(Reading time: 9 - 17 minutes)

03. நீ எனக்காக பிறந்தவள் - Parimala Kathir

மீற்றிங் முடிந்து அனைவரும் தத்தமது  வேலைகளைப் பார்க்க சென்று விட்டனர்.

மீற்றிங் ரூமை விட்டு வெளியேறிய ஆரபி தனது கேபினுக்குள் நுழைந்தவுடன் கதவை சாத்தி விட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள். ஏற்கனவே கண்களில் முட்டி நின்ற கண்ணீர் சரம் தொடுத்தது.

அவளது மேசை மேல இருந்த கிழிஞ்சலை கைகளில் ஏந்தினாள் அதில் அழகாய் பொறிக்கப்பட்டிருந்தது. க்ரிஷ் லவ் ஆரு என்று அதை பார்த்ததும் சற்று கட்டுப்பட்டிருந்த அழுகை மீண்டும் வெடித்தது.

Nee enakaga piranthaval

ஏன்முராரி இப்பிடி மாறிப் போனீங்க? எதுக்காக என்னை வெறுத்து ஒதுக்கிநீங்க?  நீங்க கூப்பிட்டப்போ நான் உங்க கூட பேச வராததற்கா எனக்கு இந்த தண்டனை கொடுத்தீங்க? என்னோட அம்மாதான் என்னை புரிஞ்சுக்கல நீங்களாவது என்னை புரிஞ்சுப்பீங்க என்று நினைத்தேன் அனால் நீங்க கூட..... என்று மனதில் கரைந்தாள். ஆரபி!!!!  அழுதழுது அவளது கண்கள் ரத்தமென சிவந்திருந்தது.  

ஆரபியின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து நின்றான் முராரி கிருஷ்ணன். கையில் ஒரு பைலுடன். அவனை அங்கு சற்றும் எதிர் பாரததால் சற்று திகைப்புடன் எழுந்து நின்றாள்  எங்கே தனை கண்டு விடுவானோ என்று அஞ்சியவள் தாழ்த்திய தலையை நிமிர்த்தவே இல்லை. அவளை சிறுது நேரம் உற்றுப் பார்த்தவன் எதுவும் பேசாது தன்னுடைய ரூமுக்கு  சென்று விட்டான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளது இருக்கை இடம் மாற்றப்பட்டது அவனது ரூமுக்குள்.

அவள் எதற்காக என வினவிய போது. எம்டி யின் ஆடர் என்று பதில் வந்தது ஆபீஸ் பாய் மாறனிடம் இருந்து.

முராரி கிருஸ்ணனின் கதவை தட்டி விட்டு அவனது அனுமதியின் பின் உள்ளே நுழைந்தாள் ஆரபி கையில் ஒரு பைலுடன் இருந்தவன். சொல்லுங்க ஆரபி என்ன பிரச்சனை என்றான் வெகு சாதரணமாக

“க்ரி....... சார் எனக்கு முதல் இருந்த ரூமே வசதியாய் தான் இருந்தது நான் அங்கேயே இருக்கேனே என்றாள் கெஞ்சலாக”

அவளது தடுமாற்றத்தை கண்டு கொண்டவன் பைலை மேசை மேல வைத்து விட்டு அவளருகில் வந்தான் அவளை மிகவும் நெருங்கி வந்தான் அவன் மூச்சுக் காற்று அவள் முகத்தை உரசி சென்றது.

அவனது நெருக்கத்தில் அவளது சுவாசம் தடைபட்டதைப் போல் உணர்ந்தால் ஆரபி

“அவள் எப்போதெல்லாம் வருத்தப்பட்டிருக்கிறாலோ அப்போதெல்லாம் அவன் இப்படி தான் அவளை நெருங்குவான். ஆனால் இப்போ அவன் என்மேல் காதல் கொண்டல்லவே  கோபம் அல்லவா கொண்டுள்ளான் பின்னர் எப்பிடி இப்படி எனை நெருங்குகிறான்.” அவளை யோசிக்க விடாது பேசத் தொடங்கினான் முராரி.

“இதோ பாருங்க ஆரபி உங்க வசதிக்காக நான் ஆபீஸ் நடத்தல எனக்கு வேலை சம்மந்தமாய் ஆயிரம் பேச வேண்டி இருக்கும் ஒவ்வொரு தடவையும் உங்களைத்தேடி வந்திட்டிருக்க முடியாது. எனக்கு முன்னாலேயே இருந்தீங்கன்னா எனக்கு வசதியாய் இருக்கும்.”

அவள் அவனை நிமிர்ந்து பாத்தாள்

“என்னோட வேலை பத்தி பேசுவதற்கு என்று சேர்த்து. சொன்னான்.”

“இல்ல சார் நீங்க என்னை தேடி வரத்தேவை இல்லை நீங்க கூப்பிட்டதுமே நான் வந்திடுறன்” சார் என்றாள்.

அவன் பார்வை அனலாய் தகித்தது. அது அவளை குற்றம் சாட்டியது. அன்னைக்கு உன்னை கூப்பிட்டேனே என்னோட ஒரு இரண்டு நிமிடம் பேச வா என்றேன் நின்றாயா நீ! இப்போ நான் அழைத்ததும், வருகிறேன் என்கிறாயே” என்றது அவன் பார்வை.

“ஓ...... அன்று என்னிடம் பணம் இல்லை அதனால் உன் அம்மா பேச்சை கேட்டு அவர் பின்னால் ஒழிந்து கொண்டாய்! இன்று என்னிடம் பணம் இருக்கிறதல்லவா அது தான் கூப்பிட்டதும் வருகிறேன் என்கிறாயோ! என்றான். அவள் முகவாயை இறுகப் பற்றி தன் முகத்தருகே கொண்டுவந்து அவள் கண்களை பார்த்து நீ இப்பிடி அந்த யாதவோடு எத்தனை முறை சென்றிருப்பாய் அவன் கூப்பிட்டதும். ஏனெனில் அன்று உன்னதும் உன் அம்மாவினதும் எண்ணப்படி அவன் பணம் படைத்தவன் அல்லவா...... அன்றே நான் உ......”

“க்ரிஸ்........ போதும் போதும் தயவு செய்து இதற்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க! “

அவளது தோள்களை அழுந்தப் பிடித்தான் “ஏன் உண்மையை சொல்லி விட்டேன் என்று கஷ்டமாக இருக்கிறதா ஆரபி! என்ன செய்வது உண்மை சில நேரங்களில் சுடத்தான் செய்யும் “

அவனது கைகளை உதறி விட்டாள் “எது உண்மை ஆங் எது உண்மை  இன்று உங்கள் பணத்துக்காகவும் அன்று..... அன்று..... யாதவின் பணத்துக்காகவும் நான்..... நான்.... எ... என்.... மானத்தை..... விட்டு விட்டு” அவள் கண்களில் கண்ணீர் ஊர்றேடுத்தது அவன் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான். தனது கண்களை இறுக மூடித் திறந்தான். கைகள் முஷ்டி இறுகியது அப்போது தான் கோபத்தில் அவளை என்ன சொன்னோம் என்று அவனுக்கு புரிந்தது.அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை

அவள் தன் சுவாசத்திற்காக கஷ்டப்பட்டாள் அவளின் கேவல் பெரிதானது அவள் தனதருகே இருக்கும் கதிரையை பற்றுக்கோளாக பிடித்துக் கொண்டாள். அவளின் மண்டைக்குள் ஏதோ ஒன்று குடையத்தொடங்கியது. ஒருகையால் கதிரையையும் மறு கையால் தலைமுடியையும் கொத்தாக பிடித்துக் கொண்டாள்.

அவளின் கேவல் சத்தம் அதிகரிக்கவே அவன் அவள் புறம் திரும்பினான். ஆரபி கொஞ்சம் கொஞ்சமாக தன் உணர்வை இழந்தாள். அவள் கீழே விழுமுன் அவளை தன் கைகளில் ஏந்தினான். அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முனைந்தால் ஆனால் அவளால் அது முடியவில்லை. அவளின் உடல் தூக்கி தூக்கி போட்டது அவளை தன் மார்போடு இறுக்கிக் கொண்டான்.

“ஸ்.... ஆரும்மா ஒன்னுமில்லடா பிளீஸ்டா அழாதடா ஆரு என்னை மன்னிச்சிரும்மா!” என்று அழுகையுடன் அவளிடம் மன்னிப்பு கோரினான்.

அவளில் உடலின் அதிர்வு சற்று நேரத்தில் நின்று போனது அவள் மயக்க நிலையில் இருந்தாள் அவளை தன் மடியில் தாங்கியவாறு மனேஜரிடம் அவளது வீட்டு விலாசத்தை கேட்டு அறிந்து கொண்டான் அவரிடம் மட்டும் அவள் உடல் நிலை சரி இல்லை என்று கூறினான்.

“அய்யய்யோ! என்னாச்சுப்பா? பாவம் அவள் தன்னோட பிரன்ட் வாமிநியோட இல்ல இருக்காள்.  அவளும் இப்ப ஊருக்கு போயிருக்காளேப்பா!”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.