(Reading time: 19 - 38 minutes)

18. நினைத்தாலே  இனிக்கும்... - பாலா

ன்று காலையிலேயே எழுந்து கல்லூரிக்கு தயாரான ஜெனி புன்னகையுடன் வலம் வந்து கொண்டிருந்தாள்.

அவள் அம்மாவிற்கே சிறிது சந்தேகம் தான், இது தனது மகள் தானா என்று.

ஆனால் எதையும் கேட்காமல் அவள் புன்னகையை அவரும் ரசித்துக் கொண்டிருந்தார்.

ninaithale Inikkum

ஜெனியின் தந்தை அவளிடம் எல்லாவற்றையும் பேசி முடித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

அன்று ஜெனி அவருக்கு பதில் ஏதும் கூறாமலே சென்று விட்டாள்.

முந்தைய நாள் இரவு தன் தந்தையிடம் சென்றவள் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜெனிக்கு இத்தனை நாள் இந்த தைரியம் கூட வந்ததில்லை. இன்று எல்லாவற்றிற்கும் சேர்த்து பார்ப்பதை போல தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜெனியின் தந்தையும் அன்று அவளிடம் அவ்வளவு பேசினாரே தவிர அதற்கு மேல் அவளிடம் அன்பாக பேசுவது என்றெல்லாம் இல்லை, வழக்கம் போல் எப்படி இருப்பாரோ அப்படி தான் இருந்தார்.

ஆனால் மகளின் முகத்தை மட்டும் அவ்வப்போது பார்ப்பார்.

ஜெனி அவரையே பார்த்துக் கொண்டிருக்கவும், அவரும் ஒரு அளவுக்கு மேல், “என்னம்மா” என்றார்.

பேச வந்து விட்டாலும், அவள் சொல்ல வந்த வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி கொண்டு வெளியே வரவில்லை.

திரும்ப “என்னம்ம்மா. சொல்லு” என்றார்.

கண்களை மூடி திறந்தவள், “நான் இனி கவின் கூட பேசலை டாடி” என்றாள்.

அந்த வார்த்தைகள் அவருக்கு என்ன உணர்வை அளித்ததோ, ஜெனிக்கு மட்டும் சொல்ல முடியாத வலியை தந்தது.

அவள் அன்று அவரிடம் ஏதும் சொல்லாமலே வந்து விட்டது உறுத்திக் கொண்டு தான் இருந்தது. அவரிடம் திரும்ப பேச வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் என்ன பேசுவது?

கவின் தான் அவளை அந்த வார்த்தைகளை அவரிடம் சொல்ல சொன்னான்.

“நம்மளை நாமே ப்ரூப் பண்ணிப்போம் ஜெனி. நாம இப்ப அவசர பட வேண்டாம். உன் அப்பாவை பத்தி நீ எவ்வளவோ சொல்லிருக்க, அவர் மனசு எவ்வளவு கஷ்டப் பட்டிருந்தா உன் கிட்ட இப்படி பேசிருப்பார். போ போய் அவர் கிட்ட சொல்லு. நான் இனி கவின் கிட்ட பேச மாட்டேன்னு”

அவன் அந்த வார்த்தைகளை சொன்ன போது தந்த வலியை இப்போதும் அவள் உணர்ந்தாள்.

‘எப்படி முடியும் என்னால். அவன் ஏதாவது விஷமமாக செய்தால் கூட வேண்டுமென்றே தான் அவனை கடிந்து கொள்வாளே தவிர, மனம் அவன் செய்கையை ரசிக்க தானே செய்யும். ஓரிரு நாட்களுக்கு மேல் அவனிடம் எப்படி பேசாமல் இருக்க முடியும். அவனை எதிரில் வைத்துக் கொண்டே அவனிடம் ஏதும் பேசாமல் எப்படி இருப்பது?’

அன்று அவன் கூறிய போது தனக்குள் கேட்டுக் கொண்ட கேள்விகள் இப்போதும் மனதில் தோன்றியது.

அவள் அதை வெளியில் சொல்லாத போதும், அவளின் கண்களின் வழியே அதை அறிந்து கொண்டவன் “எனக்கும் கஷ்டம் தான் ஜெனி. ஆனா யாரையும் கஷ்டப்படுத்திட்டு நம்ம ஜெயிச்சா, அதுல நமக்கு என்ன சந்தோஷம் கிடைச்சிடும் சொல்லு” என்றான்.

‘வாஸ்தவம் தான் என்று தான் தோன்றியது. ஆனால் என்னும் வார்த்தையும் கூடவே தோன்றியது.

வார்த்தைகளால் அவன் பேசுவதை அவளால் மறுத்து பேச இயலவில்லை. ஏனெனில் அவன் பேசுவது சரி தான் என்று அவளுக்கு தெரியுமே. இருந்தும் மனது மௌனக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

அவள் வடிக்காத கண்ணீரை துடைக்க அவன் கைகள் துடித்தது.

அவளிடம் நெருங்க மனம் துடித்த போதும் தள்ளி நின்றவாறே அதை அடக்கியவன், “இன்னைக்கு நாம என்ன வேணும்னா செஞ்சிடலாம் ஜெனி. ஆனா நம்மளோட வருங்காலத்துல அது நமக்கு ஒரு ப்ளாக் மார்க்கா வந்து நிக்கும். இன்னைக்கு தப்பு செஞ்ச நாம நம்மளோட பசங்களுக்கு அட்வைஸ் பண்ற தகுதியை இழந்துடுவோம். நாம செஞ்சது அவங்களுக்கு தெரியாதுன்னா கூட நமக்கு தெரியும்ல, நம்ம மனசாட்சி நம்மளை கேள்வி கேட்கும்ல ‘இவ்வளவு சொல்றியே, நீ என்ன பண்ணன்னு’, அது வேண்டாம்.  நாம நம்ம பசங்களுக்கு ஒரு ரோல் மாடலா தான் இருக்கணும்” என்றான்.

அது வரை மனதில் தோன்றிய கலக்கங்கள் மறைந்து தான் போனது அவளுக்கு.

இருந்தும் அவளால் அவனிடம் தெளிவாக ஒன்றும் பேச இயலவில்லை. அது ஒன்று தான் அவளுக்கு குறை.

ந்தையின் முன் நின்று கொண்டு அவரிடம் என்ன சொல்லி விட்டு, எதை யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று காலம் கடந்து தான் யோசித்தாள் அவள்.

அவரிடம் சொன்னதற்கு மாறாக மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது அவளுக்கு திரும்ப வலியை தான் கொடுத்தது.

அவள் மனது ஏதோ செய்ய “உங்களுக்கு பிடிக்காததை நான் என்னைக்கும் செய்ய மாட்டேன் டாடி” என்றாள்.

அந்த வார்த்தை அவருக்கு அளித்த மகிழ்ச்சியை அவள் அறிய மாட்டாள்.

அவள் தலையில் உச்சி முகர்ந்தவர் “போ டா போய் தூங்கு” என்றார் மென்மையாக.

சில நேரம் மட்டுமே தென்படும் அவரின் அந்த மென்மையான குரலை ரசித்துக் கொண்டே சென்று உறங்கிய ஜெனிக்கு அன்று உறக்கம் சீக்கிரமே தழுவியது.

மகளிடம் மனம் விட்டு பேசிய பிறகும் அவர் அவரின் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அவரின் மனதை முழுதாக புரிந்து கொண்ட ஜெனி ‘நீங்க எப்படி வேணும்னா இருங்க டாடி, நான் உங்களை புரிஞ்சிக்கிட்டேன்’ என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.

எனவே முன்பு பயந்து பயந்து செய்த எல்லா வேலைகளையும் அவள் உற்சாகமாக செய்தாள்.

காலையில் புன்னகையுடன் “குட் மார்னிங் டாடி” என்று கூறி விட்டு அவருக்கு காபி கொடுத்தாள்.

வழக்கமான அவளின் செயலுக்கும், இன்றைய செய்கைக்கும் இருந்த வித்தியாசம் அவருக்கு தெரிந்து தான் இருந்தது. ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல பதில் கூறியவருக்கு மனது மட்டும் சந்தோஷம் நிறைந்திருந்தது.

ன்று கல்லூரிக்கு சென்ற ஜெனி ஒரே உற்சாகமாக இருந்தாள்.

இப்போதெல்லாம் தீப்தியும் அவர்களின் காங்கில் ஒருத்தியாக கூடவே இருந்தாள். (கவின் இருக்கும் போதெல்லாம்)

ஜெனி எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தாள். அவள் சந்தோசமாக இருக்கும் போது எல்லோருக்கும் சாக்லேட் கொடுப்பது அவள் வழக்கம்.

எல்லோருக்கும் சாக்லேட் தந்தவள் கவினின் பக்கத்தில் இருந்த அருணுக்கு இரண்டு சாக்லேட்டாக தர, அதை கண்டு மகிழ்ந்தவன் “ஐ நம்ம ஜெனிக்கு எவ்வளவு பெரிய மனசு. எனக்கு ரெண்டு சாக்லேட்டா தருது” என்று சிரித்துக் கொண்டே சாப்பிட்டவனின் தலையில் போட்டாள் அனு.

“என்ன அனு. ஏன் இப்படி”

“டேய். உனக்கு யார் இப்ப ரெண்டு சாக்லேட் தந்தது”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.