(Reading time: 19 - 38 minutes)

 

திர்பாராத அவனை சட்டென புறமாக விலக்கி தள்ளியவள் “இதுக்கு பதில் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன் “ என்றபடி வெளிபுறத்தை குறி வைத்து ஓடினாள்.

“ஹேய்... டிரஃஸ் மாத்தனும்னு சொன்னியே உள்ள போய் பாரு....” என்ற அவன் குரலுக்கு

“”நான் இப்ப போட்டிருக்கிற டிரெஸ்தான் உலகத்திலேயே எனக்கு பிடிச்ச டிரஸ்....உங்கட்ட  இருந்து நான் கேட்க ஆசைபட்டத கேட்க வச்ச டிரஸ்” என பதில் வந்தது தூரத்திலிருந்து.

ருண் வெளியே வரமுடியாதவாறு சிறை பட்டுவிட்டான் என்ற தகவல் கிடைத்ததும் துவி ஜேசனின் திருமண கோரிக்கையை உடனடியாக ஏற்றிருந்தாள். அவள் நடித்து கொண்டிருந்தாள் என்ற கோபம் கூட ஜெஷுரனுக்கு மறைந்திருந்தது. உபயம் ரக்க்ஷத்தின் விளக்கம். ஆக உடனடி திருமணம் மணமக்கள் விருப்பம் போல். விழா முடிவில் ஆரணி ஜெஷுரன் திருமண தேதியும் முடிவு செய்யபட்டது. ரக்க்ஷத் நிரல்யா திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக இருந்தது அவர்கள் தேர்ந்தெடுத்த நாள்.

 இரவு நிரல்யாவை ரக்க்ஷத் அவள் வீட்டில் டிராப் செய்ய சென்றான்.

 “மனம் ரொம்ப டிஃஸ்டர்ப்டா இருக்குது ரக்க்ஷத்...எதோ உங்கள பத்திதான்...ஆனா என்னனு புரியலை...கவனமா இருங்க..” நிரல்யா சொல்ல ஒரு கணம் அமைதியாக அவளை பார்த்தவன் “நீயும் கவனமாக இரு” என்றுவிட்டு விடை பெற்றான்.

டுத்த நாள் காலை ஏலகிரி பாரக்லைடிங் போக வேண்டும் என்று ஆரம்பித்தாள் ஆரணி. அடுத்த சில மணி நேரத்தில் ஆரணியும் அகனும் பாராக்லைடிங் செய்து கொண்டிருக்க அதை வேடிக்கை பார்த்தனர் நிரல்யாவும் ரக்க்ஷத்தும் சிறுது நேரம். காரணம் நிரல்யாவிற்கு பாராக்லைடிங்கில் விருப்பமில்லை.

“வா எவ்ளவு நேரம் தான் இதை வேடிக்கை பார்க்க, ஒரு டிரைவ் போய்ட்டு வரலாம்” என்ற ரக்க்ஷத்தின் அழைப்பை ஏற்று நிரல்யா அவனுடன் கிளம்பினாள்.

இன்பமாக சென்றது பயணம். அவர்கள் காருக்கு முன்னதாக சென்றது இவளது செக்யூரிட்டிகள் பயணம் செய்த கார். அதை போல் இவர்களுக்கு பின்னாலும் ஒரு கார். ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக முன்னும் பின்னும் இன்னுமாக பொதுமக்கள் வாகனங்கள்.

முன்னால் சென்ற செக்யூரிட்டி வாகனத்துக்கும் இவளது காருக்கும் இடையில் நுழைந்து வாகன வரிசையில் கலந்தது சாலை ஓரத்தில் நின்றிருந்த ஒரு கண்டெய்னர் லாரி.

இவர்கள் அறிவிப்பு செய்து கொண்டோ, சைரன் போட்டுகொண்டோ பயணிப்பவர்கள் கிடையாது. ஆதலால் இது இயல்பாய் நடை பெறுவதுதான். இப்படி ஆகும் போது, முன்னால் சென்ற செக்யூரிட்டி வாகனம் சற்று ஒதுங்கி, வேகத்தை குறைத்து, பின் வரும் வாகனத்திற்கு வழிவிட்டு, மீண்டும் இவர்களுக்கு முன்னதாக வரிசையில் சேர்ந்து விடும்.

அதை போல்தான் இன்றும் என எண்ணும் முன், முன்னால் சென்ற லாரி சட்டென நின்றது.

இவர்கள் வந்து கொண்டிருந்த வேகத்திற்கும், அந்த லாரிக்கும் இவர்களுக்கும் இருந்த இடைவெளிக்கும், இவர்கள் காரை அந்த லாரியை இடிக்காமல் நிற்பதென்பது இயலாத காரியம்.

க்க்ரீச்ச்ச்ச்

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:752}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.