(Reading time: 37 - 74 minutes)

 

வளின் மனம் புரிந்துவிட, சரியென தலை அசைத்தார். ஆனால் அவசரமாக கிளம்பி வரும்படி மட்டும் தொலைபேசியில் தகவல் தந்தார். நவீனோ என்னவோ ஏதோ என்று பயந்து வீட்டிற்கு வந்தால் வீடே அமைதியாக இருந்தது. ஒன்றும் புரியாமல் தன் தாயை நோக்கி “என்னாச்சு ஏன் எல்லாரும் இப்படி உம்முன்னு இருக்கீங்க?”

“ஆமா எல்லாத்தையும் என்கிட்டே கேளு, உள்ள இருக்காள் பாரு உன் பொண்டாட்டி அவள்கிட்ட கேளு போ...” என்று அனுப்பிவைத்தாள் அன்பு தாய். இன்னைக்கு என்ன வம்பு என்று தான் நவீனுக்கு தோன்றியது. அவர்கள் வீட்டிலும் சண்டை வரும் ஆனால் அது உப்பு சப்பில்லாததாக இருக்கும். இன்னைக்கு இந்த சமையல் செய்யலாம் என்று அர்ச்சனா கூறினாள் அதற்கு மாறாக அவன் தாய் ஒன்று கூறுவார். இப்படியே பிரச்சனை பெருசாகுமோ என்றென்னி நடுவில் யார் வந்தாலும் எங்களுக்கே பேசி தீர்த்துக்க தெரியும் நீங்க என்ன நடுவில என்று இருமுறை நவீனின் தந்தையும் திட்டு வாங்கியுள்ளார். அதனால் இவர்களின் சண்டையை அங்கு யாரும் பெருசாக எடுத்துகொள்ள மாட்டார்கள்.

தனதறைக்கு சென்றவன், அவள் முகம் பார்க்காமலே, “தினமும் இப்படியே ஏதாவது உப்பு சப்பில்லாம சண்டை போட்டுட்டு இருங்க, என்னதான் பிரச்சனையோ உங்களுக்கு... இன்னைகென்ன?” என்று கேட்டும் அவள் பதில் தரவில்லை.

“இதுக்காக என்னை ஆபீஸ்க்கு half டே லீவ் வேற போடசொல்லிருக்கிங்க” என்று வெறுத்து பேசிக்கொண்டிருந்தான். அப்போதும் அவள் எதுவும் கூறாமல் அவனையே பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

“இப்படியே இருந்தா என்னதான் செய்யுறது உங்க சண்டையை சமாளிக்கவே புதுசா பொறந்து வரணும் போல...” என்று கூறிக்கொண்டே அசதியாக படுத்தான்.

“அதான் பொறக்க போராளே” என்று அப்போதுதான் வாய்திறந்தாள் அர்ச்சனா...

சட்டென எழுந்தமர்ந்தவன் இன்பதிர்ச்சியில் இருக்க, அவன் அருகே வந்து அணைத்துகொண்டவள், “பிறக்கத்தான் போறாள், உங்களை மாதிரியே சமத்தா” என்று அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள். ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது அவனுக்கு அப்பா எனும் ஸ்நானம்... அவளை அருகே இழுத்து அணைத்துக்கொண்டவன்... பேச தோன்றாமல் முத்தங்களை பரிசாய் தந்தான். குடும்பம் முழுதும் செய்தி பரவ, அடுத்தடுத்து அழைப்பு வந்து வாழ்த்துக்கள் குவிந்தது...      

ல்ல செய்தி கிடைத்து நாட்கள் வேகமாக உருண்டோட, அடுத்து 5 மாதங்கள் கடந்து அஸ்வத் நிரஞ்ஜன் திருப்பூரில் தங்கள் யோசனை படி புதிய முயற்சியை எடுக்க துவங்கினர். அஸ்வத்தின் யோசனைபடி, இணையதளத்தில் அவர்களின் கடைக்கு ஒரு வெப்சைட் உருவாக்கப்பட்டது, திருப்பூரில் மட்டும் பேசப்படும் கடையை விரிவுபடுத்தும் வகையில், அவனது படிப்பின் பிரதிபலிப்பு இருக்கும் வகையில் அவனே அந்த இணையதளத்தில் (வெப்சைட்) உருவாக்கினான். அதற்கு நிரஞ்ஜனும் துணையாக இருக்க, திருப்பூரில் அவர்களின் கடைக்கு அருகேயே ஒரு இடத்தில் நிறுவனத்தை நிறுவினர். முதலில் அவர்களின் யோசனையை கேட்டவர்களுக்கு எந்த வகையில் இது சரியாக நடக்கும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இவர்கள் எடுத்து தளத்தில் போட்ட ஆடைகள், மலிவான விலை, ஆடி offer போன்ற வகை என்று அணைத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. தளத்தில் மட்டும் வேலை என்றால் எதுக்கு இந்த நிறுவனம் என்று புரியாமல் கேட்ட பெற்றோருக்கு, இப்போதெல்லாம் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்க விரும்புகிறார்கள் அதுவும் மலிவாக கிடைத்தால் அவர்கள் அலைய வேண்டிய தேவையே இருக்காது. அப்படி வாங்கும் பொருட்களை ஸ்டோர் இடம் போல் வைத்துகொள்ள தான் அந்த நிறுவனம். மேலும் அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் சேர்க்க, கொரியரும் அவர்களே செய்தனர். முதலில் இணையதளத்தில் பிரபலம் அடைய மாதங்கள் ஆனது... ஆனால் வித விதமான பொருட்கள் கண்ணை பறிக்க, ஒவ்வொருவராக பரிந்துரை செய்தனர். இன்னாரின் இணையதளம் தான் இது என்று கூறும் வகையில் அவர்களின் கடைக்கு இன்னும் அதிகமாக சேல்ஸ் நடந்தது. இந்த முயற்சியில் கண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சியே... தந்தையின் பெயர்கொண்டு எதுவும் செய்யாமல் தன் சுய சிந்தனையில் செயல்ப்பட்டதால் இருவரின் மீதும் முழுநம்பிக்கை வந்தது வீட்டு மக்களுக்கு.  சில மாதங்களிலேயே ஒரு நல்ல பெயரும் இடமும் பிடித்துவிட்டனர்.

“ஹலோ அஹல் எப்படி இருக்க?”

“எனக்கு என்ன குறைச்சல். நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க மேடம்? என் செல்லகுட்டிக்கு சாப்பிட குடுத்தியா இல்லையா?”

“உன் செல்லகுட்டிக்கு சாப்பிடுறதை தவிர வேற வேலையே இல்லை, எப்போ பாரு அடிக்கடி பசிக்குதுன்னு என்ன சாப்பிட வைக்குறாள்.”

“அதுசரி உன்னை வேலையே செய்ய விடாமல் இருந்தால் உனக்கு கஷ்டமா இருக்கா? இரு இரு அவள் வெளிய வரட்டும்...” என்று செல்லமாக மிரட்டினாள் அஹல்யா.

“இருவரும் தங்கள் பேச்சில் வயிற்றில் இருக்கும் குழந்தை பெண்குழந்தை என்றே முடிவெடுத்திருந்தனர். சரி சரி போதும் என் மருமகன் எங்க? என்ன பண்ணிட்டு இருக்கான்?” என்று அர்ச்சு விசாரிக்கவும், “உன் மருமகனுக்கு என்ன? என்னை அங்கயும் இங்கயும் ஓடவச்சு முதுகெலும்பை உடைக்குறான்” என்று கூறி சிரித்தாள்.

இருவரும் பொதுவாக குழந்தைகளை பற்றி பேசியபின், அஹல்யா தொடர்ந்தாள்... “நான் ரொம்ப ஆர்வமாக இருக்கேன் அர்ச்சு, இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு... அதுவும் விபுன் பிறந்தநாள் அன்றே டெலிவரி ஆனால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உனக்கு தந்த date அவன் பிறந்த நாளைக்கு பக்கத்தில் தானே இருக்கு நான் வேண்டிகிட்டே இருக்கேன் பார்ப்போம்” என்று ஆர்வத்தை குரலில் காட்டி பேசினாள்.

அர்ச்சனாவுக்கும் அதே எண்ணம் தான், அந்த நாளுக்காக தான் காத்திருக்காள்... தான் தாய்மை எய்தும் நாள்... அவள் யோசனையில் இருக்க, அஹல்யாவே தொடர்ந்தாள் “நான் பக்கத்திலேயே தான் இருக்கேன் முதல்ல ஓடிவந்திடுவேன்...” என்று அவளை நிகழ்காலம் கொண்டுவந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அதன்பின் பொதுவான அறிவுரைகளோடு அஹல்யா அணைப்பை துண்டித்துவிட்டாள்.

தோ இதோ என்று இன்னும் 3 நாட்கள் தான் இருந்தது, மருத்துவர் தந்த தேதிக்கு, அர்ச்சனாவின் மனம் தவித்தது, ச்சே இன்னைக்கு விபுன்க்கு 2வது பிறந்தநாள். இன்னைக்கே இவளும் பிறந்திருக்காலம் என்று ஒரு வருத்ததோடு தன் மேடான வயிற்றை தடவிப்பார்த்தாள். குழந்தை வயிற்றில் வந்ததில் இருந்து காலை சீக்கரமே எழும்படி ஆனது, இவளும் எழுந்து என்னையும் எழுப்புறாளே என்று எண்ணிக்கொண்டிருந்தாள். முதல் ஆளாக விபுனுக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு தன்னால் அவனை சென்று பார்க்க முடியவில்லையே என்று வருந்தினாள். நேரம் எப்போதும் போல் மெதுவாக கடக்க, என்றும் போல் அவளை எதுவும் வேலை வாங்காமல் அதை குடி இதை சாப்பிடு என்று தொல்லை செய்தனர் மாமியாரும் அம்மாவும்... மதியம் உணவு உண்டு படுத்திருக்க, சுளிரென வலி பிறந்தது அவளுக்கு... கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தது வலிதாங்காமல் வாய்விட்டு அலற வைத்தது. குறித்த தேதி அருகில் இருந்ததால் அவளது அம்மா அருகிலேயே இருக்க, உடனேயே அவளது மாமியாருக்கும் அறிவித்துவிட்டு, வீட்டில் இருப்போர் எல்லாம் சேர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அனைவருக்கும் பரபரப்பு ஒட்டிக்கொள்ள, ஆளுக்கு ஒருபுறமாய் செய்திகூற துவங்கினர். அர்ச்சனாவின் அம்மா அஹல்யாவுக்கும், நவீனின் தந்தை நவீனுக்கு என்று மாறி மாறி கூற, சிறிது நேரத்திலேயே அனைவரும் கூடியாயிற்று. நவீன் வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், உள்ளுக்குள் பயந்தது அவன் முகத்திலேயே தெரிந்தது. முதல் பிரசவம் பெண்களுக்கு எவ்வளவு வலியோ அதே போன்று அன்புள்ள கணவருக்கும் இருக்கும் என்று அவன் முகம் காட்டியது. அவனின் நிலையை அர்ஜுன் எளிதாக புரிந்துகொள்ள அவன் அருகிலேயே தோளில் கைபோட்டு ஆறுதலாக அமர்ந்திருந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.