(Reading time: 38 - 75 minutes)

 

" ம்ம கம்பனில வருஷ வருஷம் ப்ரீ இண்டேரியர் டிசைனிங் செர்விஸ் பண்ணுவோம் .. அதாவது , வர்ஷத்துக்கு ஒரு தடவை, எதாவது சேரிட்டி, ஹாஸ்டல், முதியோர் இல்லம் இந்த மாதிரி இடத்தை ரினொவெட் அண்ட் இண்டேரியர் டிசைனிங் பண்ணுவோம் .. லாஸ்ட் இயர், ஒரு கேர்ல்ஸ்  ஹாஸ்டலுக்கு ப்ரீ சர்வீஸ் பண்ணோம்.. இந்த தடவை ' பிருந்தாவனம் ' கு நாம இண்டேரியர் டிசைனிங் பண்ண போறோம் ... அதுவும் உங்க தலைமையில "

"....."

" இது உங்களுக்கு நல்ல எக்ஸ்பிரியன்ஸ் ஆ இருக்கும் மீரா .... அந்த இடமும் உங்களுக்கு பிடிக்கும் .. பிளஸ் இது ஒரு கேம் மாதிரிதான் ...  கொடுக்குற பட்ஜெட்ல நீங்க இந்த டாஸ்க் செய்யனும்.. .. அண்ட் ஐ நோ யு கேன் டூ இட் ... ரைட் மீரா ?? "

" எஸ் சார் ... நீங்க சொல்றதை கேட்க எனக்கும் எக்சைட்டிங் ஆ இருக்கு ... ' பிருந்தாவனம் ' பத்தி டிடைல்ஸ் ? ......."

" அது நீங்க அங்க போயி தெரிஞ்சுக்கலாம் மீரா... நீங்க அங்க மிஸ் புவனேஸ்வரியை மீட் பண்ணுங்க "

( நெனச்சேன் இவன் கண்டிப்பா ஏதும் வில்லங்க வெச்சுருப்பான்னு ... ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தா கொஞ்சம் டிடைல்ஸ் கலெக்ட் பண்ணி தர மாட்டங்களோ ... ஓஹோ  ஆமா பாஸ் நா அப்படிதானே )

" என்ன யோசனை மீரா "

" இல்ல சார் .. ஒண்ணுமில்ல... அந்த மீரா டிடைல்ஸ் கிடைக்குமா ? அவங்க அங்க என்ன  வேலை பார்க்குறாங்க ? "

ஒரு புன்னகையை பதிலாய் தந்தவன்,

" எல்லாம் உங்களுக்கு ஈமெயில் பண்ணிட்டேன் .. அவங்க வொர்கெர் இல்ல  ... பிருந்தாவனத்தின்  founder  " என்றான் .

" ஓகே சார் ... தேங்க்ஸ் "

" ஆல் தி பெஸ்ட் மீரா ... இனி எல்லாமே பெஸ்ட் ஆ நடக்கும் " என்று இரு பொருளில் வாழ்த்து கூறினான் .

" தேங்க்ஸ் அகின்" என்ற மீரா தனதறைக்கு சென்றாள்.

ன்  அறைக்கு வந்த மீராவின் சிந்தனை ' பிருந்தாவனம் ' மீதுதான் இருந்தது ... ( அப்படி என்ன யோசிக்கிறாங்க? வாங்க பார்ப்போம்)]

" பிருந்தாவனம் .... பெயரே அருமையா இருக்கே .. என்ன இடம் இது ? வீடா ? கம்பனி ? ஹ்ம்ம் ? ஆனா இடம் பெயரை பார்த்தியா .... பிருந்தாவனம்... பிருந்தாவனம் நு  சொன்னாலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஞாபகம்தான் வரும் ... எனக்கும் கிருஷ்ணாவுக்கும் என்ன ஒரு பந்தமப்பா" என்று சிலிர்த்துகொண்டாள் மீரா ....

அதற்குள் அவளின் இன்டர்காம் அழைக்க

" மீரா "

" எஸ் சார்.."

" ஈமெயில் பார்த்தாச்சா? "

" இதோ பார்த்துட்டு இருக்கேன் "

" சரி எப்படி அங்க போவிங்க ? "

"ஆட்டோ ல ...."

" அங்க ஆட்டோ போகுமா தெரியல... நம்ம கம்பனி கார்  அரேஞ் பண்ணியாச்சு ... சங்கரன் சார் கிட்ட சொல்லியாச்சு .. "

" ஓகே தேங்க்ஸ் சார்"

" ஓகே "

பிருந்தாவனம்...

பெயருக்கு ஏற்றமாதிரியே அழகான இடம் .. அங்கு கால் வைத்ததுமே மீரா மனதில் எழுந்த முதல் கேள்வி

" சென்னையில  இப்படி ஒரு இடமிருக்கா ? "

பட்டணத்து  நெரிசல் இல்லாமல், ஹாரன் சத்தம் இல்லாமல், ஆட்கள் நடமாட்டம் கூட மிகக்குறைவாக, சுற்றி உள்ள அடர்ந்த மரங்கள் குளிர்ச்சியை தர, பட்டணமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் இயற்கை மட்டுமே இணைந்திருக்கும் அந்த இடம் சென்னையில் இருக்கு என்பதை சொன்னா நம்புவிங்களா ?

அகல கண்களை விரித்தபடி  பிருந்தாவனத்திற்குள் நுழைந்தவளுக்கு அமைதியான கோவிலில் நுழைந்த நிம்மதி.... அவளுக்கு பாடலுடன்  வரவேற்பு கிடைத்தது... பாடியது யாருமில்லை ...  அங்கிருந்த பெரிய கூண்டில் வளர்க்கப்படும் வண்ண வண்ண பறவைகள்... அவள் பாத படும் இடமெல்லாம் பூக்கள் இருந்தது...யாரும் அவளுக்காக பூக்கள் தூவவில்லை ...அருகில் இருந்த மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் அவை ... வந்த வேலையையே மறந்து மிக மெதுவாக நடைபோட்டு கொண்டு சுற்றி பார்த்தாள் மீரா ....

அவை அடுக்குமாடி வீடும் அல்ல  ... பள்ளியும் அல்ல  .. ஆபீஸ் உம் அல்ல  ... குட்டி குட்டியாய் அங்கங்கே அழகிய குடில்கள் போல அமைக்கபட்ட வீடுகள் ... சுற்றி எட்டு வீடுகள் இருக்க நடுவில் பிரதானமாய்  அங்கு இருந்தது நம்ம நவநீத கிருஷ்ணனின் ஆளுயர விக்ரகம். தூரத்தில் இருந்து பார்த்தால், யாரோ அங்கு நின்று கொண்டிருப்பதை போல இருக்கும்.. அவ்வளவு அழகான வேலைபாடு... அந்த ரம்யமான சூழ்நிலையில் லயித்திருந்தவளின் சேலை முந்தானையை யாரோ பற்றி இழுப்பதுபோல் தோன்ற, திரும்பி பார்த்தாள் மீரா .

துருதுருவென்ற பார்வையுடன் ஒற்றை காலில் நிற்பதுபோல் தோரணையாய் நின்று கொண்டிருந்தான் அந்த சிறுவன். பார்வையாலே அவனின் வயதை கணித்தாள் மீரா... ஹ்ம்ம் எப்படியும் 3 வயசு இருக்கும் ... என்று நினைத்தவள் , அவனை தூக்கி கொள்ள கை நீட்டினாள்.

அவனும் "ம்ம்ம்ஹ்ம்ம்ம் " என்று மறுப்பை தலை அசைத்தான். மீராவும் சோகமாய் உதடு சுளித்து மீண்டும் கை நீட்ட அவளருகில் வந்தான் அந்த சிறுவன்.. அவனை தூக்கி கொண்ட மீரா,

" உன் பேரு என்ன ? " என்றாள்..

" அபி "

" புல் நேம்  சொல்லு கண்ணா "

" கண்ணா இல்ல ... இதோ இவருதான் கண்ணா ( கிருஷ்ணனின் விக்ரகத்தை காட்டினான் ) என் பேரு அபிமன்யு ..."

" ரொம்ப நல்ல பேரு " என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள் ...( முத்தமா ? இருங்க உங்க கிருஷ்ணா கிட்ட சொல்றேன் )

" உன் பேரு என்ன ? "

" என் பேரு மீரா "

" ரொம்ப நல்ல பேரு " என்று அவளை போலவே முத்தமிட்டான் அபிமன்யு... ( இதையும் சொல்றேன் அபி குட்டி )

" அபி, புவனேஸ்வரி எங்க இருக்காங்க ? "

" ம்ம்ம்ம்ம் ??? .......... புவனா அம்மாவா ? "

" அ ...அ ஆஅமா"

" நீ ஏன் கேக்குறே ? "

" நான் பார்க்கணுமே "

" வேணாமே "

" ஏன் ?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.