(Reading time: 38 - 75 minutes)

 

"ன் சம்மதத்தோட தான் நடக்குதா"

விநோதமாய் ஒரு பார்வை அவளிடம்.நொடிக்கும் குறைவான நேர யோசனை.

"ஆமாம் நான் ஆதி அத்தான லவ் பண்.... "

"போதும் டீ நிறுத்து, அதெல்லாம் நம்ப நான் ஒன்னும் அடி முட்டாள் இல்ல, உனக்கு அவன் மேல காதலா? அதும் அவன்? உனக்கே உன்ன தெரியலடீ கொஞ்ச நேரம் முன்னாடி உன் கைய பிடிச்சுட்டு நின்னனே? அப்போ பார்த்தேன் அந்த கண்ணுல ஒரு ஓரத்துல இருந்த பதட்டம் பயம் அதையும் மீறி பிரமிப்பு!! காதல்!!!.."

"அதெல்ல..."

"என்ன இல்லையா? உனக்கு தான் பொய் நடிப்பு எல்லாம் வரும் என் கனவில வர என்னோட ஸ்வேதாக்கு அதெல்லாம் தெரியாது.. அவ வாய் பேசாம விடற வார்த்தைகளையும் அவ கண்ணு அழகா அமைதியா பேசிடும் அது எனக்கே எனக்கு மட்டும் தான் புரியும் தெரியும்.. அந்த கனவில எப்படி அந்த கண்ணுல காதல வெச்சுக்கிட்டு நிப்பியோ  அதே மாதிரி தான் இப்போ இங்கேயும்.. சும்மா ஒரு பொண்ணு நடுரோட்டில கட்டி பிடிக்கிற அளவு கேவலமானவன் நான் இல்ல.."

"கனவுல மிதந்த மாதிரி இருந்தாலும் சுற்றிலும் எல்லாமே கவனிச்சேன் மழை பெய்ய தொடங்கின உடனே எல்லாரும் ஓடிட்டாங்க..அதும் இல்லாம இது ஆள் அரவம் இல்லாத சந்து..திரும்பி பாரு ஒருத்தர் கூட இல்ல.. அதுவும் இல்லாம நீ நான் கட்டிக்க போற என் மனைவி உன்ன தொட எல்லா உரிமையும் எனக்கு எப்பவுமே எனக்கு மட்டும் தான் இருக்கு..இருக்கணும்.."   

கோபத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் பின் காதல் கனிவாய் மாறி அழுத்தத்தில் முடிந்தது. குழம்பி போனாள் ஸ்வேதா. முதல் முறையாக தன் வாழ்விலே முதல் முறையாக ஆதி மேல் இருப்பது இருப்பது போல் தான் நினைப்பது வெறும் ஈடுபாடோ? காதல் இல்லையோ என ஆராய்ந்தது மனது. ஆனால் மூளை?

"ஷட் அப் வருண்.. நீ அளவுக்கு மீறி பேசுற.. நீ.. நீ சொன்ன மாதிரி எந்த உணர்ச்சியும் நான் காட்டல.. எனக்கு உன்மேல கா..காதலும் இல்ல.. நான் ஆதிய தான் மனசார விரும்பறேன்.. அவர தான் கல்யாணம் பண்ணிப்பேன்..."

அவள் தடுமாற்றத்தை பார்த்தவனுக்கு அந்த நிலையிலும் சிரிப்பு வந்தது. உள்ளூர சிறிது கொண்டான் ஆனால் அதான் பின் அவள் அறிவித்த செய்தி..!!!

"என்னடீ சொன்ன?ஆதியா? காதலா? நீ எவனையும் காதலிக்கல.. எவனும் உன் காதலுக்கு தகுதியும் இல்ல என்ன தவிர... அது வெறும் இன்பக்ஷுவேசன் தான்.. சின்ன பொண்ணு கிட்ட என்னென்னவோ சொல்லி  அதா கேட்டு இன்னும் சின்ன பிள்ளை மாதிரி தான் நடந்துக்கற.. ச்சே.. நல்ல கேட்டுக்கோ காதல் கத்திரிக்காய் நு அவன் மேல ஏதும் உனக்கு கிடையாது... அதை நீயே புரிஞ்சுக்குவ.. என்கிட்ட வந்து உன் காதல அழகான இந்த உதட்டில இருக்குற சிரிப்போட சொல்லுவ, அப்போ பாத்துகறேன்"

என்று கூறி விட்டு மின்னல் வேகத்தில் அந்த சாலையை கடந்து சென்று விட்டிருந்தான். சோர்வுடன் அந்த தங்க சங்கிலியை பார்த்தவள் எதற்கு புன்னகைத்தாள் என்பது ஆண்டவனுக்கு தான் தெரியும்!!   

ங்கு இருவருக்கும் இடையில் ஒரு போரே நடந்து முடிந்திருக்க, அங்கு ஆதி கடற் கரையில் அமர்ந்து மெளனமாக அழுது கொண்டிருந்தான்.

எப்போது மனம் அலைபாய்ந்தாலும் அது துக்கத்திலோ மகிழ்ச்சியிலோ குழப்பதிலோ.. இந்த அலைகளிடத்தில் சரண் புக வேண்டும் அவன் மனது..

நிறைய யோசனைகள் குழப்பங்கள்... இந்த மனம் தான் எவ்வளவு விசித்திரமானது.. அந்த மனதையே ஆட்டுவிக்கும் காதல்?!!! அந்த காதலையும் அவனுக்கு உணர்த்தி கண்ணாமூச்சி ஆடும் அவளின் மிதா!!!

போதும் போதும் என்னும் அளவுக்கு அவன் காதல் வாழ்வில் பிரச்சனைகளும் குழப்பங்களும் குவிந்து விட்டன.அவனுமே கூட எதிர் பார்கத ஒன்று தான். இதே கடற்கரை மணலில் அலைகளின் ஒலிக்கு ஈடாக சலசலத்த நாட்களும் ஆழ கடலின் மொழி பேசி மௌனம் காத்த நாட்களும் ஏதோ தூரத்தில் தெரியும் நட்சத்திரங்கள் போல மெலிய வெளிச்சத்தில் இருக்க இந்த பிரச்சனைகள் மட்டும் பௌர்ணமி நிலவு போல் வளர்ந்து முழுமையாக பளிச்சென சிரிக்கிறதே...!!!

இதற்கு எதாவது ஒரு முடிவு கண்டிப்பாக இருக்கும்.. ஆனால் அது நல்ல முடிவாக இருக்க வேண்டுமென எண்ணி கொண்டு வீட்டை வந்தடைந்தான்.

துவை அடித்து விட்டு பைக்கில் ஏறி பறந்தவனுக்கு, எப்போதும் இருக்கும் நிதானம் எல்லாம் காற்றில் கரைந்து தொலைந்திருந்தது. அவன் உயிருக்கு உயிரானவள் அவளிடத்திலே நிதானம் தோற்று போன பின் வேறு எதில் இருந்து தான் என்ன? இல்லாமல் போனால் என்ன?

எங்கெங்கோ வண்டியை செலுத்தி இறுதியில் வந்து நின்ற இடம் கடற்கரை..!!!!!

"நான் எப்படி என் அம்முவ அடிச்சேன், இந்த கையாள... ச்சே எவ்வளவு நாள் ஆசையா தடவி கொடுத்துருக்கேன் , சாப்பாடு ஊட்டி விட்டிருக்கேன், அழும் பொது தோல் தந்து அணைச்சுருகேன், தட்டி கொடுத்துருக்கேன்... இன்னும் எவ்வளவோ பண்ணிருக்கேன் ஆனால் அப்போ எல்லாம் என் அம்முவோட அழகான சிரிப்பும் ஆனந்த கண்ணீர் மட்டும் தான் என் மனசுல நிறைஞ்சிருக்கும்.. ஆனா இன்னைக்கு முதல் முறையா அவளை போயி கை நீட்டி.. ச்சே ரகு முட்டாள்.. நீ சுத்த முட்டாள் தான்.. அவளை விட்டுட்டு லண்டன் போனப்போ வந்த எவ்வளவு பெரிய வலிய தாங்கிடு தெம்பா இருந்தா.. அப்போ கூட  தப்பான முடிவு எடுக்கல தானே.. ஆனா இப்போ இப்படி பண்றன்னா அதற்கும் கரணம் இருக்கும் தானே.. அவசர பட்டுடியே வடிகட்டின முட்டாள்.."

என தன்னை தானே நொந்து மழையோடு  மழையாக கண்ணீர் துளிகளை கரைத்து கொண்டிருந்தவன், சுதாரித்து நிமிர்ந்து பொது கண்டது அதித்யனை..!!!

வந்த கோபத்தில் அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்க வேண்டுமென இரண்டு எட்டு எடுத்து வைத்தவன், ஏதோ உறுத்த அமைதியை அவன் முக மாற்றங்கள் தெளிவாக தெரியும் தூரத்தில் அமர்ந்து அவனை கவனிகலனான்.

புருவ முடிச்சுகள் பலத்த சிந்தனை என்பதை பறை சாற்றியது. அவனின் தோற்றமுமே ரகுவிற்குள் குழப்பங்கள் வர காரணமாய் இருந்தது.

யோசனைகளில் சஞ்சரித்தவன், முடியை அழுந்த கொதி தன் கைகுட்டையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு எழுந்து சென்றான்.

அந்த மழையிலும் அவன் முகம் கூறியது அழுதிருக்கிறான்!!!!

(அப்படா குட்டி பிளாஷ் பேக் ஓவர், ஆனா இதிலே பிரகாஷ் மட்டும் ஏன் பீல் பண்றன்னு நான் சொல்லலை.. அதை அடுத்த எபில சொல்றேன் பிரெண்ட்ஸ்... சஸ்பென்ஸ் அண்ட் கதையோட ப்ளோ முக்கியம் பாருங்க அதான்.. ஹிஹிஹி....)

ந்த பாடலை கேட்ட அனைவரும் நினைவுகள் மூழ்கி தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

டுத்த நாள் அனைவருக்கும் வழக்கமாக செல்ல, ரகுவிற்கு அது முக்கியமான நாள். அவனின் முதல் வேலையே ஆதியை சந்திப்பதாக தான் இருந்தது.

கிளம்பி அவனது வேலைகளை பார்க்கும் முன் ஆதியை செல்லில் அழைத்தான்....

மீண்டும் அதே கடற்கரையில் சந்திப்பது என முடிவு செய்து அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு இருந்தனர்.. அலை சத்தங்களுக்கு மத்தியில் இவர்களின் மௌனம்...!!!

ஆதியே துவங்கினான்...

அலிகளை பார்த்த படியே,

"என்ன ரகு பேசணும்"

பேசினான் அவன். சுற்றி வளைக்காமல் அனைத்தையும் நேருக்கு நேரே கூறினான்..

அவன் பேச பேச எதிரே இருந்தவனது முகம் பச்சோந்தி நகரும் போது நிறம் மாறுவதை போல ஒவ்வொரு வரிகளுக்கும் தக்க உணர்ச்சியினை பிரதிபலித்தது.

அதை கவனித ரகுவிற்கு ஏதோ புரிந்தது.. கொஞ்சம் மனதில் நிம்மதி கூட பரவியது எனலாம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.