(Reading time: 12 - 24 minutes)

 

பின்னே பார்க்காமலே கல்யாணத்துக்கு சம்மதிச்சது மட்டுமில்லாம, கல்யாணத்துக்கு முன்ன பொண்ணும் மாப்பிள்ளையும் பேச கூடாதுங்கிறது அவங்க வீட்டு பழக்கமாம் அதை இம்மி பிசகாம கடைபிடிச்சானே.

இந்தா கல்யாணமும் வந்தாச்சு..

இவளால முடிஞ்ச வரைக்கும் அந்த கவின் வீட்ல யார் மொபைல் நம்பராவது கிடைக்குமான்னு துருவி பார்த்துட்டா ...ஆனா நோ யூஸ்.

இந்த திமிர் பிடிச்ச கவினுக்கு பொண்ணுங்கள மதிக்க கத்து கொடுக்கத்தான் கடவுளே தன்ன இந்த நிலையில நிறுத்தி இருகார்னு தோணிட்டு மிர்னிக்கு...அதான் எம்.எம்.. தன் தீர்ப்பை நிறைவேற்ற கிளம்பியாச்சு.

நறுக்குன்னு நாலு கேள்வியாவது அந்த கவினை சபையில வச்சு கேட்கனும்...எல்லார் முன்னாலயும் எனக்கு இவனை கல்யாணம் செய்ய பிடிக்கலைனு மூக்கை உடைக்கிற மாதிரி  சொல்லிட்டு, அப்படியே கெத்தா திரும்பி வரனும்...அப்பத்தான் அவன் திருந்துவான்...பாவி இப்படி என்ன வீட்ட...

“நீங்க எனக்கு ஒரு சின்ன உதவி செய்யமுடியுமா....?”

ரியர் வியூவில் இவள் முகம் பார்த்து தன்மையாக கேட்டான் வியன். நடப்பு உலகிற்கு திரும்பி வந்தாள் மிர்னா.

டு தானா வந்து தலைய குடுக்குதோ? மிர்னா மனம் மத்தளம் அடிக்கத் தொடங்க “சொல்லுங்க...”என்றாள் எதையும் வெளிகாட்டாதபடி.

“கொஞ்சம் பொறுமையா கேட்கனும்....” அவன் பீடிகை பலப்பட

ஹையா! நிஜமாவே எதோ நல்ல நியூஸ் வரப்போகுது.. என வானிலை அறிகை வாசித்தது அவள் இதயம்.

அழுத்தமாக தன் பார்வையை மாற்றினாள். கவனிக்கிறாளாம்.

“கவின் எதுக்குமே டென்ஷனாகாத டைப்....” வியன் தொடங்கினான்.

ஓ! சார் அடுத்தவங்களை மட்டும்தான் டென்ஷனாக்குவாராமா....? இன்னைக்கு இருக்குடா கவின் உனக்கு....மைன்ட் வாய்ஸில் அவள் சபதமேற்க

வெறும் “ஓ”.மட்டும் ஒலிவடிவம் பெற்றது.

“நானும் என்னவெல்லாமோ டிரை பண்ணிட்டேன் அவன் அசைஞ்சு கொடுத்ததே இல்ல...” அவன் தொடர

“ம்...”  அதையும் தான் பார்ப்போமே! யார்ட்ட? மிர்னாவா கொக்கா? இவள் மனம் கொக்கரித்தது.

“நாளையிலிருந்து அவன் மேரிட் மேன்....நான் எதையும் டிரை பண்ண கூடாது...பண்ணவும் மாட்டேன்...பட் இன்னைக்கு ஒரு நாள்.......” ரியர்வியூ வழியாக இவள் உணர்வை அளவிட முயன்றான்.

பல் தெரியாத புன்னகையை அவனுக்கு காண்பித்தாள்.

பில்டப் போதும் அம்பி... ஸ்பில் த பீன்... நச்சு பிச்சுனு நாலு வார்த்தை நல்லதா சொல்லு பிகே...இவள் மனம் எதிர் பார்ப்பில் எகிறி குதித்தது.

“இன்னைக்கு ஃபைனலா ஒரு தடவை ட்ரை பண்ணலாம்னு நினைக்கேன்....”

ஹை ஜாலி...ஜாலி... என்ட்ட ஆயிரம் ஐடியா இருக்கு...அதுல எது உனக்கு பிடிக்குதோ அதை அப்படியே வச்சுகோ....நோ பேட்டண்ட் ரைட் இஷ்யூஸ்....இப்போ நாம ப்ரண்ட்ஸ்...

இவள் மனதிற்குள் பரபரக்க அவனோ “ஒரு ஒன் ஆர் டூ அவர்ஸ்...... வெட்டிங் வென்யூக்கு...... லேட்டா போகலாம்....அவன் கண்டிப்பா டென்ஷனாயிடுவான்னு நினைக்கேன்...மொபைல வீட்டில் வச்சுட்டு வந்திட்டேன்....நீங்களும் மொபைல ஆஃப் செய்துட்டீங்கன்னா..” தயங்கி நிறுத்தினான்.

போடா இவனே...இவ்ளவுதானா...நெஜமாவே நீ ஒரு கெக்கேபிக்கே தான். எம் எம் ரேஞ்சுக்கு உன் கூட  ஃப்ரண்ட்ஷிப் நோ வே...கட்...கட்...கட்....ஒரு ஹாஃப் டேன்னு திட்டம் போட்டன்னா கூட...எனக்கு ப்ரயோஜனமா இருக்கும்...இது என்ன இது....காக்க கடி கடிச்சு கொடுத்த ஜெம்ஸ் மிட்டாய் மாதிரி... நப்பி நாகப்பன்....கஞ்சன் கருத்தபாண்டி....சரி போய் தொலை ஒரு மணி நேரம் உன் அண்ணனுக்கு நிம்மதிய நீட்டி கொடுத்துருக்கன்னு நினைச்சுகிடுறேன்...எனக்கும் இன்னும் கொஞ்சம் டைம் கிடைக்கும்...பாரு... யாரங்கே.... ஒரு ஒரு மணி நேரம் இந்த பால்கொழுக்கட்டை பாலகனுக்கு என் காஜானாவிலிருந்து பரிசில் கொடுங்கள்.

மனதிற்குள் வம்பளந்தாளே தவிர வாயில் மௌனம் கொண்டாள்.

கார் மலைப்பாதையில் ஒரு கிளை சாலையில் திரும்பியது.

ங்கே ஒரு சின்ன லேக் இருக்குது....ஒரு ரவுண்ட் போய்ட்டு போகலாம்.....ஒரு மணி நேரம் போயிரும்...உங்க ஃபேமிலி வெஹிக்கில்ஸ் முன்னால நம்மை கடந்து போயிடும். அவங்களுக்கு பின்னால நாம மெயின் ரோட்டில் திரும்பவும் போய் சேந்துகிடலாம். ” வியன் விளக்கம் சொன்னான் அவளுக்கு.

ஏரில எருமை குளிக்றதை பார்கிறதுக்கு ஒரு பயபுள்ள ஃபாரின்ல இருந்து பறந்து வந்திருக்குது....மனதிற்குள் அவள் செய்தி வாசிக்க

“என்னங்க ஒன்னும் சொல்லலை...?” டென்ஷனாக கேட்டான் வியன்

“அதான்...முடிவு பண்ணி வேற ரூட் திருப்பிடீங்கல்ல...அப்புறமென்ன...?.” விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் ஒலித்தது அவள் குரல்.

எம்.எம் டா நான்.  இப்படித்தான் சம்மதம் சொல்ல முடியும்....இதுக்காகல்லாம் மனச மாத்தி மண்டபத்துக்கு கொண்டு போயிடாதே.....எனக்கு டயலாக் ரிகர்சல் செய்ய டைம் வேணும்...கேட்கிற கேள்வியில உன் குடும்பமே அலறனுமில்ல..... வர்றேண்டா வடிவழகா...கவின் கத்தரிக்கா வாழ்க்கைக்கும் கல்யாணமே வேண்டாம்னு கதறிட்டு ஓட வைக்கேன் உன்னை.... மனதிற்குள் வியனிடம் மன்றாட தொடங்கி கவினை நோக்கி மானசீகமாக கொம்புசீவினாள்.

வியனோ இவளை வருத்திவிட்டதாக நினைத்து “சாரிங்க...ஒன்லி டுடே...” என மன்னிப்பு கேட்டான்.

நானும்தான்டா...கெக்கேபிக்கே இன்னொரு நாள் நீ கூப்பிட்டாலும் உன் கூட வருவனா? மனதிற்குள் மாத்திரம் பதில் சொல்லிக்கொண்டாள்.

தொடர்ந்தது மௌனம்.

இவள் டென்ஷனாக இருப்பதாக நினைத்து சூழ்நிலையை இலகுவாக்கவென வியன்தான் பேசினான்.

“உங்க கூட யாராவது வருவாங்க.....எப்படி சமாளிக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சேன்......இப்படி சப்புன்னு போய்ட்டுது......”

சிறு சிரிப்புடன் அவன் சொல்ல

“காப்பாத்துங்க....காப்பாத்துங்க.....யாராவது காப்பாத்துங்க....” அவள் அலறிய அலறலில் டயர் தேய நின்றது அந்த ஜாகுவார்.

“என்ன பண்றீங்க நீங்க....” உச்சத்தில் பதறினான் அவன்.

“நீங்கதான சப்புனு போய்ட்டுன்னீங்க...அதான் த்ரில்லிங் எஃபெக்ட் கொடுத்தேன்....எப்பூடி?” முகமெங்கும் குறும்பு குடியிருந்தது அவளிடம்.

இதற்குள் சற்று வியர்த்திருந்தது வியனுக்கு. மீண்டும் வாகனத்தை செலுத்த தொடங்கியபடி கேட்டான்.

“ஒரு நிமிஷத்தில் கதி கலங்க வச்சுடீங்க....இப்படியா டென்ஷன் பண்ணுவீங்க......யாராவது கேட்டால் என்ன ஆகும்....?”

இது கள்ளாட்டம்... கள்ளாட்டம்....மனம் அலற “நீங்க மட்டும் கடத்தலாம் நாங்க மட்டும் கத்தகூடாதோ?” என தலை சரித்து கேட்டாள் மிர்னா. கண்கள் முழுவதும் கிண்டல்.

“இது பிடிக்கலைனா முதல்லயே சொல்லி இருக்கலாமே நீங்க...” பரிதாபமாக கேட்டான் வியன். காரை கொடைக்கானல் பாதைக்கு திருப்பிக்கொண்டிருந்தான் அவன்.

“பிடிக்கலைனு சொல்லிட்டா....?”

அவள் குரலில் எதோ விபரீதம் புரிய, அனிச்சையாய் அதிர்ச்சியாய் திரும்பி அவளை பார்த்தான். “என்னாச்சு மிர்னா?”

“இந்த கல்யாணம் பிடிக்கலைனு சொல்லத்தான் போய்கிட்டு இருக்கேன்....” விழி அசையாமல் முகம் மலராமல் அவள் சொன்ன விதத்தில் அது மொத்தமும் சுத்த உண்மை என வியனுக்கு புரிய

ஏற்கனவே குறுகலான பாதையில் திரும்ப முயன்று கொண்டிருந்த பெரிய கார், இவன் அதிர்ச்சியில் தாறு மாறாய் சுழன்ற ஸ்டியரிங் வீலின் உபயத்தில் பாதையைவிட்டு விலகி இடபுறமிருந்த பள்ளத்தாக்கை நோக்கி படுவேகமாக உருள தொடங்கியது.

ஹேய்...கெக்கேபிக்கே...என்னடா நீ.....அலறிய மிர்னாவின் மனது நினைவிழந்தது.

தொடரும்

Ennai thanthen verodu - 02

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.