(Reading time: 12 - 24 minutes)

 

"தெரியாது..."

"சரிண்ணா! நான் விசாரிக்கிறேன்."-அப்போது,

"ஒரு நிமிஷம்!"-பார்வதி.சிவாவும்,அர்ஜீனும் திரும்பினர்.

"நான் உங்கக்கிட்ட தனியா பேசணும்!"

"பரவாயில்லை இப்படியே சொல்லலாம்..இவன் எனக்கு முக்கியமானவன் தான்!"

"நான் உங்க இரண்டுப் பேர்கிட்ட தான் தனியா பேசணும்னு சொன்னேன்."

".............."

"ஏங்க அப்படி நடந்துக்கிட்டிங்க?"

"............."

"ஷைரந்தரி தானே வெளியே கூட்டிட்டு போக சொன்னாங்க?ஏன் அப்படி கடுமையா நடந்துக்கிட்டீங்க?"

"அண்ணி...ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க..."-அர்ஜீன்.

"அர்ஜீன்...சும்மா இரு!"

"ஏன்?அவரை தடுக்கிறீங்க?யுதீஷ் அப்படி என்ன தான் பண்ணான்?"-அப்போது, பார்வதி என்றழைத்தப் படியே யுதீஷ்ட்ரன் வந்தான்.அவனுக்கு,ஏதோ அந்நிலை புரிந்தது.

"நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?எதாவது கேட்க சொன்னேனா?"

".........."

"ஸாரி...அவ சின்ன பொண்ணு,ஏதோ தெரியாம பேசிட்டா! மனசுல வச்சிக்காதே!"-என்றான் சிவாவிடம்.

"அண்ணா?"

"பேசாம வா!"

"நில்லுடா!"-சிவாவின் குரல் அவனை நிறுத்தியது.

"நான் உன்கிட்ட கடுமையா பேச கூடாதா?"

".............."

"கடுமையா நடந்துக்க கூடாதா?"

"..........."-அவர்களின் சம்பாஷனை பார்வதிக்கும்,அர்ஜீனுக்கும் விளங்க வில்லை.

"பதில் சொல்லுடா தடியா?"

"யாரு நான் தடியனா?நீதான்டா...ஃப்ராடு!"

"உன் தங்கச்சி என்னை இப்படி கேள்விக் கேட்கிறா?பொறுமையா வந்து வா போகலாம்னு கூட்டிட்டு போற?இப்படிலாம் கூடவா பழி வாங்குவ?"

"இப்போ என்ன சண்டை போடணும்னு சொல்றீயா?நான் ரெடி!"

"நானும் ரெடி தான் மச்சான்!"-ஒரே நேரத்தில் சிவாவும்,யுதீஷ்ட்ரனும் சிரித்து விட்டனர்.

"எங்கடா நடக்குது இங்கே?"-அர்ஜீன்.

"ஏன்?"-சிவா.

"இரண்டு பேரும்?"

"க்ளோஸ் ப்ரண்டஸ்..."-அதிர்ச்சியின் உச்சத்திற்கே பார்வதியும்,அர்ஜீனும் சென்றுவிட்டனர்.

"எப்படி?"

"அமெரிக்கா போகறதுக்கு முன்னாடி,ரிலேஷன்ஸ்ஸா இருந்தோம்.அது, உங்களுக்கே தெரியும்.இவன்,அமெரிக்காவுல வாஷிங்டன்ல தானே எம்.எஸ்.பண்ணான்.அப்போ,க்ளோஸ் ஆகிட்டோம்!"

"ஷைரு தெரியாம எப்படி?"

"நாங்க ஃப்ரண்ட்ஸா இருக்கும் போது,அம்மூ அப்பாக்கூட ஆஸ்திரேலியா போயிருந்தா!"

"ஃப்ரண்ட்ஸ்னு சொன்னீங்க...அப்பறம் எப்படி முட்டிக்கிச்சு?"

"அதுக்கு காரணம் இவன் தங்கச்சி தான்!"-யுதீஷ்.

"என்ன?"

"ஆமா...எப்போ பார்த்தாலும் அவ பேரையே படிச்சிட்டு இருப்பான் எனக்கு கோபம் வந்திடும்.ஒரு நாள் சண்டை பெரிசாயிடுச்சி! பிரிஞ்சாச்சு!மூணு வருஷம் கழிச்சி அதே ஷைரந்தரி புண்ணியத்துல மறுபடியும் பார்த்துட்டோம்.அவ மட்டும் வரலைன்னா இந்த ஃப்ராடு வந்திருக்க மாட்டான்."

"அடப்பாவிகளா.... ஒண்ணுமே இல்லாத காரணத்துக்கு ஒரு சண்டையை போட்டு,மூணு வருஷமா பகை வச்சிட்டு,இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறேங்களே உங்களை..."-என்று பேசிவிட்டு அம்மூ என்று கத்தினான் அர்ஜீன்.அதைக் கேட்ட சிவா,

"டேய்! அவளே இப்போ தான் ஒரு ருத்ர தாண்டவத்தை ஆடிட்டு போனா,மறுபடியும் ஆட வச்சிடுவ போல இருக்கே!"-என்றான் அவன் வாயை மூடியவாறு!!!

நடந்தவை அனைத்தையும் புரிந்தும் புரியாதவாறு பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி.

"இப்போ புரியுதா பாரு??"-யுதீஷ்.பார்வதி அமைதியாக சிவாவை பார்த்தாள்.அவன், கண்களில் குறும்பு மின்ன புன்னகைத்தான்.அவள் முகம் சிவந்தது.தலைகுனிந்தவாரே அங்கிருந்து ஓடிவிட்டாள். நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த யுதீஷ்.

"டேய்! பார்வையை மாற்றுடா! நான் இங்கே இருக்கேன்!"-சிவா,அழகாய் ஒரு சிரிப்பை விடுத்தான்.

"கண்றாவி...இதெல்லாம் பார்க்கணும்னு என் விதி!"-யுதீஷ்.

"போதும்...நிறுத்தலாம்!"-சிவா.

ஷைரந்தரி தோட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு சிவாவின் போக்கு புலப்படவில்லை. அவன் எதையோ மறைக்கின்றான்.எதை என்று தெரியவில்லை.

"அம்மூ?"-சிவாவின் குரல்.

"............"-மௌனம் சாதித்தாள் ஷைரந்தரி.

"என்னாச்சு குட்டிம்மா பனியில உட்கார்ந்திருக்க?"-என்றான் அவள் தலையை வருடியவாறு!!

அவள்,அவன் கைகளை தட்டிவிட்டாள்.

"ம்...புரிஞ்சிடுச்சி! என் செல்லத்துக்கு என் மேல கோபம்."

"..........."

"அண்ணன் என்ன தப்பு பண்ணேன்?"

"............"

"பேச மாட்டியா?"

".............."

"குட்டிம்மா?"

"என்ன இப்போ?"

"ஓ...ரொம்ப சூடா இருக்கியே!!!நான் என்ன பண்ணேன்?"

"நீ மாறிட்ட...இப்போலாம் நான் யார் கூட பேசினாலும் உனக்கு பிடிக்கலை.என்னை சந்தேகப்படுறா மாதிரியே பண்ற!"-சரமாரியாக குற்றங்களை சிவா மீது அடுக்கினாள் ஷைரந்தரி.

"ஏ...சந்தேகமா?உன் மேலையா?"

"ம்...."-சிவா,அவள் கரங்களை தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டான்.

"அம்மூ...நான் இதுவரைக்கும் அம்மா இல்லைன்னு ஒரு முறை கூட கவலைப்பட்டத்தில்லை.ஏன்,நிறைய நேரம் அவங்க ஞாபகம் கூட வந்ததில்லை. காரணம் நீ!!!அம்மாவை உன் மூலமாக தான் பார்த்துட்டு இருக்கேன். என்னை பொறுத்த வரைக்கும் அவங்க சாகலை.இதோ,என்னை திட்டிக்கிட்டு என் முன்னாடி தான் உட்கார்ந்திருக்காங்க... எந்த மகனாவது,சொந்த அம்மாவை சந்தேகப்படுவானா?நீ யார் கூட வேணும்னா,பேசலாம் வெளியே போகலாம் ஆனா,என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிடு கொஞ்ச நாளுக்கு!"

"ஸாரி சிவா!"

"டேய்...சும்மா இரு!"-அவன் தன் தங்கையை தோளில் சாய்த்து கொண்டான்.

"குளிர் அடிக்குது பார்!!!உள்ளே வா!"

"ம்..."-ஷைரந்தரியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

தூங்குவதற்காக அவள் அறையில் சென்று அவளுக்கு போர்த்திவிட்டு திரும்புகையில்,

"சிவா!"என்றாள் ஷைரந்தரி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.