(Reading time: 47 - 93 minutes)

 

வளது முகம் காட்டி கொடுத்த பதட்டம் அஸ்வத்திற்கு உவகையை தர... சீண்ட சொல்லி தூண்டிய மனதை கட்டுபடுத்தி பெரியவர்களிடம் திரும்பினான். பெரியவர்கள் இன்னமும் அந்த ஆனந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தனர். மகன் மகள்களின் வாழ்வின் முக்கிய நாளிலேயே இந்த நற்செய்தியும் கிடைத்துவிட, ரெட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது அனைவருக்கும். பிறகு சொல்லிவைத்தார் போல அன்றே பால் காய்த்து, மணமக்களுக்கு பாலும் பழமும் தந்து கதை பேசிக்கொண்டு வீட்டை சுற்றி பார்த்தனர். அனைவரும் ஒவ்வொரு பக்கம் சென்றுவிட, தனியே வெளி வரண்டாவை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த மனைவியிடம் சென்றான் அஸ்வத்.

“பிடிச்சிருக்கா?”

அவனது உரிமை கலந்த பருகும் பார்வை அவளது கன்னங்கள் சிவக்க வேடிக்கை பார்ப்பது போல் முகத்தை திரும்பிக்கொண்டு “ரொம்ப அழகா இருக்கு, ரொம்ப பிடிச்சிருக்கு...” என்றாள். அவர்கள் பேசிக்கொண்டது வீட்டை மட்டும் பத்தி அல்ல, அவர்களது இனிமையான வாழ்க்கை துவக்கத்தையும் தான்.

“உனக்காக தான் இந்த surprise... நீ ஆபீஸ் வரும் போதெல்லாம் நான் மதியம் காணாம போனதும் ரொம்ப தவிப்போட எங்க போனேன்னு கேட்டல்ல அப்போலாம் இந்த வீட்டுக்கு வந்ததும் நம்ம ரூம்ல இருக்க வரண்டால உட்காந்திட்டு உன்ன இருக்கமா.... உன் பக்கத்துல உட்காந்திகிட்டு இதுக்கு தான்டி காணாம போனேன்னு சொல்லனும்னு நினைச்சுப்பேன்” என்று மனதில் எழுந்த மகிழ்ச்சியோடு கிளர்ச்சியை ஒதுக்கி அவளுக்காக மேலோட்டமாக கூறினான் அஸ்வத்.

அவனது வார்த்தைகளையெல்லாம் உள்வாங்கிய அனுவுக்கோ, அந்த உன்னை இருக்கமா... என்ற வார்த்தையிலேயே மனம் சுற்றிவர, சொல்லரியாத கிளர்ச்சி எழும்ப தானாக கன்னங்கள் சூடேறியது... முன்பே அவளது அழகும், கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறும் அவனை அவள் புறம் இழுத்துக்கொண்டு இருக்க, அவள் மேலும் வெட்கப்படவும் “ஏண்டி என்னை சோதிக்குற” என்று உருகி வலிந்தவாறு கூறினான். அவள் வெறும் புன்னகை மட்டும் பதிலாக தரவும், “நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா நான் நைட் வரைக்கும் வெயிட் பண்ணவே மாட்டேன்” என்றபடி அவள் அருகே நெருங்கவும் தன் கை வைத்து அவனை தள்ளினாள். அதற்குள் அன்பு மருமகன் விபுன் அவளிடம் வந்துவிட, அவனை தூக்கிவைத்துக்கொண்டாள் அனு. “எனக்கு எதிரி வேற எங்கேயும் இல்லைடா நீ தான்” என்று புரியாத சின்ன கண்ணனிடம் சொல்லிவிட்டு, “நீ இன்னும் நம்ம ரூம் பார்க்கலையே... வா கூட்டிட்டு போறேன்..” என்று அழைத்து சென்றான். அவன் அழைத்து செல்ல, அனு மனதில் நினைத்துக்கொண்டாள் பல ஆசையில் இருக்க போல அஷ்குட்டி இருடா நல்லா மாட்டின இன்னைக்கு என்று எண்ணி சிரித்துக்கொண்டு தொடர்ந்தாள்.

அஸ்வத் அனு,விபுனை அறைக்கு கூட்டிசெல்ல அங்கு நிருவோ கெஞ்சிக்கொண்டிருந்தான். “அக்கா இதெல்லாம் அநியாயம் வீட்டை தானே சுத்தி காட்ட போறேன் விடுங்களேன்...”

“ம்ம்ம்ம் ஹ்ம்ம் உன்னையெல்லாம் நம்ப முடியாது... நைட் சுத்தி காட்டு...”

“நீங்கெல்லாம் போய் பார்த்திங்கல்ல தேஜு பார்க்க வேணாமா?”

“அவ்வளவு தானே நானே கூட்டி போய் காட்டுறேன்...”

“முடியாது நான் தான் காட்டுவேன்...”

“சரி அப்போ நானும் வரேன்...”

“ஐயோ.... மாமா என்ன மாமா இது அக்காவை கொஞ்சம் control பண்ணுங்க...”

அவராவது என்னை ஏதாவது சொல்லுறதாவது என்று அலட்சியமாக அர்ச்சனா கூறினாள். நவீனும் ஒன்னும் பண்ண முடியாது என்பது போல் முகத்தை வைத்துகொள்ள, வேறுவழி இன்றி மௌனமானான் நிரு.

“யாரை வேணும்னாலும் நம்பலாம்டா ஆனால் ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்குற அமைதியான பசங்களை மட்டும் நம்ப கூடாது... பொறு பொறு நைட் வரைக்கும் அமைதியா இரு..” என்று அர்ச்சனா கிண்டலாக கூறவும், அசடு வலிந்தான் நிரஞ்ஜன்.         

பெண்கள் அனைவரும் ஒன்றாக இருக்க முடியாமல் அடுத்தடுத்த வீட்டில் இருந்தமையால் கிண்டல் கொஞ்சம் கம்மியாக தான் இருந்தது. போனால் போகிறது என்று அண்ணிகளும் விட்டுவிட, தானாங்க எழுந்த வெட்கத்தை வெளியே காட்டிகொள்ளாமல் அவரவர் அறைக்கு சென்றனர் மணப்பெண்கள்...

வண்ண வண்ண நிறத்தில் ரோஜா பூக்கள் வாங்கி தோரணம் போல அலங்கரித்து பிரகாசமாய் இருந்தது அறை. மெல்லிய விளக்கொளிக்கு ஏற்றார் போல பாந்தமான சந்தன நிறத்தில் உள்ளே நுழைந்தாள் தேஜு. உள்ளே நுழையும் வரை அமைதியாக வந்த தேஜு வந்ததும் ஆவலோடு காத்திருந்த நிரஞ்ஜனின் அருகில் சென்று அமர்ந்தாள். நிருவும் ஒன்றும் கூறாமல் இருக்க, தேஜு கண்களால் செய்தி கூறினாள். “ம்ம்ம்ம் பண்ணுங்க...”

“தேஜு ப்ளீஸ்டா... இன்னைக்கு ஒரு நாலாவது லீவ் விட கூடாதா?”

“ம்ம்ம்ம் ஹ்ம்ம்... பண்ணுங்க எழுந்திரிங்க எழுந்திரிங்க” என்றதும் கதவு ஒழுங்காக அடைக்க பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துகொண்டு அவளுக்கு முன்னே சிறிது இடைவெளி விட்டு நின்றான்.

“தேஜு துவங்கினாள் 1....2....3....” என்று கணக்கிட, நிரு தோப்புகரணம் போட்டான்.

அவன் புலம்பிக்கொண்டே போடுவதை பார்த்து தேஜுவிற்கு சிரிப்பாக இருந்தது. அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் தினமும் 20 தோப்புகரணம் போட வேண்டும் என்பதுதான் தேஜுவின் நிபந்தனை முதலில் லேசாக நினைத்த நிரு, அவள் மறக்காமல் கேட்கவும் பொருமியவாறே தோப்புகரணம் போட்டான். கலைத்து முடித்து அருகில் அமர்ந்தவனை காதலோடு நோக்கினாள் தேஜு.

“போடி நீ ஒன்னும் அப்படி பார்க்க வேணா... நல்லா பெண்டு நிமித்திற...”

“அடடா என் செல்ல மாமா சண்ட போட்டதுக்கு தானே நான் தண்டனை தரேன்... சரி மருந்து போட்டிறலாம்” என்று அவன் இரு கன்னகளிலும் மாறி மாறி இதழ் பதித்தாள். அவள் செய்கையில் மனம் குளிர்ந்தாலும் குறும்பு மேலோங்க “என்ன டாக்டர் அம்மா உங்களுக்கு மருந்து போடவே தெரியலையே...”

“அப்படியா? வேற எப்படிங்க போடணும்” என்று அவளும் பதிலுக்கு வினவ அவள் இதழோடு தன் இதழை மென்மையாக பதித்தவன் உலகத்தையே மறந்து போனனர். (அதுக்கு அப்பறம் என்ன லைட் ஆப் சென்சர் கட் தான் வாங்க நம்ம நெக்ஸ்ட் ஜோடி பார்க்கலாம்)

“அடம் பண்ண கூடாதுடா செல்லம்ல... நீ தூங்குவியாம் காலைல நீ முழிக்கும் போது அத்தை உன் பக்கத்தில இருப்பா சரியா” என்று தன் செல்ல மகனை கொஞ்சிக்கொண்டிருந்தாள் அஹல்யா...

“ம்ம்ம்ம் ஹ்ம்ம் முடியாது எப்பவுமே அத்தை என்கூட தானே படுப்பாங்க”

“அது அப்போடா இனிமே அத்தை மாமா கூடதான் படுப்பா” என்று நடுஹாலில் அமர்ந்து சமாதானம் செய்துக்கொண்டிருந்தனர்.

“இதுக்கு தான் அஹல் அவனை evening தூங்க விடாதேன்னு சொன்னேன்...”

“நான் இப்படி அடம் பிடிப்பான்னு எதிர்பார்களைங்க” என்று அர்ஜுனுக்கு பதில் தந்துக்கொண்டிருந்தாள். அர்ஜுனுக்கு பாவமாக கன்னத்தில் கைவைத்து கவலையாக அமர்ந்திருக்கும் அஸ்வத்தை பார்க்க தான் சிரிப்பாக இருந்தது. “நீ போ அனு... நாங்க பார்த்துக்குறோம்” என்று கூறியும் நகராமல் நின்றுகொண்டிருந்தாள் அனு.

“என்ன அனு?”

“இல்ல அம்மா விபு என்கூடவே படுத்துகட்டும் அவன் தூங்குனதும் வந்து அண்ணிகிட்ட கொடுக்குறேனே” என்று கூறவும் பாயிண்ட் பிடித்து கொண்டான் விபுன்.

“ஆமா நான் அத்தை கூடதான் படுப்பேன்” என்று ஒரே அடம்... அலுத்து போய் அஸ்வத் அலங்கரித்த மெத்தையில் போய் படுத்துக்கொள்ள என்ன தான் சமாதானம் சொல்லியும் கேட்காத விபுனை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அனு.

இருவருக்கும் நடுவில் அவனை படுக்க வைத்து கதை சொல்ல அவள் சொல்வதையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் அஸ்வத். இதற்கிடையில் விபுன் வேறு “எதுக்கு அத்தை மெத்தைல பூ போட்டுருக்காங்க” என்றெல்லாம் கேட்க கடுப்பில் இருந்த அஸ்வத் “ம்ம்ம்ம் நீ தூங்க தான்டா மருமகனே...” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிகொண்டான்.

அவன் புலம்புவதை பார்த்தவளுக்கு சிறப்பாக இருக்க “என் செல்லகுட்டி” என்று அவனை கொஞ்சுவது போல விபுனுக்கு முத்ததை தந்து அஸ்வத்தை இன்னமும் கடுப்பேற்றினாள். ஒருவழியாக விபுன் தூங்கிவிட அவனை அஹல்யாவிடம் தந்துவிட்டு அறைக்கு வர, அஸ்வத் எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்தாள். அடடா என்ன ஒரு தவிப்பு என்று குறும்பு மேலோங்க அவனிடம் எதுவும் பேசாமல் சுற்றிவந்து அவள் இடத்தில் படுக்க சென்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.