(Reading time: 7 - 13 minutes)

01. ஊனமறு நல்லழகே - ப்ரியா

ருட்டு......

எங்கே பாத்தாலும் கும்மிருட்டு தான்.... என்ன நடக்கிறது என யூகிக்கும் முன்னமே எதுவோ துரத்த எதற்கோ ஓடிகிறாள்.. நின்று ஒரு கணம் 'எதற்கு இப்படி ஓடுகிறேன்' என யோசிக்க கூட மரத்த மனது....

எதிரே என்னவென்று தெரியாமல், எதிலும் முழு கவனம் செல்லாமல் அறிவு மழுங்கி மனதை பயம் கவ்வ அப்படி ஒரு ஓட்டம்...!!! உயிர் பிழைக்கும் ஓட்டமோ?!! அல்லது உயிர் காக்கும் ஓட்டமோ?!

oonamaru-nalazhage

உயிர் அறுத்து

உடல் கூறு போடும்

விதி தந்த வலி சுமக்க தான்

யுகம் யுகமாய்

உயிர் தாங்கி வந்தேனோ ...!!!

அவளுக்கே தெரியாதே... பாவம் அவளும் தான் என் செய்வாள்?

சட்டென மனம் விழிக்க, பயம் அகன்றார் போல் ஒரு உணர்வு...!!

ஏன்? மெதுவே வேகத்தை குறைத்து நின்றவள்... அப்போது தான் அறிவையும் பயன்படுத்தினாள்.. தூரத்தில் சின்னதாய்  ஒரு ஒளி கீற்று தெரிய அதை ஆதாரமாக பற்றி விட வேண்டி மீண்டும் வேகத்தை கூட்டினாள்.

கீற்றாக தோன்றிய ஒளி கொஞ்சம் கொஞ்சமாய் பெருகியது.. இல்லை இல்லை அவள் அதை நோக்கி சென்று கொண்டிருந்ததால் அப்படி தோன்றியது..

அருகில் செல்லவும் சட்டென விடிந்து விட்டதை போல்... அமாவாசை இரவில் ஆயிரம் பௌர்ணமி நிலவு திடீரென உதித்தால் எப்படி இருக்குமோ அது போன்ற விடியல் அது...

விடியலா? அல்லது அவளின் விடிவு காலமா?

யோசிக்க கூட நேரம் அளிக்காது அவளை பற்றியது ஒரு கரம்.. நிமிர்ந்து பார்க்க எதிரே ஒளி பொருந்திய வசீகர முகம் ஆனால் சரியாக தெரியவில்லையே.... கண்களை கசக்கினால்...

தும்மா, எழுந்துக்கோ டா மா.. நேரம் ஆகுது பாரு" என்ற கனகாம்பாள் எழுப்ப, வாரி சுருட்டி கொண்டு எழுந்தாள் அவள்.

"ஸ்ஸ்ஸ்! என்னடா மா, நான் தான் முகுர்த்த நேரத்துக்குள்ள தயார் ஆகணும் டா அதான்.., வா ராஜாத்தி வந்து குளி மா , அலங்காரம் பண்ண சொல்லியிருந்த பொண்ணுங்க இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துருவாங்க"

'ச்ச எல்லாமே கனவா? ஆமாம் இது என்ன புதுசா எப்பவும் வர கனவு தானே? ஆனா இந்த கொஞ்ச நாள் வராமல் இருந்ததே.. அந்த முகம் மட்டும் எப்பவும் பார்க்க மிஸ் பண்ணிடறேன் ச்ச.. அது யார இருக்கும்?'

தன் எண்ண ஓட்டங்களில் சிலை என அவள் அமர்ந்திருப்பதை கண்ட கனகாம்பாள் உள்ளம் கனத்தது. அவள் எதையோ எண்ணி கொண்டிருக்க அதை தப்பர்த்தம் செய்த அந்த மூதாட்டி, வேறு எண்ணினார்.

அவள் தலையை மிருதுவாக வருடி,

"என்னம்மா யோசனை, பயமா இருக்க?"

"ப..பயமா எதுக்கு?" என்று பேந்த விழித்தவளிடம்

"கல்யாணம் நா அப்படி தானே டா, எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்க பயம் தயக்கம் தான் அதெல்லாம் சரி ஆகிடும்மா நந்து உன்ன கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பான்"

"ம்ம்ம்.. சரி பாட்டி நான் குளிச்சுட்டு வரேன்" என்ற உணர்ச்சி துடைத்த குரலில் கூறிவிட்டு செல்பவளை பார்த்து பெருமூச்சு எழுந்தது.

குளித்து விட்டு புது மலரை போல் வந்து நின்றவளின் அழகில் மயங்கியவர், அவள் கன்னங்களில் கை வைத்து

"நீ எங்க வீட்டுக்கு விளக்கு ஏத்த வரேன்ன அது என் பேரன் செஞ்ச புண்ணியம் தாயி" என கண் கலங்கவும், என்ன சொல்வதென தெரியாமல் சிறு புன்னகையுடன்  நின்றாள்.

அதற்குள் 'பியுட்டி பார்லர்' பெண்கள் அலங்காரம் செய்ய வந்து விடவே, கனகாம்பாள் அவர்களிடம்

"தங்க பதுமை போல எங்கள் வீட்டு பெண் ஜொலிக்க வேண்டும் சொல்லிட்டேன்" என்ற கட்டளையோடு சென்றார்.

ணப்பெண் தோழி என் சொல்ல பட்ட அவளுக்கு இந்த இரு மாதத்தில் பரிட்சயம் ஆகியிருந்த ருத்ரா, அவள் மணக்க போகும் அவனின் தங்கை.

அவள் தோழிகளும் ஒப்பனை செய்ய வந்திருந்த பெண்களும் கேலி கிண்டல் என பேச்சினூடே அவளை தயார் செய்ய.. மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்..

உள்ளே ஆயிரம் எண்ணங்கள்...

அவளுக்கு கல்யானம நிஜம் தான... ஆள் கொஞ்சம் முரடன் தான் ஆனால் நல்லவன் என பாட்டி சொல்லி இருந்தார்கள்... எப்படியோ அவளுக்கு கல்யாணமாமே?! நம்ப தான் முடியவில்லை... எல்லாரும் அது தானே சொல்கிறார்கள்.. ஹ்ம்ம் நடக்கவே நடக்காது... இந்த ஜென்மத்தில் நடக்கவும் முடியாது என்றல்லவா நினைத்தாள் ...

ஹ்ம்ம் ஏதோ கடவுள் விட்ட வழி வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது நட்டாற்றில் நிற்பதற்கும், மலை பிய்த்து கொடு ஊற்றும் போது ஒழுகும் குடிசைக்குள் இருப்பதுவும் அதுவும் கொஞ்சம் நனையாமல் நிற்க இடம் இருக்கும் குடிசைக்குள் நிற்பதற்கும் நிறையவே வித்யாசம் தானே....

அந்த குடிசை போல தான் இந்த கல்யாணம்.. ஆனாலும் கவலை இல்லை பார்த்து கொள்ளலாம்..

அவள் எண்ணத்தை தடை செய்வது போல் வந்த சத்தமாக ப்செஇக்  கொண்டு வந்த பெண்மணி அவளை பார்த்து விட்டு, தன் வேலையை தொடங்கினாள்.

"என்னம்மா நீ தான் எங்கள் குமரனுக்கு பார்த்த பெண்ணா? பரவாயில்லை கிழம் நன்றாக தான் ஆள் பிடித்திருகிறது. அப்பன் ஆத்தா இல்லையாமே.. எப்படியோ பெரிய இடத்தில வாழ்கை பட போகிறாய்.. ம்ம்ம் குடுத்த வைத்தவள் தான்.." என் பெருமூச்சுடன் அந்தம்மாள் வெளியே செல்லவும் பின்னோக்கி சென்ற மனதை வலுகட்டாயமாக நிறுத்தினாள்.

"சாரி அண்ணி, அவங்க அப்பாவோட தூரத்து சொந்தம், அவங்க பொண்ண தான் அண்ணாக்கு... நீங்க மனசுல ஏதும் வச்சுகாதிங்க.." என ஆதரவாய் கை பற்றிய ருத்ராவை பார்த்து புன்னகைக்க, சிறியவள் மனம் தெளிவானது.

"டேய் மச்சான் மாப்பிள்ள கலை தாண்டவமாடுது டா உன் முகத்துல"

"அட வெட்கமா உனக்கு வெட்கம் கூட வருமா என்ன"

"பாரு டா மறுபடியும் இப்படி குழைஞ்சு சிரிக்குறான்"

தன் நண்பர்களின் கேலி பேச்சுகளுகிடையில் தயாராகி கொண்டிருந்தான் மணமகன், நந்தகுமரன்.

"ப்ச் கம்முனு தான் இருங்களேன் டா" என்று மென்னகை பரவ நின்ற பேரனை கண்ட கனகாம்பாள் மனம் நிறைந்தது.

இதனை ஆண்டுகள் கல்யாணம் வேண்டாமென அடம் பிடிதவனா இவன்?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.