(Reading time: 20 - 39 minutes)

01. என் உயிர்சக்தி! - நீலா

ழகான விடியல்...ரம்யமான சனிக்கிழமை காலைப்பொழுது... ஏழு மணி.

பேன்சில்வேணியாவின் பிலடேல்பியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிறுப்பு. வரவேற்பறையில் அமரந்து டிவியை துழாவிக்கொண்டிருந்தனர் மதியும் கவிதாவும்.

மூன்று படுக்கையறைக்கொண்ட அந்த பிளாட்டில் மற்றொரு அறையில் உறங்கிக்கொண்டிந்தனர் டீனா டேவிட் தம்பதியினர்.

En Uyirsakthi

மற்றொரு அறையில்...

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே....

விடியும் பூமி அமைதிக்காக விடியவே...

மண்ணில் மஞ்சள் வெளிச்சம்...

ம்ம்ம்...குழல்...ஏய் பூங்குழலீ... ஏன் டீ காலங்காத்தால இப்படி டார்ச்சர் பண்ற. அந்த அலாரமை நிறுத்து. இப்படி ஒரு பாட்டு வெச்சா தூக்கம் வராதுடா ப்ளீஸ்...கெஞ்சிக்கொண்டிருந்தவள் குழலீயின் கைபேசியை பறித்து அலாரமை நிறுத்த முயன்றாள் யாழினி என்கின்ற அனிதா யாழினி!

'ஏய்... யாழ் என் மோபைல் டீ அது. இது காலங்காத்தால வா. மணி எழாகுது. இப்போ எழுந்திருக்கும் எண்ணமே இல்லையா?? உண்ண சமாளிக்கறது ரொம்ப தலவலியா போச்சு' கையில் மணம் பரப்பும் காப்பியுடன் வந்த குழலீ யாழினியை செல்லமாக இரண்டடி வைத்து ஐபோனை பிடுங்கி அலாரமை நிறுத்தினாள்.

'எழுந்திருக்கும் எண்ணமே இல்லியாடி யாழ்? டேவிட் அண்ணா வந்திருக்கிறார்..சீக்கிரம் எழுந்து வா.. இல்லணா அவரிட்ட இன்னைக்கு சிக்கப்போற காமெடிபீஸ் நீதான்!' குழல்.

'என்ன செய்யமுடியும் குழல் அவராலே?? பார்க்கிறேன். இன்று சிக்கப்போவது அவர்தான்! என்றைக்கும் எல்லாவற்றிலும் நான்தான் பெஸட் அன்ட் பர்ஸ்ட்!’ - யாழினி.

'இதுலக்கூடவா... முருகா!!! சத்தியமா எனக்கு இன்றைக்கு பெரிய தலைவலி காத்துட்டிருக்கு. உன்னலாம் என்ன பண்ரதுனே தெரியல...உன்னையேல்லாம் கட்டி மேய்த்து குடும்பம் நடத்தி.....ரொம்ப பாவம் டீ!'என்று முடித்தாள் குழலீ.

'யாரு.. என் ஆளா... அவர் எல்லாதையும் பார்த்து பார்! நீ கவலைப்படாதே குழலீ!' என்றாள் யாழினி படுக்கையை விட்டு எழுந்தவாறே! ஒரு கணம் திகைத்த குழல் சுதாரித்து 'யாழ்.... என்னடா உன் காதலை சொல்லிட்டியா??? என்ன சொன்னார்...??? உன்னவர்...' என்றும் இல்லாத ஏளனத்தோடு உறைத்தாள்.

ம்ம்ம்ம் இன்னும் இல்ல டீ குழல்! ஆனால் ஒரு நம்பிக்கை தான்!!!

பச்ச்ச்.. தப்பு பண்ணாதே யாழ். சீக்கிரம் சொல்லிடு! சொல்லாத காதல் என்றுமே குப்பையில் தான்! ம்ம்ம்ம்....என்னமோ நீதான் அவர் பெயர் கூட சொல்லமாட்றியே! என்னவோ போ! கேட்டாலும் சஸ்பன்ஸ் னு சொல்லற...!

யாழ் 'எனவோ.. எல்லாம். தெரிந்த மாதிரியே பேச வேண்டியது.. கேட்டா தத்துவம் பேசுவ! ஆர்யன் சாருக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சே.. இன்னும் அவரையே நினைச்சுக்கிட்டு அவர மாதிரி குணங்களோட ஒரு மாப்பிள்ளை வேணும்னு கேட்டா நீ எப்ப தான்டீ கல்யாணம் பண்ண போற? குழலீ...அட்லீஸ்ட் யாரையாவது காதலிக்கலாம்ல..?’

இன்னும் யாழினி ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்! எதுவும் பூங்குழலீயின் காதுகளை எட்டவில்லை. எண்ணங்களில் முழ்கியவளை யாழினி தெரியாமல் சிதரவிட்ட வார்த்தை அவளை இந்த உலகிற்கு கொண்டு வந்தது. 'பிரபு!'

இந்த பெயர்! ச்ச...

என்ன டீ ஆச்சு??? குழல்... பூங்குழலீ...என்ன ஆர்யன் நியாபகமா??

ஆங்ங்... நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள் அப்போது தான் யாழினி கூறியவை புத்தியில் உறைத்தது. சட்டேன கோபம் வந்தது குழலீக்கு!

என்ன பேசற நீ?? இன்னொரு முறை இப்படி தப்பா பேசாத யாழ்! ஆர்யனை மறந்தாதானே நியாபகபடுத்த.. ஆனா நீ நினைக்கிறா மாதிரி இல்ல! இந்த ஐஞ்சு வருசமா ஒரு குருவா, தோழனா, மேன்டரா, நண்பனா இருக்கார் என்னுடைய ஜிஜு! என்னுடை அப்பாவுக்கு அடுத்த நிலையா நான் மதிக்கிற ஒரு ஆண்மகன் அவர் தான்டீ.. அப்புறம் தான் என் தம்பி அருள்மொழி கூட!'  அவர்மேல இன்டரஸ்ட் இருந்தது எனமோ உண்மைதான். ஆனா இப்போ இல்ல.. சுத்தமா இல்ல.. அவர் எப்பவுமே என்னோட ஜிஜு.. என் அக்கா கணவர் அவ்வளவுதான். இந்த உறவை புரிஞ்சிக்கிற பக்குவம் உங்களுக்குலாம் கிடையாது...உனக்கு இத எல்லாம் நான் விளக்கனும் என்று ஒரு அவசியமும் இல்ல... ' பொறிந்துத்தள்ளிவிட்டாள்.

பச்ச்ச... என்று சலித்திட எழுந்து தயாரானாள் குழல். அவளது கோபத்தை அறிந்த யாழ் உடனே கொஞ்ச தொடங்கினாள். ஏய் இருடீ…. குழல்... சாரிடீ... தெரியாமல் பேசிட்டேன். ப்ளீஸ்....
.....
ப்ளீஸ்...
.....

ப்ளீஸ்...

சரி சரி விடு. இனிமே இப்படி பேசாத சரியா' என சட்டேன இளகி வந்தாள் குழலீ. நான் இப்போ shopping போறேன். நீயும் வரியா?? Saturday தானே!

நீ மட்டுமா??

இல்லடா...என்கூட கவிதா, ராம், வெற்றி, டீனா, சலீம், மதி, அருண் வராங்க!

இல்லடீ.. நான் வரல... நீ போயிட்டு வா…

யாழ்... உன் ஆளைப்பாக்க போறியா???

இல்லடீ...

என்ன???- குழலீ

வெற்றி..??.-யாழ்

ம்ம்ம்ம்.. அவனும் வரான்! இந்தியால இவங்க சார்பாக எல்லாருக்கும் டெலிவரி வேலை பண்ணனும் ல.. வெற்றி, சலீம், அருண் நேரா ஷாப்பிங் மாலுக்கு வந்துருவாங்க. சரி அவன் வந்தா என்ன பிரச்சனை உனக்கு. இரண்டு பேரும் பிரச்சனை என்னனு சொன்னாதானே சரிபண்ண முடியும். நீ இப்ப வரீயா இல்லையா??

'சரி வரேன்.. ஆனா என் ஆளையும் வர சொல்லறேன். இன்னைக்கு அவனை இன்ட்ரோ பன்றேன்! ' என்றாள் ஒரு விதமான இறுக்கத்துடன்!

இல்ல டீ.. இன்னொரு நாள் பாக்கலாம்! Tomorrow I m boarding my flight to chennai! Will meet him next time for sure. Don't worry babe! ம்ம்ம்ம்... அவர் சினிமாவில் தானே இருக்கிறார்.

ஆமாம் குழல்.. ஒரு ecommerce company la manager ஆ வேலை பார்க்கிறார். சினிமாவிலும் முயற்சி செய்றார்.

தவு தட்டும் ஓசை கேட்டது.. குழல் சென்று திரும்பிய போது மற்றவர்களும் உடன் இருந்தனர். எல்லோரும் பேசிக்கொண்டிருந்த போது... ஓரே சமயத்தில் குழலீ, யாழ், மதியின் கைப்பேசிகள் ஒலித்தது.

குழல்- ம்ம் சொல்லு அருள் ...

மதி- இல்ல வெற்றி இதோ கிளம்பிட்டோம்.. என்னது வரலியா??

இதை கேட்ட யாழினியோ.. இறுக்கம் தளர்ந்த புன்னகையோடு கைப்பேசியை எடுத்து.. ம்ம் சொல்லுடா என்றாள்...

ஒருவாறு பேசி முடித்து குழல் திரும்பிய போது எல்லோரும் தயாராக வரவேற்பறையில் காத்துக்கொண்டிருந்தனர்.

ஏய்... கிளம்புவோமா... என்ன அமைதியா இருக்கறிங்க??? எல்லோர் பார்வையும் சென்ற திசையில் பார்த்த குழலியும் வாயடைத்து நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.