(Reading time: 19 - 38 minutes)

 

ப்பொழுதைக்கு நீரோடை மாதிரி செல்லும் இந்த வாழ்கையில், இவளே முயன்று ப்ரச்சனையை இழுத்து வைத்ததுபோலாகிவிடாதா?

ஆனால் விமானநிலையத்திற்கு அகன் வரவே இல்லை.

இப்பொழுது ஆரணி மனம் அதிகமாக சோர்ந்தது. அவன் இவளை இன்னமும் விரும்புவதாக அடுத்தவர்தானே இவளிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். அவன் இவளிடம் சொன்னானா என்ன? அவன் இவளை விரும்பவில்லை...

நினைவே அழுகை விதை.

விமான நிலையத்திலிருந்து பயணம் அவள் வீட்டையோ, நிரல்யா வீட்டையோ நோக்கி செல்லாமல் வேறு திசை நோக்கி செல்வதை சிறுது நேரம் கழித்துதான் உணர்ந்தவள் அப்பொழுதுதான் சூழ்நிலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

“எங்க போறோம்?”

இவளை ஏற இறங்க பார்த்தாள் நிரல்யா. “நீ யாருன்னு கேட்காம இருந்தியே அதுவரைக்கும் ரொம்ப சந்தோஷம்... இவ்ளவு நேரம் உன்ட்ட எல்லாத்தையும் சொன்னனே....அப்ப எந்த உலகத்தில சஞ்சாரம் செய்துகிட்டு இருந்த நீ.”

அதே நேரம் கார் நிற்க, இறங்கியவள் எதிரில் நின்றான் அகன்.

“வாங்க! வாங்க! உங்களுக்காகதான் வெயிட்டிங்....இன்னைக்கே சிம்பிளா மேரஜ் வச்சுட்டு அதை ரெஜிஃஸ்டர் பண்ணிகிடலாம்னு....வீட்டிலேயே வச்சாச்சு....”

மேரேஜா யாருக்கு? ஜெஷுரனுக்கா? ஒரு துடிப்பை தொலைத்து துடித்தது இதயம். சே! இருக்காது...ரச்சு இப்படி ஈ னு இவனை பார்த்து சிரிக்கமாட்டான்....இதுல ஏதோ விஷயம் இருக்குது....ஒருவேளை இவளுக்கேதானோ?.....புயல் தென்றலாய் மாறியது மனதில்.....சே! அச்சு, அம்லு அண்ணியல்லாம் விட்டுட்டா.....கண்டிப்பா அப்படியெல்லாம் இருக்காது...அப்புறம்...ஓ! துவிக்கா....ஜேசன்-துவி கல்யாணம்!!

நொடிக்கு குறைவான நேரத்தில் இவள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து முடிக்க, இவளை வந்து கைபற்றினாள் துவி.

“சாரி” குற்ற உணர்ச்சியும், வேதனையாகவும் அவள் ஆரம்பிக்க

“எதுனாலும் உள்ள போய் பேசுங்க” அகன் தான் சொன்னான்.

“அப்படில்லாம் வர முடியாது”  கடுமையான குரலில் ஆரணி மறுத்தாள். “இதுக்குதான் போறோம்னு சொல்லி இருந்தால் நான்....”

ஆரணியின்  வார்த்தையில் அங்கு ஒரு அசாத்திய அமைதி.

 “வர வர எல்லாரும் அவசர அவசரமா எங்கேஜ்மென்ட் செய்துகிடுறாங்க...இல்லனா கல்யாணமே செய்துகிடுறாங்க...வீட்ல .கல்யாணம்னா...அதுக்குன்னு யோசிச்சு ட்ரஸ் டிசைன் பண்ணி....தீம் டிசைட் பண்ணி...போங்க நீங்க பண்றது சரியே இல்ல...இன்னும் வரலனாலும் நான் இந்த வீட்டுக்கு வரப்போற மருமக...அதுவும் ஒரே மருமக..... லுக் அட் மை டிரஸ்..” தன்னை குனிந்து பார்த்தவள் சே..இதுலயா நான் வெட்டிங் அட்டன் செய்யனும்...எல்லா ஃபோட்டோலயும் இப்படியே இருக்கும்..”

மூக்கை சுழித்து கொண்டு அவள் பேச, அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்த ரக்க்ஷத் ஜெஷுரனிடம் திரும்பி “வெல்கம் டூ த வெர்ல்டா ஆஃப் அவர் பிள்ளபூச்சி.....” என கிண்டலாக சொல்லிவிட்டு திருமண ஏற்பாடு செய்திருந்த இடத்தை நோக்கி நடந்தான், நிரல்யாவுடன்.

அடுத்த நொடி ஜெஷுரனும் ஆரணியும் மட்டும்தான் அங்கே நின்றிருந்தனர்.

நம்பாத ஆச்சர்ய பார்வை பார்த்திருந்த அகனை பார்த்து அடுத்த கேள்வி  “ இப்ப எதை நம்ப முடியலையாம் உங்களுக்கு...அந்த ஒரே மருமகன்னு சொன்னனே அதையா...?” இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி கொண்டு தலையை சற்றே குனிந்து கீழ் கண்ணால் அவள் பார்த்த விதத்தில் பாவம் பயபுள்ள...அத எனக்கு சொல்ல தெரியல.

“எப்பவும் இப்படியே இரு ஆரா...” மனம் நிறைந்து சொன்னான் ஜெஷுரன். அது ஆசீர்வாதத்தின் குரல்போல் இருந்தது.

“ஹப்பா இப்பவாவது வாய திறந்தீங்களே....பிழச்சேன்...இப்படியே வாயாடியா இருன்னு சொன்னீங்கன்னா...என் பதில்.... அஸ் யூ நோ, என்னதான் பால வச்சு குளிப்பாட்டி, பட்ட வச்சு தொடச்சாலும் எருமை யெல்லோ கலராயிடுது...அதே மாதிரி அத்தன பேரும் முக்கி முக்கி முயற்சி செஞ்சாலும் என் வாயை நிறுத்த முடியாது... ஆனா இந்த டிரஃஸ்லயே இருன்னு சொன்னீங்க.....” தலை ஆட்டி இதெல்லாம் ஜுஜுபி ங்கிற மாதிரி அதுவரை பேசிக் கொண்டிருந்தவள் மீண்டும் முட்ட போகும் ஆட்டுகுட்டியினை அபினயித்தாள்.

“ஹேய்...முதல்ல உள்ள வா” என்றவனை பின் தொடர்ந்தாள். “ஒரு ஃபவ் மினிட்ஸ் குடுத்தீங்கன்னா பக்காவா இல்லாட்டாலும் பார்க்க சகிக்ற மாதிரியாது மாறிடுவேன்...நல்ல வேளை நீங்க வருவீங்கன்ற நினைப்பில  இந்த சல்வாராவது போட்டுட்டு வந்தேன்..இல்லனா ஜீனும் டி ஷர்டுமா இந்த கல்யாணம் அட்டன் பண்ண வேண்டியதாயிருக்கும்...” அவள் இயல்பாக சொல்லிகொண்டு போக

ஆசையாக அவளை திரும்பி பார்த்தான் அகன்.

“என்ன?” என்றவள் அவன் பார்வையின் பொருள் விளங்க, அவளை மீறி அவள் மேல் வந்து வீசிய வெட்க மாருதத்தை ஒரு நொடி அனுமதித்தவள்...”எப்படியும் நீங்க வாய திறக்க நாளாகும்.....உங்க கூடதான் லைஃப்னு தெரிஞ்சுட்டு அதான்....நானே சொல்லிரலாம்னு...யூ நோ ஐ டோண்ட் லைக் வேஃஸ்டிங் டைம்...” அவள் தோள் குலுக்கி அலட்சியம் போல் சொல்ல

சட்டென அவளை சுவரில் சாய்த்து அவளுக்கு இரு புறமும் தன் கைகளை ஊன்றி சிறையெடுத்தான் அவளை ரசித்திருந்தவன்.

அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான். அந்த பார்வையை தவிர்த்து அவள் கண்களோ சூழலை ஆராய்ந்தது. அவன் பின் பேசிய படியே வீட்டின் உள்புறம் எதிரும் புதிருமாய் இருந்த இரு அறைகளுக்கு இடைப்பட்ட குறுகலான ஒரு சந்து போன்ற லாஞ்ச் பகுதிக்கு வந்திருந்தனர் இருவரும். ஆட்கள் அனைவரின் சத்தமும் வீட்டின் வெளியே கேட்டது.

வழக்கம் போல் வாயாட எண்ணினாலும் முடியவில்லை. “விடுங்க...”

“ஏய்...என் விரல் நகம் கூட உன் மேல படலை...”

“விடுங்க அகன்...ப்ளீஃஸ்”

“இப்படி பயந்துட கூடாதுன்னுதான் நான் பொறுமையா இருந்தது...அதுக்கு நீ என்ன எப்படியெல்லாம் கலாய்க்க...”

“முன்னால இல்லனாலும் இப்ப நாங்க கிளம்புறப்பவாவது ஒரு ஃபோன் செய்துருக்கலாம்....” குறையாய் கூறினாள் ஆரணி.

“உன்ட்ட நேர்ல பேசனும்னு நினைச்சேண்டா..”

“அப்ப ஏர்போர்ட் வந்திருக்கலாம்ல....உங்களுக்கு என்ன பிடிக்காம போய்ட்டோன்னு...” அவள் கண்களில் நீர் துளிர்க்க

“என்னடா நீ..” அவன் உருகினான்.

“நீங்க கிளம்புற வரைக்குமே நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலைனுதான் என்ட்ட ரக்க்ஷு சொன்னான்...ஏர்போர்ட்ல என்னை பார்த்தா எங்க நீ துவி கல்யாணத்துக்கு வரமாட்டியோன்னு....அதான் நான் வரலை...வீட்டில் நடக்ற முதல் கல்யாணம்...சிம்பிளானாலும் நீ இல்லாம நடக்றதுல எனக்கு விருப்பமில்ல....அதான்”

“நீங்க வராததும் சரிதான்...நீங்க வரலைனதும்தான்...உங்களுக்கு என்னை பிடிக்கலைனு தோணிச்சு...அப்பதான் நீங்க இல்லாம ஒரு வாழ்க்கை எப்படி இருக்கும்னு ஒரு உணர்வு...இங்க வரவும் கல்யாணம்னதும்....உங்களுக்கோன்னு ஒரு நொடி தோணிச்சு...செத்துட்டேன்...அடுத்த செகண்ட் நம்ம ரெண்டு பேருக்கும்தான் கல்யாணமோன்னு ஒரு தாட்....ஐ ஃபெல்ட் ஹெவன் ஆன் எர்த்...அப்பதான் எனக்கு என்ன வேணும்னு தெளிவா புரிஞ்சுது....

உங்கள மேரேஜ் பண்ணினால் பின்னால நமக்குள்ள ப்ரச்சனை வந்தா தாங்க முடியாதுன்னுதான்.....முதல்ல ரொம்ப தயங்கினேன்....உங்கள மேரேஜ் பண்ணலன்னா மட்டும் லைஃப்ல ப்ரச்சனையே வராதா...?.நீங்க எனக்கு இல்லங்கிறதே பெரிய ப்ரச்சனையா இருக்குமேன்னு....தோணிச்சு....அதான்.. அதே நேரம் நீங்க எதிர்ல கண்ணு முழுக்க காதல வச்சுகிட்டு அதை காட்டிகாம நின்னதை பார்த்தேனா...அதான் நம்ம வாய்தான் நமக்குதவின்னு...”

“ஐ லவ் யூ ஆரா...” காதல் பொங்க சொன்னான் அவள் அகத்துறை தலைவன் அகன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.