(Reading time: 11 - 22 minutes)

 

ன்று இரவு இவர்களின் பேச்சோடு உணவு முடிந்தது. நால்வரும் தங்கள் அறைக்கு சென்றனர்.

"சாது. ரேடியோ ஆன் பண்ணு. ரேடியோசிட்டி வை. லவ் குரு பேசுவாரு" என்றாள் ஹாசி.

"முடியாது. ரேடியோ மெர்ச்சி வை. செந்தில் பேசுவாரு. ராஜா பாட்டு போடுவாங்க" என்றாள் அஞ்.

"அதெல்லாம் ஒத்துக்க முடியாது. பிக் 92.7 வை. ரஹ்மான் பாட்டு வரும். அனுராதா பாடுவாங்க" என்றாள் நிஷ்.

"லவ் பத்தி நிறைய பேரு அவங்க கருத்துக்களை சொல்லுவாங்க. குரு சூப்பரா அவங்களுக்கு பதில் சொல்லுவாறு. அதனால் இப்போ ரேடியோசிட்டி கேட்போம்"

"நோவே. அனுராதா நிறைய நல்ல பாட்டு படுவாங்க. சோ பிக்தான் இப்போ கேட்கணும்"

"ஹே. அதை லவ் பண்றவங்க கேட்கட்டும். ராஜா பாட்டு கேட்டா மெய் மறந்து போயிடுவோம். அதனால் இப்ப மெர்சி கேட்போம்"

"லவ் பண்ணாதான் ரேடியோசிட்டி கேட்கணும்னு ரூல்ஸ் இல்லை. நானும் கேட்பேன்"

(யூ டூ ஹாசி. இவ்வளவு நேரம் அமைதியா இருந்தது இவதானன்னு எனக்கு சந்தேகம் வந்துடுச்சு. உங்களுக்கும்னே. அமைதின்னு நினைச்சால் இவளும் வம்பு பண்றாள். ஒரு பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் அப்படிங்கற மாதிரி மத்த மூணு பேரோட சேர்ந்து இவளும் இப்படி ஆகிட்டா போல)

மூவரும் அடித்துக்கொள்ள சாது கடுப்பானாள்.

"நான் இப்ப ரேடியோவை ஆன் பண்ணமாட்டேன். மூணு பேரும் தூங்குங்க"

"என் செல்லம். ரேடியோ ஆன் பண்ணு" என்றனர் மூவரும்.

"சரி. 15 நிமிடம் ஒரு சேனல். உங்களுக்கு ஓகேனா வைக்கிறேன். இல்லேன்னா யாருக்கும் ரேடியோ கிடையாது"

"ஹ்ம்ம்" அனைவரும் ஒத்துக்கொள்ள ரேடியோவை ஆன் செய்தால் சாது .

(ஒரு ரேடியோக்கு இத்தனை அலபரி. முடியலைடா சாமி. இவங்க நாலுபேரை எப்படி மேய்க்க போறனோ தெரியலை. எல்லோரும் எனக்காக வேண்டிகோங்க)

இப்படியே இவங்களோட அட்டகாசம் கல்லூரியிலும் விடுதியிலும் தொடர்ந்தது. ஒரு வாரம் இப்படியே எந்த விபரீதமும் இல்லாமல் சென்றது. (இவங்களுக்கு விபரீதமா அப்படிதான நீங்க நினைக்கரீங்க. உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடுச்சு. விபரீதம் இவங்களால் மத்தவங்களுக்கு ஏற்படலைன்னு சொன்னேன்)

ந்த வாரஇறுதியில் நால்வரும் அருகில் உள்ள மாலுக்கு சென்றனர். பேருந்திலிருந்து இறங்கியவுடன்

"சாது,ஹாசி நீங்க இரண்டு பேரும் உள்ள போங்க. நானும்,அஞ்சும் மொபைல் ரீசார்ஜ் பண்ணிட்டுவர்றோம் " என்றாள் நிஷ்.

"சரி டி. பார்த்து போங்க. நாங்க பூட் கோர்ட்ல இருக்கோம்" என்றாள் ஹாசி.

"ஹ்ம்ம். வந்ததும் உன் மொபைலுக்கு கால் பண்றோம்" என்றாள் அஞ்.

"ஓகே. உள்ளபோறோம்"

இருவரும் ரீசார்ஜ் செய்துகொண்டு வந்தனர். இவர்கள் மாலின் ஒரு வழியாக செல்ல மற்றொரு வழியில் ஒருவன் ஆட்டோவிலிருந்து இறங்கினான். அவன் ஹீரோ மாதிரி இருக்கான் அப்படின்னு சொல்லதான் ஆசை. ஆனால் பாருங்க அவன் அப்படியில்லை. எனக்கு பொய் சொல்லவேற தெரியாது. (ஹி ஹி ஹி. திட்டாதீங்க). அவன் பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருந்தான். (இப்படிதாங்க நிறைய பேர் சினிமா ஹீரோ பத்தி டிவியில் சொல்றாங்க. அதனால் நானும் அதையே சொன்னேன்).

அவன் ஜீன்ஸ் டி-ஷர்ட் அனிந்திருந்தான். கொஞ்சம் கருப்பு ஆனால் கலையான முகம். (எல்லோரும் ஹீரோயினை தான் வர்ணிப்பாங்க. நாலுபேரை பத்தி ஒரே நேரத்தில் வர்ணிக்கணும். எனக்கு கை வலிக்கும்ல அதனால் அதை சாய்ஸ்சில் விட்டுட்டேன். சரி சரி கோச்சுக்காதீங்க. கதையின் நடுவில் சொல்றேன்).

ஆனால் அவன் முகத்தில் கோபத்தின் சாயில். அவனின் மொபைலுக்கு கால் வருது. அவன் யாரிடமோ கோபமாய் பேசுகிறான்.

எதுக்காக கோவமா இருக்கான்? இவனுக்கு ஜோடி யாரு?

(உங்களுக்கு தெரியுமா. தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க)

தொடரும்

Episode # 02

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.