(Reading time: 51 - 102 minutes)

 

" ... "

" என்னடீ இப்படி பார்த்து வைக்கிற ? "

" அச்சோ ராம் .. சும்மா இருங்க " என்றவள் லேசாய் அவன் கையை கிள்ளி விட்டாள்.. சூர்ய பிரகாஷ் தொடர்ந்து பேசினாள்..

" அடுத்து நான் உங்க எல்லாருக்கும் 2 குட் நியுஸ் சொல்ல போறேன் .. "

" ரெண்டா ? ஒண்ணுதானே ? ? " என்று கேள்வியை பார்த்த ரகுராமை  பார்த்து தலையசைத்துவிட்டு பேசினார் சூர்யா ..

" இனி நம்ம கம்பனி நிர்வாகத்தை மிஸ் ஜானகி பொறுப்பேத்துக்க போறாங்க .. இவ்வளவு நாள் நீங்க ரகு, கிருஷ்ணாவுக்கு என்ன மரியாதையும் ஆதரவும் கொடுத்திங்களோ அதே ஆதரவும் மரியாதையும் ஜானகிக்கும் கொடுப்பிங்கன்னு எதிர்பார்கிறேன்..."

அவர் தொடர்ந்து பேசிய எதுவும் ஜானகியின் செவியில் எட்டவில்லை .. ரகுராமையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள்...

" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ஜானு ... எதுவா இருந்தாலும் அப்பறம் பேசலாம் " என்றவன் அவளை எதற்குமே ஆட்சேபிக்க விடவில்லை ..

" இரண்டாவது நியுஸ், கூடிய சீக்கிரம் நம்ம வீட்டுல கல்யாண சாப்பாடு போட போகிறோம் .. அதன் பிறகு உங்க எம் டீ  மிசஸ் ஜானகி ரகுராமாக இந்த ஆபீசிற்கு வருவாங்க" என்றதும்  முதலில் ஆரவாரமாய் கைதட்டியது நம்ம பஞ்சபாண்டவர் டீம்தான்..

மது, மற்ற நால்வரிடமும் " நான்தான் சொன்னேன் ல " என்றபடி இல்லாத கொலரை தூக்கி விட்டு கொண்டாள்... அன்றைய தினம் அனைவருக்குமே கலகலப்பாக  சென்றது ..

சரி இதே நேரத்துல நம்ம மீரா கிருஷ்ணா எங்க போனாங்க ?

வாங்க ஊட்டிக்கு போய் பார்ப்போம் ..

டக்..டக் .. டக்..

" ம்ம்ம்ம் " என்று முனகியபடி திரும்பி படுத்தாள் மீரா ....

டக் .. டக்....

" ஹே நித்து இன்னும் டைம் இருக்கு... எனக்கு தூக்கம் வருது ப்ளீஸ் " என்று குரல் கொடுத்துவிட்டு மீண்டும் உறங்கினாள்...

" அடி போடி நீலாம்பரி ! " என்று சலித்துப்போன கிருஷ்ணன் வழக்கம் போல , ஜன்னல் வழியாக ஏறி குதித்து அவளறைக்குள் நுழைந்தான்..

நெற்றி புருவம் சுருங்க, இதழோரம் லேசாய் புன்னகை கீற்றாய் சுமந்து ஓவியமாய் உறங்கிகொண்டிருந்தாள் அவனின் தேவதை .. அவள் இடது கன்னத்தை முத்தமிட்டு கொண்டிருந்த கூந்தல் கற்றையோ " இங்கே வா " என்று கிருஷ்ணனை அழைத்தது ..

" ஹ்ம்ம்ம்ம்ம் விழிச்சிருந்தாலும் மயக்குறான்னு பார்த்தா தூங்கிகிட்டு இருக்கும்போது மயக்குறாளே என் செல்ல மோகினி " என்று முணுமுணுத்தவன் அவளருகில் வந்து அமர்ந்தான் .. தூக்கத்தில் அவன் புறம் திரும்பியவளோ கண்களை மூடிக்கொண்டு  தலையணையை அணைக்கிறேன் பேர்வழி என்று அவனின் மடியில் சாய்ந்து உறங்கினாள்.... ஏற்கனவே அவளை ரசித்து கொண்டிருந்தவனுக்கு அவள் மடியில் சாய்ந்து உறங்கவும் ஒரு கூடை மலரை தன் மேல் கொட்டியதுபோல  இருந்தது ... அவள் தலையை வருடவந்தவனின் இடது கரத்தில் இருந்த கடிகாரம் " டேய் டைம் ஆச்சுடா உன் ஆளை எழுப்பு " என்று கட்டளையிட்டது .. " சாரி கண்ணம்மா " என்று மனதிற்குள் சொன்னவன், அவளை சத்தமாய் அழைத்து எழுப்ப விரும்பாமல் அவள் செவியருகில் குனிந்து மெல்ல பாடினான் ..

மேகத்தை பிழிந்து

மெத்தைகள் அமைத்து மெல்லிய பூ

உன்னை தூங்க வைப்பேன்

தூக்கத்தில் மாது வேற்கின்ற போது

நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்

" ம்ம்ம் கண்ணா " என்று முனகியவள், அவன் மடியில்  உறங்கும் கதகதப்பில் இன்னும் ஒன்றி கொண்டாள்.....

" மீரூ"

" ம்ம்ம்ம் "

" ஐ லவ் யு "

" ம்ம்ம்ம் நானும் "

" அதை என்னை பார்த்துதான் சொல்லேண்டி நீலாம்பரி " என்ற அவனின் குரலில் இப்போது கொஞ்சம் பலமாய்  கேட்க, மெல்ல கண்விழித்தவள் அவனை பார்த்து அதிர்ச்சியில் தூக்கம் களைந்து சட்டென அமர்ந்தாள்...

" ஐயோ  கிருஷ்.. நீங்க என்ன பண்ணுறிங்க இங்க ? யாராச்சும் வந்தா நான் காலி .. ப்ளீஸ் போங்க "

" அடியே நீ போடுற சத்தத்துலதான் எல்லாரும் வருவாங்க .. "

" நீங்க எப்படி இங்க வந்திங்க ? "

" ஹா ஹா வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் "

" யோவ் .. இப்போ சொல்ல போறியா இல்லையா நீ ? "

" என்னடி மரியாதையை தேயுது ? "

" மரியாதையா ? இப்போ நீ ஒழுங்கா பதில் சொல்லல, மான் காரத்தே நடக்கும் இங்க சொல்லிட்டேன் "

" ஹஹ சோ ஸ்வீட் டி நீ .. உம்மா " என்றபடி காற்றில் தன் முத்தத்தை பறக்க விட்டான் கிருஷ்ணன் ..

" ச்சோ கண்ணா ,... ப்ளீஸ் "

" சரி ஓகே ஓகே .. சீக்கிரம் கிளம்பி ரெடியாகு நாம வெளில போகணும் .. அதை சொல்லத்தான் வந்தேன் .." என்றவன் வந்த வழியே திரும்பி போக ஜன்னல் பக்கம் நகர்ந்து, சட்டெனெ ஏதோ ஞாபகம் வர,

" ஹே மறந்துட்டேன் .. இன்னைக்கு புடவை வேணாம் .. இந்த டிரஸ் போட்டுக்கோ  " என்று அவன் கையேடு கொண்டு வந்த பெட்டியை அவள் கைகளில் திணித்துவிட்டு அவள் எதிர்பாரா நேரம் அவளின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு மறைந்தான் ...

அவனின் குறும்புத்தனத்தை மனதிற்குள் ரசித்தவள் ஆர்வமாய் அந்த பெட்டியை திறந்தாள்... அதை பார்த்த அவளின் விழிகள் ஆச்சர்யத்தில் மின்னின...ஏறக்குறைய அவர்கள்  முதன் முதலில் சந்தித்தபோது  அவள் அணிந்திருந்த சுடிதார் போலவே இருந்தது அது .. " பாவம் தேடி தேடி வாங்கிருபானே என் கண்ணா " என்று மனதிற்குள் அவளை கொஞ்சியவள் அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் சீக்கிரம் கிளம்பி வந்தாள்...

" அடடே கிளம்பிட்டியா மீரா " - லக்ஷ்மி

" ஆமா அம்மா .. நித்யா , கார்த்திக் அண்ணா எங்க ? "

" அவங்க படிச்ச காலேஜ் பார்த்துட்டு அப்டியே கொஞ்ச நேரம் வெளில போய்ட்டு வரேன்னு சொன்னாங்க டா .... சாப்பாடு எடுத்து வைக்கவா ? "

" இல்ல வேணாம்மா நான் மீராவை அவசரமா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போகணும் " என்றபடி அங்கு வந்து நின்றான் கிருஷ்ணன் .. இருவரையும் ஒன்றாய் பார்த்த லக்ஷ்மி " நல்ல ஜோடி பொருத்தம் " என்று மனதிற்குள் மெச்சினார் ..

" சரிப்பா ...பத்திரமா போய்ட்டு வாங்க "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.