(Reading time: 7 - 14 minutes)

"குவா? அவன் எதுக்கு?"

"அவனும் மதுவும் தான் க்ளோஸ் ஆச்சே சோ அவன் கிட்ட இருந்து விஷயத்த கறந்திடலாம்"

"முடியுமா?"

"அதெல்லாம் முடியும்.."

"அப்போ சரி, நானும் வருணுக்கு போன் பண்ணி வர சொல்றேன்"

"அவன் எதுக்கு இப்போ?"

"ஸ்வேதா சைட் என்ன நடக்குதுன்னு தெரியனும்ல"

"ம்ம்ம் ஆமா"

தங்களின் திட்டத்தை நிறைவேற்ற இருவரும் மும்முரமாய் செயல்பட, அது தெரியாமல் மாட்டி கொள்ள வந்தனர் ரகுவும் வருணும்!!

ப்ரிஷனுடன் அமர்ந்து கார்டூன் பார்கிறேன் பேர்வழி என அவள் நினுவுகளில் மூழ்கி இருந்தாள் மது. அவன் மேகாவை ஒரு வலி பண்ணி கொண்டு இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் போருக்க முடியாமல்,மதுவை பூலோகத்திற்கு அழைத்து வந்து அவளிடம் வனை விட்டு விட்டு காபி போடா சென்று விட்டாள்.

அந்த நேரம் ஸ்வேதா மதுவிற்கு கால் செய்தாள்,

"ஹாய் மது"

"ஹலோ ஸ்வேதா"

"என்ன பண்ற நீ? பிஸியா?"

"இல்ல இல்ல அண்ணி எங்கயோ வெளில போயிருக்காங்க அதான் ப்ரிஷன பார்த்துகிட்டு வீட்ல இருக்கேன்"

"ஒ" தாழ்ந்து ஒலித்தது குரல்.

"என்ன விஷயம் ஸ்வேதா"

கையில் காபி கப்புடன் வந்த மேகா யாரென சைகையில் வினவ,அவளை பார்த்து கொண்டே

" ஸ்வேதா கேன் யூ ஹியர் மீ" என்றாள் மது. 'ஓ' என உதடு குவித்து சத்தம் வராமல் செய்தவள் போனை வாங்க வரும் போது,

"உங்கிட்ட கொஞ்சம் தனிய பேசணும் மது" என ஸ்வேதா சொன்னாள், உடனே மேகாவிடம் 'பொறு' என்பது போல கையை காண்பித்து விட்டு

"சொல்லு டா" என்றாள்.

"அது நான்.. வந்து.. மது நேர்ல பேசலாமா?"

"ஓ பேசலாமே"

"ம்ம்ம் இப்போவே"

"இப்போவா?"

"ஏன் வர முடியாதா?" மீண்டும் குரலில் சோகம்.

"இல்ல இல்ல அப்படி இல்ல.. வரேன் சொல்லு எங்க வரணும்?"

"ம்ம்ம், ஏதாவது அமைதியான இடத்துக்கு போலாம்ன்னு தோணுது"

"ஓ கோவில் போலாமா அப்போ"

"வடபழனி முருகன் கோவில்?"

"வடபழனி முருகன் கோவில்?"

என இருவரும் ஒன்றாக கூறி சிரித்து கொண்டனர்.

"சரி நான் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடறேன்"

"இல்லடா நீ கிளம்பி ரிஉ நன் வந்து உன்ன பிக்கப் பண்ணிகறேன்"

"ஓகே ஸ்வேதா பை"

"பை"

போனை வைத்து விட்டு எழுந்தவள், தயாராகி அன்னையிடம் சொல்லி விட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பினாள். ஆயிரம் ஆயிரம் அலைகளை உணர்சிகள் மனதில். அதை ஒதுக்கி வைத்து விட்டு தீவிரமாக யோசித்தாள்.

மதுவிடம் பேசி தெளிந்து கொள்ள வேண்டியது இரண்டு. ஒன்று பிரகாஷை பற்றி! இன்னொன்று ஆதியை பற்றி!

ஸ்வேதாவிற்காக காத்திருந்த மது மனத்திலும் குழப்ப புயல் மையம் கொண்டிருந்தது. சிறு உறுத்தல் பெரிதாய் உருவெடுத்து சோர்வுற செய்தது. அன்று ஆத வீட்டில் அதன் பின் அவள் ஸ்வேதா முகத்தை பார்க்கவே இல்லை. இந்த ஐரண்டு நாட்களும் அவள் பட்ட பாடு.

நியாயமாக பார்த்தால் ஆதிக்கு தான் இந்த உறுத்தல் இருக்க வேண்டும் ஸ்வேதா அவனுக்கு மனைவியாக போகிறவள். அனால் அன்று அவன் நடந்து கொண்டதுக்காக தானும் ஒரு கரணம் என்று மது தவித்தாள்.

ஸ்வேதா வந்தவுடன் மேகாவிடம் ப்ரிஷனை ஒப்படைத்து விட்டு, அவளுடன் காரில் கோவில் செல்லும் வரை பொதுவான விஷயங்களையே பேசினர்.

கோவிலை அடைந்து, பூஜை பொருட்கள் வாங்கி கொண்டு சாமி தரிசனம் முடித்து பிரகாரத்தை சுற்றி வந்து ஒரு இடத்தில அமரும் வரை இருவரும் மௌனமாக இருந்தனர்.

அவரவர் பாடு அவருக்கு. இருவரும் அந்த முருகனிடம் தங்கள் வேண்டுதலை வைத்து விட்டு சண்டையும் சாரா மாரியாக போட்டனர்.

ஸ்வேதாவிற்கு தான் அன்று கோவிலில் வருணை பார்த்த நியாபகங்கள் வந்து சென்றது என்றால்  மதுவிற்கும் கூட அப்படி ஒரு நிகழ்வு நினைவில் வந்தது.

அதையே அசை போட்டவாறு அமைதியாக இருந்தாள். பின் மெல்ல சுதாரித்து கொண்டு ஸ்வேதாவை பார்த்தாள். அவளும் இவளை பார்த்து புன்னகையுடன்,

"நான் ஒன்னு கேட்பேன் உண்மையா சொல்றிங்கள மது?" என பீடிகையுடன் ஆரம்பித்தாள்.

"ம்ம் கேளு.. என்ன விஷயம்?"

"நீங்க.. நீங்க ஆதியை தான லவ் பண்றிங்க"

"வாட்?!!!!!"

காதல் பெருகும்… 

Episode # 12

Episode # 14


{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.