(Reading time: 16 - 31 minutes)

 

ங்கு கட்டுபாடு என்பதின் அர்த்தம் தெரியாதவன் போல காரை ஓட்டி  கொண்டு வந்தான் அருள்மொழிவர்மன் .. கூடவே சாஹித்யாவின் பெயரில் அர்ச்சனைகளும் நடைபெற்றன ( உடனே நம்ம பாசக்காரபயபுள்ளைய பார்த்து தவறா எடை போட்டுவிடாதிங்க ..கோபமா இருக்கார் என்பதை தான் அப்படி சொன்னேன் )

" அறிவு கேட்டவ .. என்னமோ உலகத்தையே  இவதான் காப்பாத்த பொறந்த மாதிரி எப்போ பார்த்தாலும் ஏதாச்சும் பண்ணி வைக்கிறா .. இன்னைக்கு இருக்கு இவளுக்கு .. இன்னைக்கு நானா அவளா பார்க்குறேன் " என்றேன் உறுமி கொண்டு இருந்தான் ..

சாஹித்யாவுடன்  மருத்துவமனையில் நுழைந்தான் சந்தோஷ் .. டாக்டர் அவளிடம் பேசிக்கொண்டே காயத்திற்கு கட்டுபோட, அவனோ அவளது ஒவ்வொரு அசைவிலும் கட்டுபட்டு கொண்டிருந்தான் .. அப்போதுதான் சுபாஷும் அந்த அறைக்கு வந்தான் ..

"  அண்ணி எப்படி இருக்காங்க ?", " சைந்தவி அக்கா எப்படி இருக்காங்க " என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்டு வைக்க  சட்டென புன்னகைத்தான் சுபாஷ் .. சற்றுமுன்பு பார்த்த கோபமுகம் மறைய அவன் முகத்தில் பரவியிருந்த நிம்மதியே அவர்களின் கேள்விக்கு பதில் சொன்னது ..

" அவ நல்லா இருக்கா "

" குழந்தை ???" என்று பதட்டுத்துடன் கேட்டவளை பார்த்து கனிவாய் புன்னகைத்து

" அவருகென்ன, சிங்கக்குட்டி அப்படியே இருக்காங்க சிஸ்டர் .. நத்திங் டூ வொர்ரி " என்றான் ..

நிம்மதியில் சிரித்திருக்க வேண்டிய தருணம், கட்டுபடுத்தி வைத்த கண்ணீருக்கு விடுதலை தந்தாள்  சாஹித்யா .. இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்த உரிமையில் டாக்டரே

" என்னம்மா ? ஏன் அழற ? அதான் எந்த பிரச்சனையும் இல்லயே  " என்றார் ..

" ஆமா டாக்டர் .. ஆனா ஏதும் ஆகி  இருந்தா ?? நான் தாங்கி இருக்கவே மாட்டேன் .. அம்மா எப்பவும் சொல்லுவாங்க , இந்த மாதிரி இருக்கவங்களை ரொம்ப கண்ணு வைக்க கூடாது .. ஒரு நேரம் போல இருக்காதுன்னு .. நான்தான் கேட்கல .. அவங்க குழந்தைக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா, அந்த குற்ற உணர்ச்சி  என்னை சும்மா விடாது “என்று விம்மின்னாள்.

எப்போதும் பழமை  மதித்து பின்பற்றும் அவளுக்கு இது பெரிய விஷயம் தான் .. மற்ற மூவரும் அவளையே ஆச்சர்யமாய் பார்த்தனர் .. விதி மீதே நம்பிக்கை இல்லாத இந்த காலத்தில் இப்படி பேசுபவளை வேறெப்படி பார்ப்பது .. எனினும் அவள் மனம் புண்படும்படி எடுத்துரைக்க யாருக்கும் எண்ணம் எழவில்லை .. நொடிபொழுதில் அவளது குணத்தை அறிந்து கொண்ட சந்தோஷ் , அவள் முன் மண்டியிட்டு அவள் மனம் இதமாகும்  வண்ணம் பேசினான் ..

" சாஹித்யா .. "

" ம்ம்ம்ம் ??"

" குழந்தைக்கு ஏதாச்சும் ஆகணும்னா இன்னைக்கு நீங்க என் அண்ணியை பார்த்திருக்கவே வேணாமே .. கொஞ்சம் யோசிச்சு .. பாருங்க நீங்க மட்டும் அங்க இல்லனா அண்ணியோட நிலைமை என்ன ?? அப்போ குழந்தையை காப்பாற்ற தானே கடவுள்  உங்களை அனுப்பி இருக்காரு " என்று சிறுபிள்ளைக்கு உரைப்பது போல எடுத்து உரைத்தான் .. அதன் பயனால் அவள் முகத்தில் புன்னகை உதித்தது ..

" தேங்க்ஸ் .. உங்க பேரு நீங்க சொல்லலியே " என்று முதல் முறை சமாதானமாய் கேட்டாள்  அவள் ..

" ஹப்பாடா இப்போதாச்சும் என்னை கேட்கனும்னு தோணிச்சே "

" என் பேரு சந்தோஷ் .. சந்தோஷ் ரகுராமன் .... இவர் என் அண்ணா சுபாஷ் ரகுராமன் "

பேச்சை இலகுவாக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்ட சுபாஷும்

" போதும்டா ..நீ மண்டியிட்டு உட்கார்ந்து தரையை துடைச்சது  .. முதலில் எழுந்து நில்லு " என்று கேலி செய்தான் ...

" டேய் அண்ணா .. ஓவரா பேசின அப்பறம் உனக்கு மட்டும் நானே என் கையால  இன்னும் ஒரு மாசத்துக்கு சமைச்சு போடுவேன் " என்று மிரட்டினான் ..

" பார்த்தியா சாஹித்யா .. என் பொண்டாட்டி இங்க சேர்ந்தது பாத்தாதுன்னு என்னையும் ஹாஸ்பிட்டலில் சேர வைக்க வழி பண்ணுறான் இவன் .. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சரியாதான் சொன்ன்னாங்க .. படைக்கு முன்னாடி தம்பிக்கு அஞ்சணும் போல இருக்கே " என்றான் பயந்தவனாய் .. அதற்குள் சந்தோஷின் செல்போன் ஒலிக்க

" ஓ  காட் .. " என்று சொல்லி பதட்டமாய் போன்  ஓடினான் சந்தோஷ் ..

" என்னாச்சு உங்க தம்பிக்கு "

" அவன் எப்பவும் அப்படிதான் .. எதாச்சும் மறந்துருபான் .. நீ ஒன்னும் கவலை பட வேணாம் .. எங்களுக்கு இதெல்லாம் ரொம்ப பழக்கம் .. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட இவன் வசந்தமாளிகை சிவாஜி கணேசன் ரேஞ்சுக்கு டிராமா போடுவான் " என்றான் சுபாஷ் ..

" நான் சைந்தவி அக்காவை பார்க்கலாமா ?"

" கேட்கணுமா சாஹித்யா .. உங்களை பார்க்கத்தான் என் மகாராணியும் வைடிங் ..  போலாமா " என்று அவளை  அழைத்து சென்றான் சுபாஷ் ..

" ஹே சத்யா வா வா " என்று உரிமையாய்  அழைத்து தன்னுடன் அமர வைத்து கொண்ட மனைவியை வியப்பாய் பார்த்தான் சுபாஷ் ..

" பயந்துட்டியா ? ஏன் முகம் இப்படி இருக்கு ? கை ரொம்ப வலிக்கிறதா ? என்னால தானே ? " என்று கேள்விகளை அடுக்கினாள்  சைந்தவி ..

" போங்க அக்கா .. எவ்வளோ பயந்துட்டேன் தெரியுமா ? "

" அச்சோ .. நான் பொதுவா கோவிலுக்கு போற நாள் மட்டும் காலையில் எதுவும் சாப்பிட மாட்டேன் .. அதான்  மயங்கிட்டேன் "

" என்ன அக்கா இவ்வளோ அசால்ட்டா சொல்றிங்க .. உங்களுக்கு பசிக்கலன்னாலும் ..பாப்பாவுக்கு  பசிக்கும்ல " என்றாள் ..

" நல்லா சொல்லுங்க சாஹித்யா .. உங்க பேச்சையாவது கேட்குறாளா  பாப்போம் "

" முதலில் இவ மத்தவங்க பேச்சை கேட்கிறாளா " என்று கேட்டுக்கொண்டு சுவரோரம் கைகட்டி நின்றான் அருள்மொழிவர்மன் ..

" நீங்க ?" - சுபாஷ்

" அருள் .. " என்று சொல்லி பதட்டமாய் எழுந்தாள் சாஹித்யா ..அவனை பார்த்த மாத்திரத்தில் எழ எத்தனித்தவள் வலது கையால் நாற்காலியை பிடிக்க வலியில்  " அம்மா " என்று துடித்தாள்..

அவ்வளவுதான் !! தேக்கி வைத்த கோபம் மொத்தமும் வடிந்துவிட ஓடி வந்தான் அருள் ..

" ஹே கையை காட்டு .. ரொம்ப வலிக்கிறதா டீ"  என்று ஊதிவிட்டான் ..

" ம்ம்ம் லைட்டா டா .... சாரி அருள் .. கோபப்படாதே " என்று சூழ்நிலையை சாதகமாக்கி பேசியவளை திட்ட அவனது மூளை அறிவுறித்தினாலும், அவனது மனமோ வேண்டாமென தடுத்தது ..

" டாக்டர் என்னடீ சொன்னாரு ?"

" மருந்து தந்திருக்கார் .. நான் கத்தியில் இருந்து கையை உடனே எடுத்ததினால காயம் ரொம்ப ஆழமா இல்ல "

" இல்லை .. நீ சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்ல .. டாக்டரை காட்டு .. நானே கேட்டுக்குறேன் " என்றான் .. இரண்டடி ஆவலுடன் நடந்தவன் அவர்களை பார்த்தான் .. லேசாய் மேடிட்ட வயிறுடன் இருந்த சைந்தவியை பார்த்ததுமே அவன் மனம் இளகியது ..சுபாஷிடம் பேச விரும்பினான் அவன் ..

" உங்க கிட்ட தானே போன் ல பேசினேன் "

" ம்ம்ம் ஆமா .. ஐ எம் சுபாஷ் .. "

" சாரி .. கோபத்துல கொஞ்சம் அதிகமா பேசிட்டேன் .. "

" இட்ஸ் ஓகே மிஸ்டர் அருள் .. சைந்துவுக்கு  இப்படி ஆகிருந்தா நானும் அப்படி தானே ரியாக்ட் பண்ணி இருப்பேன் ... என்னால புரிஞ்சுக்க முடியுது .. "

" கொஞ்சம் கவனமா இருங்க பாஸ் .. டெக் கேர் " என்றவன் அதிகம்  பேச்சை வளர்க்காமல் அவளுடன்  டாக்டரை பார்க்க சென்றான் ..

" ஹே குட்டிமா .. உனக்கு ஏன் முகம் விழுந்துடுச்சு "

" அந்த பையன் யாரு ?"

" தெரிலையே ..ஏன் ..... "

" ஒண்ணுமில்ல .. "

" ஹ்ம்ம் அந்த பொண்ணு உனக்கு முன்னாடியே தெரியுமா ? இவ்வளோ உரிமையா பேசுற ? இதுவரை இவளை நான் நம்ம்ம வீட்டுல பார்த்ததே இல்லையே "

" எனக்கும் இன்னைக்குத்தான் தெரியும்ங்க .. என் கர்சிப் விழுந்துடுச்சுன்னு எடுத்து தந்தா .. அப்படி தான் பேச ஆரம்பிச்சோம் .. உடனே நான் அழகா இருக்கேன்னு சொன்னா தெரியுமா ?" என்று புன்னகைத்தாள் ..

" ஓஹோ அதான் நீ ராசி ஆகிட்டியா ?"

" வெவ்வெவ்வெவ்வெவ்வெ ... அவ நம்ம பாப்பாவை பத்தி எல்லாம் கேட்டுகிட்டு இருந்தா .. பேசும்போதே தெரிஞ்சது நல்ல பொண்ணுன்னு "

" ம்ம்ம் ரொம்ப நல்ல பொண்ணு "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.