(Reading time: 46 - 92 minutes)

ழுதுடு… குட்டிமா… என்னிடம் உன் மனதில் உள்ளதை சொல்லி அழுதிடு… உன் மனதிற்குள் வைத்தே கலங்காதேடா… என்று சொல்ல…

அவள் விழி நீருடன் அவனை இமைக்காது பார்த்தாள்…  பின் ஒரு சில நொடிகள் கைகளில் முகம் புதைத்து அழுதவள், இனி நான் அழமாட்டேன்… என் ராம் எனக்கு கிடைத்தபின் இனி நான் எதற்கு அழணும்? என்றவள், இமையோரம் உதிர்ந்து நின்ற நீர்த்துளிகளை தட்டு விட்டு விட்டு அவனைப் பார்த்தாள் புன்னகையுடன்…

குட்டிமா… என்றவனும் கண்கலங்கியபடி புன்னகைக்க…

என் தர்ஷ் அழக்கூடாது… என்றவள், அவனின் இரு கைகளையும் பிடித்து தன் கன்னங்களில் வைத்தவள், வாள் வீச்சினால் காயம் ஏற்பட்ட அவனது கரத்தினைத் தொட்டு தடவி, பின் அவன் வலப்பக்க தோளில் தோட்டா ஏற்படுத்திய காயத்தினை சுட்டிக்காட்டி வலித்ததா ராம் ரொம்ப?... என்று கேட்க… அவன் அவள் செயலில் கிளர்ந்தான்…

பின் மெல்ல தன்னை சமாளித்துக்கொண்டவன், இல்லடா… வலிக்கலை… என் குட்டிமாக்கு எந்த ஆபத்தும் இல்லை… அவளை காப்பாற்றிவிட்டேன் என்ற நிறைவு மட்டும் தான் எனக்கு கிடைச்சது… வலியே தெரியலை… என்றவன் புன்னகை மாறாமலே சொல்ல…

அவள் அவனையே தான் பார்த்திருந்தாள்…. அவனின் கரங்களையும் விடாமல்…

தனது கன்னங்களின் மீதிருந்த அவனது கரங்கள் நழுவ ஆரம்பிக்க, அவள் அவனது கரத்தை விடாப்பிடியாக கெட்டியாக பிடித்தாள்…

அவனும் விலகாமல் அப்படியே இருந்தான்… நேரம் மெதுவாக நகர்ந்து செல்ல… இருபது நிமிடங்களுக்குப் பிறகு,

அவன் கைகளை கெட்டியாகப் பிடித்திருந்த அவள் கையில் வலி எடுக்க ஆரம்பிப்பதை அவள் விரல் ஸ்பரிசத்தினால் உணர்ந்தவன்,

குட்டிமா… போதும்டா… கை வலிக்குது பாரு… உனக்கு… என்றவன், சட்டென்று அவள் கைகளிலிருந்து கைகளை உருவிக்கொண்டான்…

அவள் கலங்கியபடி அவனைப் பார்க்க… இதற்குத்தான் அப்பவே கையை எடுக்க நினைத்தேன்… நீதான் விடவில்லை… நீ கையை மடக்கியே வச்சிருந்தல்ல, இப்போ பாரு உனக்கு வலிக்குது என்றவன் சென்று தைலத்தை எடுத்து வந்து அவள் கையில் தேய்த்துவிட முயலுகையில், அவள் விலகி செல்ல…

சாரிடா… நான் எதோ நியாபகத்துல… வந்து… ஹ்ம்ம்… நீயே… தேய்த்துக்கொள்… என்றவன் அவளிடம் தைலத்தை நீட்ட…

இப்பவும் என் வலி, என் உணர்வுகளுக்கு தான் மதிப்பு கொடுப்பீங்களா?... ராம்?... என்று கேட்க… அவன் புரியாமல் அவளைப் பார்த்தான்…

இன்னும் எத்தனை நாள் என் ராமோட உணர்வுகளை இப்படி புதைச்சே வச்சிருக்கப் போறீங்க… கல்யாணத்துக்கு முன்னாடி சிறு தொடுகை கூட என்னைப் பாதிக்கும் என்று விலகி இருந்தீங்க… இப்போ கல்யாணம் முடிந்த பின்னும் ஏன் ராம்?... என்று அவள் கேட்க…

நான் உன்னை காதலிக்கிறேண்டி… அதனால் தான்… என்றவனை விழி அசைக்காது பார்த்தாள் அவள்…

உன் வெட்கம், உன் சிரிப்பு, உன் பேச்சு, உன் காதல் எல்லாமே என்னை உன் பக்கம் ஈர்க்கிறது தான்… ஆனால், கல்யாணத்திற்கு முன்பு, நீ சொன்னது போல், உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தே நான் விலகி இருந்தேன்… இப்பொழுதும் அதே உணர்வுகளுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன்… எனினும், உன் மேல் நான் கொண்டிருக்கும் காதல் எங்கே என் தொடுகை மூலம் உன்னை காயப்படுத்தி விடுமோ என்றெண்ணி தான் விலகிப் போகிறேன்… குட்டிமா…

உன்னை ரொம்ப காதலிக்கிறேன்டி… ஷன்வி உன் தோளில் கை வைத்ததற்கு நீ நெருப்பு பட்டது போல் விலகியதை அவள் மயூரியிடம் சொன்னதை நான் கேட்டேண்டி… உன் மனம் சில நிகழ்வுகளால் எவ்வளவு காயப்பட்டிருக்கிறது என்பதை நான் அன்று அறிந்து கொண்டேன்… அனைத்தும் என்னால் தானேடா?... என்னால்தானே உனக்கு அந்த நிலை, காயம்,.. அனைத்தும்… அதனால் தான் உன்னை காயப்படுத்தி விடக்கூடாது என்று தான் மிக எண்ணுகிறேன்… அது உனக்குப் புரியவில்லையாடா சீதை?... என்று அவன் கேட்க…

அவள் அவன் தோள் சாய்ந்திருந்தாள்… எனக்குப் புரியுது ராம்… எனக்கு நல்லாவே புரியுது… அந்த காயம் எல்லாமே எனக்கு இப்போ வலிக்கலை… ராம்… நிஜமா வலிக்கவே இல்லை… என் தர்ஷோட நான் காலம் முழுதும் சந்தோஷமா வாழணும்னு ஆசைப்படுறேன்… நான் பட்ட காயத்திற்கு எல்லாம் என் தர்ஷோட தீண்டலும், ஸ்பரிசமும், காதலும் மருந்தா இருந்து அந்த காயத்தோட தழும்புகள் கூட என்னிலிருந்து மறையணும்னு நான் நினைக்கிறேன்… அது தப்பா தர்ஷ்… என்று அவள் கேட்டு முடிக்கையில்,

அவன் கரம் அவளை இறுக்கி அணைத்திருந்தது… அவன் அணைப்பை உணர்ந்தவளின் இதழில் புன்னகை ஒன்று தானாக உதிக்க, அவன் ஸ்பரிசம் அவளது முகத்தில் நாணத்தை வரவைத்தது…

சாரிடா குட்டிமா… என்றவன், அவளது முகம் பார்க்க முயற்சிக்க, அவள் அவனது மார்போடு ஒன்றினாள்…

அந்த நெருக்கம் அவன் இதுநாள் வரை அடக்கிவைத்திருந்த உணர்வுகளுக்கு தூண்டுகோலாக அமைய, மெல்ல அவளது கூந்தலில் முகம் புதைத்தான் அவன்…

மல்லிகை மணமும் அவள் கூந்தல் மணமும் சேர்ந்து அவனை மயக்க, அவளின் நெருக்கம் கலந்த அணைப்பு அவனை மேலும் வதைக்க…

அவன் சகி… என்னைப் பாரு என அவள் முகம் நிமிர்த்த,

அவனது விழி பார்த்த அவளது விழிகளில் தாபமும், அழைப்பும் காதலுடன் மாறி மாறி தெரிய…

அவன் விழிகள் அவளிடம் மயங்க… அதைக் கண்டவள் அவனை அதீத காதலோடு பார்த்தாள்…

தாமரை மொட்டாக இருந்த அவள் முகத்தில் அரும்பரும்பாக பூத்திருந்த வியர்வைத்துளிகளை மென்மையாக துடைத்தவன்,

நீர்த்துளிக்கு காத்திருக்கும் நிலம் போல், அவனது ஒரு துளி முத்தத்திற்காக ஏங்கி ஒரு வித அழைப்புடன் அவள் விழி மூடிக்கொள்ள,

என் சகி…. என்ற அழைப்புடன் மெல்ல அவள் அதரங்களில் தனது காதலை வரைய ஆரம்பித்தான் ஆதர்ஷ், அவனது அதரங்களை தூரிகையாக்கி…

இளங்காற்றும், இளங்குயில் இசையும் அதிகாலை வந்துவிட்டதை உணர்த்த, குளித்து முடித்து ஈரம் தோய்ந்த நீண்ட அடர்த்தியான கூந்தலை விரியவிட்டு, நுனியில் முடிச்சுப்போட்டு வந்து கண்ணாடி பார்த்து நெற்றி வகிடில் குங்குமம் வைத்துக்கொண்டிருந்தவள் கண்ணாடியில் தெரிந்த கணவனின் அழகான முகம் பார்த்து அவனருகில் சென்றாள்…

அவனது முகம் பார்த்தவளுக்கு அவனை முத்தமிட வேண்டும் என்று தோன்ற, மெல்ல அவனருகில் சென்றவளை கதிரவன் ஒளி திசைதிருப்ப, வெட்கத்துடன் ஒடிச்சென்று வானத்தைப் பார்த்தாள்…

அதிகாலை… பொழுது புலர்ந்த வேளை… கதிரவன் அந்த வான மங்கையோடு கலந்த நேரம், அவள் முகமெங்கும் நாணத்தின் ரேகைகள் குங்கும நிறத்தில்…

அதைக்கண்டவளுக்கு நேற்றிரவு நியாபகம் வர, முகம் மூடி வெட்கப்பட்டவளை இடையோடு சேர்த்து அணைத்து அவளின் பின்னங்கழுத்தில் முத்தமிட்டான் ஆதர்ஷ்…

அவள் துவண்டு அவன் நெஞ்சில் சாய, அவளை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டு அந்த வானமங்கை கதிரவனைக் கண்டு நாணி நிற்பது போல் தன்னவளும் இன்று தன் கரங்களில் துவண்டு நாணி இருப்பதை உணர்ந்து அவள் முகம் ஏந்தி முகமெங்கும் முத்தமிட்டான் அவன் மென்மையாக…

காதல் நதி அவர்களின் ஆலிங்கன நிலையைக் கண்டு நாணி துள்ளி குதித்தது ஆர்ப்பாட்டம் இல்லாது…

அந்நேரம், தோட்டத்தில், அமர்ந்து கொண்டிருந்த சித்துவின் அருகே, வந்த நந்து, என்ன அண்ணா சீக்கிரம் எழுந்துட்டியா?... என்று கேட்டாள்…

ஆமா நந்தும்மா… நீ ஏன் எழுந்துட்ட சீக்கிரம் என்று அவன் கேட்க… நீ எழுந்ததைப் பார்த்தேன்… அதான் என்றாள் அவள்…

நந்து… நீ போடா… வாடைக்காற்று அடிக்குது பாரு என்று சொல்ல… அப்போ நீயும் வா… என்றாள் அவளும் விடாமல்…

சரிடா இன்னும் ஐந்து நிமிடத்தில் வரேன் நீ உள்ளே போ என்றான் தங்கையிடம்…

சரிண்ணா… நான் பாட்டியிடம் உனக்கு பூஸ்ட் ரெடி பண்ண சொல்லுறேன்… பட் நீ இன்னும் 5 நிமிடத்தில் உள்ளே வரணும்… என்றபடி சென்ற தங்கையையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த சித்துவின் இதழ்கள் அப்படியே உறைந்து நின்றது…

வெண்பனியின் நடுவே, தேவதை போன்று, அழகாக புன்சிரிப்புடன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்த அபியை விட்டு பார்வையை அகற்றாமல் இருந்தான் அவன்…

சித்துமாமா… இங்கே என்ன பண்ணுற?... என்றபடி வந்தவள், அவனருகே அமர்ந்து அவன் கைப்பிடித்துக்கொள்ள, சித்து அவளிடம், ஒன்றுமில்லை என தலைஅசைத்துவிட்டு சிரித்துக்கொண்டான்…

அவன் ஏன் சிரித்தான் என்று கேட்டால் அந்த அறியாபாலகன் தெரியாது என்றே சொல்லியிருப்பான் நிச்சயம்…

ஆனால், அடுத்த காதலர்களைக் கண்டுவிட்ட மகிழ்வில் துள்ளிக் குதிக்காத குறையாய் ஓடிக்கொண்டிருந்த காதல் நதியைக் கேட்டிருந்தால் ஒரு வேளை சொல்லியிருக்குமோ என்னவோ…

இவர்கள் தான் தனது காதல் நதியில் அடுத்து பயணிக்க இருப்பவர்கள் என…

அவர்களின் பயணமும் இனிதே ஆரம்பிக்கட்டும் காதல் நதியில்….

இது எனது முதல் தொடர்கதை…

தொடர்கதை எழுத வாய்ப்பு கொடுத்த சில்சீக்கு எனது முதல் நன்றி….

தொடரின் ஆரம்பித்திலிருந்து இறுதி வரை எனக்கு உறுதுணையாய் இருந்து ஒவ்வொரு வாரமும் தங்களது கருத்துக்களால் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து சில்சீ தோழர், தோழிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்…

கதையில் சில நேரங்களில் நான் செய்த பிழைகளை சுட்டிக்காட்டிய தோழர், தோழிகளுக்கும் எனது நன்றியினை நான் தெரிவித்துக்கொள்கிறேன்… நீங்கள் அவ்வாறு எனது பிழைகளை சுட்டிக்காட்டியிருக்காவிட்டால் நான் செய்த தவறுகள் எனக்கு தெரியாமலே போயிருக்கும்… அதற்கு நான் உங்களுக்கு மிகப்பெரிய நன்றியை சொல்லியே தீர வேண்டும்… ஏனெனில் உங்களால் தான் நான் செய்த என் பிழைகளை சரி செய்ய முடிந்தது சிறிதளவேனும்…

இந்த கதை எழுத எனக்கு உதவிய என் செல்ல தங்கைக்கும் எனது உளமார்ந்த நன்றி…

அடுத்து, புதிய ஒரு தொடர்கதையில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்… நன்றி… 

முற்றும்!

Go to episode # 31

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.