(Reading time: 18 - 36 minutes)

 

ரே ஒரு முத்தம்...” என்று இழுத்தவனை, முறைத்தாள் தேஜு... “கடனாக எல்லாம் தர முடியாது” என்று சிலுப்பிக்கொண்டாள். அவளின் பேச்சும் செய்கையும் அவனை ரசிக்க தூண்ட “உன்னை யாரு கடனாக தர சொன்னது நேத்து நான் தந்ததை இப்போ திருப்பி தந்திடு போதும்” என்று வசீகர புன்னகையோடு கூறினான். “அப்போ நேத்து நீ நிஜாமாக வந்தியா? நான் கூட ஏன் பிரம்மையோன்னு நினைச்சேன்” என்று ஒரு நிமிடம் மகிழ்ந்துவிட்டு... “ஆமாம் உன்னை யாரு எனக்கு முத்தம் தர சொன்னது” என்று மீண்டும் அவள் சண்டைக்கு வர, சரியாக நிரஞ்ஜனை காப்பாற்ற கதவை தட்டினர் சிலர்.

அவளும் கொஞ்சம் அடக்க உடுக்கமாக தன்னை மாற்றிக்கொண்டு கதவை திறக்க, அங்கு அனு, அஹல்யா அர்ச்சனா நின்றுக்கொண்டிருந்தனர். “என்ன மேடம் எவ்வளவு நேரம் தான் நாங்களும் வெயிட் பண்றது... உங்க கொஞ்சல்ஸ அப்பறம் வச்சுக்கோங்க அங்க எல்லாரும் காத்திட்டு இருக்காங்க பாரு” என்று மூவரும் சேர்ந்து கிண்டல் செய்தனர். அதற்குள் வெளியே வந்த நிரஞ்ஜன் “என்னது கொஞ்சல்ஸ? நல்ல நேரத்தில் வந்து என்னை காப்பாத்தினீங்க அக்கா” என்று அர்ச்சனாவை பார்த்துக்கூறினான். அனைவரும் சேர்ந்து சிரிக்க, தேஜு நிருவை முறைத்தாள்... கிடைத்த நேரத்தில் அங்கிருந்து பறந்துவிட்டான் நிரு.

தோழியின் முகத்தில் மகிழ்ச்சி திரும்பியதை நினைத்து திருப்தியான அனு, “என்ன மேடம் என்னோட gift எப்படி? பிடிச்சிருக்கா?” என்று கிண்டல் செய்ய வெட்கப்பட்டு தோளில் சாய்ந்துக்கொண்டாள் தேஜு.

சிரித்து கிண்டல் செய்தவாறே தேஜுவுக்கு மற்ற மூவரும் அலங்காரம் செய்துவிட, கிண்டல்களையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டு வெட்கபட்டுகொண்டு இருந்தாள். “நம்ம தேஜூவா இப்படி அமைதியாக இருப்பது” என்று கிண்டல் செய்தாள் அஹல்யா.

“சரி சரி எல்லாம் அமைதியாக இருங்க” என்று முகத்தை கொஞ்சம் கடினமாக வைத்துக்கொண்டு, “இங்க பாரும்மா என் தம்பியை ஒழுங்கா பார்த்துக்கணும், சும்மா மாமியார் கொடுமை இல்லைன்னு சந்தோஷ படாம நாத்தனார் நான் இருக்கேன் அந்த பயத்தோட ஒழுங்கா நடந்துக்கோ” என்று வேண்டும் என்று நடித்தாள். அவள் பேசுவது அனைவருக்கும் சிரிப்பாக வந்தாலும் கட்டுபடுத்திக்கொண்டு “சரிங்க” என்று தலையை ஆட்டினாள் தேஜு. அவள் பதில் தந்தவிதத்தில் சிரிப்பு வந்துவிட, தேஜுவை கட்டிக்கொண்டாள் அர்ச்சனா.

குங்கும நிறத்தில் சேலைகட்டி அழகாக ஒப்பனை இட்டு, கூந்தலை உளற பின்னி மல்லி சரம் சூடி வந்தாள் தேஜு. அவள் வருவதையே கண்ணெடுக்காமல் பார்த்த நிரஞ்ஜனை அருகிலேயே அமர்ந்திருந்த அஸ்வத் கிண்டல் செய்தான். “ஹே போதும்டா எல்லாரும் பார்க்குராங்க, பார்க்காததை பார்த்தது போல reaction தராத” என்று கிண்டல் செய்தான். இதற்கிடையில் நிரு பார்ப்பதை மற்ற பெண்கள் தேஜுவின் காதில் சொல்லி சிரிக்க, விழி உயர்த்தி அவனை பார்த்து சிரித்துவிட்டு குனிந்துக்கொண்டாள். அனு அருகிலேயே தேஜுவின் கைபிடித்து வர, எளிமையான அவளது உடுப்பையும் ஒப்பனையையும் பார்த்துவிட்டு எப்படிதான் இதிலும் அவள் அழகாகவே இருக்களோ என்று நினைத்துக்கொண்டான் அஸ்வத். தந்தையிடம் ஒட்டிக்கொண்டிருந்த விபுன் அனுவிடம் ஓடிவந்து நின்றுக்கொண்டான். 9 மாத குழந்தை ஆன விருஷிக்கா (நம்ம அர்ச்சனா பொண்ணு தாங்க) அழகாக தந்தையின் கையில் இருந்தவாரே சிரித்து அனைவரையும் மயக்கிகொண்டிருந்தாள்.

தன் மகள் பெற்றோரின் வார்த்தைக்காக இத்தனை நாள் காத்திருந்தமையாலும், நிரஞ்ஜன் அவளை நன்றாக பார்த்துகொள்வான் என்று உணர்ந்தமையாலும், இருவரின் அன்பின் மீது மதிப்பு வந்ததுரவி மற்றும் லதாவிற்கு. தன் மகளுக்காக கஷ்டப்பட்டு உயர்ந்த நிருவிடம் மகளை ஒப்படைக்க பெற்றோர் ஒத்துக்கொண்டனர். மனம் குளிர்ந்துபோக, கல்யாண பேச்சு துவங்கப்பட்டது. “என்னோட மச்சான் நிரஞ்சன் தன்னோட முயற்சிலேயே முன்னேரிருக்கான். அது உங்களுக்கே தெரிந்த விஷயம் தான் அவனுக்கு அம்மா அப்பா ஸ்நானத்தில் இருந்து இந்த சம்பந்தம் பேச வந்திருக்கோம், எங்களுக்கு இந்த சம்பந்தம் ரொம்ப பிடுச்சிருக்கு” என்று நவீன் தாம்புலத்தை நீட்ட, “எங்களுக்கும் இதில் பரிபூரண சம்மதம்” என்று கூறி பெண் வீட்டார் வாங்கிக்கொண்டனர்.

இருவீட்டாருக்கும் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ந்துபோக, அடுத்து கல்யாண தேதி பற்றி பேச்சு வந்தது. உடனேயே நிருவும் தேஜுவும் முன்வந்து, “இப்போதைக்கு எங்களுக்கு கல்யாணம் வேணாம்... கொஞ்ச நாள் போகட்டும்” என்று ஒன்றாக கூற, மற்றவர்கள் புரியாமல் விழித்தனர். இந்த முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்திருந்தனர் (sorrynga நிரு ரூம்ல அடி மட்டும் வாங்கலை இதையும் கொஞ்சம் பேசினாங்க... நான் தான் சொல்ல மறந்திட்டேன்) இருவரும் அதன் காரணத்தை தேஜு அஸ்வத்தை பார்த்தும் நிரு அனுவை பார்த்தும் விலக்கிவிட, சுற்றி இருந்தவர்களுக்கு புரிந்து போனது, முக்கிய கதாப்பாத்திரங்களுக்கும்தான் ஆனால் தலையை குனிந்துகொண்டார்களே தவிர பேசவில்லை. நிலைமை அமைதியாக போக, லதா மாற்றினார். “சரி நல்ல செய்தி பேசிருக்கோம் இனிப்பாக சாப்பிடலாமே” என்று கூறி பாயாசமும், கேசரியும் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார்.

சூழ்நிலை மாறிவிட, திருமண தேதி குறிக்காமல் தாம்பூலம் மட்டும் மாற்றிகொண்டனர். லதா, ரவி, துளசி,கண்ணன், ஹேமா,வெங்கட் மற்றும் அன்புகரசி அனைவரும் சேர்ந்து கதை பேச, நமது வானர கூட்டமெல்லாம் ஒன்று சேர்ந்தது. நிருவின் அருகில் தேஜுவும், அஹல்யா,அர்ஜுன், அர்ச்சனா நவீன் என்று சுற்றி உட்கார்ந்துகொள்ள, அஸ்வத்தும் அனுவும் அடுத்தடுத்து அமர்ந்தனர். (தனி தனி chairla தள்ளிதாங்க) இருவரும் மற்றவரிடம் பேசினார்களே தவிர ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. இம்முறை மற்ற அனைவருக்குமே பொறுமை போனது அடுத்து இவர்களை சேர்ப்பதுதான் தலையாய கடமை என்று உணர்ந்த பெரியவர்கள் (சரி சரி கொஞ்சம் மூத்தவர்கள் அதாங்க அஹல்யா, அர்ச்சனா, நவீன், அர்ஜுன்) ஒரு திட்டம் தீட்டினர். அனுவின் பெற்றோரும் வருந்த துவங்கிவிட்டனர். “இந்த பசங்க எப்போதாங்க பேசுவாங்க நம்மளும் எத்தனை நாள் தான் காத்திருக்கிறது?!” என்று ஏக்கமாக கேட்ட ஹேமாவின் கையை அந்த நிலையை கடந்து வந்த லதா ஆறுதலாக பிடித்துக்கொண்டார். “பேசாம கல்யாணம் பண்ணிவச்சிடலாம்ங்க, அவங்க போடுற சண்டை அதுக்கு அப்பறம் கொறஞ்சிடும்” என்று ஹேமா கூறவும், ஒருநிமிடம் என்ன சொல்வதென்றே புரியாமல் அமைதியாக இருந்தாலும் அனைவரும் யோசிக்க துவங்கினர்.

தீபாவளிக்கு பெருசாக தர முடியாட்டியும் இந்த குட்டி எபிசொட் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... தீபாவளி முடிஞ்சு பெருசா நல்ல நியூஸ் தரேன்.... ஏற்றும் தீபங்கள் போல ஒளியோடும், உடுத்தும் ஆடைபோல வண்ணமயமாகவும், மகிழ்ச்சி நிறைந்த திருநாளாய் இந்த தீபாவளி உங்களுக்கு இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்... பத்திரமா ஜாலியா கொண்டாடுங்க பிரிண்ட்ஸ்

Go to Kadhal payanam # 20

Go to Kadhal payanam # 22

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.