(Reading time: 9 - 17 minutes)

 

ன்று மாலை...

சந்தித்துக் கொண்டன அந்த இரண்டு துருவங்கள்....

"எப்படி இருக்க சரண்?"-ஏளனமான சிரிப்போடு கேட்டான் ரவி.

"............."

"ரகு போனதுல்ல இருந்து ரொம்ப நொருங்கிட்ட போல?"

"............"

"இந்த கேஸ்சை எடுக்காம இருந்திருக்கலாம்னு தோணுதா??"-அவன்,கோபத்தை கட்டுப்படுத்துகிறான் என்று அவன் பற்களை கடித்த விதமே கூறியது.

"இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை... விட்டுட்டு போயிடு.மிச்சம் இருக்கிறவங்க உயிராவது மிஞ்சும்."-அதற்கு மேல் அவன் கோபம் தாளவில்லை.ரவியின் சட்டையை ஆக்கிரோஷமாக பிடித்தான் சரண்.

"உனக்கு என்ன தைரியம் இருந்தா,என்கிட்டயே இப்படி பேசுவ?கேஸ்சை விடுறேனோ...இல்லையோ!உன்னை உயிரோட விட மாட்டேன்டா!உன்னை உயிரோட விட மாட்டேன்.உன் சாவை பார்த்து இனி எவனும் தப்பு பண்ணனும்னு நினைக்க கூடாது."-விட்டால்,அவன் அப்போதே ரவியை கொன்றிருப்பான்.மதுவும், நிரஞ்சனும் அவர்களை பிரிக்காமல் இருந்திருந்தால்..

"என்னங்க...என்ன பண்றீங்க?"

"ஆதி...என்னடா இது?மது அவனை கூட்டிட்டு போம்மா!"-நிரஞ்சன்.

நிரஞ்சன் ரவியை அழைத்துக் கொண்டு சென்றான்.அப்போது தான்,ரவியின் கண்களில் மதுபாலா பட்டாள்.

அந்நேரத்திலும் அவளின் அழகு,மலைக்க தான் வைத்தது ரவியை.

மதுபாலா ஆதித்யாவை அவன் அறையில் அழைத்து வந்து அமர வைத்தாள்.

"என்னாச்சுங்க?ஏன் அப்படி கோபப்பட்டிங்க?"

"அவனை விடக்கூடாது அம்மூ!ரகுவோட மரணத்துக்காக அவனை பழி வாங்கணும்!விட மாட்டேன்."

"உங்க கோபம் நியாயம் தான்.அதை காட்டுற சமயம் இதுவா?வீட்டில குழந்தை இருக்கான்.அவன், பார்த்திருந்தானா?இதோ பாருங்க...நீங்க இனி தனி ஆள் இல்லை.இனி...ராகுல் நம்ம பையனா வளர போறான்.உங்க கோபம் அவனை பாதிக்க கூடாது.புரிஞ்சிக்கோங்க!"-அவன் நீண்ட பெரு மூச்சை வெளியிட்டான்.

"சரி...."தலையசைத்தான் சரண்.

றையில் தனித்திருந்த ரவியின் கண்களுக்கு வந்து வந்து சென்றது வட்ட நிலவாய் மதுவின் முகம்.

"என்ன பொண்ணுடா?கண்,காது,புருவம்,மூக்கு செதுக்கி வைத்த சிலை மாதிரி இருக்கா...பேசும் போது ப்பா..மூச்சே நின்று போகிறதே!"-என்றெல்லாம் மதுவை தன் மனதுள் வர்ணித்தான்.

மது என்ற அவள் பெயரையே நூறு முறையேனும் உச்சரித்துப் பார்த்தான்.

"ராகுல்..."

".............."

"ராகுல் எங்கேடா இருக்க?"

"மது?"-அழைத்தது ராகுல் அல்ல ரவி.

"............."-மௌனமாய் திரும்பினாள்.

"யாரை தேடிட்டு இருக்க?"

"ராகுல்..."

"ஓ....அவன் விளையாடிட்டு இருக்கான்."

"சரி...நான்  பார்த்துக்கிறேன்."

"அவ்வளவு தானா?"-வேற என்ன?என்பது போல பார்த்தாள் அவள்.

"உனக்கு என்கிட்ட பேச எதுவும் இல்லையா?"-அவனது நோக்கம் ஏதோ அவளுக்கு விளங்கியது.

"இல்லை..."-என்று நகர தொடங்கியவளை வலுவாக கைப்பிடித்து நிறுத்தியது அவன் கரம்.

"என்ன பண்ற நீ?விடு...!"

"இப்போ சொல்லு.உனக்கு என்கிட்ட பேச ஒண்ணும் இல்லை??"

"ச்சீ...விடு!"

"என்னடி இதுக்குள்ளவே ச்சீ...விடுன்னு கத்துற?"

"மரியாதையா கையை விடு!இல்லனா...."

"என்ன பண்ணுவ?"-அவன்,கூறிக் கொண்டிருக்கும் போதே,அவன் கையை பலமாக பிடித்து தூக்கினான் ஆதித்யா.

"கையை எடுடா!"

"முடியாதுன்னா..."

"கையை எடு!"-அவன் இன்னும் பலமாக அழுத்த,ரவி மதுவின் கரங்களை தளர விட்டான்.

மதுவிற்கு ரவி பிடித்திருந்தது உடல் எல்லாம் கூசியது.அவள் நெளிந்தாள்.

அதை கவனித்தவன்,

"நீ உள்ளே போ!"என்றான்.

"என்னங்க??"

"உள்ளே போ!"-அவனது,ஆணையை ஏற்று சென்றாள் அவள்.

உள்ளே கலங்கியவாறு வந்தவளிடம்,

"என்னாச்சு மது?ஏன் ஒரு மாதிரி வர?"-என்று கேட்டார் ராஜேஸ்வரி.

"அத்தை...-அவள் கண்கள் கண்ணீரை சிந்தின.

"என்னாச்சு மது?"

"ரவி..."

"என்ன?"

"ஒண்ணுமில்லைம்மா...ரவி திடீரென்று       பயமுறுத்திட்டான்." என்றப்படி வந்தான் சரண்.

"சரியா போச்சு...ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா?பாவம்...ரொம்ப பயந்துட்டா போல! நீ போம்மா...இன்னொரு முறை இப்படி நடக்கட்டுமே!"-என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

மதுவிற்கு இன்னும் ஒரு மாதிரியாக தான் இருந்தது.

அவள்,அவளது வல கரத்தையே அழுந்த பிடித்திருந்தாள்.அவன் கண்டவன்,

"அம்மூ.."

".............."

"டேய்! என்னடா ஆச்சு?"-அவள்,அவனது மார்பில் சாய்ந்து அழுதுவிட்டாள்.

"அம்மூ!"

"நான் நினைச்சு கூட பார்க்கலைங்க...அவன், இவ்வளவு கேவலமா நடந்துக்க முயற்சிப்பான்னு!"

"டேய்...விடுடா!நான் இருக்கிறேன்.பயப்படாதே!"-அவளது வலக்கரத்தை இதமாக வருடி தந்தான் சரண்.

இனி ரவி உன்கிட்ட வர மாட்டான்...கவலைப்படாதே!

எனக்கு சொந்தமான உன்னை யாராலையும் என்கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது..."

"ம்..."

"அழாதே!"-மனம் சற்று ஆறுதல் அடைந்தது மதுவிற்கு.

"என்னங்க.."

"ம்..."

"உங்க கேஸ் விஷயமா நீங்க ஏன் இப்போ எல்லாம் எந்த முயற்சியும் எடுக்கறதில்லை?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.