(Reading time: 9 - 17 minutes)

19. என்னுயிரே உனக்காக - சகி

குவின் அந்திம சடங்குகளை முடித்துக் கொண்டு ஆதித்யா மற்றும் அனைவரும் ராஜசிம்மபுரம் வந்து சேர்ந்தனர்.அவன், வந்தவுடன்,

"ஆதி..."-என்று ஓடி வந்து அவன் கால்களை பிடித்து கொண்டான் ராகுல்.

"ஏன் இவ்வளவு நாள் கழிச்சி வர??பேசாம...அங்கேயே தங்கிடேன்.நீயும் உன் ஃப்ரண்ட் மாதிரி தான் இருக்க போ!"-விதியின் விளையாட்டு தான் என்ன?இறப்பதற்கு முன்னர், தந்தையை பற்றி வாய் திறவாதவன்,அவன் இறந்தப்பின்,அவனைக் குறித்து மட்டும் பேசுவதன் காரணம் என்ன?இறைவன் மனமும் கல்லாகி போனதா??

"பதில் வரலை..."

Ennuyire unakkaga

"ம்...கொஞ்சம்...வேலை அதிகம் ராகுல்.."

"நிஜமா?"

"ம்...."

"அப்போ சரி...மறுபடியும் வேலைன்னு போக மாட்டியே!"

"ம்ஹீம்...மாட்டேன்."-அவன்,குரல் வெளியே வர மறுத்தது.

"ராகுல்...அவங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்,நீ வா!"-மதுபாலா.

"ம்...சரி!"-என்று அவன் விளையாட ஓடிவிட்டான்.

ராஜேஸ்வரி,நிரஞ்சன்,ரம்யா மூவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

"நீங்க போய் ரெஸ்ட் எடுங்கிறீங்களா?"

"............."-மௌனம் சாதித்தான்.மதுவிற்கு ஆதித்யாவின் மனநிலையும்,புரிந்தது....அவனிடத்தில் இருந்த மாற்றமும் தெரிந்தது.

"என்னங்க....."

"..............."

"என்னங்க..."-அவன்,அவளை இறுக அணைத்துக் கொண்டான்.அவன், கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளை கலங்கடித்துவிட்டது.

"என்னங்க...என்ன நீங்க?"

"எல்லாம் போச்சு அம்மூ!!!!நான் என் தைரியத்தையே இழந்துட்டேன்.இந்த உலகமே எனக்கு இப்போ விரோதியா தெரியுது!"

".............."

"ராகுல்...அவனுக்கு நான் என்ன பதில் சொல்றது??நான் பண்ண தப்பால எத்தனை பெரிய பிரச்சனை?"

"நடந்த விஷயத்துல உங்க தப்பு எதுவுமே இல்லைங்க.....அமைதியா இருங்க!இப்படி உட்காருங்க!"-அவனை அருகிலிருந்த சோபாவில் அமர வைத்தாள்.அவன், இப்படி இருந்து அவள் கண்டதில்லை.

"என்னங்க???"

"ரகுக்கு பதிலா நான் போயிருக்கணும்.என் உயிர் போயிருந்தாலும் கவலை இல்லை."-மது,சட்டென்று அவன் வாயை பொத்தி,வேண்டாம் என்பது போல தலையசைத்தாள். அவன்,கண்களிலோ கண்ணீர் மட்டுமே திரண்டிருந்தது.மது,சரணை தன் தோள் மீது சாய்த்து கொண்டாள்.அவர்களுக்கு இடையே இருந்த அந்த அழகிய உறவானது, அவனுக்கு உன் துன்பங்களில் பங்கிட்டு கொள்ள நான் இருக்கேன்...என்று அவனுக்கு சொல்லாமல் சொல்லியது.

சிறிது நேரம் கழித்து அவனை விலக்கியவள்...

"ப்ளீஸ்...எந்த     நிலைமையிலும் தைரியத்தை     இழந்துவிடாதீங்க.."என்றாள்.

அவன்,சரி என்பதை போல தலை அசைத்தான்.

"அம்மூ..."

"சொல்லுங்க!"

"கொஞ்ச நேரம் தூங்கட்டா?அதுவும்...உன் மடியில படுத்துக்கிட்டு?"

"ம்...."-அவன்,அமைதியாக அவள் மடியில் தலை சாய்ந்து உறங்கினான்.

அவன்,விழிகள் அளவில் உறங்கி இருந்தாலும், மனதளவில் உறங்கவில்லை என்பதை சிறிது நேரத்தில் அவன்,ரகு என்று உரைத்தது நிரூபித்தது.

மதுவிற்கு அவன் நிலை புரியாமல் இல்லை...

ஆனால்,அந்நேரம் அவன் இழந்த ஒன்றை அவனுக்கு அவள் திரும்பி தர முடியாமல் அல்லவா இருந்தாள்.....

றுநாள் காலை.....

சூரியனை சூழ்ந்து அவனது ஒளியை மறைத்துக் கொண்டிருந்த மேகங்களை வெறித்து கொண்டிருந்தான் சரண்.

"மச்சான்..."-திரும்பினான்.

"ரகுக்கு பதிலா ரவி வந்து கேஸ்சை எடுத்துக்க சொல்லி ஆர்டர் வந்திருக்கு!"

"............"

"இனி அவனும் நம்ம கூட தான் இருந்து   கேஸ்சை கவனிக்கப் போறான்."

"நடக்கறது எல்லாம் என்கிட்ட சொல்லிட்டா நடக்குது??என்னமோ பண்ணுங்க!"-என்றான் கசப்பான புன்னகையுடன்.

"ஆதி....நீ இப்படி இருக்கிறதால் நடந்ததை மாற்ற முடியாதுடா!"

"உண்மை தான்...ஆனா, நடந்ததை என்னால இன்னும் ஏற்றுக்க முடியலை."- நிரஞ்சனிடம் அவன் சொற்களுக்கு மறு வார்த்தை இல்லை.

"நீ போ! நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்."-அவன்,சரி என்பதை போல தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

தனித்திருந்தவனின் கண்களில் ரகுவின் நினைவுகள் வந்து வந்து சென்றன.

சிறிது நேரம் கழிந்தது...

ஏதோ ஒரு கார் அவன் வீட்டின் முன் நின்ற சப்தம் கேட்டு நிமிர்ந்தான் சரண்.

அதிலிருந்து ரகு இறங்கினான்.

அவனைக் கண்டவுடன், ஆதித்யாவின் கண்களில் ஒரு நொடி கோப கனல் பறந்தது.பின்,எதையோ எண்ணியவன்,அப்படியே அமைதியாகிப் போனான்.

சரணை கண்ட ரவியின் பார்வையில் ஒருவித ஏளனம் தெரிந்தது.அவன், இதழ்கள் ஒருவித ஏளன சிரிப்பை விடுத்தது.

நிரஞ்சன் வந்து அவனை உள்ளே அழைத்துக் வந்தான்.

"எப்படி இருக்க நிரஞ்சன்?"

"நல்லா இருக்கேன் ரவி...நீ?"-பெயருக்கு விசாரிக்க வேண்டுமே என்று அவனும் விசாரித்தான்.

"ம்...ரகு இறந்ததைப் பற்றி கேள்விப்பட்டேன்.ரொம்ப கஷ்டமா இருந்தது."

"அது..அதிர்ச்சியான விஷயம் தான்.நீ போய் முதல்ல குளிச்சிட்டு ரெஸ்ட் எடு!எதுவாக இருந்தாலும்  அப்பறமா பேசிக்கலாம்."

"சரி..."-என்று நிரஞ்சன் காட்டிய அறைக்கு சென்றான்.

ஆதித்யாவிற்கு நடப்பவை அனைத்தும் விரோதமாக தோன்றியது.

யாரை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணினானோ!அவன்,கண் முன்னே இருந்த போதும் அவனை தடுக்க முடியவில்லை.யார் தன் நண்பனின் மரணத்திற்கு காரணமாக இருந்தானோ, அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.