(Reading time: 10 - 19 minutes)

 

"து...சும்மா சொல்லி இருப்பான்."

"சத்தியம் பண்ணு!"

"ராகுல்?"

"அப்பா இருக்காருன்னு சத்தியம் பண்ணு."-ஆதித்யா மௌனம் சாதித்தான்.

"முடியலை தானே...ஏன் என்கிட்ட இதை முன்னாடியே சொல்லலை?"

".............."

"பதில் சொல்லு ஆதி?"-ஆதித்யா ஸ்தம்பித்து நின்றான்.அங்கிருந்தோர் அனைவருக்கும் கண்களில் நீர் திரண்டது.

"மது?"

"ம்..."

"நீ ஏன் மது சொல்லலை?"

".............."

"பதில் சொல்லுங்க.இங்கே இருக்கிறவங்க எல்லாருக்கும் இந்த உண்மை தெரியும் தானே?அப்பறம் ஏன் மறைச்சிங்க?"

"..............."

"சின்ன பையன் எதுவும் கேட்க மாட்டேன்னா?"

"............."

"என் அப்பாவை கடைசி வரைக்கும் என்னை பார்க்க விடலை.ஏன்?"

".............."

"பதில் சொல்லுங்க."

"ராகுல்.என்னை மன்னிச்சிடுடா!"

"............"-அதிக நேரம் அங்கே கனத்த மௌனம் நிலவியது.

"வாழ்க்கையில யாருமே யார் கூடவும் நிரந்தமா வாழ முடியாது.ஒரு நேரம் இல்லனா ஒரு நேரம் பிரிவை நாம தாங்கி தான் ஆகணும்.யாருமே யார் கூடவும் ஒண்ணா வாழ முடியாது."-இதைப் பேசி அந்த மௌனத்தை உடைத்தவன் ராகுல் தான்.தூக்கி வாரி போட்டது சரணுக்கு.இது,அன்று டெல்லியை விட்டு கிளம்புகையில் ராகுலிடம்,ரகு கூறிய அதே மொழி!!!சரண் ராகுல் முன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான்.

"ரா...குல்?"

"மரணம் ஒருத்தரை விட்டு இன்னொருத்தரை நிரந்தரமா பிரிக்கிற விஷயம் இல்லை.ஒரு சின்ன இடைவேளை.இது அப்பா என்கிட்ட சொன்னது. அன்னிக்கு அப்பா என்கூட இருந்து என் மேல பாசம் வைத்தார்.இப்போ எனக்கு தெரியாம காட்டுறார். இல்லை?"

"செல்லம்!"-சரண்,ராகுலை இறுக அணைத்துக் கொண்டான்.பழி வாங்கும் எண்ணம் மட்டும் படர்ந்த அவன் கண்களில் கண்ணீர் படர்ந்தது.

"நீங்க பண்ண தப்புக்கு உங்களுக்கு தண்டனை உண்டு?"-ராகுல் உதிர்த்த வார்த்தைகளில் குழம்பினான் ஆதித்யா.

"மது இங்கே வாயேன்!"-ராகுல்.மது அவனருகே வந்தமர்ந்தாள்.

"நீ பண்ணதுக்கு தண்டனை இருக்கு!"

".............."

"என்னால யாருமே இல்லாம இருக்க முடியாது.நான்...உங்க இரண்டு பேரையும் அம்மா,அப்பான்னு கூப்பிடட்டா?"-இருவரும் இருந்த நிலைப்பாட்டை வர்ணிக்க முடியவில்லை. மதுவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. ராகுலை அணைத்துக் கொண்டு,

"என்னை மன்னிச்சிடு... கண்ணா!"

"நான் கேட்டதுக்கு பதில்?"

"கூப்பிடு!!!அப்படியே.. கூப்பிடு!இனி,நான் தான் உனக்கு அம்மா!"-ராகுலின்,இந்த செயல் ரவியின் மனக்கோட்டையை சுக்கு நூறாய் உடைத்தது.அவன்,ராகுலை சரணுக்கு எதிராக திருப்பி,அவனை பலவீனப்படுத்த எண்ணினான்.தவறு செய்பவர்களுக்கு விதி,மதியை விட வலியது அல்லவா???

"என் முன்னாடி அழாதீங்க...எனக்கு பிடிக்காது!"-ராகுல். சிலையாய் அமர்ந்திருந்த ஆதித்யாவை பார்த்து,

"அப்பா!"என்றான் ராகுல்.அவன்,அவ்வாறு அழைத்ததும் வாழ்வின் அரிய ஒன்றை பெற்றுவிட்டதைப் போல உணர்ந்தான் சரண்.

"சொல்லுப்பா!"

"இதுக்கு தான் அவர்,எனக்கு இந்த பிரேஸ்லட்டை போட்டுவிட்டாரா??"-அவன்,கையில் அணிந்திருந்த காப்பை காட்டினான் ராகுல்.

"ராகுல்...கஷ்டப்படாதேடா!!ப்ளீஸ்...எனக்கு ரகு மாதிரி ஆறுதல் சொல்ல வரலை.தயவு செய்து,மனசுல இருக்கிற அழுகையை அழுதுவிடு!ப்ளீஸ்...."

"............"

"ராகுல்..."

"............."-இம்முறை ராகுல் சரணை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தான்.அன்று வரை,சிரிப்பை மட்டும் வெளிக்காட்டிய கண்கள் அன்று அழுகையை வெளிக்காட்டியது.அன்று வரை,குறும்புத்தனத்தை வெளிப்படுத்திய அவன் செய்கை அன்று வருத்தத்தை வெளிப்படுத்தியது.

சிறிது நேரத்திற்கு பிறகு,

"எனக்கு ஒரு சத்தியம் பண்ணுவியாப்பா?"

"சொல்லுடா!"

"நீ என் கூடவே இருப்பல?"

"கண்ணடிப்பா!!சத்தியமா...நான் உன் கூடவே இருக்கிறேன்."

பின்,மதுவை பார்த்து,

"நான் கடைசி வரைக்கும் யாரையும் அம்மான்னு கூப்பிட முடியாதுன்னு நினைத்து பயந்தேன்மா!இனி,பயப்பட மாட்டேன்."-என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ராகுல்.

மதுபாலா கண்களை துடைத்துக் கொண்டு,அவன் கன்னத்தில் முத்தமிட்டு,

"அம்மா!சொன்னா,கேட்பியாசெல்லம்?"

"ம்..."

"சாப்பிட வாடா கண்ணா!"-ராகுல்,சிரித்துக் கொண்டே,

"சரிம்மா.."என்றான்.

ராகுல்,சாப்பிட்டு முடித்து மதுவின் மடியிலே படுத்து உறங்கினான்.அதுவரை சரண் அவனோடே இருந்தான்.அவன் உறங்கியதும் நிரஞ்சனிடம்,

"ரவி எங்கே?"

"கிளம்பிட்டான் மச்சான்.."

"எப்போ?"

"அரை மணி நேரம் ஆகுது!"-ஆதித்யா நிரஞ்சனை உற்று நோக்கினான்.

"சீக்கிரமே!அப்பாக்கிட்ட சொல்லி,ஆர்டரை அனுப்ப சொல்றேன்.இரண்டு பேரையும் இரக்கமே காட்டாம கொன்னுடு!நான் பார்த்துக்கிறேன்."-சரண்,சரி என்பதைப் போல தலையசைத்தான்.

நிரஞ்சன் அங்கிருந்து சென்றுவிட்டான். நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த மது சற்று பயத்தோடு,

"என்னங்க?"

"ம்..."

"என்னங்க கொஞ்சம் பொறுமையா??"

"இனி,இருக்க முடியாது அம்மூ.."

"........"

"கவலைப்படாதே!உனக்கும்,ராகுலுக்கும் பண்ண சத்தியத்தை மீற மாட்டேன்.தைரியமா இரு!"

"................"-அவள்,கன்னத்தை வருடி தந்து,அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு

"பயப்படாதே!"என்று அங்கிருந்து கிளம்பினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.