(Reading time: 8 - 16 minutes)

வர்கள்,கூறியதை கேட்டுக் கொண்டிருந்தவனின் கண்களில்,அவளோடு அன்றிருந்து வாழ்க்கை மின்னியது.

அன்றும்...இதே போன்ற ஒரு கடற்கரையில் அவர்கள் இருந்த போது,

இதே போல இரு பெண்கள்...

"பாருடி! பையன் எப்படி இருக்கான்?அய்யோ!"

"ஏ...பக்கத்துல,பார்...அது அவன் லவ்வர்னு நினைக்கிறேன்!"

"கொடுத்து வச்சவ...ஹீரோ மாதிரி ஆள் கிடைச்சிருக்கு! நம்மளுக்கு தான் பக்கியம் இல்லை!"-இதை கேட்டுக் கொண்டிருந்த அவளுக்கு கோபம் தலைக்கேறியது. நேராக எழுந்துச் சென்று கேட்டே விட்டாள்.

"எக்ஸ்யூஸ்மீ! நீங்க யாரை கமண்ட் அடிக்கிறீங்க?"

"ஏன்?அவனை தான்!"

"அவன்,இவன்னு பேசாதே!"

"நீ என்ன அவன் லவ்வர் தானே! இதுக்கே இப்படி கொதிக்கிற??"

"நான் அவர் லவ்வர் இல்லை.அவரோட,வைப்!"

"வைப்பா?"

"ஆமா...இதுக்கு மேல இது மாதிரி கமண்ட் அடாச்சா! மரியாதை கெட்டுவிடும்!போய்...வேற ஆளை பார்த்துக்கோ போ!"-அவளின் பதிலுக்கு அமைதியாய் சென்று விட்டனர்.

"ஏன்டி! பாவம்...முகமே மாறிடுச்சு! ஏன்,அந்த பொண்ணை இப்படி திட்டுற?"

"அப்போ...என் முன்னாடியே,உன்னை அப்படி வர்ணிப்பா...நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா?"(இங்கே... என்னய்யா எல்லாம் தலைக்கீழா நடக்குது,என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்குது!)

"பையன் பார்க்கறது ஸ்மார்ட்டா இருந்தா, பார்க்கறது தப்பில்லைம்மா!"

"அப்போ...போ! நீ அவக்கூடயே போ! நான் இருக்கறது உனக்கு தொந்தரவா இருக்குல்ல?போ! நீ கடைசி வரைக்கும் பிரம்மச்சாரி தான்!"

"ஏ...லூசு! சாபமா தராளே! அம்மா தாயே! தெரியாம சொல்லிட்டேன்... மன்னிச்சிடும்மா!"

"ஒண்ணும் வேணாம்! நான் போறேன் !"-ரஞ்சித்,அவளை இழுத்து அவள்

கன்னத்தில் முத்தமிட்டு,

"என் செல்ல பொண்டாட்டி இல்லை!"

"இல்லை...."

"நீ கோபப்படும் போது கூட பயங்கர அழகா இருக்கியேடி!"

"ரொம்ப...ஐஸ் வைக்காதே!"

"டார்லிங்...ப்ளீஸ்...சிரி! பார்ப்போம்!"

"ஹீ...போதுமா?"

"போடி!வெறுப்பேத்தாதே!"

"சரி...சரி..."-என்றப்படி அழகாய் அவள் சிரித்தாள்.

அதை அப்படியே பார்த்தப்படி   அமர்ந்திருந்தான் ரஞ்சித்.

"என்ன அப்படி பார்க்கிற?"

"வாபஸ் வாங்கிக்கோயேன்!"

"என்னது?"

"அந்த பிரம்மச்சரிய சாபத்தை!"

"ச்சீ...போடா!"-மனம் மீண்டும் கனத்தது.

எங்கு சென்றாலும் சூறைக் காற்றென அவளின் ஞாபகம் இம்சிக்கின்றது.

வீட்டிற்கு கார்த்திக்கா வர இருக்கிறாள்...அவள் எதற்காக வருகிறாள் என்று தெரியாமல் இல்லை...

வீட்டில் எப்படி கூறுவேன்???நான் திருமணம் ஆனவன் என்று?????

கூறினால்....

என்னவாகும்????

சிறிது காலம் எங்காவது வெளியூர் சென்று வந்தால் இலகுவாக இருக்கும் என்று தோன்றியது...அவனுக்கு!!!!

ன்னங்க...."

"ம்..."

"உங்கப் பொண்ணு கோயம்புத்தூர் வந்திருக்காளாம்!"

"என்னது?"

"ஆமாங்க...நம்ம பிரபு தான் சொன்னான்!"-பிரபாகரன் திரும்பி,தன் தங்கை மகனை பார்த்தார்.

"ஆமா...மாமா! நிலா வந்திருக்கா!"

"எதுக்கு?"

"தெரியலை மாமா!"-அவர்,எழுந்து சென்றார்.

"நான் அவளை பார்க்கணும்.வரசொல்லு!"

"சரிங்க மாமா!"-அவர் சென்றவுடன்,

"அத்தை!"

"கவலைப்படாதே!அவருக்கு பொண்ணு மேல எல்லாம் பாசம் பொங்காது...அவளும்,அவ சொத்தும் உனக்கு தான்!"-அவனின் இதழ்களில் ஒரு மாய புன்னகை தோன்றியது.

நிலா! நிலா!நிலா!நிலா!"

"டேய்! ஏன்டா இப்படி கத்துற?"

"அதை விடுடி!ஒரு முக்கியமான விஷயம்!"

"என்ன?"

"மாமா...வர போறாரு!"

"எப்போ?"

"நீ சரின்னு சொன்னாதான்!"

"நான் சொன்னாவா?"

"ஆமா...! செம்ம ஸ்மார்ட்டா இருக்காரு தெரியுமா?"

"ஏன்டா...நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து பார்த்த முகம் தானேடா!"

"எது?நீ எந்த மாமாவை சொல்ற?"

"நீ எந்த மாமாவை சொல்ற?"

"நான் என் மாமாவை சொன்னேன்!"

"அப்போ,எனக்கு மட்டும் என்ன முறை வருமாம்?"

"உனக்கு மாமாவா?ஆமா...ஆமா...ஒருவகையில மாமா தான்!"

"என்னடா உளர்ற?"

"இரு..இரு...முதல்ல இருந்து வருவோம்!"

"அய்யா சாமி! என்ன நடந்ததுன்னு சொல்லு ராசா!"

"அப்படிக் கேளு...வீட்டில உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.