(Reading time: 18 - 36 minutes)

21. காதல் பயணம்... - Preethi

கையில் அலைபேசியை வைத்து பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கு தனது ஆர்வத்தை கட்டுபடுத்த கடினமாக தான் இருந்தது. பண்ணிவிடலாமா? என்று ஏங்கிய மனதை கட்டுபடுத்தி கைபேசியை வைத்துவிட்டு வெளியே சென்று இலக்கில்லாமல் இருண்ட வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனாக தேஜுவுக்கு அழைக்க கூடாதென்பது அனுவின் கட்டளை ஆனால் அதே நேரம் அவனது வாழ்த்து அவளை போய் சேரும் என்றும் வாக்களித்தாள். அவள் கூறியதை மனதில் அசைபோட்டவனுக்கு வெறும் பெருமூச்சுதான் வந்தது. என்னவள் என் இதயம் திருடியவளின் இதயம் என்ன நிலையில் உள்ளதோ என்று கண்மூடி யோசனையில் ஆழ்ந்தான்.

அங்கு தேஜு வேறு கோவத்தில் இருந்தாள். முழங்கால் இட்டு மெத்தையில் அமர்ந்து தனக்கு முன்னே இருக்கும் கைகேடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். ஒவ்வரு நொடியாக சுற்றிக்கொண்டே இருந்த முற்கள் மணி 12 ஆக சில நிமிடங்களே இருக்கின்றது என்று பறைசாற்றியது. கைபேசியையும் அதையும் மாறி மாறி பார்த்தவளுக்கு அதெப்படி இன்னும் ஒருவர் கூட அழைக்கவில்லை என்று வியப்பாக கூட இருந்தது. அப்படி அனைவருமா மறந்துவிட்டனர் அவளது பிறந்தநாளை... பொருமிக்கொண்டிருந்த மனதை கட்டுபடுத்தி சாய்ந்து படுக்கபோனவளுக்கு தனது அறைகதவு தட்டும் ஓசை கேட்டு தூக்கிவாரி போட்டது. இந்த நேரத்தில் யார் தட்டுவது என்று, சிறிது சுதாரிதவள் ஒருவேளை தனது பெற்றோராக இருக்கும் என்று மனம் குளிர்ந்து சென்று கதவை திறக்கபோனாள். அவள் எழும் நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட இதுவரை கண்ட பேய் படங்கள் எல்லாம் மனதில் சட்டென தோன்றி கதவை திறக்கும் தைரியத்தை துளைக்க செய்தது.  

மனதில் இருக்கும் தைரியத்தை எல்லாம் திரட்டி தேஜு கதவை திறந்தாள். அடுத்த வினாடியே, பட படவென உள்ளே நுழைந்த உருவம் அவள் கண்களை மூடிக்கொள்ள, அதை தொடர்ந்து சில காலடிகள் உள்ளே நுழைந்தது. கண்ணை மூடியபடியே தேஜு உள்ளே இழுத்து செல்லபட்டாள். தேஜுவுக்கு நன்றாகவே தெரிந்தது அது அனு தான் என்று ஆனால் அவளுடன் வந்திருக்கும் சில காலடிகள் யாருடையது என்றுதான் புரியவில்லை அவளுக்கு. அவள் பெற்றோர் தவிர இன்னும் சிலர் வந்திருக்க கூடும் என்று புரிந்தது அவளுக்கு.

Kaathal payanam

சில நிமிடங்கள் சலசலப்பு கேட்டுக்கொண்டிருக்க, மணி 12 ஆகிவிட்டது என்று சுவர் கடிகாரம் அறிவுறுத்த, வளையல் அணிந்த கைகள் ஒன்று தீபெட்டியோடு போராடிக்கொண்டிருந்தது. அதேநேரம், ஒரு குரல் அவளின் அருகாமையில் வந்து மெல்லிய குரலில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று மட்டும் கூறி நெற்றியில் இதழ் பதித்தது. சுற்றி இருப்போருக்கு சலசலப்பில் கேட்டிருக்க வாய்பிள்ளைதான் ஆனால் தேஜுவுக்கு அந்த ஸ்பரிசம் பரிட்சயம் ஆனது. அந்த மெல்லிய குரலும் சரி, அந்த அருகாமையும் சரி நிரஞ்ஜனை நினைவுபடுத்தியது. அவசரமாக அவள் கைகளை விளக்கி பார்க்க முயற்சிக்க, அதற்குள் அனு, “இருடி என்ன அவசரம்” என்று அதட்டி அமைதியாகினாள். அதற்குள் கதவருகே இன்னும் சில காலடிகள் கேட்டது அதை தொடர்ந்து “இந்த நேரத்தில போய் கரென்ட் போயிருக்கு பாருங்க. ஏன் UPS கூட வேலை செய்யலை?” என்று வினவியவாறே லதா வருவதும் கேட்டது. அட பாவிங்களா அப்போ நீங்களா இதை செய்யலையா என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.இது அனைத்தும் சில நொடிகளில் நடக்க, கண்களை திறந்தாள். முன்னால் அர்ச்சனா, நவீன், அஹல்யா, அர்ஜுன், தேஜுவின் பெற்றோர் என்று நின்றுக்கொண்டிருந்தனர். அந்த மெழுகுவத்தியின் ஒளியில் அனைவரையும் பார்த்து மகிழ்ந்த தேஜு, கேக் வெட்ட துவங்கினாள். அவள் விளக்கை ஊதவும் வீட்டில் கரண்ட் வரவும் சரியாக இருந்தது. “பாரா... கரெக்ட் டைம்ல வந்திருக்கு. இனி எல்லாமே நல்லதாக நடக்கும் தேஜு” என்று வாழ்த்தினாள் அர்ச்சனா. அனைவரும் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்க ஒவ்வருதருக்கும் கேக் ஊட்டிவிட்டவாறே அவளது கண்கள் வேறு ஒரு ஆளை தேடியது.... அவள் கண்கள் அங்கும் இங்கும் சுத்துவதை மர்மமாக பார்த்து சிரித்துக்கொண்டனர் அனுவும் அர்ச்சனாவும். மாறி மாறி அனைவரும் வாழ்த்த தேஜுவுக்கு இவர்கள் எப்படி சென்னையில் இருந்து வந்தார்கள் என்று குழப்பம்.. விசாரித்தால் சொல்லி வைத்தார் போல் அர்ச்சனாவும் அஹல்யாவும் கணவன்மார்கள் ஒரு வேலையாக வந்திருப்பதாகவும் அதற்காக கூடவே வந்துவிட்டதாகவும் கூறினர். அவளுக்கோ எதற்காக வந்தால் என்ன நம் பிறந்தநாளுக்கு அனைவரும் இருக்கின்றனரே என்ற மகிழ்ச்சி..(இப்போ அனு அன்னைக்கு யாருக்கு போன் பண்ணானு புரிஞ்சிதா?) ஆரத்தழுவி கொஞ்சி வாழ்த்தி எல்லா ஆட்டங்களும் முடிந்தபின்பு... பெற்றோர் இருவரும் வாழ்த்தி அவளுக்கு ஒரு வைர necklace பரிசாக தந்தனர். இருவரும் செல்வதை பார்த்திருந்த தோழியை திருப்பி மனம் முழுதும் இருந்த அன்பு வெளிப்பட அணைத்துவிட்டு “இனிமே வாழ்க்கை புல்லா சந்தோஷமாக இருப்ப தேஜு...” என்று வாழ்த்திவிட்டு என்னுடைய பரிசு நாளைக்கு தான் என்று கூறினாள். “அதுவரைக்கும் காத்திருக்கணுமா....” என்று போலியாக முகத்தை வைத்துகொண்டவளை, “தூங்கி எழுந்திருச்ச கொஞ்ச நேரத்திலேயே கிடைச்சிட போகுது அதுவரைக்கும் பொறுக்க முடியாதா?” என்று செல்லமாக வினவியளிடம் சரி என்று குழந்தையாய் தலை ஆட்டினாள் தேஜு. அவள் முகத்தையே ஒரு நொடி பார்த்திருந்துவிட்டு ஒருவேளை “நாளைக்கு நான் தர போற பரிசு உனக்கு பிடிக்கலைனா?” என்று கூறியவளை நோக்கி, “நீ என்ன தந்தாலும் அது எனக்கு பிடிக்கும் அனு” என்று பாசமழை பொழிந்தனர்... இதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சனாவும் அஹல்யாவும் “யெப்பா தாங்க முடியலை... விட்டால் பாச வெள்ளத்தில் அடுசிட்டு போயிடுவோம் போலவே” என்று கிண்டல் செய்தனர்.

ல்லா கதைகளும் முடிந்த பின்பு, உறங்க சென்றனர். அனுவும் தேஜுவும் அவளது அறையில் படுத்துக்கொள்ள, மற்றவர்கள் எல்லாம் தனி தனி அறைக்கு சென்றுவிட்டனர். கண்கள் மூடி படுத்திருந்தவள், “தேஜு” என்று அழைத்தாள்....

“ம்ம்ம்ம்...”

“சந்தோஷமா?...”

“ரொம்ப....”

“நான் எல்லாமே உன்னோட நல்லதுக்கு தான் பண்ணுவேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா தேஜு?” என்று கேட்டாள்.

அனு அப்படி கேட்பது வித்தியாசமாக தோன்றினாலும்... “கண்டிப்பா ஏண்டி லூசு இப்படி கேட்குற?” என்று பதில் கேள்விகேட்டவளுக்கு சும்மா என்று மட்டும் கூறிவிட்டு தூங்கிவிட்டாள். அதன்பின் தேஜுவின் மனமும் அங்கில்லை, தனக்கு நிஜமாகவே வாழ்த்து சொல்லி முத்தம் தந்தது யாரு? நிரஞ்ஜனாக இருக்குமோ? இல்லை இது அனைத்தும் நம் கற்பனையாக இருக்குமோ? ஒருவேளை இங்கு அவன் வரவே இல்லையோ? அம்மா அப்பா வராமல் இருந்திருந்தால் கேட்டிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டாள். மனம் குழம்பியது ஆனால் ஏதோ ஒரு மூலையில் அவன் வரவில்லை என்றாலும் அவன் அருகில் இருப்பது போன்ற உணர்வாவது இருந்ததே என்று திருப்தியாக உணர்ந்தாள். இனி வரும் நாட்கள் எல்லாம் தனக்கு நன்மையாக இருக்கும் என்று நம்பிக்கையோடு தூங்கியும் போனாள்.

ங்கு நிரஞ்ஜனோ வானில் பறக்காத குறைதான் தன்னவளிடம் தன் வாழ்த்தை நேராக சொல்லிவிட்ட திருப்தி. கடைசி நிமிடத்தில் அனு தான் வெளியே காரோடு நிற்பதாக கூறி தன்னையும் அழைத்து செல்லும் வரை தெரியாது அவனுக்கு இந்த இன்ப நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என்று. பலநாட்களுக்கு பிறகு அவளின் அருகாமை இன்னும் சில நிமிடங்கள் அவளோடு இருக்க சொல்லி தவிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அனுவின் முதல் கட்டளையே வாழ்த்து சொல்லிவிட்டு சத்தமில்லாமல் இடத்தை காலி செய்யவேண்டும் என்றுதான். ஒன்றுமே நடவாததுக்கு இது எவ்வளவோ பரவா இல்லை என்று மனம் கூறிவிட,மனதை கட்டுபடுத்தி வாழ்த்தும் தன் சின்ன பரிசான முத்தத்தையும் தந்துவிட்டு யாருக்கும் தெரியாமல் மெயின் சுவிட்ச் போட்டுவிட்டு மறைந்துபோனான். தான் அர்வகோலாரில் அவளுக்கு முத்தம் தந்தது மட்டும் அர்ச்சனா அக்காவிற்கும் அனுவுக்கும் தெரிந்தால் தன் கதி ஆரோகதி என்று நினைத்து சிரித்துக்கொண்டான். 

றுநாள் காலை விடியல், எப்போதும் போல் ஆதவன் தன் கரங்கள் தொட்டு எழுப்பினாள் எங்கே பயந்துவிடுவாளோ என்று, ஓரகண்ணால் தேஜுவின் அறையை மெலிதாய் திரை விலகியிருக்க எட்டிப்பார்த்தான். அவள் துயிலும் அழகை கலைக்க மனமின்றியோ என்னவோ திரையும் அவனை உள்ளே விடாமல் அங்கும் இங்கும் ஆட்டம் காட்டி ஆதவனை தவிர்த்தது. இருப்பினும் நேரமாயிற்றே ஆதவன் ஜன்னல் திரையிடம் கெஞ்சிகொள்ள, பாதி மனதோடு தன் தோழன் தென்றலின் உதவியுடோ விலகி சென்று ஆதவனை உள்ளே அனுமதிதான். ஆர்வத்தில் ஓடிவந்தவன் அவள் இதழில் தவிரு விழுந்து தன் முத்திரையை கொடுத்துவிட, அவனுக்கே கொஞ்சம் வெக்கமாகிப்போனது அந்த அழகியை தொட்டதற்கு... தேஜுவுக்கோ வெயில் பட்டு துயில் களைய மனமேஇன்றி மெதுவாய் கண்திறந்து பார்த்தாள். அழகிய விடியல் அவளை அன்பாக வரவேற்றது. திரும்பி படுத்து அனுவை தேடினால் அவள் அங்கு இல்லை. மெதுவாக எழுந்து குளித்து பிறந்தநாளிற்காக வாங்கிய மாலைவானின் நிறமான செந்நிறத்தில் சல்வார் அணிந்து கீழே வந்தாள்.

பெற்றோரும் இன்முகத்தோடு அழைக்கவே மனம் திருப்தியாக இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.