சென்றாள்.

சிறிது நேரம் சிரித்துக் கொண்டே இருந்தான்.

அந்த மனநிலையில் இருந்து களைந்து செல்ல விரும்பாதவன் அழுதுக் கொண்டே (மானசீகமா) கிளாஸ் எடுக்க சென்றான். (தேவதை அவள் ஒரு தேவதைன்னு வேற அடிக்கடி பேக்கிரௌண்ட்டில் கேட்டுக் கொண்டிருக்கிறது. கிளாஸ்ஸில் போய் சொதப்பக் கூடாது என்று வேண்டியவனாக சென்றான்)

அன்று மாலை கிருஷ்ணாவை தேடியவளிடம், ஜமுனா கூறிய செய்திகள் அதிர்ச்சியாக இருந்தது.    

தொடரும்!

Episode # 04

Episode # 06

{kunena_discuss:727}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.