(Reading time: 19 - 38 minutes)

 

வள் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்துக் கொண்டு தான் இருந்தான் கதிர்.

“அனு. இப்ப நாம லவ் பண்றோம். சப்போஸ் நான் ஹையர் ஸ்டடிக்காக பாரீன் போறேன்னு வச்சிக்க நீ என்ன பண்ணுவ”

“வேண்டாம் கதிர்” என்றவளால் அவனை பிரிந்து இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அதை வாய் விட்டு கூறினாள்.

“ஏன் அனு. நான் அப்படி போய் திரும்ப வந்து நாம கல்யாணம் செஞ்சிப்போம்ன்னு உனக்கு நம்பிக்கை இல்லையா” என்றான்.

அதிர்ந்தாள் அனு.

என்ன வார்த்தை கேட்டு விட்டான். அவள் கூறிக் கொண்டிருப்பதென்ன. அவன் பேசுவதென்ன.

கோபமடைந்தவள் “நான் அப்படி சொல்லலை கதிர். நீ போனா எனக்கு கஷ்டமா இருக்கும்ன்னு தான் சொல்றேன். உன் மேல நம்பிக்க இல்லைன்னு சொல்லலை” என்றாள்.

மென்மையாக சிரித்தவன், “புரியுது டா, நான் அப்படி போனா உனக்கு கஷ்டமா தான் இருக்கும். எனக்கும் தானே அது கஷ்டமா இருக்கும். பட் அதை தாங்கிக்கிட்டு என்னை அனுப்பி தானே வைக்கணும். அதை விட்டுட்டு உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாதுன்னு சொன்னா, அப்ப நான் உனக்கும், நீ எனக்கும் வீக்னஸா ஆகிட்டோம்ன்னு தானே அர்த்தம். காதல் நமக்கு ஸ்ட்ரெந்த்தா தான் இருக்கனும் அனு. நமக்கு சக்தியை தான் கொடுக்கணும். நம்மளோட மைனஸா இருந்து அது நம்மளை தோற்கடிச்சிடக் கூடாது. நம்மளை ஜெயிக்க வைக்கணும்” என்றான்.

அனுவிற்கு ஏதோ புரிந்ததை போல் இருந்தது.

இப்போதைக்கு பேசவே வேண்டாம் என்று கவின் சொன்ன போதும், அதை ஏற்றுக் கொண்ட ஜெனியின் மேல் புதியதாக மரியாதை வந்தது. எப்போது மறுபடியும் பேசுவோம் என்று தெரியாத அவர்களே நம்பிக்கையோடு இருக்கையில், கதிர் வீக் டேஸில் பேச வேண்டாம் என்று சொன்னதற்கு தான் எப்படி ரியாக்ட் செய்தோம் என்று எண்ணி அவளையே வெட்கமடைய வைத்தது.

ஆம். காதல் வலிமையை தான் தர வேண்டும். மாறாக நமக்கு வீக்னஸாக மாற கூடாது. எத்தனை திருமணமானவர்கள் கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு இங்கு வாழ்க்கையை தனியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தானோ ஒரு சின்ன பிரச்சனையை பெரிதாக்கி விட்டோமே என்று வருந்தினாள் அனு.

ந்துரு டூருக்கு வர மாட்டேன் என்று சொன்னதிலிருந்து ஆரம்பித்த பிரச்சனை நந்து, சந்துரு இருவருக்குள்ளும் ஓடிக் கொண்டே இருந்தது.

அவன் எவ்வளவோ கெஞ்சியும் அவள் இந்த முறை சமாதானம் ஆகவில்லை.

நந்து அவள் அத்தைக்கு ஒரு நாள் போன் செய்து “அத்தை அப்பாவை பார்க்கணும் போல இருக்கு” என்று கூறி பீல் செய்தாள்.

“விடுடா. சொன்னா அவர் வந்து பார்த்துட்டு போக போறாரு. நீ அவர் கிட்ட பேசினியா”

“இல்லை அத்தை. அவருக்கு வயல்ல வேலை இருக்குதாம். அங்க வேற யாரும் கூட பார்த்துக்க இல்லை.”

“ஓ.”

“அத்தை எனக்கு என்னவோ இப்ப வீட்டுக்கு ஒரு முறை போயிட்டு வரணும்ன்னு தோணுது. நீங்க என் கூட வறீங்களா. இந்த வீக் என்ட் போயிட்டு வந்திடலாம். ப்ளீஸ்”

அவருக்கோ அவரின் கணவரிடம் என்ன சொல்வதென்று ஒரே தயக்கம். ஆனால் நந்து இவ்வளவு கேட்கும் போது முடியாது என்றும் சொல்ல முடியவில்லை.

“சரி. டா. நான் பார்க்கறேன்”

“அத்தை ப்ளீஸ்”

“சரி நந்து. கண்டிப்பா இந்த வீக் எண்ட் போகலாம்”

“ஓகே அத்தை. நானே டிக்கெட் புக் செஞ்சிடறேன். பஸ்லயே போகலாம் அத்தை”

சரி என்று அவரும் ஏற்றுக் கொண்டார்.

இந்த இடைப்பட்ட நாட்களில் சந்துரு ரொம்ப பிசியாக இருந்ததால் இருவரும் சரியாக பேசிக் கொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமை தான் கிளம்புவதாக இருந்தது.

எதற்கும் அவனிடம் சொல்லி விடலாம் என்று எண்ணி, நந்து அவனிடம் வியாழக்கிழமை அன்று கூறினாள்.

“ஓகே போயிட்டு வா” என்றதோடு அவன் ஏதும் சொல்லவில்லை.

“ஏன் சொல்லலை” என்றெல்லாம் சண்டையிடுவான் என்று எண்ணியிருந்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

மனதில் அவனை திட்டிக் கொண்டாள்.

வெள்ளிக் கிழமை நைட் பஸ்ஸிற்கு புக் செய்திருந்தாள் நந்து.

அன்று சாயந்திரம் போல அவள் அத்தைக்கு போன் செய்து “எப்படி போகலாம் அத்தை. நீங்க இங்க வறீங்களா. சேர்ந்து போயிடலாம்.” என்றாள்.

“இல்லம்மா. நீ அனு இல்லை ஆருவை கூட்டிட்டு பஸ் ஸ்டான்ட் வந்திடு. நான் நேரா வந்திடறேன். சரியா” என்று கூறி விட்டார் அவர்.

அனு, ஆரு சகிதத்தோடு பஸ் ஸ்டான்ட் சென்றவள் அவள் அத்தை வராமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

லேட்டாக வந்தவர் “சாரி டா. கொஞ்சம் லேட் ஆகிடுச்சி” என்றார்.

“பரவால்ல அத்தை” என்றவளின் குரல் சந்துருவை பார்க்கவும் கடினமானது.

அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அதை கண்டவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே “அம்மா. நான் உங்களுக்காக தான் வந்தேன். தெரிஞ்சிக்கோங்க” என்றான்.

அனு, ஆரு இருவருக்கும் இவர்களின் சண்டையை பற்றி தெரியாததால் முழித்துக் கொண்டிருந்தனர்.

பஸ் கிளம்ப போவதாக கூறியவுடன், நந்து உள்ளே சென்று அமர, நளினியும் ஏற, கூடவே சந்துருவும் ஏறி, பேகை மேலே வைத்து விட்டு, சீட்டை அப்படி இப்படி பார்த்துக் கொண்டிருந்தான்.

நந்து கடுப்பாக “என்ன” என்று கேட்டாள்.

எல்லாம் கம்பார்ட்டா இருக்கான்னு பார்த்தேன் என்று கூறினான்.

முகம் சிலிர்த்துக் கொண்டு ஜன்னலோரம் தள்ளி அமர்ந்து, அவள் அத்தையை அமர சொன்னவளை பார்த்து புன்னகைத்தவாறே, சந்துரு அங்கு அமர, நளினியோ கீழே இறங்கி சென்று இருவருக்கும் கை காட்டினார்.

நந்து ஒன்றும் புரியாமல் பார்க்க, ஆருவுக்கும், அனுவிற்கும் அதே நிலை தான்.

“பாய் டா. பார்த்து போன்னு உனக்கு சொல்ல தேவை இல்லை. ஏன்னா உன் கூட என் பையன் வறான். அவன் உன்னை நல்லா பார்த்துப்பான்” என்றார்.

“அத்தை என்ன இது”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.