(Reading time: 15 - 30 minutes)

 

தாய் என்ன சொல்ல போகிறார் என்று புரியாத வயதா அனுவுக்கு. “ஆமாமா”

“பாவம் கல்யாணம் தான் தள்ளி போயிடுச்சு...”

“....”

“அனு... நானும் அப்பாவும் போய் வேணும்னா பேசிபார்கட்டுமா?”

சட்டென எழுந்து அமர்ந்துவிட்டாள், “என்னனு? ப்ளீஸ் என் பொண்ணை கட்டிகோன்னா? எனக்கும் கொஞ்சம் சுயமரியாதை இருக்கு அம்மா... அட்லீஸ்ட் அதையாவது மிச்சம் விடுங்க..” என்று என்றும் இல்லாத கோவம் வந்தது அவளுக்கு.. பலநாள் தேக்கிவைத்த வேதனை, கோவம் எல்லாம் பாவம் அந்த தாய் தான் பெற்றுக்கொண்டார். இத்தனை நாள் காத்திருந்து அவன் திரும்பாத போது வராத கோவமெல்லாம் எங்கிருந்தோ இன்று வந்தது... தனக்காக போய் பேசி பார்கிறார்களாம்... அப்படியா குறைந்து போய் விட்டேன் என்று சம்பந்தம் இல்லாமல் எழுந்த கோவம் என்ன செய்வதென்று புரியாமல் தேஜுவுக்கு அழைத்தாள்.

என்ன அனு மேடம் நம்ம கால் பண்ண நினைச்சால் அவளே பண்ணுறாள் என்று மனதில் நினைத்துக்கொண்டு அழைப்பை எடுத்தாள்.

“சொல்லு அனு...”

“ஹே வீட்ல தானே இருக்க?”

“ஆமாம்... ஏண்டி?”

“நான் அங்க வரேன்” என்று சுருக்கமாக பேசிவிட்டு வைத்துவிட்டாள். என்னடா இது நம்ம தானே கூப்பிடனும் அவளே வரேன்னு சொல்லுறா? எல்லாம் தானா நடக்குதே?! சரி நல்லதுதான் வரட்டும்... என்று எண்ணி தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ல்லாசமாக விசிலடித்தபடியே ஈர தலையை துவட்டாமலே குளித்து முடித்து நிறுவனத்திற்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தான் அஸ்வத்.

“என்ன மச்சா? இவ்வளவு குஷியா இருக்க? என்ன விஷயம்?”

கண்ணாடி வழியாக ஓரகண்ணால் புன்சிரிப்போடு பார்த்துவிட்டு “தெரியலைடா ஏதோ ஹாப்பியா இருக்கு” என்று மட்டும் கூறினான்.

ஆமா ஆமா நாங்க தர போற shockla இன்னைக்கு உனக்கு ஹப்பியா தான் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டான் நிரு. “சரி சரி இன்னைக்கு கொஞ்சம் பொறுமையாகவே ஆபீஸ் போகலாம்” என்று அவன் கூறவும் மறுப்பேதும் கூறாமல் அஸ்வத்தும் ஒத்துக்கொண்டான். அப்படி ஒத்துக்கொண்டதே நிருவிற்கு சந்தேகமாக இருக்க, அலுப்பாக இருப்பதாக கூறி சமாளித்தான் அஸ்வத்.

வேகமாக வந்துக்கொண்டிருந்தவளின் மூளையில் காலையில் இருந்து நடந்ததெல்லாம் ஓட, கவனம் வாகனத்தில் இல்லை. ஆனால் கைகள் தானாக தன் இருசக்கரத்தை செயல் படுத்திக்கொண்டிருந்தது.

மூளை யோசிக்கும் வேகத்தை விட, வாகனம் அதிகமாக சென்றது. தன்னை சற்றுமுன் கடந்து சென்ற வண்டியில் இடிபடாமல் இருக்க, லாபகமாக தள்ளி சென்றவள் மனதில் பைக் racer போல் செல்லும் முகம் தெரியாதவனை வசைபாடியவாறே அடுத்து வந்த தெருவின் வளைவில் திரும்பினாள் வேகத்தை குறைக்காமலே.... அவளை போலவே என்ன கோவத்தில் எதிரில் காரில் வந்தவரும் இருந்தாரோ, சட்டென இருவரும் வேகத்தை குறைக்க முடியாமல் போக நேருக்கு நேர் இடித்துக்கொண்டனர்.

வேகத்தின் விளைவாக வண்டியில் இருந்து சில அடிகள் தள்ளி நடைபாதை ஒட்டி  விழுந்தவள் தலையில் helmet இருக்க, தப்பித்தாள். ஆனால் காலில் நடைபாதை ஒட்டி இருந்த கல்லில் பலமாக மோதி காயம் பட, கையில் சிராய்ப்போடு மயங்கி விழுந்தாள்.

“என்ன இன்னும் வரலை? அப்போவே கிளம்பிட்டதால சொன்னா?” என்று ரொம்ப நேரம் ஆனதால் அனுவின் கைபேசிக்கு அழைக்க, அதை எடுத்து பதில் சொன்னவரின் செய்தியில் கலங்கிப் போனாள். அடித்து பிடித்து கைக்கு கிடைத்த வாகன சாவியை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கும் தந்தையை அழைத்துகொண்டு கிளம்பினாள் தேஜு.     

ரவி வாகனத்தை ஓட்ட, தேஜு நிருவிற்கு அழைத்தாள்... அழுகை வரவில்லை ஆனால் வார்த்தையும் வரவில்லை. பொருட்காட்சியை பார்ப்பது போல் பார்க்காமல் அனு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டதே தேஜுவிற்கு நிம்மதியாக இருந்தது.

லோ நிரு...”

“ஹே என்னடி இவ்வளவு பதட்டமாய் பேசுற?” என்று முடிந்தவரை பதட்டமாக பேசினான். என்ன இவள் இவ்வளவு பதட்டமா பேசுறா? ஓஹோ அவ்வளவு பெரிய நடிகையா நீ என்று நினைத்துக்கொண்டான் நிரஞ்ஜன்.

“நிரு... அனு... அனுக்கு accident ஆகிடுச்சுடா பக்கத்துல இருக்க ... hospitala அட்மிட் பண்ணிருக்காங்க நானும் அப்பாவும் அங்க தான் போய்கிட்டு இருக்கோம்...” என்று தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள் தேஜு. இதை போன்று பல படிக்கும் பொழுது பார்த்திருந்தாலும் தன் சொந்தம் என்று வருகையில் நிலை தடுமாறாமல் இருப்பது கடினம் தான்.

“ஏய் என்ன சொல்ற? எப்போ? இதோ இப்போ வரோம்” என்று கூறிவிட்டு “அஸ்வத் அனுக்கு accident ஆகிடுச்சு” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, அஸ்வத் சிரித்துவிட்டான் “டேய் போதும்டா எனக்கு சிரிப்பா வருது... இதெல்லாம் நீங்க போட்ட பிளான் தான்னு எனக்கு தெரியும் ஓவரா நடிக்க வேணாம்னு சொல்லு அந்த நடிகர் திலகத்தை” என்றான் இலகுவாக...

நிருவிற்கு எல்லாம் உப்பு சப்பில்லாமல் போனது “ச்சே... எப்போடா... எல்லாம் வேஸ்ட்... ஹேய் தேஜு” அவனுக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சுடி என்று சிரித்துக்கொண்டே கூறினான் நிரு.

“அய்யோ.... நான் நடிக்கலை நிரு நிஜமாதான் சொல்றேன் அவளுக்கு இப்போதான் accident ஆகிருக்கு எனக்கு hospitala இருந்து கால் வந்திச்சு” என்று கூறிகொண்டிருந்தவளின் குரல் நிஜமாகவே வருத்தத்தை காட்டியது... அந்த குரலில் நிரஞ்ஜன் கொஞ்சம் ஆடிபோனான். “ஏய் என்கிட்டேயே விளையாடுறியே தேஜு... போதும் நிறுத்து” என்று சிரமப்பட்டு சாதாரணமாக கூறுவது போல் கூறினான். ஆனால் அவன் முகத்தில் இருந்த சிரிப்பு மறைவதையும் தடுமாறுவதையும் அஸ்வத் பார்த்துகொண்டிருந்தான்... அவனையும் பதட்டம் தொற்றிகொண்டது.

“டேய் என்னால முடியலை நீ ஸ்பீக்கர்ல போடு” என்று கூறவும் நிரு அழைப்பை வெளியே கேட்கும்படி போட்டான். “அஸ்வத் நீ நம்புறியோ இல்லையோ அனுக்கு accident ஆகிடுச்சு நானும் அப்பாவும் அல்மோஸ்ட் hospital வந்தாச்சு... நான் அனு அம்மா அப்பாக்கு சொல்றேன். நீங்க வந்து சேருங்க” என்று எருச்சல் கலந்த குரலில் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

அதுவரை அவளின் செய்தியை நம்பாதவன், அவளின் குரலில் உள்ள பயத்திலும், தடுமாற்றத்திலும், வண்டியில் செல்லும் சத்தத்திலும் ஊர்ஜிதமாக பதறியடித்து கிளம்பினார்கள். அஸ்வத்திற்கு அதுவும் மூளைக்கு ஏறினார் போல தெரியவில்லை, ஸ்தம்பித்து இருந்தவனை உலுக்கி அழைத்து சென்றது நிரஞ்ஜன் தான்.

Go to Kadhal payanam # 21

Go to Kadhal payanam # 23

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.