(Reading time: 16 - 31 minutes)

 

" ஹ்ம்ம் இந்த நல்ல பொண்ணு மாதிரி நம்ம வீட்டுக்கும் எனக்கொரு சின்ன தங்கச்சி வந்த நல்லா இருக்கும்னு நெனச்சேன் " என்று உண்மையை போட்டு உடைத்து திருதிருவென விழித்தாள்  சைந்தவி....

" வாரேவா .. ஓஹோ இதான் உங்க  ப்ளன்னா ... "

" ஆமா பொல்லாத ப்ளான் ... அதான் நடக்காது போலிருக்கே "

" ஏனாம் ?"

" இந்த பையன் யாருன்னு தெரிலையே .. ஒருவேளை இவன்தான் அவளுடைய ஹீரோ வா ?... அவன் கோபபடுறத பார்த்தா அப்படித்தான் இருக்கு .. உங்க கிட்ட சாரி கேட்டானே .. ரொம்ப திட்டிட்டானோ .. அவன் யாரா இருப்பான் ? "

" ஹே என் செல்ல பொண்டாட்டி .... கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ ....எப்போ இருந்துடீ நீ இப்படி துப்பறியும் வேலை எல்லாம்  பார்க்க ஆரம்பிச்ச ? எது நடக்குமோ அது நடக்கவேண்டிய நேரம் கண்டிப்பா நடக்கும் .. அந்த பையன் யாரு ,என்ன இந்த ஆராய்ச்சி நமக்கு எதுக்கு பேபி ? அப்படியே அவன் சாஹித்யாவுக்கு அண்ணனோ தம்பியாகவோ இருந்தாலும் கூட உன் ஆசை நடக்கனும்னா  இவங்க ரெண்டு பேரு மனசும் ஒத்து போகணும் தானே ? இப்போவே இதை எல்லாம் யோசிக்கனுமா செல்லம் ?"

" ம்ம்ம்ம் நீங்க சொல்றதும் சரிதான் " என்று சொன்னவள் கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்  ..

டாக்டரை பார்த்துவிட்டு சத்யாவுடம் வந்தான் அருள் ..

" கெளம்பலாமா ?"

" ஒரு  நிமிஷம் அருள் ?"

" ஏன் இடது கைய வெட்டிக்கவும் யாருக்காச்சும் உதவ போறியா ?"

" ஹே ஏண்டா இப்படி டென்ஷன் ஆகுற "

சந்தோஷை பார்க்கத்தான் அருளை நிற்க சொன்னாள்  சத்யா .. அவனிடம் சொல்லாமல் செல்ல அவளுக்கு மனமில்லை .. ஆனால் அருளோ இன்னும் கோபத்தில் தான் .இருந்தான் ... கண்களை இங்கும் அங்கும் சுழலவிட்டு  சந்தோஷை தேடினாள்  சாஹித்யா .. ஆனால் அவனை காணவில்லை ..

" கெளம்பிட்டான் போல .. "

கைகட்டியடி அவளையே வெறித்தான் அருள் ..

" போலாமா சாஹித்யா ? " அவன் தனது பெயரை முழுதாய் அழைப்பதிலேயே அவனது கோபத்தை புரிந்து கொண்டாள்  அவள்  ..

" ம்ம்ம்ம் "

" ஏன் இவ்வளோ யோசிக்கிற ? என்னைவிட முக்கியமானவங்க யாருக்காச்சும் வைட் பண்றோமா ?" என்றான் .. அந்த கேள்வியில் ஒரு அனல் பார்வை வீசிவிட்டு

" உன்னைவிட இந்த உலகத்துல யாரும் எனக்கு முக்கியம் இல்லை அருள் .. அது உனக்கும் தெரியும் .. வீணா என்னை பேச வைக்காதே " என்று  காரில் அமர்ந்து கதவை அறைந்து சாத்தினாள் சாஹித்யா .. அவளது ரோஷத்தை கண்டு அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை ..

புன்னகையோடு காரோட்டி கொண்டிருந்தவனை கோபமாய் பார்த்தாள்  சாஹித்யா ...

"ஒய் என்னடி லுக்கு விடுற? நியாயப்படி இந்த சீன்ல நான்தான் உன்மேல  கோபப்படனும் தெரியுமா ?"

" .கழுதை ...ஏன்டா என்னை பார்த்து அப்படி கேட்ட ?"

" ஆமா நீ பெரிய கரகாட்டகாரன் கவுன்டமனி  சார் .. நான் உன்னை பார்த்து அப்படி கேட்டேன் "

" ப்ச்ச்ச்ச் பேச்சை மாத்தாதே அருள் .. "

" ஹீ ஹீ  விடுடீ ஏதோ கோவத்துல கேட்டுட்டேன் .. "

" அப்போ இப்போ கோபம் போச்சா டா.... சொல்லு போச்சா ??? ப்ளீஸ் ப்ளீஸ் டா " என்று கண்களை சுருக்கி அழகாய் கெஞ்சினாள்  அவள் ..

" சரி சரி பொழைச்சு போ .. ஆனா ஒன்னு, அருள் கிட்ட மன்னிப்பு ரொம்ப காஸ்ட்லி அடிக்கடி கிடைக்காது சோ பார்த்து பக்குவமா நடந்துக்க " என்றான் ..

" உதை  படுவ டா .. கழுதை " என்று சிரித்தாள் சாஹித்யா ..

" வீட்டுல என்னடா சொல்றது ? "

" அதை பத்தி உனக்கென்ன கவலை டீ பிசாசே .. நான் பார்த்துக்குறேன் .. நீ  தொனத்தொனன்னு பேசாம கொஞ்ச நேரம் தூங்கிகிட்டே வா  " என்றவன் அவள் சாய்ந்து படுப்பதற்கு ஏதுவாக  சீட்டை நகர்த்தி தந்து வானொலியை உயிர்பித்தான் ..

சொந்தங்கள்  என்பது  தாய்  தந்தது

இந்த  பந்தங்கள்  என்பது  யார்  தந்தது 

இன்னொரு  தாய்மை  தான்  நான்  கண்டது 

அட  உன்  விழி  ஏனடா  நீர்  கொண்டது 

அன்புதான்  தியாகமே

அழுகை  தான்  ஞானமே  

உனக்கும்  எனக்கும்  உள்ள  உறவு 

ஊருக்கு புரியாதே 

அழகு  நிலவே  கதவு  திறந்து 

அருகில்  வந்தாயே 

எனது  கனவை  உனது  விழியில் 

எடுத்து  வந்தாயே  

ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 

பாலை  வார்த்தாயே 

என்  பாதி  உயிரய்  திருப்பி  தருவேன் 

பொறந்து  வந்தாயே 

இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 

நானும்  உன்  தாயே 

போனில் பேசிவிட்டு கிட்டதட்ட ஓடியே வந்தான் சந்தோஷ் ..

" வா டா. .. உன் அண்ணிக்கு  இப்போ சரியாச்சு .. நாம கெளம்பலாமா? "

" அந்த பொண்ணு எங்க அண்ணா ?"

சுபாஷும் சைந்தவியும்  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ..

" அவ அப்போவே போயாச்சே .. அவ வீட்டில் இருந்து யாரோ  வந்து கூட்டிட்டு போனாங்க டா "

" ஒரு வார்த்தை கூட சொல்லலியே.... !"

" யாரு கிட்ட சொல்லனும்னு எதிர்பார்க்குற சந்தோஷ் ? அவ எங்ககிட்ட சொல்லிட்டுதான் போனா " என்றாள்  சைந்தவி  சிரித்து கொண்டே ...சுபாஷும் தம்பியின் மீது ஓர் ஆராயும் பார்வையை செலுத்தியதை கண்டுகொண்டான் சந்தோஷ் ..

" சரி நான் கெளம்பறேன் " என்றான்

" எங்க ?"

" ஐயோ இன்னைக்கு கிரி அண்ணாவை பிக் அப் பண்ணிட்டு பெரியம்மாவை பார்த்துட்டு வரேன்னு  சொன்னேனே .. கோவில்ல நடந்த கலவரத்தில் மறந்துட்டேன் .. இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வரேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டேன் .. " என்றவன் சட்டென ஏதோ ஞாபகம் வர, அண்ணா  நான் உங்ககிட்ட அப்பறமா தனியா பேசணும் என்றான் ..

" எதை பத்தி டா "

" சாஹித்யா !!!"

யில் நிலையத்தில் தனது தம்பி, சந்தோஷுக்காக  காத்திருந்தான் கிரிதரன் .. இத்தனை நாட்கள் தொலைத்துவிட்ட மொத்த சந்தோஷமும் கிடைத்தது போல உணர்ந்தான் அவன் ... தூரத்தில் கவிமதுராவையும் ஜீவாவையும் முன்னே அனுப்பிவிட்டு அவன் பக்கம் கை அசைத்தாள்  வானதி ..

" இவள் பெண்ணல்ல தேவதை .. என் வாழ்க்கையில் வரம் தர வந்தவள்" என்று எண்ணினான் அவன் ..

அங்கு மலங்கமலங்க  விழித்து கொண்டே நடந்த கவிமதுரா, எங்கேயோ இடித்து கொள்ள

" பார்த்து நடங்க அண்ணி " என்றாள் வானதி..... அவள் அண்ணி என்று அழைத்ததில் வியப்பின் உச்சத்தையே தொட்டிருந்தாள்  கவிமதுரா .. அதே வியப்பில் தான் கிரிதரனும் இருந்தான் சில நிமிடங்களுக்கு முன்பு இரயிலில்

" கவிமதுராவை நீங்க கல்யாணம் பண்ணிப்பிங்களா  அண்ணா ?" என்று அவள் கேட்டபோது ..

( ஓரளவிற்கு இவர்களுக்குள் என்னென்ன பந்தம்னு உங்களுக்கு புரிந்திருக்கும்னு நம்புறேன் .. புதிய திருப்பங்களோடு அடுத்த எபிசொட் ல  பார்ப்போம் ..தவம் தொடரும் )

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.