(Reading time: 38 - 75 minutes)

 

" ன்னைக்கு  யாரோ வந்தாங்க ... அம்மாவை பார்க்க.. அப்பறமா அம்மா வெளிய போச்சு .. வரவே இல்ல.. நீயும் அம்மாவை கூடிட்டு போக வரியா ? "

" இல்லடா செல்லம் .. நான் அம்மா கிட்ட இங்கயே நின்னு பேசிட்டு போய்டுவேன் "

" இங்கேவா ? "

"ம்ம்ம்ம்"

" நிஜமாவா ? "

" ஆமா "

" ப்ராமிஸ் ? "

" ப்ராமிஸ் "

" சரி என்னை இறக்கி விடு .. வா ... " என்று பெரியவன்  போல அபிமன்யு முன்னே நடக்க மீரா பின்தொடர்ந்தாள். அபிமன்யு கூறியதை வைத்து அந்த ' புவனா ' அவனின் தாயார் என்று யுகித்தவள், நிச்சயம் அவள் தன்னை விட வயதில் மூத்தவள் என்று எண்ணினாள்... ஆனால் அதற்கும் புவனாவின் தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்ற அதர்ச்சி மீராவின் முகத்திலேயே தெரிந்தது.

" அபி அம்மா எங்கடா ? "

" அய்யயோ நீ நிறைய காரட் சாப்பிடு .. உனக்கு கண் தெரிலயா? அதோ அம்மா " என்று அவன் காட்டிய திசையில் குழந்தைகளோடு  குழந்தையாக நின்று கண்ணாமூச்சி ஆடிகொண்டிருந்தாள் புவனா....

" அம்மா நீங்க அவுட் " என்று சிறுவர்கள் அனைவரும் ஆர்பரிக்க, கண்கட்டை அவிழ்த்தவள்,

" ஆமா செல்லம்ஸ் ... அம்மா அவுட் .. இப்போ கிரி அண்ணா கண்ணை கட்டுவோம் " என்று அருகில் இருந்து கிரிதரனின் கண்களை கட்டிவிட்டவள் , தூரத்தில் நின்றிருந்த அபிமன்யுவையும் மீராவையும் பார்த்தாள்.

" ரதி அக்கா, பசங்களை பார்த்துகோங்க "

" அம்மா அம்மா எங்க போறீங்க ... வந்து விளையாடுங்க " என அனைவரும் கூச்சலிட,

" ஷ்ஷ்ஷ்ஷ் ... அங்க பாருங்க.. யாரோ விருந்தாளி வந்திருக்காங்க .. அம்மா பார்த்திட்டு அஞ்சு நிமிஷத்துல வரேன் .. என் செல்லம் ல... அம்மா பேச்சை கேளுங்க கண்ணா " என்று அவர்களை கொஞ்சிவிட்டு சென்றாள்.

" நீங்க மீராதானே .... ஹேய் அபிக்குட்டி எல்லாரும் விளையாடும்போது அம்மாவை விட்டுட்டு எங்க போனிங்க ? " என்றபடி அவனை தூக்கி முத்தமிட்டாள்...

" அம்மா நானும் விளையாட போறேன் " என்ற அபி சிறுவர்கள் பக்கம் ஓடிவிட்டான். .

" நான் வருவேன்னு உங்களுக்கு தெரியுமா ? "

" எஸ் ... எனக்கு ஈமெயில் வந்ததே... அதுவும் இல்லாம அறிமுகம் இல்லாதவங்க இங்க வர்றது கஷ்டம் ... எனிவே ஐ எம் புவனேஸ்வரி" என்று கை குலுக்கினாள்.

" நைஸ் மீட்டிங் யு . .... நீங்க சொன்னது சரி தான் .. அறிமுகம் இல்லாதவங்க இங்க வர்றது கஷ்டம் . இந்த இடமே வித்தியாசமாக  இருக்கே... நீங்களும் கூட "

" நானுமா ? ஹஹ ... ஏன் அப்படி சொல்றிங்க ? "

" இல்ல ஆபீஸ் ல கேள்விபட்டது பிளஸ் அபி அம்மான்னு சொன்னதை வெச்சு நீங்க வயசுல பெரியவங்கன்னு நெனச்சேன் "

" ஏன் வயசுல சின்னவங்க நல்ல விஷயம் பண்ண கூடாதா ? "

" அச்சோ நான் அப்படி சொல்ல வரல "

" ரிலாக்ஸ் நானும் சும்மாதான் சொன்னேன் ."

" பட் இந்த சின்ன வயசுலேயே எப்படி ? "

" எனக்கு சின்ன வயசுலாம் இல்லம்மா .. 20 வயசாச்சு .. என் அப்பா பணக்காரர் இல்ல ... சாதாரண மிடல் கிளாஸ் பாமிலி தான். பட் எனக்கு இந்த சமூக சேவை செய்றது ல ரொம்ப இஸ்டம் ... அப்படி சில  உதவிகளை செய்யும்போதுதான் ஒரு பெரியவரின் அறிமுகம் கிடைச்சது . அவரை நான் அய்யா நு தான் கூப்பிடுவேன் .. அய்யா இப்போ உயிரோட இல்ல .. தவறிட்டாரு.. அவருக்குன்னு பிள்ளைகள் யாருமில்ல .. அவரின் ஏற்பாடுதான் இந்த பிருந்தாவனம். நான் ஏதோ என்னால முடிஞ்சா மாற்றங்களைத்தான் கொண்டுவந்தேன் . அவருதான் இந்த பிருந்தாவனத்தின் பொறுப்பை என் கையில ஒப்படைச்சுட்டு கண்ணை மூடிட்டாறு... "

" அவரு சொந்தம் யாரும் "

 " ஓ வந்தாங்களே ...அவரு உயிரோடு இருந்தப்போ வராதவங்க எல்லாரும் அவர் போனதும் வந்தாங்க .. சொத்துக்காக.. அய்யா புத்திசாலி ..அவருடைய பிசினஸ் எல்லாம் அவங்களுக்கே சேருற மாதிரியும் இந்த பிருந்தாவனமும் இதன் பொறுப்புக்காக ஒதுக்கி வெச்ச தொகையையும் என் பொறுப்பில்  இருக்குற மாதிரி உயில்  எழுதிட்டாரு  . "

" அய்யா ரொம்ப புத்திசாலி "

" ம்ம் ஆமா .. இந்த பிருந்தாவனம் கூட அவரின் ஐடியா தான் .. அவருக்கு வாரிசு இல்லன்னு தெரிஞ்சதும் மனசு உடைஞ்சு போகாம அவர் எடுத்த புதிய முயற்சி...."

" கிரேட்.... இங்க இருக்குற எல்லாருமே ஆதரவு இல்லாதவங்களா ? அப்போ அபி ?? " என்று கேட்டவளை பார்த்து  ஆச்சர்யமாய் சிரித்தாள் புவனா ...

" அபி உங்ககிட்ட நல்ல ஒட்டிகிட்டான் போல ...."

" தெரியல .. பட் நான் அவன் பக்கம் சாயஞ்சுட்டேன்னு வெச்சுகொங்களேன்"

" ஹ்ம்ம்ம்ம் அபி அப்படித்தான் ..ரொம்ப துருதுருன்னு இருப்பான் ... அவனை பிடிக்காது நு யாராலயும் சொல்லவே முடியாது .. பட் நான் நம்ம அபியை எங்க பார்த்தேன் தெரியுமா ? "

" ..."

" ஹாஸ்பிடல்ல... பிறந்த ரெண்டு மணி நேரத்துலையே தூக்கி எறியபட்ட குழந்தை அவன்.,.. அய்யாவுக்கு தெரிஞ்சவர் மூலமாக தகவல் கிடைக்க நான்தான் உடனே போய் பார்த்தேன்.... உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தது அந்த சின்ன குழந்தை " என்றவளுக்கு அன்றைய நினைவில் கண்கள் கலங்கியது

" எத்தனை பேரு குழந்தைங்க இல்லாம கஷ்டபடுறாங்க? எத்தனை குடும்பம் குழந்தை செல்வம் இல்லாம இருக்கு .... பாவம் " என்ற மீரா மனதளவில் உடைந்தாள். இல்லாத பொருளின் அருமை இருப்பவர்களுக்கு தெரியாதுன்னு சொன்னது  எவ்வளவு உண்மை .. மனதில் தோன்றிய  ஆதங்கத்தை அவள் வார்த்தைகளால் கொட்ட, கொஞ்சமும் அதன் தாக்கமே இல்லாமல்,

" யாரு பாவம் ? " என்றாள் புவனா .... நாம்தான் சரியாக  அவள் சொன்னதை கேட்கவில்லையோ என்ற மிரட்சியுடன் புவனாவை நோக்க, அவள் மீண்டும்

" யாரை பாவம்னு சொல்றிங்க மீரா ? குழந்தை இல்லாதவங்கலையா? " என கேட்டாள்.

" பின்ன இல்லன்னு சொல்றிங்களா ? "

" தெரில ஆனா கண்டிப்பா ஆமாம் நு சொல்லவே மாட்டேன் "

" ஏன் ? "

அவளுக்கு பதில் சொல்லாமல் அவளுடன் நடந்த புவனா, எதிரில் இருந்த ஓவியத்தை காட்டினாள்.

" இது யாருன்னு சொல்லுங்க ? "

" யசோதா கிருஷ்ணன் "

" ம்ம்ம்ம்ம் " என்று புன்னகைத்தவள் இன்னொரு ஓவியத்தை காட்டி

" இது ? " என்று வினவினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.