(Reading time: 39 - 77 minutes)

 

நீ அழுதா… எனக்கு கஷ்டமா இருக்குடா… வேண்டாம்டா.. ப்ளீஸ்…”

“……..”

“உன் ராம் தான நான்…. நான் சொன்னா கேட்ப தான?...” என்றதும் அவனை ஏறிட்டாள் அவள்…

“கண்ணைத்துடை டா… ப்ளீஸ்…” என்று கெஞ்ச,

கண்களைத்துடைத்துவிட்டு அவனைப் பார்த்தாள் பிரிவின் வலியை கண்களில் உணர்த்தி…

அதனைக் கண்டவனுக்கோ அதை விட அதிகமாய் வலித்தது… தானும் அதை கூறினால், அவள் உடைந்து விடுவாள் என்று தோன்றவே, பொய்யாக தன்னவளுக்காக, சிரித்து…

“சரியான அழுமூஞ்சிடி நீ…”

“……..”

“பேசாமல் இருந்தா என்னடி அர்த்தம்?...”

“…….”

“குட்டிம்மா… என்னைப்பாரு… சித்து நந்து வெயிட் பண்ணுறாங்கள்ள… நீ போகணும் தானே… அங்கே”

“…..”

“இந்த அழுகையிலும் என் சீதை அழகுதாண்டி….”

“….”

என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தும் அவள் பேசவேயில்லை… அவன் விழிகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்…

“என் ராம் பற்றி எனக்கு தெரியும்… அவரின் உணர்வுகளை அவரின் இந்த கண்கள் எனக்கு சொல்லுகிறது… என்னிடத்தில் பொய் பேச அவருக்கு வராது…” என்று அழுத்தம் திருத்தமாக உறைத்தாள்…

ஏனோ, அதை கேட்டவனுக்கும் தொண்டை அடைத்தது… அவளின் முன் கலங்கி என்னை அவளுக்கு காட்டி கொடுத்திடாதே என்று அவன் அத்தனை முறை கெஞ்சியும், அவன் பேக்சுக்கு அது கட்டுப்படாமல், தனது தடையை தகர்த்தெறிந்து வெளிவந்தது வெற்றிகரமாய்…. முடிவு அவனது கண்களின் ஒரமும் ஈரம்…

அந்த நேரம், கோவிலுக்கு வந்த ஒரு பெண்மணியின் கைபேசி ஒலித்தது ஒரு பாடலுடன்…

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்உயிரைத் திருப்பி தந்துவிடு…”

அவளது விழிகள் அவனிடத்தில் கெஞ்சியது...

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு

அவனது விழியின் நீர் அவளுக்கு ஆறுதல் அளித்தது…

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

அவள் சொன்ன வரிகள் அவனுக்கும் கேட்டது...

எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்…”

அவனின் இப்போதைய நிலையை அவன் மனம் அவனுக்குள்ளே சொல்லிக்கொண்டது….

நீண்டிருந்த மௌனத்திரையை முதலில் விலக்கியவன் ஆதிதான்… கண்ணீரைத்துடைத்துக்கொண்டு,

“சரிடா… நேரமாச்சு… நீ கிளம்பு… பாவம் குட்டீஸ்….” என்றான்…

“ஹ்ம்ம்…”

“சிரிச்சிட்டே சொல்லேண்டா… போயிட்டு வரேன்னு…”

“ஹ்ம்ம்… சரி…”

“அப்போ… நான் போறேன்…”

“என்னங்க… அப்படி சொல்லாதீங்க… போயிட்டு வரேன்னு சொல்லுங்க… ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சுதலோடு…

“அதை தானே நானும் உங்கிட்ட சொன்னேன்… நீ செஞ்சியாடி…”

“ஹ்ம்ம்ம் இனிமே செய்யுறேங்க…. கோபம் வேண்டாமே… ப்ளீஸ்ங்க…”

அவளின் கெஞ்சல் அவனுக்கு பிடித்தது மிக… குழந்தையாய் அவள் பேசும் விதமும் அவனை கவர்ந்து கொண்டிருந்தது அவளைப் பார்த்தது முதல்…

“சரிடா… பார்த்து போயிட்டுவா…” என்றான்…

“நீங்க…?...”

“நான் காரில் தான் வந்தேன்… நான் பத்திரமா வீட்டுக்கு போயிடுவேன் மா…”

“ஹ்ம்ம்….சரி…”

“உன்னை டிராப் பண்ணவாடா?...”

“அதெல்லாம் வேண்டாம்… வீடு கிட்ட தான் இருக்கு…” என்று அவசரமாக பதில் தந்தாள் அவள்…

மௌனமாக சிரித்தபடி… தலைசைத்தான் அவன் விடை கொடுக்கும் பாணியில்…

அவள் திரும்பி திரும்பி அவனையேப் பார்த்துக்கொண்டே சென்றாள்… யாரும் பார்க்கிறார்களோ என்றும் கவனித்தபடி… மனதை அவனிடம் முழுமையாய் கொடுத்துவிட்டு, ஒன்றும் இல்லாமல் சென்றாள் அவள்…

அவள் சித்து நந்துவிடம் தாமதமாக வந்ததற்கு திட்டு வாங்கிக்கொண்டே செல்வதை வருத்தத்துடன் பார்த்தபடி, அவனது வீடு நோக்கி சென்றான் காரில்..

பாடல் கேட்டபடி ஒவ்வொன்றாக அசைப் போட்டுக்கொண்டே இருந்தவன்,  திடீரென்று அந்த வரிகள் வந்ததும், அவனையும் அறியாமல் வாய்விட்டே சிரித்தான்…

மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாதே என்று கள்ளத்தனமாய் அவன் பாதம் அருகில் பாதம் வைத்து நடந்த அவளின் செய்கை அவனுக்கு நினைவு வந்தது… அவள் செய்ததை பின்னிருந்து பார்த்தவன் அவளின் காதலில் துடித்தான்… அவளின் அந்த விளையாட்டை ரசித்தான்… அது எதுவும் தெரியாதது போல் அவளிடத்திலே நடிக்கவும் செய்து பின் ஒப்புக்கொள்ளவும் செய்தான்…

காதல் வந்தாலே கண்ணோடு தான்

கள்ளத்தனம் வந்து குடியேறுமோ?...

கொஞ்சம் நடித்தேனடி, கொஞ்சம் துடித்தேனடி

இந்த விளையாட்டை ரசித்தேனடி…”

அவள் அவனிடம் என் ராமனைப் பற்றி எனக்கு தெரியுமென்று நேருக்கு நேராய் பார்த்த போது, அவளின் விழிகளினால் அவனது பாதை முற்றிலும் அவளிடத்தில் மாறியது… அவனது கண்களோ நீரால் தடுமாறியது… அவளின் வரவு புதுவித ஏக்கத்தை அவனுள் நுழைத்தது… அவளின் பிரிவு அவனுக்கு வலியை தந்தாலும் அவன் மனம் அதை மனமார ஏற்கவும் செய்தது…

உன் விழியாலே உன் விழியாலே

என் வழி மாறும்கண் தடுமாறும்

அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்

இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்…”

கண் மூடி ரசித்து சிரித்துக்கொண்டே வீட்டிற்கு வந்தான்… வந்தவன் தாயை அழைத்தான்..

“என்னப்பா தரிசனம் எல்லாம் நல்லா கிடைச்சதா?...”

“ஹ்ம்ம் ஆமாம்மா…”

“ஆதர்ஷ்…. ?...”

“ஹ்ம்ம்… அம்மா…”

“என்னாச்சு…. சொல்லுப்பா…”

“கண்டேன் சீதையை…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.