(Reading time: 11 - 22 minutes)

 

"குட் மோர்னிங் ஸ்டுடென்ட்ஸ்"

"குட் மோர்னிங் மேம்"

"வெல்கம் டு 3 இயர். விடுமுறை எப்படி போச்சு." என்றார் ரம்யா (இவங்க இங்கிலீஷ்ல பேசறதா நினைச்சுகோங்க)

"நல்லா போச்சு மேம்" என்றான் தினேஷ்.

"காலேஜ்க்கு வராம செம்ம கடுப்பா இருந்தது மேம்" என்றான் சிவா.

"படிப்பு மேல அவ்வளவு இஷ்டமா. நம்பமுடியலையே" என்றார் ரம்யா

"சே சே. அவனுக்கு மொக்கை போட ஆளு யாரும் கிடைச்சு இருக்கமாட்டாங்க மேம்" என்றாள் ராதிகா.

"மேம். என்னை மாதிரி அவங்களால இருக்கமுடியலைனு பொறாமை" என்றான் சிவா.

"உன்னை மாதிரி இருக்கணும்னு யாரும் ஆசை படமாட்டாங்க" என்றாள் அஞ்.

"முதல் நாளே உங்க சண்டையை ஆரம்பிக்காதீங்க. சப்ஜெக்ட்ஸ் எல்லாரும் நோட் பண்ணிகோங்க. நாளை கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவேன்"

சாதனா ,நிஷா கிளாஸ் பார்ப்போம் வாங்க.

"ஹாய்,ஹாய்,ஹாய்,ஹாய்,ஹாய்" என்றாள் சாது.

"ஹாய் ப்ரிண்ட்ஸ்" என்றாள் நிஷ்.

"ஹாய். இப்போ எதுக்கு இத்தனை ஹாய்" என்றாள் ஸ்ரீ. இவர்களின் கிளாஸ்மேட்.

"நான் உங்களை மாதிரி கஞ்சம் இல்லை."

"ஐயோ. வந்ததும் ஆரம்பிச்சுடா" என்றாள் மது.

"எப்படி இருக்க நிஷா" என்றான் பாலு.

"எப்பவும் போலதான்"

"எங்களை பார்த்த எப்படி தெரியுது. அவளை மட்டும் விசாரிக்கற. சரியில்லை" (இப்படி பேசினால் அது கண்டிப்பா நம்ம சாதுதான். வேற யாராலையும் அவளை பீட் பண்ணமுடியாது)

"கிளாஸ்குள்ள வரும்போதே உன் வாய்ஸ் கேட்டுச்சு. பிறகு எதுக்கு விசாரிக்கணும்" என்றான் குரு.

"டேய். நேரம் வரும்போது உங்களை கவனிச்சுகிறேன்"

"அப்போ பாத்துக்கலாம்" என்றான் பாலு.

"என்ன சப்ஜெக்ட்ஸ் இருக்கு இந்த செமஸ்டர்ல" இது ஸ்ரீ

"இதை நீ சந்தோஷ்கிட்ட கேட்கணும். எங்களை கேட்ககூடாது " என்றாள் சாது.

"அவன் புக்கூட வைத்திருப்பான். சொல்லமுடியாது ஒரு சாப்ட்டர் கூட படிச்சிருக்கலாம்" என்றாள் மது.

"வந்ததும் ஏண்டி சப்ஜெக்ட் பத்தி பேசிகிட்டு. சேன்ஜ் தி டாபிக்" என்றாள் நிஷ்.

"கொஞ்சமாவது டிபார்மெண்ட் டாப்பெர் மாதிரி பேசுறியா நீ" என்றான் குரு.

"அதுக்கும், இதுக்கும் என்னடா சம்பந்தம்" என்றாள் நிஷ்.

" ஸ்ரீ உன் ஆளு வந்துட்டான்." என்றாள் நிஷ்.

"ஸ்ரீ வந்து இவ்வளவு நேரம் ஆச்சே இன்னும் காணமேனு பார்த்தேன். வந்துட்டான்" என்றாள் சாது.

"சும்மா இருங்க. யார் பெத்த புள்ளையோ இப்படி சுத்துது" என்றாள் ஸ்ரீ.

"சதீஷ் பாவம்டி." என்றாள் மது.

"ஒன்னும் சரியில்லையே மது" என்றாள் நிஷ்.

"தெரியாம சொல்லிட்டேன். விட்டுடுங்க என்னை"

"பொழச்சி போ" என்றாள் நிஷ்.

"குட் மோர்னிங் ஸ்டுடென்ட்ஸ்"

"குட் மோர்னிங் மேம்"

"எல்லோரும் எப்படி இருக்கீங்க" என்றார் பிரியா. (இவங்க இங்கிலீஷ்ல பேசறதா நினைச்சுகோங்க)

"குட் மேம். நீங்க ?" என்றாள் சாது.

"குட். கிளாஸ் ஆரம்பிக்கலாமா"

"மேம் முதல் நாளேவா. நாளை ஆரம்பிங்க" என்றாள் ஸ்ரீ.

"இதே தேவா சார்னா சொல்வீங்களா. பயமே இல்லை"

"இப்போ எதுக்கு அந்த ஹிட்லர ஞாபகபடுத்துராங்க.என்ன கொடுமை சரவணன் இது" என்று சாதுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள் நிஷ்.

"எங்கே போனாலும் இந்த ஹிட்லர் நம்மளை விட மாற்றார். இந்த செமஸ்டர்லையாவது அவர்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகணும்." என்றாள் சாது.

“அங்கே என்ன பேச்சு சாதனா. முதல் நாளே ஆரம்பிச்சிடியா" என்றார் பிரியா.

"தேவா சார் எங்களுக்கு இந்த செமேச்டேர்ல கிளாஸ் எடுப்பாருன்னு உங்ககிட்ட கேக்கலாமானு நிஷா கிட்ட கேட்டேன் மேம்"

"எஸ். ஒரு கிளாஸ்க்குதான். உங்களுக்கா இல்லை அந்த கிளாஸ்கான்னு தெரியாது"

"ஓகே மேம்"

"இதுயெல்லாம் ரொம்ப ஓவர். நான் பேசினால் மட்டும் கரெக்டா பார்த்துடுவாங்க, நீ மட்டும் எஸ்கேப் ஆகிடு" என்று நிஷாக்கு மட்டும் கேட்குமாறு பேசினாள் சாது.

"அதுக்கு எல்லாம் தனி திறமை வேண்டும் சாது" என்றாள் நிஷ்.

“கடவுளே. இவள் தொல்லை பத்தாதுன்னு ஹிட்லர் வேற. எங்களுக்கு அவர் வரகூடாது” என்றாள் சாது.

" மேம் பார்க்குறாங்க. இதை நம்ம ரூம்ல தொடரலாம்" என்றாள் நிஷ்.

"உங்களுக்கு கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ் எடுக்கபோறேன். இப்ப கொஞ்சம் இன்ட்ரோ மட்டும் சொல்றேன் "

" ப்ளீஸ் மேம். இன்னைக்கு மட்டும் கிளாஸ் வேண்டாம்" என்று அனைவரும் கேட்டனர்.

"ஓகே. இன்னைக்கு மட்டும்தான்"

ன்று முழுவதும் யாரையும் பாடம் எடுக்க விடவில்லை. இவர்களின் பேச்சும், சந்தோஷமும் என்று சென்றது.

நால்வரும் ஒன்றாக விடுதிக்கு திரும்பினர். இன்னும் முதல் வருட மாணவர்கள் கல்லூரியில் சேரவில்லை. விடுதியில் மூன்றாவது வருட மாணவர்கள் விடுதி மைதானத்தில் கூடினர்.

"இன்னிக்கு என்ன முக்கியமா நடந்தது" என்றாள் ஆஷா.

"முதல் நாளே என்ன இருக்க போகுது" என்றாள் செலினா.

"ஹே. ஹிட்லர் எந்த டிபார்மெண்ட்க்கு வரபோறாரு" என்றாள் சரண்யா.

"ஹிட்லர் cse ஒரு கிளாஸ்க்கு மட்டும் வருவாராம். எந்த கிளாஸ்ன்னு யாருக்காவது ஐடியா இருக்கா" என்றாள் நிஷா.

"நோ ஐடியா" என்றாள் இர்பான.

"யார் கிளாஸ்க்கு வந்தாலும் அவங்களுக்காக மத்தவங்க வேண்டிபோம்" என்றாள் ஹாசி.

"இப்போ எதுக்கு இந்த ப்ரீத்தி நம்மளை முறைச்சிட்டு போகுது" என்றாள் வர்ஷா.

"அதுக்கு எதுக்கு காரணம் வேண்டும். நம்மளை ஒன்றாக பார்த்தாலே அவளுக்கு கோவம் வரும்" என்றாள் அஞ்.

"எப்படி இவளை கிளாஸில் சமாளிக்கறீங்க" என்றாள் ஆஷா.

"அவளை யாரும் மதிக்க மாட்டோம்" என்றாள் நிஷ்.

"அவளும் நம்மகூட பேசவேண்டியது தானே. என்னமோ நம்ம வேற்று கிரகவாசிகளை போல பார்க்குறாள்" என்றாள் சாது

"அவளை திருத்த முடியாது. உங்க கிளாஸ்ல என்ன நடந்தது "

(இவங்க இப்படிதான் வெட்டியா பேசிட்டே இருபாங்க. இதை கேட்டால் நமக்கு பொறுமையே போயிடும்)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.