(Reading time: 13 - 25 minutes)

05. ஷைரந்தரி - சகி

தொலைக்காட்சியில் மகாபாரதம் கதையை பார்த்தப்படி அமர்ந்திருந்தார்,மஹாலட்சுமி.

"பார்வதி....சிவாக்கு ராத்திரி என்ன சாப்பிட வேணும்னு கேட்டுட்டு வாம்மா!!"

"நானா?"

"ம்...போய் கேட்டுட்டு வா!"

shairanthari

"ஷைரந்தரியை கேட்க சொல்லுங்களேன்."

"ஷைரந்தரி அவன் ரூம்ல தான் இருப்பா!அப்படியே...யுதீஷ்க்கும் என்ன வேணும்னு கேட்டு வாயேன்."-அவள்,அரை மனதோடு,

"சரிம்மா..."என்று சென்றாள்.

தனிமையில் அமர்ந்திருந்த மஹாலட்சுமியின் கண்கள் திடீரென மூடப்பட்டது.

"யாரு?"

"கண்டுபிடிங்க?"

"அசோக்."

"நான் தான்ம்மா!"-(இது யாருடா புதுசான்னு கேட்கிறீங்களா?இது நம்ம ஹீரோவோட அண்ணன்.)

"எப்படிடா இருக்க?இப்போ தான் நான் ஞாபகம் வந்தேனா?"

"அம்மா...விசா கிடைக்கலைம்மா!பாரு எங்கே?"

"மேலே இருக்கா..."

"அவன் எங்கே?"

"உள்ளே தான் இருக்கான்."

"என்ன ஊரே கோலாகலமா இருக்கு??"

"ஷைரந்தரி வந்திருக்காடா!"

"யாரு?ரகுநாத் மாமாவோட பொண்ணா?"

"ஆமாம்..."-அவர்,மனம் சற்றே தயக்கம் காட்டியது.

"எப்போ?"

"இரண்டு வாரம் ஆகுது!!!!"

"தனியாகவா வந்தா?"

"அதை நீ ஏன் கேட்கிற?"-என்று கூறியப்படி இறங்கி வந்தான் யுதீஷ்ட்ரன்.அவனை கண்டவுடன்,முகம் கருத்தது அசோக்கிற்கு!!!

"யுதீஷ்?"

"ஏன் வந்தே?"

"யுதீஷ் அவன் உன் அண்ணன்டா!!!"-மஹாலட்சுமி.

"அண்ணனா?இவனா?இவனை என் கூட இணைத்துப் பார்க்க எப்படிம்மா முடியுது???"

"யுதீஷ் வார்த்தையை அளந்து பேசு!"

"எதுக்குடா??உன்னை அண்ணன் மாதிரி நினைச்ச ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிச்சிட்டு,நடந்த தப்பையும் மறைச்சிட்டு, இப்போ எந்த தைரியத்துல இங்கே வந்தே?"-அவன் கத்தியதிற்கு,அனைவரும் அங்கே திரண்டு விட்டிருந்தனர்.

"யுதீஷ் அளவிற்கு மீறி பேசுற!"

"என் பேரை சொல்லாதே!அந்த தகுதி கூட உனக்கில்லை."-ஷைரந்தரி நடப்பவற்றை புரியாதவாறு பார்த்துக் கொண்டிருந்தது.பார்வதி முகத்திலோ பயம் கலந்த  சாயல்.சிவாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"யுதீஷ் தயவுசெய்து அமைதியா இருடா!"-தன் தாயின் கட்டளைக்கு இணங்கி அமைதியானான் யுதீஷ்ட்ரன்.

"அசோக்...நீ உள்ளே போ!"

"அம்மா..."-யுதீஷ்ட்ரன்.

"பார்வதி,உன் அண்ணனை கூட்டிட்டு போ!"-பார்வதி,அமைதியாக அவனிடத்தில் வந்து,

"வாண்ணா!"என்றாள். தங்கையின் அழைப்பிற்காக அவளோடு அமைதியாக சென்றான் யுதீஷ்.செல்லும் போது,அவன் கண்கள் அப்போது தான் ஷைரந்தரியை சந்தித்தன.அவள்,கண்களில் ஏதோ ஒரு வித கலக்கம் தெரிந்தது அவனுக்கு!!!ஏனோ அவள் முகம் அவனுக்கு பல வருடங்களாய் அவனோடு இருந்ததை போன்ற உணர்வு!!!!சட்டென,இறுக்கம் தொலைந்தது அவன் முகத்தில்!!!!

"அம்மூ!உள்ளே போடா!"-சிவா,ஷைரந்தரியிடம் கூறிய போது,ஏனோ அவன் மீது கோபம் வந்தது யுதீஷ்ட்ரனுக்கு!!!!

சிறிது நேரம் கழித்து...

"ஏன் அண்ணா இப்படி கோபப்படுற?"-பார்வதி.

"முடியலை பாரு!!!இப்போ கூட கல்பனா கத்தினது,என் காதில கேட்குது!!!"

"அண்ணா!!!விடுண்ணா!நீ டென்ஷன் ஆகாதே!"-அப்போது,அறை கதவு தட்டும் ஒலி கேட்டது.

"உள்ளே வாங்க!"-பார்வதி.ஷைரந்தரி கதவை திறந்தாள்.

"ஷைரந்தரி??"

"உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க!"-அவள்,யுதீஷ்ட்ரனை கண்டு கொள்வதாய் தெரியவில்லை,அது அவனுக்கு ஏனோ கோபத்தை தூண்டியது.

"அதை சொல்ல தான் வந்தீங்களா?உள்ளே வாங்க!"

"இல்லை...பரவாயில்லை. நான் கிளம்புறேன்!"-அவள் செல்லும் முன் பயம் கலந்த பார்வை ஒன்றை யுதீஷ்ட்ரன் மீது வீசினாள்.

பார்வதி,சிரித்துக் கொண்டே,

"பாவம்!உன்னால,ரொம்ப பயந்துட்டாங்க!"என்றாள்.

"என்ன?"

"நீ கத்தினது அவங்களை ரொம்ப பயமுறுத்திவிட்டது!"

"ஆமா...என்னை பார்த்தா பூதம் மாதிரி தெரியுது!நான் கத்தினேன்,அவ பயந்துட்டா!போவியா?"

"ஒத்துக்கவா போற?சரி...வா சாப்பிட!"

"எனக்கு வேணாம்."

"வாண்ணா!"

"வேணாம்."

"வர போறியா இல்லையா?"

"ம்...வரேன்!"

"அப்படி வா வழிக்கு!"-அரை மனதோடு சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்தான் யுதீஷ்ட்ரன்.

"சாப்பிடு யுதீஷ்!"

"................."

"சாப்பிடு அண்ணா!"

"பசிக்கலைடா!"

"கொஞ்சம் சாப்பிடுண்ணா!"-தங்கையின் அன்பு கட்டளைக்கு இணங்கி சாப்பிட தொடங்கினான் யுதீஷ்ட்ரன்.அவனையே அமைதியாக யாரும் அறியாதவாறு கவனித்துக் கொண்டிருந்தாள் ஷைரந்தரி.ஏனோ, அனைவரிடமும் வெளிப்படுத்தும் தைரியம் அவனிடத்தில் தோற்றுப் போனது.பல நாட்களாக அவனோடு வாழ்ந்த உணர்வு,மனதை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை.

"ஏன் இவன் இப்படி கத்தினான்?அசோக் இவன் அண்ணன் தானே!எந்த பெண்ணின் வாழ்வை கெடுத்தான் அவன்????"-பலவாறு சிந்தித்தது அவள் அறிவு.மனதோ,

"இவனை எங்கோ பார்த்தது போல்,பழகியது போல்,இவனோடிருந்ததை போல்,ஏதோ உணர்வு தோன்றுகிறதே!!!!என்ன காரணம்?"என்று சிந்தித்தது. ஆனால்,அவளதுஇந்த சிந்தனை சிந்தனையாகவே போனதே தவிர,காதலின் சாயல் தோன்றியது என்று கூற முடியாது.

யுதீஷ்ட்ரன் நிலை அவ்வாறு அல்ல!வெளியே மகிழ்ச்சியை     வெளிப்படுத்திய போதிலும்,உள்ளுர ஷைரந்தரியே அரசாட்சி புரிந்துக் கொண்டிருந்தாள். இது,வெறும் சிந்தனை தான் என்று கூற முடியாது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.